Dienstag, Januar 24, 2006

வருகிறோம்!

உடைப்பதற்காய்
வருகிறோம்,
வணக்கத்தைச்
சம்பிரதாயமாகச்
சொல்வதில் விருப்பில்லை!

கனவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.
கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணை அடிமைகொண்ட வலு எப்படி உருவானது?எனக்கும்,உனக்கும் இந்த நூற்றாண்டின் இடம் என்ன??

கருத்துக்களுக்காய் மனிதர்கள் செத்தார் நம்மிடம்,நாடு பிடிப்பதற்காய் மேலைத் தேசத்தவன் செத்தான் அவர் கலாச்சாரத்தில்.ஓடினான்,ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான் ஐரோப்பியன்!

தூங்க வைக்கப்படுறான் இந்திய துணைக்கண்ட மனிதன்.

எதனால்,எதற்காய்?

பதில் தேடுவதும்,பாய்மரம் கட்டுவதும் மீளவும் நமக்குள் இடம்பெறவேண்டும்.ஆடுவதும் பாடுவதும் போதாது நீ,அறிவதும் செயற்படுவதும்-பொருள் செய்வதும் வேண்டும்.

இந்த விருப்பு இருப்பதானால் "உடைப்பதற்கு"வருகிறோம்!!!

கனவை,கற்பனையை,கருத்து நிலைகளை உடைத்துப் புதுத் தமிழர் புவிமீது எழுவதும்,கையசைத்துக் காரியமாற்றுவதும்,வாய் திறந்து வார்த்தைகள் படைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்-குன்றாக் குறியாய் உணர்வுடை உளமாய் விரிக மேகமென மேல் நிலை இருத்தி.

தொடர்வோம்.
24.01.06

Keine Kommentare: