Mittwoch, Januar 25, 2006

வாழ்க்கை ஒரு களம்.

வாழ்க்கை ஒரு களம்.

கருத்தக்களையும்,அது மேவிக்கொள்கிற பல் துறைகளையும்.ஒருகிணைப்பதற்கானவொரு திட்டமே செயல் வடிவமாகிறது.செயலைச் செய்வதால்தான் மனிதனின் ஆளுமை வெளிப்பட்டது.

புவியின் தோற்றத்தை,அது வழங்கிய இயற்கையை மனிதன் மாற்றியமைத்தான்.-அதனால் மகத்துவம் அடைந்தான்.சேர்த்த செல்வத்தைப் பெருக்க முனைந்தான்.-இதனால் வறுமையுற்றான்.

வறுமை மனிதர்களைக் கொல்கிறது!

செல்வம் மௌனித்துக்கொள்கிறது.

அதன் வீச்சு மனிதரின் வேலையைக் கோருகிறது.ஒரு பிடி சோற்றுக்காய்... ஒரு நாட் பொழுதாக உழைப்பவளுக்கு ஒரு டொலர்ரும் கிடைப்பதற்கரிய பணமாய் சுழல்கிறது. கடல் ஓரேத்தே அவள் குழந்தையை வெள்ளைக்காரன் புணருகிறான்.

ஓராயிரம் துயரம் கடற்கரையில் மேய்கிறது.

உலகத்தின் உச்சியில் குருதிக்குடம்,
உப்புக்கு உணர்வு மரத்த மனித உயிர்கள், உடலைத் தரப்போகும் அந்தக் கணம் தேச மானத்தின் வீழ்சிக்குரிய கணம்.

தேசம் இதைக் கண்ணால் காணாது.

அன்னியச் செலாவணி தேய்ந்து போனால் ஆயுதம் தலைவர்களின் மாளிகைகளை காவல்காக்க வராது.

பண்பு.

பண்பு.

தமிழ் மக்களினது உள்ளார்ந்த பண்பு என்ன?

நட்பு!

"யாதும் ஊரே யாவரும் கேளீர்!"

சரி,
இது போதுமா?

இல்லை!

உலகத்துக்கு தமிழினம் எதைக் கொடுத்தார்கள்??

திருக்குறள்!

போதுமா?

விஞ்ஞானத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பியர்கள், எமக்கு இப்போது அனைத்தையும் தர முனைகிறார்கள்.
மதம்,மருந்து,கணிப்பொறி,தத்துவம்...

இப்படி.இது ஒருபகுதியில் வளம் பெறும்போது நம்மிடம் உலர்ந்து போகிறது!!!

நாமோ, இன்னும் காதல் செய்து முடிக்கவில்லை.தியாகராஜர் காலத்திலிருந்து இன்றை விஜேய் காலம் வரைக் காதலில் கண்டுண்டு கிடக்கிறோம்!இது எதனால்?

எம் சோம்பேறித்தனமா,மெத்தனப் போக்கா,அல்லது சமூக அக்கiறியின்மையா?

இல்லை!


அப்போ எதுதான் இந்தத் துர்பாக்கிய நிலைக்குக் காரணம்?
பணம்!-அடுத்து?

அரசு? ஒருபகுதி உண்மைதான்!

மறு பகுதி?

உலகத்தின் வல்லரசுகள்,
நமது இயலாமைமிக்க பொருள் வலு,
மற்றும் எமது நடுத்தரத் தொழிலகங்கள்.


உலகப் போட்டியோடு நமது விஞ்ஞானிகளால் போட்டியிட முடியவில்லை.
எமது அறிவாளிகள் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட முடியாது உலக வல்லரசுகளின் பெரும் வலுவுக்கு இன்னும் வலுச் சேர்ப்பது முக்கியமான காரணமாகிறது,எமது தேய்வுக்கு.

தமிழ் மொழிக்கான நிலத் தோற்றமும்,பொருள் வலுவுமிருந்தும் நாம் அந்தத் தேட்டத்தைப் பறி கொடுத்து வருகிறோம்.

இவை குறித்துக் கருத்தாடுவதும்.வளம் பெறுவதும்,அதைப்பற்றிப் பிடித்தபடி பக்குவமாய் எதிர்க்கருத்தாடி நாம் உயர்வதும் எமது தமிழ் மொழிக்கும் அதைப் பேசும் ஆறுகோடி மக்களுக்கும் அவசியமாகிறது.

இதனால் கருத்துக்களுக்கூடாகக் கைகோர்ப்போம்!

அந்தக் கைகளை இன்னும் பலப்படுத்துவோம்,குறைந்த பட்சமாவது அறிவுடைய மக்களாக நாம் மாறுவதற்கு.

உடைப்பும்...

உடைப்பின் உருவாக்கம் இன்றைய வலைப்பதிவினது கருத்துப் பரிமாற்ற வலுவுக்கு உந்தப்பட்டே.இதுவரை நாங்கள் பல பதிவுகளைப் பார்வையிட்டுப் படித்து வந்தோம்.எந்தப் பதிவினிலும் கருத்துக்களைச் சொல்லி விவாதிக்காது மௌனித்து வருவதும், மனதுக்கு இருப்புக் கொள்ள முடியாது போய்- வலை பதிவோமே என்ற ஆதங்கத்தோடு வந்தோம்.இங்கு நடை பெறுவது உண்மையில் விவாதங்களில்லை.இவைகளெல்லாவற்றையும் தொகுத்துச் சொன்னால்-இவை கூட்டம் கட்டியாடும் அல்லது கோஷ்டி கட்டியாடும் அவதூறகளே!

உலகத்தில் சுமார் ஆறுகோடித் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.அவர்களின் பண்பாட்டு வளர்ச்சி வெறுமனவே உணர்ச்சி வழிப்பட்ட கருத்தியல்களால் தேம்பிக் கிடக்கிறது.நல்ல முறையில் வளரவேண்டிய தமிழினத்தின் பொருண்மிய மேம்பாடு எந்த முன்னெடுப்புகளுமற்று வெறும் நுகர்வுக்குள் முடங்கி கிடக்கிறது.காலகாலமாக விருத்தியுறவேண்டிய சமூக வளர்ச்சி நிலை வெறும் கலாச்சார,நுகர்வடிமைச் சூழலுக்குள் சிக்குண்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கான முன்னெடுப்புகளாகத் தேசிய கல்விக் கொள்கை,பொருளாதார மற்றும் அபிவிருத்திகளும் எந்தக் கட்சிகளாலும்,இயக்கங்களாலும் முன்னெடுப்பதாகவில்லை.சமுதாயத்தின் இருப்பு மெல்லச் சாகும் நிலையாகிறது.

தமிழ் தனது இருப்புக்கான போராட்டத்தைப் பொருள் வாழ்வோடு இணைப்பதும்,அதன் உள்ளார்ந்த தேவைகளை நிலைப்படுத்தும் கல்வியாளர்களை உருவாக்குவதற்குமான வர்த்தகச் சூழல், நமது இனத்திடமில்லை.நாம் எமது வாழ்வையும் மொழியையும் மெல்லப் பறி கொடுக்கிறோம்.இதை மேம்படுத்தும் நிலைமைகளுக்குள் இந்த வலைப்பதிவாளர்கள் இன்னும் செல்வதாகவில்லை.இதைவிட்டுத் தத்தமது நேரத்தை வீணாக்கும்-அரட்டையரங்காகத் தமிழ் மணத்தை ஆக்குவது வருந்தத் தக்கது!தனி நபர்களாக இருந்து வலை பதிபவர்கள் தமக்குள் முரண்படும்போதுகளில் தனிநபர் சுதந்திரத்தில் தலைபோட்டுத் தமது நேரத்தை விரையம் செய்வது உசிதமில்லை.

வெறும் காழ்ப்புணர்வுகள் எதையும் தரப்போவதில்லை.நமது சமூகத்தில் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கேற்ற அறிவு வளர்சியும்,அபிவிருத்தியான சமூகப் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவேண்டும்.இதுபற்றிய நோக்கை முன்னெடுப்பதே அவசியமான பணி.

Dienstag, Januar 24, 2006

வருகிறோம்!

உடைப்பதற்காய்
வருகிறோம்,
வணக்கத்தைச்
சம்பிரதாயமாகச்
சொல்வதில் விருப்பில்லை!

கனவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.
கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணை அடிமைகொண்ட வலு எப்படி உருவானது?எனக்கும்,உனக்கும் இந்த நூற்றாண்டின் இடம் என்ன??

கருத்துக்களுக்காய் மனிதர்கள் செத்தார் நம்மிடம்,நாடு பிடிப்பதற்காய் மேலைத் தேசத்தவன் செத்தான் அவர் கலாச்சாரத்தில்.ஓடினான்,ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான் ஐரோப்பியன்!

தூங்க வைக்கப்படுறான் இந்திய துணைக்கண்ட மனிதன்.

எதனால்,எதற்காய்?

பதில் தேடுவதும்,பாய்மரம் கட்டுவதும் மீளவும் நமக்குள் இடம்பெறவேண்டும்.ஆடுவதும் பாடுவதும் போதாது நீ,அறிவதும் செயற்படுவதும்-பொருள் செய்வதும் வேண்டும்.

இந்த விருப்பு இருப்பதானால் "உடைப்பதற்கு"வருகிறோம்!!!

கனவை,கற்பனையை,கருத்து நிலைகளை உடைத்துப் புதுத் தமிழர் புவிமீது எழுவதும்,கையசைத்துக் காரியமாற்றுவதும்,வாய் திறந்து வார்த்தைகள் படைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்-குன்றாக் குறியாய் உணர்வுடை உளமாய் விரிக மேகமென மேல் நிலை இருத்தி.

தொடர்வோம்.
24.01.06