Donnerstag, September 20, 2007

"நீங்கள் பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?"

பார்ப்பான் என்று நீ சொல்வாய் டோண்டு?

எரி பிண்டம் நாறும்
ஒரு பொழுதின் உதிர்வில்
ஓயாத வதையாய் எவரும் கருதார்
காறி உமிழும் கடையனொருவன்
கவிழ்தலில் கடுகும் அசையா


கற்கையொடிந்த நடப்படியில்
நாறிய மனதைக் கொட்டிய பார்ப்பனத்தீட்டு
பக்கத்துள் படுத்துக்கொள்ளும்
பாடைகட்டார் பழகிய பொழுதும்


பாவிக்கு எந்தத் திசையுள் கொள்ளியிட்டாலென்ன
கொளுத்திச் சாம்பலதை ஆழப் புதைப்பதும்
அடுத்தவரைக் காக்கவே
அந்தவொரு நாளில் நஞ்சறுந்த விடியல்
கூவிய கோழியோடு கும்மாளமிடும்


மந்தைக்குத்
"தலைவலியும் திருகு வலியு"மென்ன
தீ எரியும் திசைக்கு
எண்ணையூற்றிய எருமை நீ!
உனக்கெந்த இடிவிழுந்தால் எமக்கென்ன
இழி பிறப்பே?


இரவுக்குள்
அச்சத்தையிட்டு
இருப்பவரை ஏய்த்துப்
பிடுங்கிய எச்சில் சோற்றில்
உயிர்த்திருக்கும் பார்ப்பனத் தெருவும்
பச்சை இலையெடுத்துப்
பாடிய தந்திரத்துள்
பகலும் படையலெல்லாம்
பார்ப்பான் வயிற்றுக்கே


இருந்தும்,
"சூத்திரன்" வயிற்றில்
சுண்ணாம்பு தடவும்
சோழியன் குடுமிச் சோவும்,
சோற்றுப்பட்டாள இராமும்,
மந்தை மாலனும் சேர
ஜாதித் திமிரை சொல்பவன் நீ!!

சோணகிரி,
சொல்லு நீ
உனக்கெந்தச் "செருப்பு"உவப்பென்று!

பார்பனத் திமிருக்குப் பெருமிதம் என்ன?
காமக்கேடிப் "பெரியவர்" தடவிக்
கொட்டிக் கிழித்த
கோவணம் காஞ்சிப் படியில்
ஆத்தையின் பெயரை வலித்து

அம்மணமாக்கிய "அருவருப்பு"
அடங்கும் முன்னே அள்ளியவுடலை
அருள் சொல்லிப் புதைக்கக் காஞ்சி மடமும்
கக்கூசு இருக்கக் கைலைத் தெருவும்
பார்பனக் கூட்டின் அண்மைய கதையாய்...

முகத்தை மூடி
நாய்க் கதை அவிழ்க்கும்
நாதாரி சிலவும்
நரித்தன நாகம் நீலகண்ட வானரங்களும்
நெருங்கிய தெருவில் நிமிர்ந்து நீ
குரைக்கும் பொழுதினில் இவற்றையும்(சாதிகளற்ற மனிதன் ஒரு குருடன்.அதனல பார்ப்பானென்று நான் சொல்வது உண்மை...)
புலம்பித் திரிவாய் .

19.09.07


ரயாகரன் அவர்களே!நல்ல கேள்விகள்.ஆனால் கம்யூனிசம் ஒரு மாபியத் தன்மையானது.இதனாலதான் மகாத்மா காந்திகூட எதிர்த்தார்.நேருஜீயும் வேண்டாமென்றார்.மனிதர்களின் பிளவுகளை ஆண்டவனே செய்தான்.சாதிகளற்ற மனிதன் ஒரு குருடன்.அதனல பார்ப்பானென்று நான் சொல்வது உண்மை.

"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?


பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். இன்டர்வியூ முடிந்தது என்றார். என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக தேர்வு கிடையாது என்றார்கள்.
"அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்றுக் கூறியிருந்தார்.

Posted by Picasa

இப்போதுக் கூறுகிறேன். நான் வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது பதிவிலும் சேமிக்கப்படும்.

அன்புடன்,டோண்டு ராகவன்(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)



Sonntag, September 09, 2007

தாம்பாத்யம்


தாம்பாத்யம்


நேற்று நாம் இருந்தோம்
குழந்தைகள் பெற்றெடுத்து
மனையாளும் மகிழ்வும் ஓங்க
இன்று நானிருக்கிறேன்
எல்லாம் கனவாகிய ஒரு நிலையுள்

மப்புக்கட்டும் உணர்வுக்கு
நிசம் சாயம் விலக்கிய கதையாய்
முள்ளாய்க் குற்றும் உண்மை
முதுகில் பாரமாய்

எட்டாதெரிந்து விழும் சூரியனின் இருப்பில்
உயிர்த்திருக்கும் தரணங்களைக்
கனவு பொட்டலமாக்கிய கண்ணீர்த் துளிகள்
காரணந் தெரியாத திசையில் சில மதிற் சுவர்கள்

என் வீட்டின் சுவர்களில்
எனக்கெதிராகவே எதையோ எழுதிக்கொண்டேன்
மனையாளும் குழந்தைகளும்
எப்போதும் மௌனித்து விட

எனினும்,
சாவு வந்து காவு கொள்ளும்வரை
வாழ்வு நரகத்துள் நீந்தித்தான் ஆகணும்


முட்டாள்த்தனத்துக்கெல்லாம் மகாப் பெரிய முட்டாள்தனம்
உணர்ந்துகொள்ள இயலா மனங்கள்
விவாகமென இணைந்து கழுத்தறுப்பது



இன்னும் சொல்லப் போனால்
மரண வாயிலை அடைவதற்குள்
மனிதம் பறந்து-பின்பு
கொடிய மிருகத்தின் படிமத்துடன்
பாடைகட்டி வழியனுப்பிக் கொள்வோம்

இஃது இலக்கணமாய் வாழ்வையரிக்கும்
காமந் தலையைக் குடைய
தலை கால் தெரியாது
முட்களை மார்பில் தாங்க
மோனமிட்ட உடல்களின் தெரிவில்
தவிப்பதுதான் தாம்பாத்யம்.


உடைப்பு.
09.09.2007