தாம்பாத்யம்
நேற்று நாம் இருந்தோம்
குழந்தைகள் பெற்றெடுத்து
மனையாளும் மகிழ்வும் ஓங்க
இன்று நானிருக்கிறேன்
எல்லாம் கனவாகிய ஒரு நிலையுள்
மப்புக்கட்டும் உணர்வுக்கு
நிசம் சாயம் விலக்கிய கதையாய்
முள்ளாய்க் குற்றும் உண்மை
முதுகில் பாரமாய்
எட்டாதெரிந்து விழும் சூரியனின் இருப்பில்
உயிர்த்திருக்கும் தரணங்களைக்
கனவு பொட்டலமாக்கிய கண்ணீர்த் துளிகள்
காரணந் தெரியாத திசையில் சில மதிற் சுவர்கள்
என் வீட்டின் சுவர்களில்
எனக்கெதிராகவே எதையோ எழுதிக்கொண்டேன்
மனையாளும் குழந்தைகளும்
எப்போதும் மௌனித்து விட

எனினும்,
சாவு வந்து காவு கொள்ளும்வரை
வாழ்வு நரகத்துள் நீந்தித்தான் ஆகணும்
முட்டாள்த்தனத்துக்கெல்லாம் மகாப் பெரிய முட்டாள்தனம்
உணர்ந்துகொள்ள இயலா மனங்கள்
விவாகமென இணைந்து கழுத்தறுப்பது
இன்னும் சொல்லப் போனால்
மரண வாயிலை அடைவதற்குள்
மனிதம் பறந்து-பின்பு
கொடிய மிருகத்தின் படிமத்துடன்
பாடைகட்டி வழியனுப்பிக் கொள்வோம்
இஃது இலக்கணமாய் வாழ்வையரிக்கும்
காமந் தலையைக் குடைய
தலை கால் தெரியாது
முட்களை மார்பில் தாங்க
மோனமிட்ட உடல்களின் தெரிவில்
தவிப்பதுதான் தாம்பாத்யம்.
உடைப்பு.
09.09.2007
Keine Kommentare:
Kommentar veröffentlichen