Samstag, Februar 03, 2007

வேலுப்பிள்ளை பிரபாகரன்.



வேலுப்பிள்ளை பிரபாகரன்:"தன்னை"த் தேடியலைதல்.









தாக்குதல் வியூகம் அமைக்கிறார்:புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".-கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)


நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.

அதீத வேட்கை பொருள் குவிப்பின் உறுதியோடு பிணைவுற்ற பொருளாதார வாழ்வில் நமது காலத்தில் மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே.உயிர்த்திருப்பதற்கே இவ்வளவு கஷ்டமென்றால் உலகத்தின் எந்தக் காரியத்தையும் எத்தனை வளமிக்க அறிவும் செம்மையாகச் செய்ய முடியாது.வாழ்வோடு வந்து சேர்கிற மனித அவலம்"அதுவா அல்லது இதுவா"என்ற தேர்வையே நம் முன் கொணர்ந்து தடுமாற வைக்கிறது.இந்தத் தேர்வைத் தனி மனிதர் சார்ந்து தேர்ந்தெடுப்பதா அல்லது சமூகத்தின் பரம்பலில் தான் வாழும் குழுமத்துக்குள் தன்னை இனம் காணும் ஒரு எல்லையில் கூனிக் குறுகி நின்று பொதுப் புத்திக்கான பெரு விருப்போடு "நானே நீ"என்று தேர்ந்து கொள்வதா?எதைப் பற்றிய அசம்பாவிதமும் தற் செயலாக விரிவதென்றும்,உலகத்தின் எந்த இயக்கமும் ஒரு தொடர்ச்சியின் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கலாகவே இருப்பதாகவும் நான் உணர்கிறபோது இந்த நான் எவ்வளவு காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டேன் என்பதும் என் சிந்தையில் உருப்போட முடியாத உண்மையற்ற உறைவிடமாக-இருட்டு வெளியாக இருக்கிறது.

இங்கே வாழ்வோடு விருத்தியாகவேண்டிய மனித படைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட பின் எந்த உன்னதங்களும் மனிதனுக்குச் சொந்தமில்லாது போய் அதுவது அதன் போலித் தன்மையோடு பொருமிக்கொண்டே இந்தப் புவிப் பரப்பைவிட்டு எங்கோ நெடுந் தொலைவில் பறந்தடிக்கிறது.

இங்கே தற் செயல் என்பது தற் செயலல்ல என்பது உண்மை.

இது உண்மை என்பதன் ஒரு தொடர் இயக்கம்.

அந்தப் புள்ளியைத் தேர்வினடிப்படையில் தேர்வு செய்வதைத் தவிர வேறு வினை இருப்பதற்காகவொரு சாத்தியத்தை இந்த உண்மை மறைத்தே வைத்திருக்கிறது.இது என்ன என்பதே கேள்வியாக விரியும்போது அந்தக் கேள்வியே வாழ்வின் தேர்வாக மாறுகிறது.

மதவாதம் மலிகிறது.

தன்னைத் தவிர்த்த இயகத்தின் மூலமொன்று சிந்தனையை வெருட்டிக்கொண்டே இருக்கிறது.

அது நெடுந்தொலைவிலிருந்து நம்மைச் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறேன்.நானே ஒரு நிலையில் அவனுக்கான தூதுவராக என்னைப் பிரகடனஞ் செய்கிறேன்.

வளங்கள் அனைத்தையும் என்னைச் சுற்றி வைத்தபடி நான் அவனைத் தரிசிக்கும்படி கட்டளையிடுகிறேன்.

எனக்கும் இந்த இருப்புக்கும் இடையில் என் உணர்வுத் தொடர்ச்சி ஊசலாடுகிறது.அது படைப்பின் இன்னொரு விளிம்பில் என் ஆசையாக விரிகிறது.எனக்கும் ஆசைக்கும் இடையில் ஆக்கமற்ற அழிவு நிலைப்பதாக நான் உணர்கிறேன்.

ஆசையே அனைத்துக்கும் காரணமாகிறதென்று உணர்வேன்.

அப்போது ஆசையை நீக்கு என்கிறேன்.

அங்கேயும் ஆசையே நீக்கத்தைக் கோரும்போது நீக்கம் வெளியில் நிலைப்பதற்கான குறுகிய வட்டம் எனக்குள்ளதான் இருட்டாக மலிவுறுகிறது.வெளியின் தொடர்ச்சி வெளியே இல்லையென்பதும் என்னையழிக்கும் காலத்தில் நிலைப்பதால் மனிதப் படைப்பின் அந்நியத்தில் சுழல்கிறது.இங்கேதான் இந்த அந்நியமாதலை சொல்வதும் ஏதோவொரு அந்நியத்தின் அவசரக் குடுக்கைத் தனத்தின் பதிவாக அறிவது கட்டுத் தன்மையாகவே இருக்கிறது.அனைத்தும் புனைவுக்குள் கிடந்து மீளமுடியாதவொரு சோகத்தைத் தகவமைக்கும்போது சோகமென்பதும் புனைவுதான் என்று உணர்கிற உணர்வே புனைவாகச் சுழலும் தரணமெல்லாம் உலகத்துள் ஒன்றுமில்லை என்பதாகிறது.

உலகே மாயம்!

இங்கே நான் வசமாத் தப்பிக்கிறேன்.என்னைப் பின் தொடரும் ஆபத்தைத் தணிக்கிறேன்.அது என்னைக் கொல்லாதவரை-எனது இருப்பை அசைக்காதவரை எனக்குள் புனைவைத் திணிக்கிறேன்.

திணிப்தால் எனது நம்பிக்கைகளைத் தகவமைக்கிறேன்.

இந்த நம்பிக்கைகள் எனது பலவீனத்தின் இன்னொரு வடிவத்துள் நிலைபெறும்போது நான் போரிட வேண்டிய பொழுதுகளைக் காலம் எனக்குத் தந்து விடுகிறது.நான் எனக்காகவே போரிட முனைவதால் நானே இன்னொரு தொடர்ச்சிக்கு மூலத்தைப் பிரேரிக்கிறேன்.பிரமத்தின் பகுதி நானாக விரிவதாகச் சொல்லியே என்னைத் தொலைக்கிறேன்.

பிரமம் அநாதியாகிறது.

அநாதி அழிவின்றி இருந்து அடக்குமுறையாக விரிவதில் ஆக்கம் நிலைபெற முடியுமா?.

10 Kommentare:

படியாதவன் hat gesagt…

ஒண்டுமே விளங்கேல்லை.
சரியா குழப்புது.
கொஞ்சம் விளங்கிற மாதிரி எழுதுங்கோவன்.

Anonym hat gesagt…

so the one in the photo is prabhakaran, er?
You people never give up, dont you?

Anonym hat gesagt…

\\தலைவர் பிரபாகரன் மக்கள் குறைகள்
கேட்டு எமுதுகிறார்\\

தப்பா நினைச்சுக்க வேண்டாம்
நீரு எந்த லோகத்து கிரகவாசி என்பதை
தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும்.

உடைப்பு.Sri Rangan hat gesagt…

//so the one in the photo is prabhakaran, err?
You people never give up, dont you?//

\\தலைவர் பிரபாகரன் மக்கள் குறைகள்
கேட்டு எமுதுகிறார்\\

//தப்பா நினைச்சுக்க வேண்டாம்
நீரு எந்த லோகத்து கிரகவாசி என்பதை
தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும். //



என்னங்கடாப்பா போற்றியெழுதினாலும் கல்லெறியிறாங்கள்.தூற்றியெழுதினாலும் அதையே தொடர்கிறாங்கள்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்.உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்!

நான் செவ்வாயில் பிறந்து,சூரியனில் வளர்ந்து இப்போது யுரேனஸ்சில் வாழ்கிறேன்.அது சரி நீங்க எந்தக் கிரகத்து மூலகம்?

சீனு hat gesagt…

/////

என்னங்கடாப்பா போற்றியெழுதினாலும் கல்லெறியிறாங்கள்.தூற்றியெழுதினாலும் அதையே தொடர்கிறாங்கள்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்.உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்!

நான் செவ்வாயில் பிறந்து,சூரியனில் வளர்ந்து இப்போது யுரேனஸ்சில் வாழ்கிறேன்.அது சரி நீங்க எந்தக் கிரகத்து மூலகம்?

/////

டென்சன் ஆகாதீங்க அப்பு. மேலே இருக்கும் படம் பிரபாகரனோடது தானா என்று கேட்டிருக்கார். எனக்கும் அந்த சந்தேகம் தான்...

உடைப்பு.Sri Rangan hat gesagt…

சாரி சீனு சார்!தப்பு எங்கேயோ நடந்து போச்சு.அவரூ இல்ல பிரபாகரன்.இவரூ தான் சார்.மன்னிச்சுக்கிடுங்க சார்!வெறி சாரீ சார்!

சீனு hat gesagt…

//சாரி சீனு சார்!தப்பு எங்கேயோ நடந்து போச்சு.அவரூ இல்ல பிரபாகரன்.இவரூ தான் சார்.மன்னிச்சுக்கிடுங்க சார்!வெறி சாரீ சார்!//

அடடா! எத்தீனி!!

லவ்லி படத்துல கார்த்திக் ஸாரி கேட்கிற மாதிரி கேட்கரீங்களே!!!

படியாதவன் hat gesagt…

பிரபாகரன் யாரெண்டு தெரியாம விமர்சனம் அது இதெண்டு ஏதேதோ எழுதுறியள்.
நீங்கள் ஈழத்தவரா? தமிழகத்தவரா?
உண்மைக்கு எழுதினது ஒண்டும் விளங்கேல்லை எனக்கு.

//உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்!
//
எப்பிடி? பிரபாகரனே யாரெண்டே தெரியாதவர் சொல்லுறதா?

Anonym hat gesagt…

உயர்திரு உடைப்பு,
நீங்கள் இலக்கியம் படைக்கும்போது எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகளை புழங்குங்கள். சமூக, அரசியல் கருத்துக்களை கொஞ்சம் புரியும்படி எழுதுங்கள்.

Anonym hat gesagt…

சாமீ! அதிகம் படிச்ச பயல் ஒண்ணுமே புரியாதப்பா. ஈழ மக்கள் பிரபாகரனையும் ஈழத்தையும் நம்புறங்க. அது 100% கரெக்ட். நீ என்னப்பா
சொல்றா.

புள்ளிராஜா