அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:(2)
"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."
(தொடர்:2)
இன்றிருக்கும் நமது வாழ் நிலையானது மிகவும் கீழ்த்தரமான கருத்தியல் ஆதிக்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட வாழ்வாகும்.இதில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு பொருட்டல்ல நமக்கு.ஏனெனில் சமூகத்தின் எந்தத் தரப்பை நோக்கினும் அது ஆதிக்கக் கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் நிலையில் பற்பலர் மிகவும் கிழ்த்தரமாக மக்களையொடுக்கும் கருத்துக்களோடு இன்னும் ஐக்கியமாகக் கிடக்கிறார்கள்.அவர்கள் தம்மை அறியாமலே நம்மை அடக்கும்-ஒடுக்கும் கருத்தியலோடு ஒன்றிப் போயுள்ளார்கள்.இத்தகைய நபர்களை வலைப் பதிவில் மிக இலகுவாக இனம் காண முடியும்.இவர்கள் நீலகண்டன்களை விட ஆபத்தானவர்கள்.நீலகண்டனோ தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று பிரகடனப்படுத்தி எழுதி வருபவர்.அவர் ஒரு பெரிய அமைப்பு.போதிய நிதியும் உழைப்பும் அவருக்கு உண்டு,அகவே அவர் ஒரு நிறுவனம்.எனவே இத்தகைய அமைப்பு-நிறுவனம் உழைக்கும் மக்களுக்கு எதிரானதென்பதும் அது ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிரானதென்பதையும் நேரடியாகப் பிகடனப்படுத்திக் கொண்டு இயல்பாகச் சமுதாயத்தை கருத்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் அடக்கி,அழித்து வருகிறது.இது புற நிலையாகத் தன்னை உழைக்கும் மக்களின் எதிரியென்றே இனம் காட்டுகிறது.ஆனால் வலைப் பதிவில் சைவத்தையும் தமிழையும் காப்பதென்ற போர்வையில் எழுதும் உணர்வும்,கி.வா.என்ற பார்ப்பானை தூக்கிவைத்தழும் பாரிஸ் யோகன் என்ற பதிவரும் இந்தப் பார்ப்பனியத்தால் தடுதாட்கொள்ளப்பட்ட நூறுகோடித் தென்னாசிய மனிதர்களுள் இருவர்.இவர்களைப் போன்ற இன்னும் பல மனிதர்கள் இந்த வலைப் பதிவில் இந்து என்றும் கத்தோலிக்கர்கள் என்றும் மற்றும் அல்லாவின் குஞ்சுகள்"நாம் இஸ்லாமியர்கள்-முஸ்லீம்"என்றும் தம்மைப் பிரகடனப்படுத்தியபடி தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த உலகம் தனது சிக்கலான உருவாக்தின்படி உயிரினங்களை மிகவும் வருத்தி வருகிறது.ஒரு புறும் மனிதர்களே மனிதர்களுக்கு எதிராக இருக்கும்போது இயற்கையும் மனிதர்களை மிகவும் கீழாக ஒடுக்கும் இந்தப் புவிப் பரப்பின் நிலையில், மனிதர்கள் எப்போதும் தம்மைப் பற்றிய மிகப் பாதுகாப்பான உணர்வால் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இத்தகைய மனித மனமானது என்றும் தன்னைப் பாதுகாப்பதில் தன்னைவிட முன்னேறிய இயற்கையின் முன் எதுவுமற்ற வெறும் துரும்பாக நிற்கிறார்கள்.இவர்களிடம் எந்தப் பிற்போக்குக் கருத்தும் எடுபட்டு விடும்.இத்தகையவர்களை உதாரணம் காட்ட எங்கள் பாமரப் பெற்றோர்களை இனம் காட்ட முடியாது .அவர்கள் பாமரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.ஆனால் தம்மை அறிவாளிகளாகக் காட்டும் இந்த உணர்வு,யோகன் பாரிஸ் போன்றவர்கள் உண்மையில் வெறும் நாணல்கள் போன்றவர்கள்.இவர்களிடம் அறிவின் பகுப்பாய்வு-சுயசிந்தனை-கேள்வி கிடையவே கிடையாது.இத்தகைய கோமாளிகள் வலை பதியும் இந்தச் சூழ் நிலையில் நாம் கருத்தாடுவது மிக மிக அவசியமாகும்.எனினும் நம்மிடம் போதிய உழைப்பில்லை.நாம் தனித்துக்கிடக்கிறோம்.உயிர் வாழ உழைக்கும் வேலையானது நம்மை உயிரோடு புதைத்தபடி, நமது கால நேரத்தை உருவி விடுவதால் இத்தகைய ஆதிக்கக் கருத்தாளர்களை உடனுக்குடன் எதிர் கொள்ள முடிவதில்லை.
இருந்தும் பார்ப்பனியத்தின் கருத்தியல் வலுவானது இத்தகைய மனிதர்களைவிட நமது அன்றாடத் தொடர்பு ஊடகம் அனைத்திலும் மிகவும் ஆளுமையைச் செலுத்தி அது கல்வி,செய்தி ஊடகம் மற்றும் அனைத்துப் பாண்பாட்டுத் தளத்திலும் தனது வேரை ஆழமாகப் பதியம் போட்டு வைப்பதால் அது நாம் பேசும் மொழியிலும் நுகரும் கலை இலக்கியத்திலும் மிகவும் வலுவாக வேரைப் பதித்து நம் அன்றாட மூச்சோடு அது அன்னியோன்னியமாகிச் சகலதிலும் சங்கமித்துவிட்டது!இந்த ஒரு வாழ்வு மெய்ப்பாட்டோடு நாம் கருத்தாடுவது மிகவும் சோம்பேறித்தனமான மனதை எமக்குத் தருகிறது.சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் பார்ப்பனியத்தினதும் மற்றும் மதவாதக் கருத்தியல் ஒடுக்கு முறைகளாலும் மக்கள் உளவியல் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் அல்லேலோயாவின் ரீ.வி.நிகழ்ச்சியைப் பாருங்கள்! எத்தனை இலட்சம் அப்பாவிகளை இவர்கள் ஏமாற்றித் தமது பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கி வைத்தபடி அந்த ஏழை மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கி வருகிறார்கள்!
இதையெல்லாம் பார்க்கின்றபோது நாம் அமைப்பாகச் செயற்பட்டு இதை அம்பலப்படுத்தியாக வேண்டும்.திரு.ஆபிரகாம் கோவூர் போன்று நாம் தனிமனிதர்களாகச் செயற்பட்டால் இதனால் எதுவும் நிகழப் போவதில்லை.ஆதலால் அமைப்பாகச் செயற்பாடுகளை வகுக்க வேண்டும்.இங்கே தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அத்தகைய நடவடிக்கையில் இறங்கிச் செயலாற்றி வருகிறது.இது காலத்தால் அவசியமாக நம்மிடம் அறை கூவிக் கையளித்த வேலைத் திட்டம்.இதை நமது பண்பாட்டு அரங்கில் மிகச் செழுமையாக முன்னெடுத்தாக வேண்டும்.இந்த நோக்கோடு மேலும் நகர்வோம்.
பருப் பொருள் வேண்டிய பாரிய அடி:
இந்தப் பருப் பொருளானது உலகத்தின் மிகவும் சூக்குமமான கருத்து என்பதும் அது உலகத்தின் அனைத்துப் புரிதல்களுக்கும்,உண்மையைத் தேடிய அனைத்து தோற்று வாய்க்களுக்கும் முதன்மையானவொரு விஞ்ஞான எடுகோளாக இருந்தது.புலப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக விளக்கப் படுத்தப் பொருள் முதல் வாதிகளிடமிருந்த இந்த ஆயுதம் மிகவும் சரியானதென்று அன்றைய நம் பொருள் முதல் வாதிகள் நம்பினார்கள்.அவர்கள் இதை நம்பிக் காரியத்தில் இறங்கியபோது எல்லோரும் இதைச் சாதகமானதாக் எடுத்துக் கொண்டு தமது பகுப்பாய்வை முன் வைக்கத் தொடங்கிளார்கள் .அவர்களில் முதன்மையானவர் ஜேர்மனியப் பொருள் முதல் வாதியான லூட்விக் பொய்யர்பக் என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.இவரது வருகைக்குபின் பொருள் முதல் வாதிகளிடம் ஒரு துடிப்பு ஏற்பட்டது.
உலகத்தின் எல்லையில்லாப் பொருட்களின்,மூலகங்களின் வேறுபட்ட குணாம்சங்களுடைய மாறும் பொருள்களின் அல்லது புலப்பாடுகளின் முழுநிறைக் குணாம்சங்களை இந்தப் பருப் பொருள் எடுத்தியம்புவதாக லூவிட்க் பொய்யர்பக் கருதியபோதும் அவரால் இதற்கானவொரு மிகவும் கறாரான விஞ்ஞான விளக்கத்தைத் தர முடியாதபோது,அதற்காக அவர் மண்டையைப் போட்டு உடைக்கவில்லை!இங்கேதான் வந்தது ஒரு எதிர்பாராத கிளைமோர்த் தாக்குதல்.
பிரஞ்சுக்காரப் பொருள்முதல் வாதகளும்,ஜேர்மனியப் பொருள் முதல் வாதிகளும் ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளோடும் இந்தப் பருப் பொருளைப் போட்டுக் குழப்பத் தொடங்கினர்.பரப்பொருளின் கட்டமைப்பை இயற்கை விஞ்ஞானத் தரவுகளோடு போட்டுக் குழப்பியெடுத்துச் சாரத்தை மிகவும் பலவீனமாக்கினர்.இருபதாம் நூற்றாண்டின் அதிவேகமான முதலாளிய வளர்ச்சியானது இத்தகைய நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.ஒரு புறும் ஜந்திரங்களின் வளர்ச்சி மறுபுறும் யுத்தம்.ஆதிக்கத்துக்கான ஆயுதப் பலத்தில் மூழ்கிய விஞ்ஞானம் மேன்மேலும் குழப்பத்தில் வீழ்தியது பருப் பொருளின் சாரத்தை.
ஏலவே நான் கூறியபோது பருப்பொருள் என்பதை அவர்கள் உணரும் காலத்தில் அதைப் பிரிக்க முடியாதென்றும் மாற்ற முடியாதென்றும் கருதிய காலத்தில் என்றே சொன்னேன்.அடைப்புக் குறிக்குள் இப்போது பிரிக்கக் கூடியதென்றும் எழுதியதை வாசகர்கள் இப்போது கவனத்துள் எடுக்கவும்.
மின்னணுக் கண்டு பிடிப்பானது இந்தப் பருப்பொருளைத் தலை கீழாகப் புரட்டிப்போட்டது.மிக மிக நுணுக்கமான துகள்களைக் கொண்டது அணுவென்றும் அல்லது மின் அணுவென்று இக் கண்டுபிடிப்புச் சொன்னது.அயன் ஸ்ரைன் போன்ற விஞ்ஞானிகள் "அணுவைப் பிளந்து அதனால் பயன் பெற முடியுமென்று" சொன்ன போது அதன் அழிவுப் பக்கத்தையும் ஒரே தடவையில் புரிந்து இப்படிச் சொன்னார்கள்."Das Problem dieser Welt ist nicht die Atombombe,sondern das Herz des Menschen."("உலகத்தின் பிரச்சனை அணுக் குண்டல்ல மாறாக மனிதர்களின் இதயமே."அய்யா அயன் ஸ்ரையின் மனித இதயமல்ல அய்யா!முதலாளிகளின் உற்பத்தி ஊக்கமே பிரச்சனையாக அன்றும் இன்றும் இருக்கிறது.)எனினும் ஓட்டோ கான் அணுவின் பல கட்டங்களைச் சொன்னதன் கையோடு ஒவ்வொரு கட்டத்தையும் சாத்தியப்படுத்தி அணுக்குண்டை அமெரிக்க முதலாளிகளுக்கு அளித்த ஓப்பன் கைமர் உலகத்தில் கீரோசீமா மற்றும் நாகசாகியின் சாம்பலின் சொந்தக் காரனானான். "நாசமாப் போவான்-அவன் குடும்பமே,சந்ததியே அழிந்து போ!".இப்படி அணுக் குண்டைக் கண்டு பிடித்தவனைத் திட்டுகிறோமென்றால்,அணுக் குண்டையேவிட அதிக ஆபத்தானா பார்ப்பனியத்தையும் அதைத் தூக்கி நிறுத்தும் பார்ப்பனர்களையும் இவர்களது பொருளாதார முன்னெடுப்பையும் எப்படித் திட்டவா அல்லது வரலாற்றில் இருந்து அழித்துப் புதியதைப் படைப்பதா முக்கியம்? இது கேள்வி.நாம் மேலே போவோம்.
அணுத் துகள்கள் பிரிக்க முடியாது,அது நிலையானதென்பது பொய்த்துப் போனபோது பருப் பொருளின் வாழ்நிலைதான் இந்தக் கோதாரி பிடித்த பிரபஞ்சத்துக்கு
அடிப்படை(இதுகூட ஒரு வகையில் கருத்தியல்தான்.அதனால் அது "பொதுகிட்டுபோச்சு நைனா" என்பது உண்மைதான்)என்ற கூற்றைப் பல இயற்பிலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்களே,அப்பப்பா நம்மட கருத்துமுதல் வாதக் கொழுந்துகள் துள்ளிக் கூத்தாடி "பாட்டாளிகளின் சித்தாந்தம் தவறானது.அது பொய்.உலகைப்படைத்தவனே நம்மைப் பணக் காரர்களாகவும்,வேலைக் கார மிருகங்களை பஞ்சப் பரதேசிகளாகவும் படைத்தார்கள்.அது அவர்கள் முற்பிறப்பில் செய்த பழி"என்று பாடத் தொடங்கினார்கள்.
அணுத் துகள்கள் எலக்ரோன்களாக உடைவதும்,அவற்றினது பொருண்மையானது இயக்கத்தினது வேகத்தைச் சார்ந்திருக்கிறது.இதனது அர்த்தம் பருப்பொருளென்பது மாற்றப்படுகிறது என்பதே இயற்பியலாளர்களின் வாதமாகியது.இந்தச் சங்கதி இதுவோடு நிற்கவில்லை.மேலும் அணுவின் எல்லாச் சூத்திரங்களையும் தோண்டிக் கொண்டே விரிவடைந்து பருப் பொருளை ஒரு வழி பண்ணியது.இத்தகைய கண்டுபிடிப்பில் எலக்ரோன்கள்,பொசிட்ரோன்கள் போன்றவன்றின் ஒளி வீச்சு மாற்றம் குறித்த கண்டுபிடிப்பைத் தாண்டி இயற்கை விஞ்ஞானத்தின் நெருக்கடியை இன்னும் ஆழமாக்கியது.
ஒரு நிலையில் எதிர் மறைச் செயலுடன் கூடிய பருப் பொருளின் இரண்டு பாகங்கள் ஒளியாக மாறுவது உண்மையாகிறது.இந்தவுண்மையானது பருப் பொருள் மறைந்து உலககே மாயமாகிறதாகி விடுகிறது.அடாடா அத் வைதம் இங்கே எவ்வளவு உண்மையாக மலர்கிறது பாருங்க எண்டார்கள் நம்ம அரவிந்தன்கள்.
என்ன சொல்கிறது அத்வைதம் உககே மாயம்.ஏழாம் நூற்றாண்டளவில் இது உலகத்தை மாயை என்றது.அதை இங்கே பொருத்திய பார்ப்பனப் பண்டாரங்கள் இது குறித்துப் பல பக்கக் கட்டுரைகளை எழுதித் தள்ளியது அன்று.இன்றும் அரவிந்தன் எழுதுவதற்கு இத்தகைய அடிப்படைகளே காரணமானது.எனினும் அன்றைக்குத் தமது வாழ்வையே கருத்துமுதல்வாதிகளுக்கு எதிராகத் தியாகம் செய்த பரம்பரை விடுமா?அறிவுதானே நமது மூலதனம்!இந்தா பார். உங்கட இந்தக் குறுகிய மகிழ்ச்சியை உடைத்து நாம் சொல்வதின் உண்மைதான் உண்மையின் இருப்பு என்று நிறுவிக் காட்டுவதாகப் பொருள்முதல்வாதிகள் வெளி கிட்டுத் தமது மூளைகளைக் கசக்கப் பிழிந்தார்கள்.
இயற்பியலாளரின் கண்டுபிடிப்புகளின் விஞ்ஞானத்துக்கு புறம்பான கருத்துக்களை தமக்குச் சாதகமாக்கிய உலகத்தின் ஒடுக்குமுறை நிறவனங்களான மதம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மார்க்சியத்தின் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைப் புதை குழிக்குள் அனுப்பும் தொனியில்"மார்க்சியம் என்பது இன்னும் சில காலம் விடலைகளின் மனதிலும் அதற்குப் பின் பொருட்காட்சியகத்திலும் இருக்கும்"என்றார்கள்.இப்போது அரவிந்தன் நீல கண்டனைக் கொஞ்சம் மனதில் இருத்துங்கள் அவர் என்ன சொல்கிறார்?"மார்க்சிய அரைகுறைகள்... பெரியாரென்ற பயங்கரவாதி"என்ற தொனியில் எழுதுகிறாரா அதற்குக் காரணம் இந்த வகைக் காரணங்களின் மேற் புல் மேய்ச்சல்தான் காணமாகிறது.
அப்பர்களே!அருமை அம்மணிகளே!!இன்றைக்குச் சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே ஒரு பெரிய விஞ்ஞானி-கொரிய உயிரியலாளர் திரு.உவோங்(Hwang) உலகத்துக்குப் பொய் யொன்றை அவிழ்த்துவிட்டு,இறுதியில் தனது அனைத்துப் பதவியையும் இழந்தது ஞாபகமிருக்கா?
"König der Klone"(குலோன் இராஜா)என்றும்; Fälschungsskandal um Klonforscher Hwang macht «Science» sprachlos(தவறான தரவுகள.; குலோன் ஆய்வாளரின் ஊழல்.மெளனித்திருக்கிறார் உவோங்) என்றும் நாம் அறிந்தோம்.அய்யன் உவோங்கின் கருத்துக்களும் அவரது தரவுகளும் குலோன் ஆய்வில் பொய்பித்தபோது அங்கே வெற்றி கொள்ளப்பட்டது உண்மை!அது வெற்றிடமொன்றை விட்டுத் தள்ளவில்லை.மீளவும் ஆய்வில் அவரைத் தள்ளி உண்மைக்கு முடிசூட்ட அவர் மீளவும்,மீளவும் முயற்சித்தபடி.ஏனென்றால் உண்மையென்பதை உழைப்பால் மட்டுமே நிறுவ முடியும்.அவரதை நிறுவுவதற்குக் காலமெடுக்கலாம்.இதுதான் இந்த நிலையிலும் திடமுடன் போராடும் அனைத்துத் தரப்புக்கும் காரணமானது.இந்த உவோங்கின் உறுதியோடு அன்றே இறங்கியவர்கள் பொருள்முதல் வாதிகள்தான்.
இந்தப் பருப்பொருளின் கருத்துநிலை வேண்டிய பாரிய அடியானது சோஷலிச இலட்சியத்தையே பொய்யானதெனக் கருதும் அளவுக்குக் கருத்துமுதல் வாதிகளைப் பிரச்சாரத்துக்குள் தள்ளி பாட்டாளிய வர்க்கத்தை அதன் போராட்டச் சித்தாந்த்தைப் பொய்யாக்க முனைந்தது.இத்தகைய நிலையில்தாம் பார்ப்பனியமும் தன்பாட்டுக்குக் கருத்துமுதல் வாதத்தால் தென் கிழக்காசியத் தத்துவப் பரப்பை ஆக்கிரமித்தது.அது கொண்டாடிய பரந்தாமன் பாற்கடலைக் கடைந்து உறிஞ்சிய நஞ்சு பாட்டாளிய அதாவது ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரானதாக இருந்தது.பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச இலட்சியத்தை மிகவும் வெறுப்புடன் விமர்சிக்கும் அரவிந்தன் நீல கண்டனிடம் கருக்கொண்டு மையங்கொண்ட மேற்காட்டிய பருப்பொருளின் தோல்வி மேலும் அவரைப் போன்றவர்களைக் கருத்துமுதல் வாதிகளிடம் சரணாகதியடைய வைக்கிறது.இங்கேதான் கருத்துமுதல் வாதத்தின் மிகக் கெடுதியான உளவியல் ஒடுக்கு முறை தன்னை அம்பலப்படுத்தி தான் உடமை வர்கத்தின் பக்கதிலேயே படுத்துக் கிடந்து பாட்டாளியளைப் பாடையில் அனுப்பும் மதமே என்று நிரூபித்தது-நிரூபித்து வருகிறது.
பொருள் முதல் வாதிகளின் அன்றைய இயக்க மறுப்பியில் பருப்பொருளை தோல்வியின் வெளிம்பில் தள்ளியபோதும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே பெளத்தம் சொன்ன"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரமென்ற"உண்மையை உள்வாங்குவதில் இருந்த தயக்கம் இயக்க மறுப்பைச் செய்தது.எனினும் கேகேல்;(Hegel)போன்ற விஞ்ஞானிகள் இயக்கவியலுக்கு ஓரளவு முக்கியம் கொடுக்கத் துவங்கியபோது அத்தகைய நிலையில் வரலாற்று ஆசான் லெனின் மிகப் பெரிய சாதனையை நிறுவிக்காட்டினார்.அவரே இந்தப் பொருள் முதல் வாதிகளின் கண்ணுக்குப் புலப்படாது இயக்க மறுப்பியலைச் சுட்டிப் பருப் பொருளின் அடிப்படையை இயக்கவியல் பொருள் முதல் வாத்தத்துகுச் செல்லும்படி உயர்த்திப் பாரிய நெருக்கடியைத் தொடைத்தெறிந்து இந்தப் பாழாய்ப்போன கருத்து முதல் வாதக் கண்றாவிகளை நாக்கிளிப் பூச்சிகளாக்கினார்.
பருப்பொருள் என்பது என்றைக்குமே எந்தவிதமான ஸ்த்தூலமான நிலையான,மாற்றமுடியாத வெளிப்பாடுகளாகச் சுருங்கக் கூடியதல்ல.அது இயங்குவது.இயகத்தில் இருப்பது.
"மனிதர்களுக்கு அவர்களுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுகின்ற புற நிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற தத்துவஞான வகையினமே பருப்பொருள் எனப்படும்.புற நிலையான யதார்த்தம் அவற்றிலிருந்து சுதந்திரமாக இருந்து புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்பட்டு,படம்பிடிக்கப்பட்டு,பரிபலிக்கப்படுகிறது."என்று நம்ம ஏங்கல்ஸ் இயக்கவியல் பொருள் முதல் வாத்தில் நிறுவிக்காட்டினார்.
உணர்விலிருந்து புற நிலையாகவும்,சுயேற்சையாவும் நிலவும் இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் பல்வேறு வகைப்பட்ட புலப் பாடுகளையும் குறிப்பதற்கான தத்துவஞானக் கருத்தமைவாகவே நம் மார்க்சிச முன்னோடிகள் பருப்பொருளை சுட்டலானார்கள்.இதனால் அது இயக்க மறுப்பிலிருந்து மிகவும் முன்னேறி இன்றைய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இனி வரும் கண்டு பிடிப்புகளுக்கு ஆதாரமான தத்துவஞானச் சுட்டலாக கொலுப் பெற்றது.எனவே பருப் பொருள் என்பது ஒரு புற நிலை யதார்த்தம் என்பதை எவராலும் மறுக்க முடியாதாகிறது.விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அதாவது நம்ம உவோங் போன்றோரின் னுநளழஒலச¨டிழரெமடந¨ளெயூரசநஇ னு§யுஇ னு§ளு போன்ற வற்றுள் நிகழ்தப்பட்ட இயற்கைச் செற்களின் திட்டவட்டமான தரவுகள் இந்த உண்மையை அதாவது புற நிலையான யதார்த்தம் என்றதால் அகவயக் குறைபாடான கருத்தியல் தகவமைப்பான இறையுட் கோட்பாட்டையும் அதைக் காவி வரும் "காவி,அங்கி,குல்லா"க் காரரின் கேனைத் தனமான கருத்தியல் பிரச்சாரத்தையும் உடைத்தெறிந்து மக்களின் உண்மையான இயக்கவியல் பொருள் முதல்வாதப் பருப்பொருள் உண்மையை உறுதிப் படுத்தி நிலைப்படுத்தியது.
பார்பனியமானது தன்னளவில் தத்துவ விளக்கமாகவும்,கருதுகோளாகவும் நிலவுகின்ற ஒரு நிலையில் அது புற நிலையாகப் பிரதியெடுக்கப்படும் தத்துவக் கண்ணோட்டம் உப நிஷதமாகவும்,வேதங்களாகவும் விரிவுறுகிறது.இது கற்பிக்கும் தத்துவார்த்தப் புரட்டல்களே மென்மேலும் அதை அகிம்சா வாதக்கண்ணோட்டமாக மாற்ற முனைகிறது.ஆனால் அக நிலையாக அது வடித்து வைத்திருக்கும் மனித சாரம் மனிதர்களைக் கூறுபடுத்தி அடிமைத்தளையில் தொடர்த்து இருத்தி ஆளும் வர்க்கத்துக்கு அதாவது இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைதைத் தமது கையுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய மற்றும் பனியாச் சாதிகளைக் காத்து வருகிறது.இது அக நிலையாகவும் புற நிலையாகவும் தன்னை ஒரு நிறுவனமாக நிலைப்படுத்த உதவிய பொருளாதார அடித்தளம் முற்று முழுதிலும் பார்ப்பனியத்தை முழு இந்தியச் சட்டவாக்கமாக மாற்றியதன் கொடும் நிகழ்வே இதைத் தொடர்ந்து நிலைப் படுத்திக் காத்து வருகிறது.இதற்கு உடந்தையாக நமக்குள் நிலவும் சைவம் முதல் இந்து மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் பண்பாட்டுத் தளத்தைப் பார்ப்பனியத்துக்கு ஏற்ப்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே மதம் என்பது இங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் வாழ்வியல் மதிப்பீட்டை உருவாக்கும் நிலையில் அது மக்களின் மனதைக் கருவியாக்கி ஒவ்வொரு உடலையும் பார்ப்பன உடல்களாக்கியுள்ளது.அந்தவுடலை மீளவும் பண்பாட்டு நுகர்வில் சாதியக் கட்டுக் கோப்பால் தாழ்மைப் படுத்தியும் உயர்த்தியும் கூறுபோட்டு மிகவும் கொடூரமான நிறுவனமாகத் தொடர்கிறது.ஆதலால் பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதார உறவில் மேல்மட்ட அமைப்பாகவும் அதேயிடத்தில் மேல்மட்டத்தைத்தாண்டிய கீழ்மட்டத்தை நிர்ணயிக்கும் பரப்பொருளாகவும் நிலவுகிறது.இது உணர்வுகளுக்கு அப்பால் நிலவுகின்ற இந்தப் பிரபஞ்சத்துக்கு நிகராகத் தன்னை முதன்மைப்படுத்தி மக்களின் அனைத்து நுகர்வுக்குள்ளும் வந்து தொலையும் பாரிய உணர்வு நிலையாக மூளையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.இது இந்திய வம்சாவழி அனைவரையும்-அனைத்து சாதிகளையும் ஒருங்கே வென்றவொரு கருத்தியல் நிறுவனமாக இருப்பதால் அதை பண்பாட்டுப் புரட்சியூடாகத் தோற்கடிப்பதற்கான முன்னெடுப்போடுதான் வெல்ல முடியுமென்பதாகிறது.இதுவன்றிப் பொருளாதார உறுவுகளின் மாற்றத்தால் மட்டும் இதை உடைத்திட முடியாதாகிறது.இங்ஙனமே பார்ப்பனியத்தை வரையறுப்பது நமக்கு அவசியமாகும்.
இந்த நிலையில் மனிதரின்மீதான மதங்களின் ஆதிக்கம் பற்றிப் புரிந்து மேற்கொண்டு இவர்களை அம்பலப் படுத்துவோம்.
தொடரும்...
25.02.2007
2 Kommentare:
ஆழமான கட்டுரை, ஒரு முறை படித்துவிட்டேன் ஆனால் மீண்டும் படிக்க வேண்டும்...
kuzhali oru thadava padichale puriyanum appadi puriyavillai enral ezhuthiyavarudaya thavaru. enorumurai padithu ungal nerathai veenadikkavendam
Kommentar veröffentlichen