Sonntag, Februar 18, 2007

நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."


(தொடர்)

முதலில் நாம் பார்ப்பனியத்தை எதிர் கொள்வதென்பது வெறும் கருத்தியல் தளத்தில் இரண்டு நபர்களுக்குள் இடம்பெறும் விவாதமாக எடுக்கப்படாது.இதை முதலில் புரிந்து கொள்ளும்போது உண்மையென்ற ஒரு நிலை நம் முன் வந்து தொலையும்.அந்த உண்மை என்பது என்ன?பார்ப்பனியம் ஒரு குறிப்பிட்ட உயர்த்திக் கொண்ட சாதியையோ அன்றிப் பின்பற்றப்படுகின்றவொரு மதத்தையோ குறிப்பிடப்படுவதில்லை இங்கே.

இந்தச் சங்கதியானது இந்தியத் துணைக்கண்டத்தில் மிகவும் பலாத்தகாரவடிவத்தில் மக்களையொடுக்கும் ஒரு அதிகெடுதியான ஒடுக்குமுறைக் கருத்தியல் நிறுவனமாகச் செயற்படுகிறது.அது மனித ஆழ்மனத்தில் புதிய வகைமாதியானவொரு ஆதிக்க மனிதனை உருவாக்கி வைத்துள்ளது.தனக்குள் வாழும் சக மனிதனை தன்னிலும் கீழான நிலைக்குள் தள்ளி அவனை-அவளை ஒடுக்கும் பாரிய ஒடுக்குமுறை மனோபாவத்தைத் தகவமைக்கும் உளவியலை இந்தப் பார்ப்பனியம் சாதிகள்,மதம்,பண்பாடு கடந்து,அனைத்துத் தரப்பினரிடமும்(அது பிரமணரென்ன பிள்ளைவாளென்ன தலித்தென்ன எல்லாத் தரப்பிடமும் தனது வேரை அகலப் பதித்துள்ளது)ஒடுக்குமுறைக் கருத்தியலாக உள்வாங்கப்பட்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் ஒடுக்கு முறை நிறுவனமாகச் செயற்படுகிறது.இதுதான் மிகப் பெரிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் முன் வைக்கும் நமது வாழ்வியல் மெய்ப்பாடாகும்.


உண்மை-யதார்த்தம்,மெய்ப்பாடு இத்தகைய வார்த்தைகளின் பின்னே நிலவுகின்ற வாழ்வியல் முரண்பாடுகள் வலிய பொருளாதாரக்கட்டமைப்பால் முன் தள்ளப்படுபவை.இந்திய சமுதாய அமைப்பில் நிலவுகின்ற அனைத்து முரண்பாடுகளுக்குள் முதன்மை முரண்பாடானது பார்ப்பனியத்துக்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடாகும்.இந்தப் பார்ப்பனியத்தை எதிர் கொள்ளும்போது,அது குறித்தொரு வரையறை அவசியமாகிறது.அதாவது பார்ப்பனியமென்றால் என்ன?அதன் வியாபித்த சமூகத் தன்மை என்ன?இந்தப் பார்ப்பனியம் எங்ஙனம் மனிதர்களை ஒடுக்குவதற்கான வன்முறைக் கருத்தியல் வடிவமாகவும்-வன் முறை சாராக் கருத்தியல் நிறுவனமாகவும் இருப்பதென்பதை நாம் முதல் அறிவது.மிக அவசியமாகும்.

பார்ப்பனியம் என்ற சமூக உளவியலுக்கு இந்திய மேலாண்மை வர்க்கத்தின் அதீத குவிப்புறுதி ஊக்கத்தின் நிரந்தரச் சுரண்டலை நிறுவிக்கொள்ளும் பொறி முறையுள் முக்கிய இடம் இருக்கிறது.அந்த இடம் பார்ப்பனிய நிறுவனமாகச் செயற்படுகிறது.இதை நாம் வரலாற்றுப் புரிதல்களுடாகப் பார்ப்போம்.

இந்தியச் சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளாதவரை விடிவுக்கான போராட்டம் கருத்தியல் நிலையிலேயே தோற்கடிக்கப்பட்டுவிடுகிறது என்றே நாம் கருதுகிறோம்.இந்தச் சிக்கலைப் புரிவதற்கு நாம் தத்துவார்த்த முறைக்குள்ளாலேயே விளக்கப்படுத்த முடியும்.இந்த அடிப்படை தவிர்ந்த வேறுவகையில் கருத்தியல் பார்வைகளை இலகுவில் விளக்கப்படுத்த முடியாது.இதற்காக நாம் எத்தனை மாதத்தையும் செலவு செய்து இந்தத் தளத்தில் இதை எழுதுவதாகவே முடிவெடுத்துள்ளோம்.அனைத்துப் பிரச்சனைகளையும்-அதாவது நம்மட புலிப் புலம்பல்,ஈழம் ...எல்லாம் இப்போதைக்குக் கிடப்பில் போட்டு,அர்விந்துக்களைச் சந்திப்பதே நம்மட தலையாயக்கடமை.இனி மேலே போவம்.

பருப்பொருள்சார்ந்த வாழ்நிலை வடிவங்கள்.


தத்துவார்த்தத் துறையின் அடிப்படையான கேள்விகளுக்கு அழமான-அறிவார்ந்த மற்றும் மெய்பிக்கபட்ட விஞ்ஞானரீதியாகப் பதிலளிக்க வேண்டுமென்றால் நாம் பருப்பொருள் மற்றும் உணர்வின் குணவியல்பு பற்றிய அறிவை முன்னதாகக் கொள்வதுதான் சாத்தியம்.இன்றைய உலகத்தில் கருத்தியலானது முற்றும் கருத்துக்களால் ஆனாது.அதற்கு உதாரணமாக நாம் அனைத்து மதம் சார்ந்த மொழிவுகளையும்,அது கற்பிக்கும் ஒழுக்கங்களையும் மனதில் இருத்தும்போது மிக இலகுவாகப் பலவற்றைக் குறித்தொரு முடிவுக்கு வர முடியும்.ஆனால் பொருள்முதல் வாதமென்பது பருப்பொருள் பற்றிய கருத்தமைவோடு பாரிய மனிதப் புரிதலைச் சாத்தியமாக்கிறது.அது முன் மொழிவுகளைக்கடந்து இந்தவுலகத்தின் அனைத்து விடயங்களிலும் பாரிய விஞ்ஞான பூர்வமான தெளிவைச் சொல்கிறது.இதுதான் இந்தவுலகத்தின் பாரிய ஒடுக்குமுறை நிறுவனங்களை இனம்கண்டு தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுகிறது.இங்கே பருப்பொருள் குறித்தும் அதன் வாழ் நிலையின் வடிவங்களையும் நாம் முதலில்ப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.இதுவன்றிப் பார்ப்பனியத்தின் காட்டுமிராண்டித்தனமான கருத்தியல் பாசிசத்தை இனம் காண்பது கடினம்.இந்தக் கருத்தியல் பாசிசத்தை திருவாளர் உம்பேர்ட்டோ எக்கோவின் குறிப்புகளிலிருந்து இறுதியில் மிகத் தெளிவாகப் பார்ப்போம்.


பருப்பொருள்,இது என்ன சாமான்?:


மனிதர்கள் கணக்கிலடங்காத வகைவகையான பொருட்கள் மற்றும் புலப்பாடுகளால் சூழப்பட்டு கிடக்கிறார்கள்.இவையெல்லாம் விழிகளுக்குப் புலப்படாத அணுத் துகள்களிலிருந்து மாபெரும் நட்சத்திர மண்டலங்கள் கடந்து கிளெக்சி வரையும்(எட்வின் கூப்பிளின் பெரு வெடித் தத்துவத்தை நாம் ஏற்பவர்களில்லை)சாதரணக் கிருமிகளிலிருந்து உயர் மட்ட மிருகங்கள் வரை,அசேதன உலகின் எளிமையான இயங்கியல் நிகழ்வுப் போக்கிலிருந்து யதார்த்தத்தை மாற்றுவதைக் குறிக் கோளாகக்கொண்ட மனித மூளையின் உணர்வு பூர்வமான மனித நடவடிக்கை வரை பரவிப்படர்ந்துள்ளன.

புராதன காலம் தொட்டு இந்தவுலகத்தின் வேறுபட்ட தன்மைகளினது மூலத்தைக் கண்டுபிடிக்க,அதன் வாழ் நிலைக்கான அடிப்படையைக் காண மனிதர்கள் முயன்று வருகிறார்கள்.(இங்கே பார்ப்பனாகளில் பலர்... அரவிந்தன் போன்றோர் விதிவிலக்கு.ஏனென்றால் இவர்கள் உபநிஷதம் பற்றிய கொள்கையுள் முடங்கி மூலப் பொருள் பிரம்மம் என்றார்கள்.நம்மட ஆட்கள் சொன்னாங்க லோகாயுதம் பற்றி.லோகாயுதக்காரருக்கு எப்போதும் பிரத்தியட்சப் பிரமாணங்கள் அவசியமாக இருப்பதால் அவங்க சொன்னாங்கள்:"நிலம்,நீர்,காற்று,தீ"இந்த நான்குமே மூலப் பொருளாக.பாருங்க இவங்க நம்மட ஆளுக கொஞ்சம் முன்னோக்கித் திங் பண்ண பார்பபனப் பண்டாரங்கள் பிரம்மம் என்று கற்பனை செய்து"தத்துமஸி,அஹாம் பிரஹ்மாஸ்மி"என்று கூறிக் கொண்டு,உலகத்துக்கு எதுங்க ஆதரம் என்றால் "பிரும்மம்"என்றார்கள்.மேலும் கேள்வி தொடர்ந்தால் உடனே "இனிக் கேள்வி கேட்டாய் கம்முனாட்டி ஒண்ட தலை வெடிசிப்போடும் ஆமா!" என்று அப்பவே காதில பூச் சொரிகினார்கள்.)இயற்கைக்கு மேலான ஒரு சக்தி,ஒரு தனி முதலான கருத்து அல்லது உணர்வுதான் உலகத்துக்கான முதற்காரணம் என்று நம்ம அரவிந்துக்கள்-கருத்து முதல்வாதிகள் கருதினார்கள்.நம்மைப்போன்ற(மண்டையில் கொஞ்சம் மயிர் கூச் செறியச் சிரியுங்கோ) பொருள் முதல்வாதிகள் வாதிகள் இயற்கையை அதன் யதார்த்தத் தன்மையிலேயே உணர்ந்தனர்-பார்த்தனர்-கண்டனர்-புரிந்தனர்.

நம்மட ஆட்க்கள் பொருள் முதல் வாதத்தை முன் நிறுத்தியபோது"புத்தஞ் சரணம் கச்சாமே"கோஷ்டிகள் உலகில்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்" என்று ஒரு உண்மையைப் போட்டுடைத்தார்கள்.இந்தத் தரணத்தைக் கடந்து வந்தவர்களான பொருள் முதல்வாதிகள் உலகத்தின் அடிப்படையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக பருப்பொருள் பற்றிய கருத்தமைவைப் பயன்படுத்தினார்கள்.ஆனால் பாருங்க இங்கே பருப் பொருள் என்றால் என்ன?இந்தப் பெரிய பிரமாண்டமான பிரபஞ்சத்துக்கு மூலம் என்ன-ஆதாரமாக இருப்பதென்ன?

இன்று உலகத்தைப்பற்றிய மெய்யான அறிவை மனித குலம்(பார்பனர்கள் அல்ல)பெற்று விட்டதால் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பற்பல விடைகள் முன் வைக்கப்பட்டு,விடைகள் மாறிய வண்ணமுள்ளன.

நம்மட பண்டையக் காலத் தத்துவக் கிழங்கள் நீர்,காற்று,நெருப்பு,பூமி போன்ற பல்வேறு பரவிப்படர்ந்த பொருட்கள் அல்லது புலப்பாடுகளைக் கொண்டு பருப்பொருளின் பாத்திரத்தை நன்றாகத் துலங்க வைக்க-வர்ணிக்க முனைந்தனர்.பின்னர் அணுத் துகள்கள்(இதைச் சொன்னவுடன் நம்மட அர்விந்துக்கள் என்னே பெரிய அணு?வைசேஷிகம் சொல்லாத அணுவா? என்பார்கள். நாம அதையும் கடப்போம்.ஏனென்றால் பொருளும் உண்டு,மனமும் உண்டு என்பவர்கள் வைசேஷிகர்கள்.இவர்கள் கருத்து முதல் வாதிகளின் கடைக் கோடிகள்)என்று அழைக்கப்படுகின்ற பிரிக்க முடியாதென்ற(இப்போது பிரித்து உபயோகத்துக்குள் வந்த),மாற்ற முடியாதென்ற(இப்போது மாற்றித் தகவமைக்கப்பட்ட),கணிக்கிட முடியாதென்ற(இப்போது கணக்கிடுவதற்கு முடியுமென்றாகிய)மூலக் கூறுகளைக் கொண்டது பருப் பொருள் என்று அன்றைக்குக் கருதப்பட்டது.

தொடரும்...

Kommentare:

Anonym hat gesagt…

நாங்க நெனைச்சதைவிட ஆழமான தத்துவத்தோட பேசுகிறீங்க.உங்கட இந்தக் கட்டுரையோடு அவரு ஓடப் போறாரூ.

Anonym hat gesagt…

உடைப்பு கொஞ்சம் இலகு தமிழில் இலகு படுத்திச் சொல்லுங்கோ.அப்போதுதான் எனக்கிது புரியும்.மன்னிக்கவும்!

Kuru hat gesagt…

நன்றாகச் சொல்கிறீர்.அடுத்த தொடரை விரைவாகத் தரலாமே?

உடைப்பு. hat gesagt…

//அடுத்த தொடரை விரைவாகத் தரலாமே?//


அன்பரே!எனக்குப் போதிய நேரம் இருப்பதில்லை.வார இறுதியில் மட்டுமே தட்டச்சுச் செய்து வலையேற்ற முடியும்.எனவே ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் தருகிறேன்.இந்த விவாதத்தை ஒரு அமைப்பாகச் செய்வதே சரி.எனினும் தனி நபர்களான நாம் நேரம் கிடைக்கும்போது மட்டுமே எழுத முடியும்.இப்போது பாருங்க வேலைக்கு போய் வந்து இதைத் தட்டச்சு அடிக்கவே தூக்கம் கண்ணைப் புடுங்குது.

ஆதரவுக்கு நன்றி.

அசுரன் hat gesagt…

//இந்தச் சங்கதியானது இந்தியத் துணைக்கண்டத்தில் மிகவும் பலாத்தகாரவடிவத்தில் மக்களையொடுக்கும் ஒரு அதிகெடுதியான ஒடுக்குமுறைக் கருத்தியல் நிறுவனமாகச் செயற்படுகிறது.அது மனித ஆழ்மனத்தில் புதிய வகைமாதியானவொரு ஆதிக்க மனிதனை உருவாக்கி வைத்துள்ளது.தனக்குள் வாழும் சக மனிதனை தன்னிலும் கீழான நிலைக்குள் தள்ளி அவனை-அவளை ஒடுக்கும் பாரிய ஒடுக்குமுறை மனோபாவத்தைத் தகவமைக்கும் உளவியலை இந்தப் பார்ப்பனியம் சாதிகள்,மதம்,பண்பாடு கடந்து,அனைத்துத் தரப்பினரிடமும்(அது பிரமணரென்ன பிள்ளைவாளென்ன தலித்தென்ன எல்லாத் தரப்பிடமும் தனது வேரை அகலப் பதித்துள்ளது)ஒடுக்குமுறைக் கருத்தியலாக உள்வாங்கப்பட்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் ஒடுக்கு முறை நிறுவனமாகச் செயற்படுகிறது.இதுதான் மிகப் பெரிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் முன் வைக்கும் நமது வாழ்வியல் மெய்ப்பாடாகும்.
//

வெகு அருமை.

தொடர்ந்து கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

ஒரு விமர்சனம்:

பொருள்முதல் வாதம் குறித்தும், பருப் பொருள் குறித்தும் பார்ப்ப்னியம் செய்யும் பித்தலாட்டமும் இன்றைய விஞ்ஞானம் அதனை முறியடிக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளதையும் இன்னும் இலகுவான மொழி நடையில் செப்புவது எல்லாருக்கும் இந்த கருத்துக்கள் சென்றடைய உதவும் என்று கருதுகிறேன்.

ஏனேனில் ஒன்றூமில்லாத குப்பை கருத்துக்களைக் கூட வெகு புனிதமாக உருவகப்படுத்தி பார்ப்ப்னிய எழுத்தாளர்கள் வழங்கும் இன்றைய சூழலில் அதனை முறியடிக்கும் விச முறிவு கருத்துக்களை நாமும் இலகுவான மொழி நடையில் வைப்பதே பொருந்தும்.

அசுரன்