Samstag, April 02, 2016

கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.

கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. By Dr.பருத்தி வேந்தன்

|| பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிறது. ||கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார்.

திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதும், லண்டனிலிருந்த புங்குடுதீவுக் கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். வழியாக கருணாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். கிருஸ்ணன் இலங்கை அரசின் உளவாளியாகச் செயற்பட்டு வருவது, ஈ.என்.டி.எல்.எப். அமைப்புக்குத் தெரிந்திருக்கவில்லை. பழைய புளொட் நபர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். அமைப்புடன் ஒட்டிக்கொண்டார்.

சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கிருஸ்ணன், கருணாவை மீண்டும் கொழும்புக்கு அழைத்துச் சென்று சிங்கள உளவுத்துறையிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் கிருஸ்ணன் இலங்கை அரசின் அதி முக்கிய காட்டிக் கொடுப்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இலண்டனிலிருந்து அவர் கொழும்புக்குச் சென்றால் ஐந்து நட்சத்திர விடுதியில், சிவில் உடை சிங்களப் பாதுகாவலருடன் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உளவுத்துறையினரே கவனித்து வருகின்றனர். கடந்த 15-10-2007 அன்று கூட அவர் கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்து ஏதோ சதித் திட்டம் தீட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளொட் இயக்கத்தின் அழிவுக்கும் இந்த கிருஸ்ணன்தான் முக்கிய பங்காற்றினார் என்பது அந்த இயக்கத்தினரின் கருத்துக்காளாக உள்ளன. கருணாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்துச் சென்று இவரே கருணாவின் அரசியல் ஆலோசகரானார். இடையிடையே திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்ததாக லண்டன்வாசிகள் தெரிவித்தனர். திரு. ஆனந்தசங்கரி அவர்கள் சமீபகாலமாக லண்டன் வரும்போதெல்லாம் கார் ஓட்டிச் செல்லும் வேலையையும் கிருஸ்ணன் செய்துவந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இலங்கை இராணுவ உளவுத்துறை திரு. ஆனந்தசங்கரி அவர்களை அவர்களது வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு கருணா மறைந்திருந்த இடத்துக்குச் சென்றது. அங்கு கருணா பல்லிளித்து நிற்க ஆனந்தசங்கரி அவர்கள் தட்டுதடுமாறி வாகனததை விட்டு இறங்கி, “தம்பி நான் கனகாலமா உம்மை பார்க்கோனும் என்று கனபேரிட்ட கேட்டுத் திரிந்தனான். எப்படி இருக்கறியள்” என்று ஆரம்பித்து புலிகளைச் சும்மாவிடக்கூடாது என்று தனது பங்குக்கும் வீரத்தைக் காண்பித்த ஆனந்தசங்கரி அவர்கள், நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் பிரபாகரன் கிளிநொச்சியை விட்டு ஓடவெல்லோ வேணும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.

பின்னர் உளவுத்துறையினரைப் பார்த்து என்னை எதற்காக கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்று சங்கரியார் கேட்க, கிழக்கில் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால்தான் எங்களுக்கு நல்லது. அதற்காகத்தான் இங்கே கூட்டிவந்து கருணாவைச் சந்திக்க ஏற்பாடுசெய்தோம்.

கருணாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி. தன்னை ஓர் அரசியல் தலைவர் என்ற அளவுக்கு இலங்கை அரசு உயர்த்தி உள்ளது. ஆனந்தசங்கரி அவர்கள் என்னைத் தேடிவந்து பார்க்கும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேன் என்று அதுவரை நுணிக்கதிரையில் இருந்த கருணா இந்த நினைப்புக்குப் பிறகு அடி ஆசனம் வரை நிமர்ந்து சௌகரியமாக அமர்ந்து புதிய கணக்கினை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார்.

திரு.ஆனந்தசங்கரி அவர்களோ, கூனிக் குறுகி புலிகள் தலைவருக்கு கிளிநொச்சியில் கொடுத்த மரியாதைக்கு மேலாக கருணாவுக்கு மரியாதைக் கொடுத்து “தம்பி உமக்கு என்ன உதவியென்;றாலும் நான் செய்வதற்குத் தயாராயிருக்கிறன், வெளிநாடுகளில் எனக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்குது. நான் கடிதங்கள் அனுப்பாத அரசாங்கமும் கிடையாது, ஆக்களும் கிடையாது. மகிந்தகூட என்னட்ட கேட்டுத்தான் எல்லாத்தையும் செய்கிறார்” என்று அடுக்கிக்கொண்டு போக, உளவுத்துறையினர் ‘போதும் இவ்வளவும் போதும், மட்டக்களப்பில் நடக்கவேண்டியதைப் பேசுங்கள்” என்றனர்.

சங்கரி அவர்களுக்கு என்னபேசுவதென்றே தெரியாது, உளவுத்துறையினரைப் பார்த்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதம், தம்பி (கருணாவைப் பார்த்து) நீர் என்ன சொன்னாலும் நான் செய்யிறன். பேச்சுவார்த்தையே வேண்டாம், புலிகளை ஒழித்தால் சரி, அதுதானே உமது கொள்கையும், எங்கள் எல்லோரது (உளவுத்துறையினரைப் பார்த்து) கொள்கையும் அதுதானே. என்று கூறி சரி நான் போட்டுவரட்டே என்று கருணாவுக்கு கையை நீட்டி விடைபெற்று வந்த வாகனத்திலேயே யாரும் சொல்லாமலேயே ஏறிக்கொண்டார் சங்கரியார். (குறிப்பு;:- திரு.ஆனந்தசங்கரி அவர்கள் இதனை மறுத்தால் நான் ஆதாரத்துடன் வெளியிடத் தயாராக இருக்கிறேன்)

கருணா ஐரோப்பாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இந்த நாடகங்கள் நடந்தன. கருணாவின் பிரதம ஆலோசகர் புங்குடுதீவு கிருஸ்ணப்பிள்ளைதான் கருணாவுக்கு ஐரோப்பிய ஐடியாவைக் கொடுத்தவர். ஐரோப்பாவுக்குள் சென்றால் யாராலும் எதுவும் செய்யமுடியாது, தனக்கு அந்த அளவுக்கு அங்கே செல்வாக்கு உண்டு என்று கருணாவை நம்பவைத்தார் கிருஸ்ணன். கருணாவையும் அவரது மனைவியையும் ஐரோப்பா மோகம் உருக்குலைத்து வந்தது. குறிப்பாக லண்டன்தான் அவர்களது உள்ளத்தின் கனவுக்கோட்டையாக இருந்துவந்தது.

கிருஸ்ணனின் எண்ணப்படி லண்டன் வந்து சேர்ந்தால் கருணா தனது பிடியில்தான் இருக்கவேண்டும். வேறு யாரும் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க கருணாவை லண்டனுக்குத் தள்ளிச் சென்றால் மட்டுமே சாத்தியம், அதன் பின்னர் கருணாவின் கட்சி கிருஸ்ணனின் காலடியில் என்பது புங்குடுதீவுக் கிருஸ்ணனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அதன்படி கருணா லண்டனுக்கு சிங்கள நபரின் கடவுச் சீட்டில் தள்ளிச் செல்ல அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. கிருஸ்ணன் யாருக்கும் தெரியாமல் மத்திய லண்டனில் தனியான வீடு ஒன்றினை விலைக்கு வாங்கி கருணாவையும் குடும்பத்தையும் குடியமர்த்தினார். இந்தவிடயங்களில் கிருஸ்ணனுக்கு சொந்தமாகப் புத்திவேலை செய்யாது. இவற்றுக்கு உதவியது உண்டியல் புகள் ஜெயதேவன் என்பது திரைமறைவில் கிடைத்த தகவலாகும்.

இந்த ஜெயதேவனை கருணாவுக்கு அறிமுகப்படுத்தியது புங்குடுதீவு கிருஸ்ணன்தான். ஜெயதேவன் ஓர் கணக்குப் பிள்ளை. லண்டனில் கோவில் உண்டியல் பணத்தில் தனது வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டவர். கருணாவின் வரவு செலவுகளைப் பார்த்து அதனை முதலீடு செய்ய வேண்டும் என்று கிருஸ்ணப்பிள்ளை கூற அதுவரை கருணாவைத் தூற்றிவந்த ஜெயதேவன் கிருஸ்ணனையும் அழைத்துக்கொண்டு இந்தியாவில் தனக்கிருக்கும் முதலீடுகளைக் காண்பிக்க ஆரம்பித்தார். இதற்கென ஓர் சுற்றுப்பயணமும் நடைபெற்றது.

ஜெயதேவனின் மனைவியின் சகோதரன் தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருக்கிறார். அவர் ஜெயதேவனின் சில கோடி ரூபாய்களை முதலீடு செய்து கவனித்துவருகிறார். கருணாவின் பணத்தையும் அதுபோன்று முதலீடு செய்யலாம் என்று அறிவுரை கூறி கிருஸ்ணப்பிள்ளையும் கருணாவுக்கு ஆலோசனை கூறவைத்து கருணாவைக் களத்தில் இறக்கினர் இந்த இருவரும்.

அதன்படி பெனியன் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றினை தைவானிலிருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலை ஒன்றினை திருப்பூரில் ஆரம்பித்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

இதுமுதல் ஜெயதேவன் கருணாவின் நிரந்தரக் கணக்குப்பிள்ளையானார். கிருஸ்ணனுக்கு அரசியல் ஆலோசனையையும் இடையிடையே வழங்கி வருகிறார் இந்த முதலீடு மூலம் கருணாவுக்கு கிருஸ்ணன் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. இதுவுமல்லாமல், வடிவேலு ஆனந்தன் (அல்லது ஆனந்தசிவா) என்பவர் கொழும்பு செட்டியா தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் இவரை 2006 ஆம் ஆண்டு மாசிமாதம் ஆறாம் திகதி கிருஸ்ணனின் ஏற்பாட்டில் கடத்தப்பட்டார். அவரிடமிருந்த ரூபா 5கோடி பெறப்பட்ட பின்னர் 10-02-2006 அன்று விடுவிக்கப்பட்டார். இந்தக் கடத்தலுக்கும் பணப்பறிப்புக்கும் புங்குடுதீவு கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று கருணா அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

இவர் அல்லாமல், கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் சீனி வியாபாரம் செய்துவந்த சிறிஸ்கந்தராஜா என்பவரை அவரது கார் ஓட்டுனருடன் சேர்ந்து 20-07-2006 அன்று கடத்தப்பட்டார். இவரிடமிருந்தும் 5கோடி ரூபா பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்கள் இருவரையும் தீவுச் சேனையில் வைத்து கொலை செய்து அங்கேயே புதைத்தும் விட்டனர். இந்தக் கடத்தலும் கிருஸ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நடந்தது. இருவரையும் விடுதலை செய்யவேண்டாம், கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டது இதே கிருஸ்ணப்பிள்ளைதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு சம்பவங்களுக்கும் கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று பிள்ளையான் சொன்னதும் கருணாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே கிருஸ்ணன் சொல்படி நடந்தால் உலகின் உச்சிக்கே செல்லலாம் என்று தீர்மானித்துவிட்டார். அதன்படிதான் கருணா மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும் என்ற கிருஸ்ணனின் வலையில் வீழ்ந்தார்.

வடக்கிலிருந்துகிழக்கைப் பரிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தவேண்டும் என்பது மகிந்தாவின் விருப்பம். மகிந்த உளவுத்துறையுடன் ஆலோசிக்க, உளவுத்துறை கிருஸ்ணனுடன் ஆலோசித்தது. கிழக்கைத் துண்டாடும் வரை கருணாவைப் பயன்படுத்துவதென்றும் அதன் பின்னர் கிருஸ்ணனே அந்த இயக்கத்தின் தலைவர் என்ற நிலையை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு!

பிள்ளையான் கருணாவின் எதிரியானார். அது எப்படி என்றால், பிள்ளையான் எப்போதும் இராணுவத்துடனும், அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும் பழகிக்கொண்டார். கருணாவோ தன்னை அரசியல் தலைவர் போல் காண்பிக்க முற்பட்டார். இந்தச் செயல் இராணுவத்துக்குப் பிடிக்கவில்லை. கருணா தனது இயக்கத்துக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை சொல்லப்புறப்பட்டார். குறிப்பாக கருணா தொலை பேசியில் ஒவ்வொருவரைப் பற்றியும் தவறாகச் சொல்வதை இராணுவ உளவுத்துறை பதிவுசெய்து பிள்ளையானுக்குப் போட்டுக் காண்பித்தது.

கருணாவைப் பற்றிப் பிள்ளையானிடமும் பிள்ளையானைப் பற்றி கருணாவிடமும் தவறான தகவல்களைச் சொல்லி இருவரையும் பகை வளர்த்து, அதன்பின்னர்தான் தொலைபேசி ஒட்டுக் கேட்புகளைப் பதிவு செய்து இதுபற்றி அவருக்கும் அவர்பற்றி இவருக்கும் போட்டுக் காண்பித்து நிரந்தரப் பகையை வளர்த்தனர் சிங்கள இராணுவப் புலனாய்வுத் துறையினர்.

கருணாவும் பிள்ளையானும் பெரும் அறிவாளிகள் கிடையாது. இருவருக்குமே உள்ள தகுதிகள் கொலை செய்வது கொள்ளையடிப்பது இவை இரண்டையும் தவிர பொதுவான கொள்கை என்னவென்றால் யாழ்ப்பாணியை ஒழித்துக்கட்டுவதுதான் இந்த இருவருக்குமான தகுதிகள் என்பதனை உளவுத்துறை நன்கு தெரிந்து இரு கோமாளிகளையும் பயன்படுத்தியது என்றால் அதுமிகையல்ல! தமிழினத்தின் தோற்றம், அதன் வரலாறு. அதன் பாதிப்புகள், தமிழினம் இழந்தவை என்ன? ஏன் போராடினோம், எதற்காகத் தனிநாடு? என்ற எந்தவிதமான குறைந்த அளவு அறிவுகூட இந்த இருவருக்கும் கிடையாது.

கிருஸ்ணன், ஜெயதேவன், குமாரதுரை போன்றவர்களது அறிவுரையால் தமிழினம் பாதி நிலத்தை இழந்தது என்றால் அதற்கு, அந்தச் செயலுக்கு காம்புகளாகப் பயன்பட்டது இந்த இரண்டு துரோகிகளும்தான். ஒரு துரோகி தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு லண்டனில் தஞ்சம் கேட்டு நிற்க, அடுத்த துரோகியான பிள்ளையானை இலங்கை அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த நபரைக் கூட கடந்த 20-10-2007 அன்று ஆனந்தசங்கரி அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்றால் யாரும் நம்புவார்களா?

முதலில் கருணா மறைந்திருந்த இடத்துக்கு சங்கரி அவர்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஆனால் இப்போதோ பிள்ளையானை சங்கரி அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வைத்துள்ளது இராணுவம்.

தமிழ் இனத்தை எப்படி வீழ்த்தலாம் என்ற ஆலோசனை வழங்கும் தமிழினத் துரோகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழம்தான் இந்த ஆனந்தசங்கரி அவர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயர் இந்த சங்கரியாருக்கு எப்படிப் பொருந்தும். விடுதலையே கிடைக்காது என்ற பின்னர் இவர் எப்படி அந்த முன்னணிக்கு உரிமை கொண்டாட முடியும்? கிழக்கைத் துண்டாடிப் பிரித்தமைக்கு கருணாவும் பிள்ளையானும் மட்டும் காரணமல்ல, தமிழர் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட சங்கரியாரும் முக்கிய காரணமாகும்.

துமிழரை இழிவுப்படுத்த இந்தச் கோமாளிகளைப் பயன்படுத்திய அரசு பிரிதொரு மார்க்கத்தில் தனது சூழ்நிலையைச் செயல்படுத்தியும் வருகிறது. பிள்ளையான் தலைமையில் கிழக்கில் நிரந்தர தமிழர் எதிர்ப்பு ஆயுதக் குழுவொன்றினை ஏற்படுத்தி அரசின் தேவைக்குப் பயன்படுத்துவது என்பது அந்த ஏற்பாடாகும்.

அதன்படி, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர்களுக்கு பிள்ளiயான் பயிற்சி அளித்து வருகிறார். திருகோணமலை மாவட்டத்தில் இந்தப் பயிற்சி நடந்துவருகிறது. மகிந்த ராஜபக்சேயின் உத்தரவில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஓட்டுமாவடியில் சின்னத்தம்பி என்ற கருணாவின் நபர் சென்ற ஓட்டோ வாகனத்துக்கு கண்ணிவெடி வைத்தது இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான். பிள்ளையான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர்கள்தான் ஓட்டுமாவடியில் கண்ணிவெடி வைத்தவர்கள். இப்போது பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பயிற்சி முடிந்ததும் மட்டக்களப்பில் புலிகளை வேட்டையாட அமர்த்தப்படவுள்ளனர். இது சிங்கள அரசின் பெரிய தந்திரமாகப் பேசப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, வடக்குப் பகுதியில் புலிகள் இயக்கத்தை விழ்த்த, அல்லது உடைக்க, அல்லது ஓரம்கட்ட புதிய யுக்தி ஒன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் முயற்சித்து வருகிறது அரசு. அது என்னவெனில், வடக்குப் பகுதியில் சாதிச் சண்டைகளை ஏற்படுத்துவது. இதன் மூலம் வடக்கு கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளில் பகையை உண்டுபண்ணுவது. வடக்குப் பகுதக்குள் நுழைந்து இதனை இப்போது செய்ய முடியாது. இதனைத் தூண்டி விடக்கூடிய சரியான களம் பிரான்ஸ் நாடு ஆகும்.

இலங்கை அரசு தமிழருக்கான உரிமைப் போராட்டத்தை நசுக்க தமிழரையே பயன்படுத்த வேண்டும் என்ற அருமையான ஓர் கண்டுபிடிப்பினை இன்று நேற்றல்ல அரை நூற்றாண்டாகவே கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் துரோகிகளை உருவாக்கி அமைச்சர் பதவியையும் வேறு சலுகைகளையும் கொடுத்து பலரை இப்படி உருவாக்கிய அரசு, ஆயுதப்; போராட்டம் வலுப்பெற்ற வேளையிலும் இதே தந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது.

1986ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் ரெலோ இயக்கத்தினை தாக்கி அழித்த போது அரசு புலிகளை ஊக்குவித்தது. பின்னர் புலிகளது கொலை வெறியிலிருந்து தப்பித்த ரெலோ போராளிகளைப் பாதுகாப்பது போன்று அவர்களை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தியதுடன், பின்னாளில் புலிகள் தாக்கி அழிக்க முற்பட்ட இயக்கங்களையும் தன்வசப்படுத்தி அதில் வெற்றிகண்டது.

புலிகளின் பேராசையானது எங்கள் விடுதலையை பின்னுக்குத் தள்ளியது என்ற கூற்றை யாரும் மறுக்க முடியாது. கசப்பான உண்மைகள் சுடத்தான் செய்யும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த ஒன்று. புலிகளுக்கு மட்டும் இது தெரியமல் போனதா? தெரிந்தே குலைத்தனர். இவற்றைத்தான் சிங்கள அரசு இதுவரை பயன்படுத்தி வெற்றிக்கண்டுள்ளது என்ற உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் மறைக்கலாம். உண்மை தாமதாமாகத் தெரியவரும்.

ஏனைய இயக்கங்களை புலிகள் துரோகிகள் என்று கூறி படுகொலை செய்தனர். துரோகி என்றால் மிகவும் மோசமான ஓர் தமிழ்ச் சொல். துரோகிகளுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர். இதனால் புலிகள் இயக்கம் ஏனையோரைத் துரோகிகள் என்று பெயர் சூட்டுவதன் மூலம் தங்களுக்கு வேண்டத் தகாதவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தினர்.

இலங்கை அரசாங்கத்திடம் முதல் முதலில் கையேந்தியவர்கள். ஊதவி பெற்றவர்கள் யார் என்று பார்த்தால் பிரேமதாசாவிடம் நாடிச் சென்ற புலிகள்தான் முதல் இடத்தை வகிக்கின்றனர். எனவே. துரோகத்தைச் செய்தவர்கள் முதலில் புலிகள்தான். ஆனால் பட்டங்கள் ஏனைய இயக்கங்கள் மீது சுமத்தப்பட்டன. அண்மையில் கூட காணமல்போன புலிகளின் அரசியலாளர் யோகி என்பவர் ஓர் கட்டுரையில் சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியிலிருந்த துரோக இயக்கமான ஈ.என்.டி.எல்.எப். முகாம் ஒன்றினை குண்டுவைத்து தகர்த்து தமிழ்ச் செல்வன் அழித்தான் அப்படியான வீரன்தான் தமிழ்ச் செல்வன் என்று புகழ்ந்துள்ளார்.

இதில் என்ன உண்மையென்றால், தனங்கிளப்புப் பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தின் முகாம் இருந்ததேயில்லை. இதில் மறைந்துள்ள உண்மை புலிகளைத் தவிர ஏனையோருக்குத் தெரியவாய்ப்பில்லை.

புலிகள் இயக்கத்தில் ஒருவர் உயர்ந்த பதவிக்கு வர வேண்மென்றால் அந்த நபர் மிகவும் அதிகமான கொலைகள் செய்திருக்க வேண்டும். வேண்டப்படாதவர்களை அதிக அளவில் கொலை செய்தால் அவர் உயர்ந்தபதவியை அடையலாம். இதற்கு அவர்கள் எழுத்து பூhவமாக அவற்றைச் சொல்லவேண்டும். இன்ன திகதிகளில் இன்னாரைக் கொன்றேன் இவ்வளவு பேரை இந்த இடத்தில் வைத்துக்கொன்றேன் என்றெல்லாம் எழுதி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினால் கொலைகளுக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். 1991 வரை புலிகள் இயக்கத்தில் இதுதான் நடைமுறை.

தமிழ்ச் செல்வனும் தனங்கிளப்பில் முகாம் அடித்தேன். அழித்தேன் என்று எழுதி அனுப்பி பதவி உயர்வு பெற்றிருக்கலாம். இதுதான் உண்மையாகவும் இருக்கமுடியும். இப்படியாக தமிழர்களைக் கொன்று சாதனைப் படைத்தவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து ஊக்குவித்தவர்கள்தான் விடுதலைப் புலிகள். பிரேமதாசாவிடம் கையேந்தி துரோகம் செய்திருக்காவிட்டால், சிலவேளை ஏனைய இயக்கங்களும் துரோகம் செய்ய இலங்கை அரசிடம் சென்றிருக்க மாட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்போது தமிழ் இனத்துக்கு வந்திருக்கும் ஆபத்தானது புலிகள் இயக்கத்தினால் வந்ததுதான். ஏனைய அனைத்துத் தமிழ் இளைஞர்களையும் அழித்துவிட்டு இவர்கள் சுருங்கிக் கொண்டதால் மொத்த இனமுமே சிங்கள அரசிடம் சிக்குக் கொள்ளும்ட நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

சிங்கள அரசு கொலை செய்கிறது என்று கூறி அனுதாபம் தேடுகின்றனர். இதற்கு இந்தியாவில் கொள்கையும் மக்களிடம் ஆதரவும் இல்லாத சில நபர்களும் சேர்ந்து குரல் கொடுத்து அனுதாபம் தேடிக் கேட்கின்றனர். இதே நபர்கள், திரு.பத்மநாபா, திரு.அமிர்தலிங்கம், திரு.சிறிசபாரெத்தினம் போன்றோர் புலிகளால் கொல்லப்படும் போது விளக்கக் கூட்டம் போட்டு புலிகளை ஊக்குவித்தவர்கள், இப்போது புலிகள் கொல்லப்படும் போது அனுதாபம் தேடி தெருவில் அலைகின்றனர்.

இந்த நபர்களில் ஒருவர் கூட “ தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்று கேட்டதும் இல்லை, கூறியதுமில்லை. புலிகள் தமிழ் இயக்கங்களை அழிக்கும் போது இந்த நபர்கள் புலிகளுக்கு கொம்பு சீவும் வேலையைத்தான் செய்தனர்.

தமிழீழம் யாருக்காக? பிரபாகரனுக்கும், அவரது ஆதரவாளருக்குமா என்று ஏன் கேட்கவில்லை? தமிழீழம் மொத்தத் தமிழருக்குமாகத்தானே கோரப்பட்டது! ஏனைய தலைவர்களையும் இயக்க உறுப்பினர்களையும் கொல்வது தவறு என்று ஏன் இந்தத் தலைவர்கள் தடுக்கவில்லை! ஈழத்தில் கொல்லப்படுகிறான் என்று குரல் கொடுக்கும் இந்தியத் தலைவர்கள் அன்று தமிழ் இனத்தைப் புலிகள் படுகுழிக்குள் அனுப்பும் போது அதனை வீரச்செயல் என்று புகழ்ந்தல்லவா பேசிவந்தனர். ஒருக்கால் இவர்கள் புலிகளுக்கு கொம்பு சீவாமல் விட்டிருந்தால் பிரபாகரன் ஏனைய இயக்கங்களை அரவனைத்துச் சென்றிருப்பார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இப்போது ஆபத்து அருகில் வந்த பின்னர்தான் புலிகளுக்கு அனுதாபம் தேவை என்று மன்றாடுகின்றனர்.

கிழக்கைப் பிரித்தது போன்று வடக்கை உடைப்பதற்காக அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஆரம்பம்தான் தலித் முன்னேற்றம் என்ற முழக்கம். பாரிசில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை அரசின் கைக்கூலிகளாவர். பிரான்சில் இருக்கும் இலங்கைத் தூதரகம்தான் இவர்களை இயக்கிவருகிறது.

1972 களில் இதே போன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி சில அமைப்புகளை யாழ்ப்பாணத்தினுள் ஊக்குவித்தது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இவை எல்லாம் மறைந்துவிட்டன. அதனை மீண்டும் உயிர் கொடுத்து இன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழர்களைப் பிரிப்பதற்கு அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

“தலித்’ என்ற சொல் வட இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ் நாட்டில் இந்தச் சொல்லை பலரும் பல லாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் சாதியைக் குறைத்துக் கூறினால் அங்கு சலுகைகள் வழங்கப்படுவதால் அது வளர்ச்சி பெற்று வருகிறது.

ஈழத்தமிழர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று எழுபதகளில் எடுத்த முயற்சியானது பொரும்பலனை ஏற்படுத்தியது. விடுதலையில் பங்குபெற்ற எந்த இயக்கமும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் இயக்கங்களை இது விடயத்தில் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இப்போது அரசின் தூண்டுதலால் புதிய தலித்துகள் என்று உருவாக்கப்பட்டு தமிழரைச் சிதைக்கும் முயற்சியை ஈழத்மிழர்கள் அனுமதிக்கக் கூடாது. வடக்கில் இந்த முயற்சியை அரசாங்கம் செய்து வரும் வேளையில் பிள்ளையான் தலைமையில் கிழக்கின் தீவிர இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் நோக்கம் கிழக்கில் தமிழரையும் இஸ்லாமியரையும் மோதலில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசு லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறது.

பிள்ளையானையும் “வகாபிசம்” என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரையும் உள்ளடக்கி ஓர் ஒப்பந்தத்தை இராணுவ உளவுத்துறை ஏற்படுத்தியது. அதன்படி பிள்ளையானும் அவர்களும் இணைந்து செயற்படுவது என்றும் அவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் பிள்ளையான் மேற்கொண்டு வருவதென்று தீர்மானித்து கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படிதான் திருமலை மாட்டத்தில் வைத்து பிள்ளையான் இஸ்லாம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.

கருணா கிழக்கை விடுவிக்கப் புறப்பட்டவர் என்று பலராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. அப்படிப் புறப்பட்டவர், இங்கிலாந்தில் வாழ்வு தேடுகிறார். எனவே, அவரது அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். ஆனால் இவர் மூலம் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றுப் பார்த்தால் ஒரு மாகாணமே பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தும் சில சுயநலவிரும்பிகள் அவர் கிழக்கை மீட்டுவிட்டார் என்றும் பிரசாரம் செய்கின்றனர். கிழக்கை மீட்டால் அவர் அங்கேதானே இருக்கவேண்டும் கடமையை முடித்துவிட்டுத்தான் இங்கிலாந்துக்குப் புறப்பட்டாரா?

எந்தெந்த வழிகளிலெல்லாம் இலங்கை அரசு தமிழர்களை நாசம் செய்ய முடியுமோ அந்தவழிகளை எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை வைத்தே செய்து வருகிறது. சிலர் வெளிப்படையாகவும், பலர் திரைமறைவிலும் தமிழினத்தை அழிக்க அரசுடன் பணியாற்றிவருகின்றனர். இவர்களது நோக்கம் பணமும், பதவியுமே தவிர வேறில்லை.
http://theepori.com/essaysfull.php?essaysid=27


விமர்சனங்களுக்கு எவரும் - எவையும் அப்பாற்பட்டதல்ல. - தீப்பொறி ! November 11,2007
விமர்சனங்களுக்கு எவரும் - எதுவும் அப்பாற்பட்டதல்ல. தீப்பொறி மீது வைக்கப்படும் விமர்சனங்களை நாம் எப்பொழுதும் கவனத்தில்கொள்கின்றோம். நாம் வெளியிடும் செய்திகளில் உண்மையில்லை பொய் என்று யாரும் கருதினால் நாம் கூறும் செய்திகளை தரவுகளை நீங்களே ஒருதரம் பக்கச்சார்பின்றி பரிசீலித்துப் பார்ப்பீர்களானால் அதன் உண்மைத் தன்மைகள் புரியும்.

நாம் பதிவிடுகின்ற அனைத்துச் செய்திகளும் எமது சமூகத்தின் நிகழ்கால எதிர்கால நலன் கருதியே. எமது மக்களின் முதுகில் சவாரி செய்ய எவர் முயன்றாலும் தயவுதாட்சயம் இன்றி நாம் அவர்களை அம்பலத்திற்கு கொண்டுவருவோம். இதில் தொடர்ந்து நாம் உறுதியாக உள்ளோம்.

இன்றைய இணையத்தளங்களின் பின்புல அரசியல் பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். இன்று தமிழ் இணையத்தளங்களை நடாத்துகின்ற பெரும்பான்மையினர் ஏதோ ஒருவகையில் கடந்தகால தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, அல்லது இயக்கங்களை ஆதரிக்கின்ற நிலையில் இருந்தவர்களென்பது தவிர்க்கமுடியாதது ஒன்றுதான். இன்றும் ஒருசில இணையத்தளங்கள் இவ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிக்கின்றவைகளாக இருப்பதும் உண்மை.

ஆனால் இவ் இணையத்தளங்களில் அநேகமானவை வன்முறைக்கு எதிராகவும் ஐனநாயகத்தை கோருவனவாகவும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலையை கோருவனவாகவும் இருக்கின்றன. தீப்பொறியும் சாதி, மத, பாகுபாடின்றி ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், குறிப்பாக ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், உண்மையின் குரலாகவும், நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தோடும் செயல்படும்.

தீப்பொறியின் பின்புலம் ஏதோ ஒரு அமைப்பு சார்ந்தது என்று குற்றம் சாட்டுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. தீப்பொறியாகிய நாம் பதிவிடுகின்ற செய்திகள் தகவல்களின் மீது விமர்சனங்கள் இருப்பின் நாம் அவர்கள் கூறும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் கண்டனங்களையும் மனதார வரவேற்க தயாராக உள்ளோம். உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை.

சமீபகாலங்களாக குறிப்பாக கிழக்குமாகாணத்தில் நடக்கும் மனிதக்கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள். அந்த மக்கள் காலம் காலமாக இலங்கை அரசினாலும் ஏனைய விடுதலை இயக்கங்களினாலும் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வாழும் சுழ்நிலையே காணப்பட்டது. இன்றும் எவ்வித மாற்றமும்மின்றி அது தொடர்கின்றது. கிழக்கின் விடுதலைக்காக தாங்கள் போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களும் நபர்களும் தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்களே தவிர அந்த மக்களின் வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று நம்பிக்கையைக்கூட ஏற்படுத்தவில்லை.

கிழக்கு மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் சுரண்டி பலப்படுத்திக்கொண்டிருந்த புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தபோது கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடிவு நெருங்கிவிட்டதென்றெ நம்மில் பலர் கருதினோம். அந்தவகையில் நாம் எல்லோரும் ஆதரவு வழங்கினோம் ஆனால்கண்டபலன் என்ன? அரச ஒடுக்கு முறைகளுக்கும் புலிகளின் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளான அந்த மக்கள் தொடர்ந்து கருணாவினதும் பிள்ளையானினதும் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் மிச்சம்.

கருணாவின் தவறான போக்கிற்கும் அவரின் மிதமிஞ்சிய சொத்துக்கள் பணம் தொடர்பான ஆசைகளுக்கும் நாம் கருணாவை மாத்திரம் குற்றம் சாட்டுவதில் பிரயோசனம் இல்லை என்பதை காலப்போக்கில் அறிந்து கொண்டோம். அவர் பின்னால் அவரை சுற்றியிருந்த இலங்கை அரசு மற்றும் கருணாவுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வேலை செய்த சில குறிப்பிட்ட நபர்களுமே காரணமென்பது புரிந்தது.

இதனை நாம் ஆராய்ந்தபோது லண்டனில் வசிக்கும் திரு.கிருஸ்ணன், பாரிசில் வசிக்கும் திரு.ஞானம், டென்மார்க்கில் வசிக்கும் திரு.குமாரதுரை போன்ற நபர்கள்தான் இதில் முக்கியமானவர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இவர்களின் இன்றைய நடவடிக்கைகள், பின்புலங்கள் பற்றி அறிய முனைந்தபோது அவர்களோடு இருந்த நம்பிக்கையாளர்கள் மூலமே பல்வேறு தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை நாம் ஆராய்ந்தோம். இந்த ஆராய்வில் எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் இருந்ததில்லை. எனவே நாம் ஞானம், கிருஸ்ணன், குமாரதுரை போனறவர்களின் நடவடிக்கைளை அம்பலப்படுத்தினோம். தனிநபர் நட்பு உறவு இவற்றிற்கு அப்பால் இவை எமது சமூகக் கடமையென கருதினோம்.

கடந்த காலங்களில் மக்களின் வாழ்வின் மீது அக்கறை கொண்டு கட்டப்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் இவ்வாறான குறிப்பிட்ட கிரிமினல் நபர்களின் உள்ளீடுகளினால் அவ் அமைப்புக்களின் நோக்கங்களும் அதற்கான மக்களின் சமூக அங்கீகாரங்களும் சிதைந்து அவ் அமைப்புக்கள் சின்னாபின்னமாகி சீரழிந்ததே எமது அமைப்புக்களின் வரலாறுகளாக இருந்துவந்துள்ளது.

இவ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் தங்களின் பொருளாதார மற்றும் சில தேவைகளுக்காக இவ்வாறான சமூகக் கிரிமினல்களை தங்கியிருக்கவேண்டிய தேவை தவிர்க்க முடியாதாகிவிடுகின்றது. ஆனால் இவர்களின் உள்ளீடல் பொருளாதார வளத்தை பின்புலமாக கொண்டிருப்பதால் இவ் அமைப்புக்கள் இந்த கிரிமினல் நபர்களின் ஆளுமைக்கு உட்பட்டு தங்களின் நோக்கங்களிலிருந்தும் கடமைகளிலிருந்தும் திசை மாறிவிடுகின்றன.

இவ் அமைப்புகள் சரியான வழிகாட்டலோடும் மக்களோடும் தங்கி தங்களின் வளர்ச்சிக்கான பொருளாதார வளங்களின் மூலங்களை கண்டடையாவிட்டால் இவ் அமைப்புக்கள் இவ்வாறான கிரிமினல்களையும் பொருளாதார தேடலுக்காக தவறான வழிமுறைகளையுமே கைக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

கடந்த காலங்களில் இவ்வாறான அமைப்புக்களில் இருந்த இவ்வாறான கிரிமினல்களின் அயோக்கிய தனங்களை சமூக விரோத நடவடிக்கைகளை அறிந்தும் தெரிந்தும் கொண்டு அந்த கிரிமினல் நபர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை நோக்கி வரும் விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டு அத் தவறுகளில் இருந்து தங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியாமல் அந்த கிரிமினல் நபர்களுக்காக இவ் அமைப்புக்கள் நற்சான்றிதழ் அறிக்கைகளையோ, துண்டுப் பிரசுரங்களையோ வெளியிட்டு அமைப்பின் சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளை இந்த கிரிமினல்களுக்காக அடகுவைக்கும் பரிதாபகரமான வரலாற்றையே நாம் கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றோம். இதன் தொடர்ச்சியையே பிரான்சில் இருக்கும் ஒரு சமூக அமைப்பிடமிருந்து ஞானம் தொடர்பாக வரும் நற்சான்றிதழ் அறிக்கையாகும்.

அவ் சமூக அமைப்பினர், ஒரு தனிநபரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் இம் முயற்சியானது, இவ் அமைப்பினர் தங்களுக்கு தாங்களே செய்யும் தற்கொலை முயற்சியாகவும் இது மாறிவிடும்.

எனவே ஞானம் போன்ற சமூக கிரிமினல்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவத்தை மறந்து, கடந்த கால அரசியல் சமூக அமைப்புக்கள் செய்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து மீள்வுபெற்று, இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்திட முயல்வோம். அனைத்து தவறுகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக குரல்கொடுப்போம் நன்றி. தீப்பொறி.
November 09,2007
விடுதலை பாதையினை வீராப்புடன் புலிகளின் வழிதனை ஏற்று போராடி அங்கும் ஏமாற்றம் கண்டு - வாழ்வதற்காக உயிர் தப்பி அகதி தஞ்சம் கோரி 2006ம் ஆண்டு தொடக்க பகுதியில் திலீபன் அல்லது ஜீவன் என்று அழைக்கப்படும் நடேசன் வேலுச்சாமி பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்.

இங்குள்ள கிழக்கு மைந்தர்களாக தங்களை காட்டிக் கொண்டு தமது சொந்த நலன்களிற்காக, யாரையும், எதனையும், எப்படியும் கையாட தெரிஞ்ச ஞானம் ( தன்னை ஒரு சராசரி அப்பாவிமனிதனாக , புகலிடவாழ்வில் மனித நேயத்தின் அவதாரமாக காட்டிக் கொள்ளவும், அறிவுஜீவிகள் போர்வையை அணிந்த முகமூடி) அல்லது ஸ்டாலின் ( தன்னை ஒரு மாக்சிய வாதியாக காட்டி கிழக்கியம், தலித்தியம் என்ற இன்னொரு முகமுடிகளுடன் எழுத்துலகில் அராஜகம் பண்ணும் புனைபெயர்) அல்லது சுந்தரமுர்த்தி (சென்ற சில காலங்களில் தன்னை வெறும் புலி எதிர்ப்பாளனாக, மானிடவாதியாக முத்திரையிட்டு புகலிட அரசியலில் சில ஊடகங்களினால் தன்னை தானே வளர்த்தவர் ) (கருணா தரப்பில் உட்கட்சி போராட்டம் நடத்தியதாக தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொண்டவர் (பார்க்க - தேசம் இணைய தளத்திற்கு இவர் கொடுத்த அறிக்கை.)

சின்னமாஸ்ரர் (இவருக்கு கருணா அணிகொடுத்த பெயர்;) இப்படி பல பெயர் கொண்ட ஞானத்தின் வலைதனில் மாட்டிக்கொண்டு 02.11.07ல் மட்டக்களப்பில் தன்னை ஞானத்திற்காக அல்லது கருணாவிற்காக வித்துடலாக்கிய திலீபனின் பரிதாபமான மரணத்தின் பின்னணி தான் என்ன? இனியும் ஊடகங்களோ கிழக்கு மக்களோ அறியாவிடின் கிழக்கில் இன்னும் அப்பாவி இளைஞர்கள் இந்த சுயநல கும்பலுக்கு தொடர்ந்து இரையாகநேரிடும்.

கிழக்கு மக்களின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அந்தந்த மக்களால் அந்தந்த தளத்தில் -ஜனநாயக வழிகளில் வென்றெடுக்கபட வேண்டியதும் அதற்காக மனிதநேய ஊடகங்களும் புலம்பெயர் மக்களும் ஜனநாயக வழிகளில் - நடுநிலை பார்வையோடு ஆதரவு வழங்குவதும், விமர்சிப்பதும் கடைப்பாடே.

ஆனால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், ஏற்கனவே கிழக்கின் துயரால் இரண்டு அரை லட்சம் மக்களை நிரந்தர அகதிகள் ஆக்கி வீதியோரங்களில் விட்டுவிட்டு கிழக்கின் விடிவெள்ளி என தம்மை காட்டிக் கொண்டு, நிரந்தரமாகவே இலங்கை பேரினவாத அரசினால் தொடரும் தமிழின அழிப்பிற்கு ஆதரவாக அங்கு செயற்படுவதும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஒருசில ஊடகங்களும்- அதன் கதாநாயர்களும் கொலை , கொள்ளை , கடத்தல் , கப்பம் என்ற மனித உரிமை மீறல் செயல்களுக்கு துணைபோவதும,; அதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வெளிநாடுகளில் சொத்துக்களை சேகரித்து தமதாக்கி கொள்வதுமாக தமது செயற்பாட்டை தொடர்கின்றனர்.

இந்த தொடர்கதைகளில் பலியான, சிந்துஜன் உட்பட ஐவர் கொலையில் இருந்து நியாயம் கேட்க பொலிஸ் நிலையம் சென்ற சிந்துஜனின் தந்தையை கூட பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக கழுத்து வெட்டி கொல்லப்பட்டது மறக்க முடியுமா? இன்று திலீபன் எனப்படும் ஜீவன், பிள்ளையான்- கருணா கோஸ்ரி மோதலில் சுடப்பட்ட நிலையில் சயினட் அருந்தி தற்கொலை செய்தது , புவனன் கடத்தப்பட்டது போன்ற வன்செயல்கள் தொடரும் இன்நிலையில். பாசிசபுலிகளில் இருந்து, ஏதோ கிழக்கு புறக்கணிப்பிற்காகத்தான் தாம் புலிகளை விட்டு பிரிந்து, கிழக்கு விடுதலைக்கு தலை கொடுக்கின்றோம் என பறைசாற்றிய கருணா தலைமையிலான மக்கள்விடுதலைப்புலிகள் இன்று கருணா - பிள்ளையான் குழுக்களாக தம்முள்ளே தமது தலைகளைகொய்து தங்களின் சுயமுகங்களை இனம் காட்டி வருகிறது.

இவர்கள் ஒன்றரை வருடங்களாக பேரினவாத இலங்கை அரசிடமும், அதன் புலன் ஆய்வு அமைப்பினரிடமும் விலை போனதை தீப்பொறி ( www.theepori.com) உடனுக்குடன் அம்பலப்படுத்தியிருந்தும் அதனை கருணா அமைப்பினரோ அல்லது அவர்களின் பிழைகளை நியாயப்படுத்தி பிழைப்பு நடத்தும் ஊடகங்களோ - அல்லது கருணா அணியின் பினாமி சொத்துக்களை வெளிநாடுகளில் காவு காக்கும் சில குறிப்பிடதக்க நபர்களோ உண்மைகளை நடுநிலையாக பார்க்கவும் இல்லை, அல்லது உட்கட்சி (உட்கடசி போராட்டம் என்று எல்லாம் கதை அளப்பவர்கள்) போராட்டம் செய்யவும் இல்லை. தொடர்ந்து, எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என வழக்கம் போல் தமது தொழிலை மேற்கொண்டனர்.

எனினும் என்றோ ஒரு நாள் தீப்பொறி தனது தீப்பிளம்புகளால், உண்மைகள் மக்களை பற்றிக் கொள்ளும் என தனது தீச்சுவாலைகளை தொடர்ந்தது. இதன் ஒரு கட்டம் தான், வரலாற்றின் நிகழ்வாக கருணா தப்பி ஓடியதும், இன்று அங்கலைந்து , இங்கலைந்து தனது மனைவி மக்களுடன் நிரந்தரமாக தங்க லண்டனில் அகப்பட்ட இடத்தில் அகதி தஞ்சம் கேட்டதுமான நிகழ்வே. மொத்தத்தில் கிழக்கின் விடிவெள்ளி என்றும், கிழக்கின் கவர்ணர் என இலங்கை அரசால் இதுவரை மிட்டாய் கதை சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்டவருமான கருணா இன்று பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட்டம் எடுத்துள்ளார்.

ஆனால் கிழக்கின் போராளிகள் என்று இவர்களால் உருவேற்றப்பட்டு உயிர்களை தம்முள்ளே பலி கொண்டிருக்கும் தீரச்செயல்கள் தான் என்ன? இவர்களா மக்களின் வழிகாட்டிகள்? பாசிசபுலிகளிடம் இருந்து கிழக்கை மீட்டதாக சொல்லும் இவர்கள் அடுத்த கட்டமாக மக்களின் முன் தங்களை சராசரி மனிதராக தானும் நிலை நிறுத்தினார்களா? கிழக்கில் 160 என்.ஜீ.ஒ க்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யும் போது (அதில் வேறு சில விமர்சனம் இருந்தாலும்) குறைந்தது இவர்களால் அதன் முலமாகவோ, அன்றி மக்கள் குழுக்களை அமைத்தோ ஏன் மக்களை அணுக முடியாது போனது? ஏனெனில் கொலை வெறி கொண்ட தலைமைகளில் ஆயுத கவர்ச்சியால் இவர்கள் பழக்கப்பட்ட விதம் அப்படி. அதிலும் இந்த தலைமைகளை உசார்படுத்தி வெளிநாட்டில் உள்ள இந்த குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த அப்பாவிகளை போர்க்கருவிகள் ஆக்கி தமது கிழக்கியவாத இருப்புக்களை புடம் போட்டுக்கொண்டது தான் பெரும் கொடுமை. இந்த வேள்வியில் இன்று ஞானம் என்பவரால் வித்துடல் ஆக்கப்பட்டவர் தான் இந்த திலீபன்.

2006 முற்பகுதியில் நாட்டில் பட்டது போதுமென விட்டுவிட்டு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி இருந்து, வேலையும் தனது சொந்த வாழ்க்கையுமாக இருந்த திலீபன் என்ற ஜீவனை சிறிது சிறிதாக கிழக்கு பிரிவினைவாத வெறியூட்டி , கருணாவிற்கு மிக நெருக்கமானவராக வளர்த்துவிட்ட பெருமை ஞானத்திற்கு தான் சேரும். தன்னருகே திலீபனை வைத்திருப்பதை விட, புலி எதிர்ப்பாளரான, மாற்று கருத்தினருடன் உறவாட வழி சமைத்து, அவர்கள் மத்தியில் இருந்தே, அந்த அப்பாவி இளைஞன் ஊடாக புலி எதிர்ப்பாளரிடம் இருந்தே உளவு வேலை செய்து, அதனை தனது கருணா என்ற தலைவருக்கு சுடசுடசெய்தி அனுப்பியவர் தான் இந்த ஞானம். அதுமட்டுமல்ல, இங்கிருந்தே பிள்ளையான்- கருணா மோதல்களை வழக்கம் போல் ஞானத்தின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கைங்காரியத்தை இதில் காட்டி வெற்றியும் பெற்றார். இதன் விளைவு கிழக்கிலே குழுவாதங்கள் முண்டது.

இதனிடையில் கடந்த நவம்பர் 2006ல் ஜேர்மனியில் உள்ள சுட்காட் என்ற நகரில், இலங்கையர் ஜனநாயக முன்னனியினரால் நடாத்தப்பட்ட இரு நாள் கருத்தரங்கில் திரு ஆனந்தசங்கரி உட்ப்பட ஐரோப்பிய - கனடா போன்ற நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் பேசும் மக்களின் பல விடயங்கள் ஆழமாக பேசப்பட்டது. இதில் புலி ஆதரவாளர் உட்பட அனைத்து இயக்கங்களும், மனிதநேய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விசேடமாக பிரான்சில் இருந்து 40 பேர் மட்டில் கலந்து கொண்டனர். இங்கும் வழக்கம் போல் ஞானம் தனது கிழக்கு பிரிவினைவாத வித்தகத் தன்மையை காட்டினார், இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் உருவேற்றப்பட்டிருந்த இந்த திலீபனும் அவதானித்து அங்குள்ள கருணா குழுவிற்கு செய்திகள் பரிமாறப்பட்டன. இதன் பின் விளைவாக அந்த இரு நாட்களின் பின் கிழக்கில் இருந்து தொலைபேசி முலம் கருணா குழுக்களால், கிழக்கு பிரிவினைவாதத்தை எதிர்த்த நபர்களுக்கு மிரட்டல் வந்தது. அப்போது யார் அந்த உளவாளிகள் என அடையாளம் காணப்பட முடியாவிட்டாலும் பின்னாலிலும், இன்னாலிலும் இது அம்பலமானது.

இவ்வாறாக ஞானத்தின் நயவஞ்சக நாடகத்தில் தன்னை இழந்த திலீபன் 2007 முற்பகுதியில் தான் இருந்த வீட்டிலும் சொல்லாமல் ,உடுத்த உடுப்போ, பாவித்த பொருட்களோ கூட எடுக்காமல் ஞானத்தின் அவசர ஒழுங்கு படுத்தலில் கடைசி உணவையும் ஞானத்தின் கையால் ஞானத்தின் வீட்டில் உண்ண வைத்து சென்று வா மகனே என விடை கொடுத்து கருணாவிற்கு உதவியாளானாக, ஆலோசகனாக இங்குள்ள பல செய்திகளோடு அனுப்பி வைத்தார். அதுவும் அந்த அருகிய நாட்களிலேயே திலீபனுக்கு பிரான்ஸ் நாட்டிற்கான அகதி அந்தஸ்த்து கிடைத்திருந்தும் அதனை கூட கையில் எடுக்க விடாமல், ஏதோ ஒரு வழியில் அவரின் அகதி அந்தஸ்ததையும் நிராகரிக்க வைத்து ஒட்டாண்டியாக கருணாவின் கொலைக் களத்திற்க்கு அனுப்பிய பெருமை ஞானத்தின் தனிப் பெரும் முயற்சி தான்.

பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிறது.

இவ்வாறு அனுப்பப்பட்ட திலீபன் அங்கும் கொலை பாதக கருணாவினால் பிள்ளையான் - கருணா மோதலுக்குள் தனது அணியை பலப்படுத்த திலீபனை நன்றாக பயன்படுத்தினார். இதனால் நீண்ட நாட்களாக பிள்ளையான், திலீபனை முடிக்க காத்திருந்த கதை உள்ளே பலருக்கும்தெரியும். இன்நிலையில் திலீபனை அங்கு நட்டாற்றில் விட்டுவிட்டு கருணா தனது மனைவி பிள்ளைகளிடம் வந்துசேர்வதற்காக கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார் . இந்நிலையில் கருணா நாட்டை விட்டு வெளியேறியதும் கருணா அணிக்குசார்பான, ரி.எம்.வி.பி செயலாளர் திருமதி பத்மினி, பிள்ளையான் முலம் மிரட்டப்பட்டு , பதவி இறக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் தனக்கு வேண்டப்பட்டவரை நியமிக்க இருக்க , இலங்கை உளவுப்படையால் ( கருணாவின் சிபாரிசின் பேரில்) வலுக்கட்டாயமாக கடந்த சில தினங்களிற்கு முன் கட்சியின் செயலாளர் பதவி திலீபனுக்கு முடி சூட்டப்பட்டது. இங்குதான் திலீபனுக்கு ஆப்பும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கோடிக்கணக்கான சொத்துக்களை சுருட்டிய கருணா சுருட்டியது போதுமென இனி மனைவி பிள்ளைகளுடன் உல்லாசமாக வாழ பிரான்ஸ் வந்து லண்டன் பயணமாகி பிடிபட்ட கதை யாவரும் அறிந்ததே. லண்டனில் 02.11.07 ல் கருணா பிடிபட்டு அரசியல் தஞ்சம் கேட்ட அதே நாளில், பிரான்சில் அகதி அந்தஸ்த்தையும் தனது வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு சென்ற திலிபன், பிள்ளையான் அணியின் சுற்றி வளைப்பின் போது சயினட் அருந்தி தன்னை அழித்துக் கொண்டார்.

கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. இந்நிலையில் தான் உயிருடன் பிடிபட்டால் தனது நிலை தனக்கு தெரிந்ததே. இந்நிலையில் தன்னை உருவேற்றி வழியனுப்பிய ஞானத்திற்கும், தான் நம்பி வந்து நட்டாற்றில் விட்டு சென்ற கருணாவிற்கும் வித்துடலாக தன்னை தன் மண்ணில் அழித்துக் கொண்டார். அவன் தாய் , அவன் மனைவி கதறி அழும் குரல் பிரான்ஸ் வாழ் ஞானத்தின் குடும்பத்திற்கோ, லண்டன் வாழ் கருணா குடும்பத்திற்கோ கேட்குமா? ஆனால், அபலைகள் விடும் கண்ணீர் அதாள பாதாளம்மட்டும் கேட்கும்

பின் குறிப்பு :

(இதுவரை கருணாவின் மாயையால் ஏமாற்றப்பட்டு, இன்று விழிப்படைந்துள்ள கிழக்கிலங்கையை சேர்ந்த இரு இளைஞர்களால் தீப்பொறிக்கு அனுப்பப்பட்ட தொகுக்கப்பட்ட கட்டுரை இது. குறிப்பிட்ட நபர்கள் மீது எறியப்படும் கனைகளாக பார்க்கப்படாமல், இதுவரை நடந்த உண்மை நிலைகளை இனியும் அறியப்படாமல் போனால் வராலாற்றில் கிழக்கின் அழிப்புக்களில் இன்னும் பாரிய விபரீதம் ஏற்பட இடமுண்டு. எனவே இதனை ஆரோக்கியமான விமர்சனமாக இனியாவது ஆராய்ந்து உணருங்கள்.

மேலும் இக்கட்டுரை சம்மந்தமாக குறிப்பிட தக்க ஆதரங்கள், படங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன. தொடர்ந்தும் தமது பிழைகளை உணர்ந்து கொள்ளாவிடிலோ மூடிமறைக்க நேர்ந்தாலோ அனைத்து ஆதரங்களும் வெளியிடப்படும். )


Keine Kommentare: