Montag, Oktober 20, 2008

அமீபாவின் ஆவிக்கு...

அமீபாவின் ஆவிக்கு வணக்கம்.தங்கள் முற்பிறப்பின் வினை முடிவதற்குள்ளேயே அகாலமரணத்தைத் தழுவியதன் தொடரில் இப்படி ஆவியாக அலைகிறீர்கள்!அலைவதுமின்றி எவரெப்போது-எந்தச் சந்தில் கோலி விளையாடினார்கள் என்பதையும் ஆயும்-அறியும் உணர்வும் உங்கள் முன்னைய பிறப்பின் தோஷமாக விரிகிறது.இன்று, ஆவியாக அலையும் இந்த நிலையிலும் புலிகள்-மாற்றுக் குழுக்கள்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,மக்கள்"நலன்"குறித்தும் சிந்திக்கும் ஒரு ஆவியைக் குறித்து,எத்தகைய சுட்டலைச் செய்யலாம்?


"நீ-நீங்கள்,அது-அவை" குறித்து எனக்கு"அதுவா அல்லது இதுவா" என்ற ஒரே குழப்பம்.அவ்வண்ணமே அமீபாவின் ஆவிக்கும்:பேய்க்குஞ்சுமுதல் ராஜகீரிவரையான வரலாற்றுச் சுவடி தேவையாகவும் இருக்கிறது.இதுவும் கடந்து ஒவ்வொரு அடையாளத்தையும் தேடும் அடையாளமற்ற வெளியுள் நான் தேடுவதும் இல்லை-எதையுங் காணுவதுமில்லை.இருந்தும் எனது கருத்துக்களுக்கான எதிர்வினையைச் செய்யும் ஒரு ஆவியுடைய விருப்பைப் பின் தள்ளுவதில் என் மனதுக்கு விருப்புக்குரியதாகவுமில்லை.ஏனெனில்,வர்க்கப் போராட்டமென்பதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழுநாளையுஞ் செலவு செய்தே வருகிறது.அங்கே,எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில் அமீபாவின் ஆவி சுற்றித்திரியும்போது,அவற்றை நோக்கி நானுஞ் செல்வது சாத்தியமே.


"பிணமுண்ணும் வாசிப்பு" என்பது என்னிடத்தில் கிடையவே கிடையாது.அதனால் நான் இப்படியுரைப்பேன்:எழுத்தினால் புத்திசார் அல்லது பித்தலாட்டக் கருத்துக்களைச் செய்து முடிக்கலாம்.இந்த நோக்கத்தைக் குறித்தான புரிதலை உள்வாங்கிக்கொண்டால்-அடுத்த நிலைமையைச் சுதாகரிக்கலாம்.அநேகமாக மேற்சொன்ன இரண்டும் ஒரே தளத்தில் நிலவுந் தருணமே தேசியவாதத்துக்குள் நிலவுகிறது.இதன் பெறுபேறுகளின் தொடர்;சியில் இலட்சம் மக்களினது இருப்பை அசைத்த நாம்,மீளவும்,இதே பாணியிலானவொரு எழுத்தைக் கோரிக்கொள்ள முடியாது."ஆற்றில் போட்டத்தைக் கடலினுள் தேட முடியாது"எனினும்,அமீபாவின் ஆவிக்கு இது சாத்தியம்.ஏனெனில்,அவர் சொரன் கீர்கேகோர்ட் முதல் இன்றைய யுகர்கன் காபர் மாஸ் தாண்டிப்பலரையும் எடுத்துவருகிறார்.இது,எனக்கும் சாத்தியமானதென்பதால் நான் செல்லும் பாதையினூடாகக் கடப்பதில் பல சாத்தியங்களும்,அசாத்தியங்களுமுண்டு.



"உள்ளது-அல்லாதது"எனும் புள்ளியில் நிலவும் பூச்சியத்துள் அகம் அல்லது புறம் விருத்தியாகும் ஒரு துருவத்தில் நான் உங்களோடு(மீளவும்,எதை முன்னிலைப்படுத்தி?)எப்படி உரையாடுவதென்னும் சமாந்திரமான ஒரு ஏக்கத்தோடு சொல்லித்தக்க எதையும் தெரிவுக்குட்படுத்தமுடியாதவொரு சிக்கல் உருவாகிறது.இதுதாம்,ஒன்றைத்"தேர்வு"செய்வதில்"அதுவா-அன்றி இதுவா"என்ற சிக்கலை"எல்லோருக்கும்"அன்றும்,இன்றுஞ் செய்கிறது.இதன் தொடர்ச்சியாகப் பற்பல கேள்விகளை(எனதென்ற ரூபங்களென:தூண்டில்,துரும்பு,ஜனநாயகம்,பேய்க்குஞ்சு,ஆமை,ராஜகீரி இத்ஜாதி...) அமீபாவின் ஆவியானது கேட்குமிடத்து எதையுரைத்து அந்த ஆவிக்கு நான் வேள்வி செய்ய?



தேர்வே இல்லாது,ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள"மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,கால் போர்ப்பராக இருந்தாலென்ன அல்லது அடையாளமற்ற எந்தவெளிகளாக இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு அமீபாவின் ஆவியின் நிமித்தும் பேசிக் கொள்வோம்.


புத்திஜீவித ஆய்வு நிலையை எடுத்துக்கொண்டு, "Postmans Studie"
(Postman reported a study)யாகப்
பொதுத் தளத்தை எங்கேயும் உருவாக்கிவிடுதெனுங்கூத்து என்னிடத்தில் இல்லை.அது நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் உங்களுக்கு எப்படியானவொரு சுதந்திரமிருக்கோ அதையே நானும் உள்வாங்கலாம்-வாங்காது போகலாம்.


Pierre Bourdieus நினது ஆய்வுகளுக்குள் உட்பட்டவொரு "இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய எனது"அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் அமீபாவின் ஆவியோடானவொரு உரையாடல் மதிப்புமிக்கதானவொரு விடையமாகலாம்.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"ஒரு பக்கம் அமீபாவினஆவி;,மறுபக்கம்,ஸ்ரீரங்கன்.இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம்"விமோசனம்-மகத்துவம்"மனிதர்களுக்கானதென்றபோதும் அனைத்துக்குமானதென்ற பொதுத் தளத்தில் இலங்கைப் பிரச்சனையுள் புலிகளின் பாத்திரம்,அதன் வழி நிகழ்வுறும்"பொதுமைப்படுத்தும்"குற்றவியல் குறுக்கல்களையும் விடுவிப்பதில் நான் முழுமையாக எழுதுவதே தவிர,இலங்கையில் சோசலிசச் சமுதாயத்தைப்படைப்பெதென்ற அந்த மேலான கண்ணோட்டத்திலல்ல.அதற்கு நான் அருகதையற்றதால் இத்தகைய நிலமையில் விவாதத்தில் ஈபடுவதுதாம் மிச்சம்.இதுவும் ஒரு கட்டத்தில் அவசியமாகிறது.விவாதமென்பதைச் செய்வதென்றபோதும் இதைத் தொடராகவே எழுதுகிறேன்.வேலை வெட்டியுடைவன் என்பதால் அக்கடமைகளின்பின்னே அமீபாவின் ஆவியோடு தொடர்ந்து உரையாடுவேன்.


"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை அமீபா குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தொடருகிறேன்.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.10.2008

2 Kommentare:

Anonym hat gesagt…

உங்களது மிகுதிக் கருத்தை எதிர்பார்க்கிறேன். :)

நன்றி.
-அமீபாவின் ஆவி

உடைப்பு.Sri Rangan hat gesagt…

//உங்களது மிகுதிக் கருத்தை எதிர்பார்க்கிறேன். :)//


வருகிறபொழுதில் கண்டுகொள்ளுங்கள்!

-ஸ்ரீரங்கன்