காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகுந்து
கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை
தேசம்நெற்றில் சில ஆங்கிலம் கற்றவர்களின் புதிய புரிதல்கள்.அன்று சோபாசக்தியை எள்ளி நகையாடிய ஜமுனா இன்று புதிய விமோசனம் பெற்றார்!-அரோகரா அண்ணே அரோகரா!!!
"ஆங்கிலம் வரலாற்றின் பல தருணங்களில் அதிகாரத்தின் மொழியாகவும் மேலாதிக்கத்தின்-Jamuna Rajeendran.
மொழியாகவும் இருந்திருக்கிறது.வர்க்க சாதிய மேலாதிக்கம் அன்றாட வாழ்வில் நாறிக்
கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு கால கட்டம் வரையிலும் ஆங்கிலவழிக் கல்வி என்பது
அதிகாரத்திற்கானதாகத்தான் இருக்கிறது. "
நாவலன் on October 17, 2008 12:23 pm :
//அதிகாரத்தினதும், அடக்குமுறையினதும் ஆஸ்தான மொழியான ஆங்கிலமொழியைப் பேசும் திறன் மட்டுமே தமது புத்திஜீவித்தனம் என்று வரைமுறை போட்டுவைத்திருக்கும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்க மேலணி பற்றி யமுனா தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்.இந்த யாழ்ப்பாண மேல் மத்தியத்ர வர்க்கம் வரலாற்றில் முதல் தடவையாக அடிவாங்க்கிக் கொண்டிருக்கிறது.இந்த விமர்சனங்களுக்கும் வினாக்களுக்கும் எதிராக இவர்கள் ஆக்ரோஷமாகக் கிளர்ந்தெழுவார்கள். சேறடிப்புக்களும், மிரட்டல்களும், இவர்களின் மேலாதிக்க வலைப் பின்னலிலிருந்து எழுவது தவிர்க்கமுடியாதது. இனந்தெரியாத இணையத்தளங்கள், மொட்டைக்கடிதங்கள் போன்ற இன்னோரன்ன மூன்றம்தர மிரட்டல்களுகெதிராக ஓரணியில் நிற்பது அவசியமானது.//
yamuna rajendran on October 17, 2008 10:16 am :
//அன்புள்ள கருணா-
குற்றவுணர்வுடன் இதனை எழுதுகிறேன். ஆங்கிலம் வரலாற்றின் பல தருணங்களில் அதிகாரத்தின் மொழியாகவும் மேலாதிக்கத்தின் மொழியாகவும் இருந்திருக்கிறது.வர்க்க சாதிய மேலாதிக்கம் அன்றாட வாழ்வில் நாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு கால கட்டம் வரையிலும் ஆங்கிலவழிக் கல்வி என்பது அதிகாரத்திற்கானதாகத்தான் இருக்கிறது.
தூயவன் ( பெயரைப் பாருங்கள்- அவர் அப்பழுக்கில்லாதவர் என்கிற பில்ட் ‘அப்’ புனைபெரிலேயே இருக்கிறது- இரு ஒரு மனோவியல்ரீதியான அரசியல் தந்திரம்) அவர் என்னதான் சொற்களஞ்சிய விளக்கங்களைக் கொடுத்தாலும்- தமிழில் அவர் ஜெயபாலனை நோக்கிக் கேட்டது இப்படித்தான்- ‘ஜெயபாலன்- கிசு கிசு எழுதுகிற உமக்கு பொரூளாதாரம் பற்றி எழுத என்ன தகுதியிருக்கிறது?’- இந்த விவாதம் இப்போது பொருளாதாரம் என்பதைத் தாண்டிச் சென்றிருப்பதைச் சாதாரணமாவே ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும்.
இது புனைபெயரில் வந்து ஒருவர் ஆங்கில மேலாதிக்கத்துடன் செய்கிற மமதையுடன் கூடிய ஒரு அரசியல் செயல்பாடு.ஒரு காலத்தில் ஆதிக்கத்தின் கருவியாக இருந்த ஆங்கிலத்திலேயே அவர்களை எதிர்த்து- அவர்களது மமதையை எதிர்த்துப் பேசமுடியும் -எங்களுக்கும் முடியும் என்பது சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து வந்தவர்களின் அவாவாக இருக்கிறது.
ஒருவரை அவரது மொழிப்பரப்புக்குள் சென்று சிதறடிப்பது என்பது ஒரு பிரக்ஞைபூர்வமான அரசியல் தந்திரம். அதன் பொருட்டே சமூகத்தின் கீழ் மத்தியதர வர்க்கத்தின் இடையிலிருந்து வந்தவர்களும் சில சமயங்களில் ஆங்கிலம் பேச நேர்கிறது.
இந்தக் கேவலத்தின் முழுப் பொறுப்பும் இந்த விவாதத்தில் தூயவன் ஏற்படுத்தியது. அவருக்கு தமிழ் தெரியாது என்ற சொல்ல முடியாது. ஜெயபாலனின் தமிழ் மேற்கோள்களை ‘கட் அன்ட் பேஸ்ட்’ செய்து ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். இது அவரது மமதை சார்ந்தது.
நிஜத்தில் புனைபெயரில் வந்து விவாதத்தில் ஈடுபடுபவர்களுடன்- சவால் விடுபவர்களுடன் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட முடியாது என்பது என் கருத்து. தேசம்நெற்றுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை.
இனிமேலும் புனைபெயர் புண்ணியர்களுடன் விவாதத்தில் ஈடுபடுகிற மனநிலை எனக்கு இல்லை. நான் ஆங்கிலத்தில் எழுதியமைக்காக என்னை மன்னியுங்கள்.//
அன்புடன் யமுனா ராஜேந்திரன
puthiyavan on October 17, 2008 9:43 pm :
//கருணா- என்னையும் மன்னித்து விடுங்கள். நான் வேலையிலருக்கும் போது பின்னூட்டம் எழுதினேன். தமிழில் அங்கிருந்து எழுத முடியாமற் பொயிற்று. உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் புலமையும் இல்லை. அத்தோடு ஜமுனா சொன்னது போல் காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகந்து கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை.//
http://thesamnet.co.uk/?p=3307
//கருணா- என்னையும் மன்னித்து விடுங்கள். நான் வேலையிலருக்கும் போது பின்னூட்டம் எழுதினேன். தமிழில் அங்கிருந்து எழுத முடியாமற் பொயிற்று. உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் புலமையும் இல்லை. அத்தோடு ஜமுனா சொன்னது போல் காலனித்துவ அடிமைப் புத்திக்குள் புகந்து கிடக்க எனக்கு உடன்பாடும் இல்லை.//
புதியவன்,ஆங்கிலம் கற்பது-புலமையுறுவது என்பது காலனித்துவ அடிமைப் புத்திக்குள் உட்செல்வது கிடையாது!
ஜமுனாவின் வார்த்தையிற் கூறினால் மூல மொழி-மொழிகளில் படிப்பதற்கு-வாசிப்பதற்கு ஆங்கிலமும்,ஜேர்மனும்,பிரஞ்சும் அவசியமான மொழிகள்.இவை தெரியாதவரை எள்ளி நகையாடியவர்கள்-இப்போது, தூயவனைத் தாக்குவது அவரது கருத்துகளுக்காக மட்டுமல்ல.மாறாக,அவர்கொண்டிருக்கும் ஆங்கிலப் புலமை மற்றும் அவ் மொழியின் மோகம் குறித்து.
ஆங்கிலத்தில் வாசிக்க-எழுத முடியாதவர்கள் புதிய உலகத்தை-செய்திகளை-விவாதங்களை-மாற்றங்களை அறிவது, மிகவும் பின்தங்கிய பிராந்தியமொழிகளில் காலம்கடந்து மொழிமாற்றஞ் செய்தபின்பே.செய்யப்படும் மொழி மாற்றமும் அரைகுறையானது.எனவே,ஆங்கிலத்தால்-ஐரோப்பிய முன்னணி மொழிகளால் கட்டிப்போட்ட அறிவியல் உலகைத் தரிசிக்க இம்மொழிகளைக் கற்கவேண்டியது அவசியம்.
மூலமொழியில் படிப்பவர்கள் மற்றவர்களுக்குக் குருவாக இருப்பதில் "இருக்கும்"சுவைக்காக மூல மொழி தெரியாதவர்களை எள்ளி நகையாடுவது சரிதாமோ?இதை ஜமுனா சோபா சக்திமீது ஏவியது வரலாறு.ஆனால்,சோபா சக்திக்கு ஆங்கிலத்தில் புரிய-பேச ஓரளவு தெரியும் என்பது நாம் அறிந்த உண்மை.வேண்டுமானால் "புலமை இல்லை"என்பது ஒத்துக்கொள்ளத்தக்கது.அது,எவருக்கும் அவசியமுமில்லை!
கொஞ்சமும் பொறுப்பற்ற இவர்கள்,ஆங்கிலத்தை "காலனித்துவ அடிமைப் புத்தி"என்கின்றனர்.இத்தகைய அடிமை-ஆண்டான் புத்தி ஏன் தமிழுக்குள் இல்லையோ?
மொழி குறித்து ரொலான்பார்த் சொன்னார்:"மனிதர்கள் மொழியின் கைதிகளானார்கள்" என.அது, ஓரளவு உண்மைதான்.மனிதர்கள் உண்மையில் கைதிகளானது அவர்களது உயிர்வாழும் நிலைக்கே-வாழ்நிலைக்கே!.இது, பலரூபங்களிலானது.இத்தகைய ரூபங்கள் மொழிக்குள் குறிப்பான்களாகக் கொட்டிக்கிடப்பதால் அதை காலனித்துவ-ஆரிய-பிராமணிய-வெள்ளாள அடிமைப் புதியாகக் கொள்வதில் வியப்பு ஒன்றுமில்லை.அரபு மொழி எப்படிக் குரானோடு சல்லாபித்துச் சரிந்ததோ அப்படி!
இவைகளால்-இத்தகைய குறிப்பான்களை தடைகளாக்கி, இவ்மொழிகளை நிராகரிப்பவருக்கு-ஜமுனா,நாவலன்,தம்பி சேனன் வந்து தத்துவஞ் சொல்வார்கள்.இப் பதவிகளை நீங்கள் ஆங்கிலம் கற்றால் இவர்கள் இழந்துபோவார்கள் கவனம்!
எனவே,தமிழெனுங் குண்டான் சட்டிக்குள் குதிரையை ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.அதுவே,இவர்களுக்கான "புத்திஜீவி"ப் பீடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen