Dienstag, Januar 01, 2013

ஒரு பதிப்பகத்தின் வெற்றி

காலச் சுவடும்,கண்ணனும்: 


ரு பதிப்பகத்தின் வெற்றி,பத்திரிகையின் வெற்றி குறித்து நம்மெல்லோரிடம் "நுணுக்கம்-வியூகம்-தந்திரம்"  இருக்கிறது.

அதுள், மிகச் சிறந்த-கைதேர்ந்த வர்த்தக நுணுக்கத்தைக் கண்ணன் கைக்கொள்வதை சமீக காலமாக நாம் பார்த்து வருவது கண்கூடு(the activity, set of institutions, and processes for creating, communicating, delivering, and exchanging offerings that have value for customers, clients, partners, and society at large) !.

சமூகத்தின் அதீதமான அரசியல் கோரிக்கைகள்-வெகுஜனவெழுச்சிகள்-போராட்டங்கள்,மக்களது வாழ்வாதாரப் பிரச்சனையுள் தம்மையிணைத்துப் போராடும் தலைமைகளை-போராட்ட முன்னோடிகளை ஆதரித்துக் கைதூக்கி விடுவது[ market segmentation ] ஒருவகையில் வெகுஜனவூடாகத்தின் பொறுப்பு.இதுள், காலச்சுவடு முன்னணியில் நிற்கும்போது அதன் வர்த்தகமும் [It must be large enough to earn profit.  ]இரட்டிப்பாகிறது.இப்போது உதயகுமார்,அன்று அருந்ததி ரோய் என்று மக்களோடதிகமாக நின்று பிரச்சனைகளைப் பேசுபவர்களுக்குள் ஒரு பாலமாக[It is useful in deciding on the marketing mix ] நிற்கும் கர்ணணின் வர்த்தக நுணக்கமானது(Master of Business Administration )மிகச் சாதுரியமானதும்,சிறந்த தந்திரமுமானது.இஃது, சிறு பத்திரிகையுலகத்தினர் அனைவரும் புரிந்து இப்படி"வர்த்தகத் தந்திரத்தை-நுணுக்கத்தை" யொட்டிச் சிந்திக்வேண்டும்.

வர்த்தக நுணுக்கமென்பது ஒரு சந்தர்ப்பத்தில் அதன் இருப்புக்கு மிக அவசியமானதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அந்த வகையில் காலச் சுவடு கண்ணனைப் பாராட்டித்தாம் ஆகவேண்டும்.

இன்றைய மனித வாழ்வின் [  Psychographic segmentation ]அடிப்படைப் பிரச்சனையான அணுவுலையெதிர்ப்புப் போராட்டமானது பரந்த பட்ட மக்களிடம்பரவலாகவுணர்வுரீதியவுணரப்பட்ட எழுச்சி.உயிராதாரப் பிரச்சினை.எனினும்,அதற்குள்ளும் விளம்பரத் தந்தரம் செய்ய முடியும்.இதை எத்தனை பேர்கள் உணர்ந்துள்ளனர்.வர்த்தகத்துக்கு விளம்பரமென்பது மிக அவசியமானது.இது குறித்துப் பெரிய-பெரிய வியூக நூல்களே வந்திரக்கிறது.இஃது தொரு துறைசார் கல்வியாகவும் [ Geo-cluster approach combines demographic data with geographic data to create a more accurate profile of specific ]படிப்பிக்கப்படுகிறதென்றால் பாருங்களேன்.
கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உயிரோட்டமிக்கக் காலச் சுவட்டின் வர்த்தக நுணுக்கத்தைக் கற்கை நெறியாக வைத்தாக வேண்டும்.மாணவர்கள் நாளைய தலைமுறையின் வர்த்தகத் தலைவர்களாகவும்-முகாமைத்துவ மேதைகளாகவும் உருவாகுவதற்குக் கண்ணனின் யுக்தியைக் கல்வியாக்க வேண்டும்.

வெகுஜனப் போராட்டங்கள்,எழுச்சிகளைக் கையகப்படுத்தி-ஆதரித்து போராட்ட முன்னோடிகளைத் தூக்கிவிட்டு,அவர்களோடு தோளோடு தோள் நிற்கும் காலச்சுவடு, தானும் வாழ்கிறது-சமூகத்துக்கும் தன்னாலான வர்த்தக நுணுக்கத்தையும்[Behavioral segmentation  ] கற்பிக்கிறது.

2012 ஆம் வருடத்தின் அதிசிறந்த வர்த்தக நுணுக்கத்தை[Commercial advertisers often seek to generate increased consumption of their products or services through "branding," which involves associating a product name or image with certain qualities in the minds of consumers. Non-commercial advertisers who spend money to advertise items other than a consumer product or service include political parties, interest groups, religious organizations and governmental agencies. Nonprofit organizations may rely on free modes of persuasion, such as a public service announcement  ] கைக்கொண்ட மனிதரைத் தமிழக அரசு தேர்த்தெடுத்தால் நான் காலச்சுவடுக் கண்ணனையே பரிந்துரைப்பேன்.கண்ணன் நமக்குள் மிக நேர்த்தியான வர்த்தகத் தந்திரம்-நுணுக்கம்-வியாபார வியூகம்"அமைப்பதில் சிறந்த விற்பனர் [significant work experience  ]என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2013

Keine Kommentare: