Sonntag, November 22, 2009

"மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்

புலம்பெயர் தேசங்களிலுள்ள கள்ளப் புலிகளைப்
போட்டுடைக்கும் களத்து உதிரிப்புலி.
 
 
ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! ,
 
 
தமிழீழத்துக்காகப் போராடுவதென்று தம்பட்டம் அடித்த புலிப்படை நாசகாரிகள்,புலம் பெயர் தேசங்களில் சேர்த்து வைத்த பல பில்லியன்கள் டொலருடன் தமது தலைவருக்கே பாடை கட்டிவிட்டு,இப்போது புலம் பெயர் தேசங்களில் கட்டவுட்"மாவீரர்தின"விழாக்களைச் செய்ய முனையும் தறுவாயில், களத்துப் புலி உதிரிகள் இவர்களது போலி முகங்களைத் திரை கிழிக்கின்றனர்.இஃது,புலிப் போராட்டத்தின் போலி முகத்தை நன்றாகவே நம்முன் அம்பலப்படுத்தி வருகிறது-பணத்துக்காகக் கொலை செய்து வந்த ஒரு மாபியாக் குழுவின் கடந்தகால வரலாற்றை இத்தகைய செயல்களின்வழி இனங்காணக் கோருகின்றோம் அன்பார்ந்த மக்களே!!
 
புலிகள் அமைப்பென்பது ஒரு மாபியாக் கூட்டம் என்பதும்,அது ஒரு போதும் தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடவில்லையென்றும் நாம் பல ஆண்டுகளாகப் பேசியும்-உரையாடியும் வந்தோம்.எனினும்,நம்மைத் துரோகிகளெனவும்,எட்டப்பரெனவும் கூறிய புலிப் பினாமிகள், இன்று தமக்குள்ளே சொத்துக்காக அடிபடும்போது, இதுள், யாரு எட்டப்பர்களென நாம் கேட்காமலே நீங்கள் இனங்காண முடியும்.இன்று,மக்களை ஏமாற்றும் அனைத்துத் தமிழ் இயக்கங்களும்,அவர்களது ஆயுதக் குழுக்களும் தமது வருவாய்க்காக மக்களை ஏமாற்றுவதை இனம் காணக் கோருகின்றோம்!புலியாயினும்,புளட்டாயினும்,டக்ளஸ் ஆகினும் அனைவருமே மாபியாக்களே!மக்களுக்காகக் குரல் கொடுக்க இன்று எவருமேயில்லை!உண்மைகளை இனம் காணுவதைத் தவிர எமக்கு எதுவுமே இப்போது சாத்தியமில்லை.
 
எந்தப்பொழுதிலும்,மக்களது நலத்துக்கக் குறுக்கே நின்ற சதிகாரப் புலிகள் கோடிக் கணக்கான மக்கள் சொத்தைத் தமதாக்க"மாவீரர் விழா"என்றும்,நாடுகடந்த தமிழீழம் என்றும் பசப்புகள் செய்து, அப்பாவிப் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை ஏமாற்றும்போது,இத்தகைய மக்கள் விரோதிகளை எவர் தண்டிப்பார்களென நாம் கவலையுறுகிறோம்.
 
 
காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,நேர்மையான புலி விசுவாசிகள் கொதித்து எழுகின்றனர்.நாமோ இத்தகைய புலிகளது நடவடிக்கைகளைச் சர்வதேச நீதியின்பால் தண்டிக்கக் கோருகின்றோம்.
 

பணத்துக்காகப் பலியெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கு நியாயம் கேட்கிறோம்.
 
எமது மக்களை ஒட்ட மொட்டையடித்த இந்தத் தேசத் துரோகிகளை மக்களது சார்பாகக் கண்டித்து, ஆர்ப்பாட்டஞ் செய்து தண்டிக்கக் கோருகிறோம்.
 
பல கோடி டொலர்களது நிதிப் பலத்தோடு, புலம் பெயர் தேசங்களில் நடாத்தப்படும் "மாவீரர்" களியாட்ட நிகழ்வுகளை நிராகரிக்கக் கோருகிறோம்.
 
 
இத்தகைய களியாட்ட நிகழ்வோடு மீளவும், பணம் சேர்க்க முனையும் புலிப்பினாமி வியாபாரிகளை இனம் காணுங்கள் மக்களே!
 
 
இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங் காணுங்கள்.
 
இவர்கள் பேசும் நாடுகடந்த தமிழீழம்-நாடுகடந்த பாராளுமன்றம்,இவர்கள் சொல்லும் தமிழ் ஊடகமெனும் ஜீ.ரீ.வி-ஐ.பீ.சி.வானொலி என்பவையெல்லாம் மக்களது சொத்தைத் தமதாக்கும் முயற்சியில் தமிழின் பெயரால் காயடிக்கும் கயமைக்கு ஏதுவானவை.
 
அன்பார்ந்த தமிழ்பேசும் இலங்கை மக்களே,
 
நீங்கள் புலம் பெயர் தேசங்களில் மாடாய் உழைத்து,உங்கள் உறவுகளின் விடுதலைக்காக இட்ட நிதியை, ஒரு சில புலிப்பினாமிக் குடும்பங்கள் தமது சொத்தாக வைத்து அநுபவிப்பதற்காக விட்டுவிடுவீர்களா?அன்றி, மீளவும் போலித் தமிழீழக் கதையாடல்கள் ஊடாக உங்களை ஏமாற்ற இடங்கொடுப்பீர்களா?
 
இவற்றுக்கு இடம்கொடாதீர்கள் மக்களே!
தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு நீங்கள் எடுப்பார் கைப் பிள்ளைகளா?
தீர்மானியுங்கள் இன்றே!
 
நீங்கள்,மிகவும் மதித்த புலித் தலைவன் பிரபாகரனை, மெல்லச் சிங்கள அரசிடம் சரணடைய வைத்துக் கொன்ற இந்த நாசாகாரப் புலிப் பினாமிகள்,உங்கள் தலைவனுக்கு வீர வணக்கஞ் செய்ய வரும் 27 நவம்பரைப் பயன்படுத்துவதை அநுமதிக்காதீர்கள்.
 
இவர்களை ஐரோப்பிய மண்ணில் அம்பலப்படுத்துங்கள்.
 
இளைஞர்களே,உங்களது நம்பிக்கையை துஷ்பிரேயோகஞ் செய்த புலிக் கயவர்களைப் பூண்டோடு அம்பலப்படுத்த உங்களது அனைத்துச் சக்திகளையும் பயன் படுத்துங்கள்.
 
புலம் பெயர் மண்ணிலுள்ள அனைத்துப் புலிப் பினாமிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
 
இவர்களை நம்பி மேலும் சில்லறைகளையும்,உங்கள் உழைப்பையும் வீணாக்காதீர்கள்.
 
இவர்கள், தமிழ்சமூகத்தின் கடைந்தெடுத்த விரோதிகளென்பதை,புலிகளது இன்னொரு பிரிவான

இராம் போன்றவர்களேஅம்பலப்படுத்துகிறார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் இனம் காணவேண்டிய நேரம் நெருங்குகிறது.
 
புலிகளின் எந்தப் பிரிவும் நாணயமானவர்களில்லை!இதை நாம் உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில்,இதுவரை இவர்கள் எம்மையும் உங்களையும் பிரித்துச் சில்லறைகள் சேர்ப்பதற்காக மக்களைப் பலி கொடுத்ததை நாம் உயிரைக் கொடுத்துத் தினமும் தட்டிக் கேட்டவர்கள்!
 
எனவே,புலிப்பினாமிகளை இனம் காணுங்கள்.இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றிக் கொன்று குவித்த மாபியாக்களே என்பதை அறிவு பூர்வமாக உள்வாங்குங்கள்.இதில் தமிழீழத்தின் பெயரால் மயக்கம் வேண்டாம் அன்பு நெஞ்சங்களே!
 
பணத்துக்காவும்,பதவிக்காகவும் கடந்த முப்பதாண்டுகளாக மக்களை ஒட்ட மொட்டையடித்தும், அவர்களைக் கொன்று குவித்த துரோக அமைப்புக்கு இனிமேலும் ஆதரவை நல்காதீர்கள்!
 
தமிழ்பேசும் மக்களது பெயரில் விடுதலையெனும் பொய்யை மேன்மேலும் கூறும் அனைவரையும் நிராகிரியுங்கள்.
 
இன்றைய சூழலில் சுய தேடலூடாக இவர்களை இனங்கண்டு துரத்தியடியுங்கள்.
 
இலங்கையில் வாடும் அனைத்துத் தமிழ் மக்களது உய்வுக்காகப் புலிகளிடமிருக்கும் அனைத்துச் சொத்துகளையும் பறி முதல் செய்யும் போரைத் துவங்குங்கள்.அதை, வரும் மாவீரர் தினத்திலிருந்து ஆரம்பியுங்கள்!
 
புலிப் போராளிகளது பெயரில் மீளவும், கொள்ளையில் இறங்கும் ஐ.பீ.சீ.-ஜீ.ரீ.வி போன்ற ஊடகங்களையும்,இவர்களால் தூக்கி நிறுத்தப்படும் புலிப்பினாமிகளையும் இனங் காணுங்கள்.இதன் பின்னர் இவர்களை துரத்தி அடிப்பதற்கும்,அவர்கள் கொண்ட சொத்தைப் பறி முதல் செய்வதற்கும் புலம் பெயர் தேசத்தின் சட்டத்துக்குட்பட காரியமாற்றுங்கள்.இதுவே காலவோட்டத்தில் சரியான பாதைகளை உங்களுக்காட்டும்.
 
புலம் பெயர் தேசங்களில்,மாவீரர்கள் பெயரில் அடுத்த வியாபாரத்தைத் தொடரும் அயோக்கியர்களை இனம் காணுங்கள்.
 
புலிப் பினாமிகளது நேரடியான பொய்யை நம்பி ஏமாறாதீர்கள்!
 
புலிப் பினாமிகளது ஊடகங்கள் உரைக்கும் பொய்யை நம்பாதீர்கள்.
உங்களது சொந்தச் சிந்தனையின் வழி உண்மையைக் கண்டடையுங்கள்!
இதுவே,இன்றைய அவசியமான தேவை!
 
இதைச் செய்யத் தயங்கும் ஒவ்வொரு பொழுதும், புலிப்பினாமிகள் உங்களை மொட்டையடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள்-கவனம் அன்பார்ந்த மக்களே!
 
புலிப் பினாமிகள் புலம் பெயர் தேசங்களில் செய்யும் "மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்,
புலிப்பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்,அவர்களிடமுள்ள எமது சொத்தைப் பறித்தெடுத்து வன்னியில் அவதியுறும் மக்களது விடிவுக்குப் பயன்படுத்துவோம்!
 
இதுவே,களத்தரில் பலியான ஆயிரமாயிரம் போராளிகளுக்குச் செய்யும் பெரும் வீர வணக்கமாகும்!!!
 
 
களமாடிச் செத்த அப்பாவிகளுக்கு நாம் தலை சாய்ப்போம்,
போலிப் புலிப் பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்-விடியலுக்காக இதைச் செய்வோம்!
 
வாருங்கள் கைகோர்த்து புலி மாபியாக்களையும்,அவர்களது துரோகத்தையும் வேரறுப்போம்!
 
நம்பிக்கையோடு இதைச் செய்வோம்,நாம் புலிகளால் தோர்க்கடிக்கப்பட்டவர்கள்-தோற்றவர்களில்லை!எனவே,என்றும்,இதுவல்ல எமது தலைவிதி!முயன்றால் முடியாதது எது இளைஞர்களே?
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
22.11.2009

Kommentare:

rooto hat gesagt…

u want to kill remaining few tamils?? unnayamaathiri aakkalaalathaan ippa hamilan intha nilaikku vanthiddan!!! nee ennum raththam kudichu unda keevalamaana ethippai ippa kaaddi nee periya pudungi aakiriyaa?? itha sonna naanum puli atharavalan, unnapola sinthikka theriyathavan endu solluvai. pooi unda kudumpaththa paaru!! atha yaaravathu ooddidu pookaporan!! still im in srilanka!! unna maathiri oodi thappalla!! thamil makkalukku nallathu seyyurathu enda first u come to srilanka!!! culprit

பிருந்தன் hat gesagt…

ம்....... அப்புறம் சாப்பாடு ஆச்சா....இண்டைக்கு என்ன கறி....

gunaseelan hat gesagt…

you may be a agent for sl govt. tamil people are very clear..please donot waste your time..if you wish be stand as tamilan..or i dnot have any words for you..