வாசகர்களே,வணக்கம்! இப்போதெல்லாம் மிகவும் வேகமாகக்
கட்டுரைகளை எழுத நேரமில்லை.கூடவே உடல் நலம் குறைந்துகொண்டே போகிறது.இந்த
நிலைமைகளில் பல தளங்களில் தனியொரு நபர் எழுதுவது மிகக் கடினமானது.என்றபோதும்
அரவிந்தன் நீலகண்டன்கள்(இந்துப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள்)விஞ்ஞானத்தையே
கருத்தியலாக்கி "அகவயக் குறைபாடுடைய அறிவை"வெளிப்படுத்தும்போது நமக்கு அது குறித்து
விவாதிப்பதன் அவசியம் உணரத்தக்கபடி இருக்கிறது.இது(எதிர்த்துக் கருத்தாடுவது)
வரலாற்றுக் கடமையாகவும் இருக்கிறது.எனவே நேரம் கிடைக்கும்போதும்-உடல்
ஒத்துழைக்கும்போதும் இத்தகைய விவாதத்தைச் செய்யலாமென நினைக்கிறேன்.இருந்தும்
ஆடிக்கொருக்காய் ஆவணிக்கொருக்காய் எழுதும் நிலையே எனக்கு வாய்க்கப்
பெற்றிருக்கிறது.இன்றைய நிலையில் தனி நபர்களின் செயற்பாட்டுக்கு மிகவும் குறுகிய
எல்லையே உண்டு.இந்த எல்லை ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.தோழர் இரயாகரன்
போன்றவர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும்.அவர்களே ஒரு புரட்சிகர
அமைப்பாhகும் உலகு தழுவிய தொடர்புடையவர்கள்.என்னால் ஒருகட்டுத்துக்குமேல் நகர
முடியதென்பதன் எல்லையை(எழுத்து-செயற்பாடுகள் என்று புரிக.)நான் புரிந்தே
வைத்திருக்கிறேன்.எனினும் இந்தக் கருத்தியல் வாதிகளை நான் அம்பலப்படுத்துவதை மனதார
விரும்புகிறேன்.இந்த விருப்பு ஓரளவு செயற்படத் தூண்டுகிறது.அப்பப்ப நீலகண்டனின்
பாட்டன,; கொப்பாட்டன்களை நாம் அம்பலப்படுத்துவோம்.கடந்த இரு பகுதியில் ஓரளவு
இவர்களை அம்பலப்படுத்தி இவர்களின் அறிவு மோசடியை
அம்பலப்படுத்தியிருக்கிறோம்.தொடர்ந்து அதை நோக்கி...

(தொடர்:3)
மதம்:
இந்த வார்த்தையைப் பல முறைகள் படித்துப் பார்த்தேன்.மதம் என்பது மனிதர்களின் அதீத அச்சவுணர்வால் அவர்களின் அகவுலகத்துக் கண்டுபிடிப்பாகவே இருக்கிறது.எனினும் இந்த அகவுலகத்தின் கருத்தியலைப் பொருள் சார்ந்த"புறநிலையின் தன்மையே சிந்தனையாக்கி"அத்தகைய கருத்தியலை(பிரமம்:இறைவன்) உருவாக்கி தன்னைக் காப்பதற்கானவொரு ஆயுதமாக்கினார்கள்.இதனால் மனிதர்கள் இத்தகைய அக மன விருப்புக்கு இரையாகினார்கள்.இதைக் கடந்தவொரு பொருளாதார மனிதர்கள் உருவாகும் உழைப்பின் திரட்சியில் மதம்-கடவுள் கொள்கைகள் மிகப் பெரும் நிறுவனமாக சமுதாய அரங்கில் செயற்படும் அவசியம் இந்தப் பொருளாதார உறவில் அவசியமாகியுள்ளது.இதைக் குறித்து நாம் விரிவாகப் பார்ப்போம்.அப்போதுதான் இந்தத் தேவாங்கு அரவிந்தன் நீலகண்டன் வெறும் திரிவு வாதியென்பதும்,அறிவுக்கும் அவருக்கும் எட்டாம் பொருத்தம் என்பதும் புரியும்.கடந்த காலத்தில் அவர்கள்(அரவிந்தனின் கொப்பாட்டர்ன்கள்) தமிழ்நாட்டில் செய்த "அனல் வாதம்-புனல் வாதங்கள்"நம் மக்களையே வரலாறு தெரியாதளவுக்குப் படு குழியில் தள்ளியதை அவிழ்த்துப் பார்த்து அரவிந்தன்களின் கபட அரசியலை அம்பலப்படுத்த முடியும்.இதில் தோழர்கள் இரயாகரன்,அசுரன்,இராஜவனாஜ்,மிதக்கும் வெளி,நண்பன் போன்றோர் மிகவும் சிரத்தையோடு எழுதுவது தெம்பாகிறது.
இனிமேலே போவோம்.இந்த உலகம் என்னதான் பல்வேறு வேறுபாடுகளை உடையதாயினும் அது ஒருமை உடையதாகவே இயங்குகிறது.இந்த உலகத்தின் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் இடையில் சதா இயக்கம் இருக்கிறது.இந்த இயக்கம் இன்றி அநாதியாக எதுவும் இருக்க முடியாது.அப்படி அநாதியாக "ஆதியும் அந்தமும்"இன்றி எந்தப் புண்ணாக்கும் உலகில் இருப்பதாகச் சரித்திரமில்லை.எங்கள் அறிவினது எல்லை ஏதோவொரு வகையில் பல கற்பிதங்களைச் செய்கிறது.
இறைவன் என்பவன்-என்பவள் ஒரு கற்பிதமான கருத்துத்தான்.இது நிலவுவதற்கான எந்த இயற்கை அவசியமும் இந்த இயற்கையின் இயக்கத்துக்குக் கிடையாது.அப்படியொரு பொருள் அல்லது உயிர்-இயக்கம் இந்தப் பொருளாயுதவுலகத்தின் எந்த வரலாற்று வெளியிலும் நிலவ முடியாதென்பதற்கான தர்க்க நியாயம் அவ்வளவு எளிமையாக விளக்கப்படுத்த முடியாது.எனினும் அதைப் பற்றிய ஒரு புரிதலுக்கான குறிப்பு அவசியமே.கருத்து முதல் வாதத்துக்கும் பொருள்முதல் வாதத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எதையெது வெற்றி கொள்ளும் என்பதை காலம் தீர்மானித்து இன்று பொருள்முதல்வாதம் வெற்றியோடு மரபணு மாற்றத்தின் மூலமாக உங்களுக்கு விரும்பிய குழந்தைகளின் நிறம்,முடியின் நிறம்-விழிகளின் நிறம்-உடல் உயரம் என்று எல்லவற்றையும் உங்கள் கனவுக்கேற்ப படைப்பையே மாற்ற முடிகிறது.இது பிரமாவின் படைப்புத் தொழிலைப் பறித்து அவரை"வேலையில்லாத வெட்டிப் பயலாக்கியுள்ளது".இதுதான் பொருள் முதல் வாத அறிவு செய்த மிகப் பெரும் புரட்சி.ஆனால் இத்தகைய அறிவுக்குள் வளர்துள்ள முதலாளியம் இனவாதமாகச் சீரழிந்து உலகைச் சிதைப்பதும் உண்மை.எல்லாம் குவிப்புறுதியின் விளை பயன்.
உலகத்தின் அன்றைய தத்துவ ஞானிகள் "கருத்துக்கும் பொருளுக்கும்" நடுவில் சதா போராடியுள்ளார்கள்.அவர்கள் இரு பெரும் அமைப்பாகச் சிதறி,ஒரு பெரும் பகுதி கருத்துமுதல் வாதக் கும்பலாகவும் மற்றைய பிரிவு பொருள் முதல்வாதப் புரட்சிக்காரர்களாகவும் செயற்பட்டார்கள்.அவர்களில் நம்மட இந்தியாவில் பிரகஸ்பதி(பிரகஸ்பதி சூத்திரம்)சர்வாகர்(பிரபுத சந்திரோதயம்-நாடகப்பிரதி) முக்கியமானவர்கள்.
நமது இந்தியாவில் உலகாயுதம் என்ற தத்துவ ஞானக் கண்ணோட்டம் இதற்கு மிகச் சான்றானது.கடவுள் பற்றிய மனித அச்சம் தோன்றியபோதிலிருந்தே அத்தகைய கடவுள் இல்லையென்ற அறிவு நாணயமும்-தர்க்கமும் உருப்பெற்றே இருக்கிறது.இதுதான் அறிவின் வேலை."பாற்கடல் ஈர்ந்த பிரான்" எல்லாருக்கும் படியளப்பார்ரென்று எப்போது நமது இந்திய தேசத்தில் கருத்துகள் முளைக்கத் தொடங்கியதோ அன்றே இந்த நம் மக்களின் அழிவுக்காலமும் தொடங்குகிறது.அந்நியர்கள் தொடர்ந்து போரிட்டு இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப்படுத்தினார்கள்-மேற்குலகத்தவர்கள் நாடோடிகளாக இருந்த காலம் மறைந்து, கண்டு பிடிப்புகளினதும் ஜந்திரக் கட்டமைப்பினதும் பிதா மக்களாகவும் உலகை ஆளத் தகுந்தவர்களாகவும் மாறிக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் உருவாகின.இதை மனதில் இருத்திக் கொண்டு இந்த மனித உயிரியின் இன்றைய இறையுட் கோட்பாட்டையும் கருத்து முதல் வாதத்தையும் பார்ப்பதே சாலச் சிறந்தது.
மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம் புலன்களுக்கு எது அனுபவமாகிறதோ அது பொருள் சார்ந்த இயக்கத்திலிருக்கும்.இதுதான் பொருள்முதல்வாதிகள் முன் வைக்கும் ஒரு விஞ்ஞான உண்மை.அணுக்குறித்தான அனைத்து இன்றைய மதிப்பீடுகளும் இந்த ஐம்புலன் அனுபவத்தின் பிரதிபலிப்பாகவே நமக்குப் புரிந்து கொள்ளும்படி விரிந்து கற்கையாக இன்றிருக்கிறது.
இந்தவுலகத்தின் வௌ;வேறு பொருட்களாக இருக்கும்-இயங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் ஒன்றாகக் கண்டு அதனை எது இயக்கத்தில் வைத்திருக்கிறது என்பதில் ஏற்பட்ட தர்க்க அறிவே இன்றைய விஞ்ஞானத்துக்கு அடைப்படையாக இருந்தது.
பண்டுதொட்டு மனிதர்கள் தம்மை மனிதர்கள் என்று அழைக்கத் தெரியாத காலத்தில் இயற்கையின் பருமனைக் கண்டே அஞ்சி தம்மை அதன் முன் வெறும் கையாலாகாதவர்களாக முன் நிறுத்தியபோது தமக்கு முன் விரிந்து கிடக்கும் இயற்கையின் பாரிய தோற்றப்பாட்டைக் கண்டு அதைத் தம்மிலும் உயர்வான-வலுவான சக்தியாக அகத்தில் கருதும் உணர்வுக்குள் வீழ்ந்தார்கள்.இந்த வரலாற்று அச்சவுணர்வானது காலத்துள் கடவுள் எனம் கருத்தாக நிலை பெற்றது.இதுதான் இந்த மனிதனின் முதல் ஆயுதமாக இருக்கிறது.அதன் பின்பே கல்லிலும் செம்பிலும் ஆயதங்கள்-கருவிகள் தோற்றம் பெற்றன உழைப்புப் பிறந்தது.கடவள் உயிருடையவராக உயர்ந்து இன்று இறந்துபோய் கருங்கல்லாக மாற்றம் காண்கிறார்.
மதத்துக்கு முன்பே கருத்து முதல்வாதச் சிந்தனை தோற்றம் பெற்றது.கருத்து முதல்வாதம் என்பது அறிவின் தொடர்ச்சியில் வெறும் கருத்துக்களால் ஆனது.அது இன்றுவரையும் மக்களை குழப்புவது உடமை வர்க்கத்தின் பாதுகாப்பு அவசியமாக இருப்பதால் என்பதை பிற்பகுதில் தெளிவாகப் புரிய முனைவோம்.
கருத்து முதல்வாதச் சிந்தனையாளர்கள்(நீலகண்டன் போன்ற உரித்த வெங்காயங்கள்)உலகத்தின் ஒருமையை தாம் உணர்ந்த அகவயக் குறைபாடுடைய எண்ணங்களால்-கருத்துக்களால்(ஆன்மீகம் என்று புதுவகையாக அதை இப்போது அழைப்பது வழமை)கருத்து நிலையை அடிப்படையாக்கி ஒருமைப்படுத்த முனைந்தார்கள்.இதை இப்படிச் சொல்வோம்.அதாவது ஆன்மீக அடிப்படையாக்கி,ஒருமைப்படுத்தி(கடவுள்) உணர முற்பட்டார்கள்.இந்த அகவயக் குறைபாடு அல்லது அறிவின் இயலாமை அவர்களின் தத்துவங்களில் "பிரமம்,மோட்சம்,மறுபிறப்பு,ஊழ்வினை"மற்றும் தெய்வ சக்தி-ஆன்மா என்று தனிமுதல் கருத்து,புலனுணர்ச்சிகளின் தொகுதி மற்றும் இன்னபிற வடிவங்களுக்குள் முகிழ்த்தன.
இத்தகைய கருத்தியல் வாதத்தைக் கண்ட இன்னொரு அறிவுவாதக் கூட்டம் இதை நேரடியாக மறுத்தொதுக்கி பொருள்சார்ந்த சிந்தனையோடு சிந்தனையுருவாவதை உணர்ந்த போது"புற நிலைகளின் தன்மையே சிந்தனைக்கு அடிப்படையானதுதென"அறிந்து பொருள் முதல்வாதத்தைச் சார்ந்து தமது மதிப்பீடுகளை வகுத்தார்கள்.உலகத்தின் உண்மையான ஒருமைப்பாடு பொருளாயதத் தன்மையில்,உணர்விலிருந்து மிகவும் தனித்து சுயேட்சையாகவுள்ள புற நிலை மெய்பாட்டில் இருப்பதாகக் கருதினார்கள்.
தொடரும்.
28.03.2007