Freitag, Juli 20, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் :பகுதி3

நேசம் நிறைந்தோரே!,
இந்த நூல் விமர்சனத்தூடாக நாம் எதிர்கொள்ளும் உண்மையானது நமது மக்களது மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் தமது விலங்கை ஒடிப்பதற்கானவொரு நிபந்தனைக்கு முன் வந்தாகவேண்டும் என்பதையே புதைத்து வைத்திருக்கிறது.முள்ளி வாய்க்காலில் செய்யப்பட்ட "சமரசம்-காட்டிக் கொடுப்பானது" இலங்கையில் தமிழ் பேசும் மக்களது அடிமை விலங்கை உறுதிப்படுத்தியது.புலிகள், தம்மால் தமிழினத்தை வேட்டையாடியது போதாதென்று தமது எஜமானரையும் வேட்டையாடும்படி செய்யும் இன்றைய அரசியலை நாம் புரிந்தாகவேண்டுமா-இல்லையா?

அந்தச் செயற்றிட்டமானது-புரிதலது போக்கானது மனித இருப்புக்கான நிபந்தனையாகும்.

"போராட்டம் என்பது மகிழ்ச்சியானது" என்று மார்க்ஸ் கொண்ட கொள்கையால் தனது குடும்பத்தையே அதற்காக அர்பணித்துக்கொண்டார்.

மாபெரும் தியாகிகளது குருதியிலும்,சாவிலுமே நாம் ஓரளவு சுதந்திரப்பிரஜைகளாக இப்போது நடமாடக்கூடியதாக இருக்கிறது.

8.மணி நேரம் உழைப்பு,8 மணி நேரம் ஓய்வு.8 மணி நேரம் உறக்கம் என்பதை இத்தகைய தியாகிகளது உயிர்க்கொடையின் மூலமே நாம் அநுபவிக்கின்றோம்.

இந்த நூல் விமர்சனமென்பது எமது வரலாற்றைத் தெளிவுறக் கற்பதற்கும்,அதிலிருந்து உண்மையான தியாகிகளை இனம் கண்டு,எமது மக்களது விலங்கை நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து உடைப்பதில் மக்களோடு மக்களாகத் தோள் சேரும்போது அந்நிய ஏஜென்டுகளை-அவர்கள் நம்மைப்போல்,நாமாக இருப்பதைக் கண்டுகொள்வதன் வாயிலாக, ஒரு புதிய விடிவுக்கு நாம் துணைபோவதற்காக இத்தகைய எதிரிகளை முதலில் முறியடிப்பதற்கு முனையவேண்டும்.

தமிழரசன்,மிக முன்னேறிய போராட்டச் சிந்தாந்த வாதியும்,சிறப்பான வரலாற்று அறிவாளனுங்கூட.

அவரது அநுபத்தை உட்செரிப்பதும்,அதன் வாயிலாக நாம்,நமது எதிரிகளைப் பல "தமிழ்ப் படைப்பாளிகள்-போராளிகள்,தமிழ் உணர்வாளர்கள்" எனும் வடிவில் எதிர்கொள்வோமாயின் அவர்களைக் களையகற்றுவதுபோல் அகற்றி, முன் செல்லவே இந்த விமர்சனத்தைத் தமிழரசன் தருகிறார்.

தொடர்ந்து அறிய முற்படுங்கள்.

விசாரிக்கக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக நாம் இருப்பதால் நீங்களும் அதன் வழியில் நடை போடலாமே!

அன்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.07.12

3:

கடந்த இரு பகுதிகளில் நீங்கள் ஓரளவு வரலாற்றியக்கத்தைத் தரிசிக்க முடிந்திருக்கும்.வல்வெட்டித்துறையைக் குறித்து மிக நீண்ட புரிதலும் அவசியமானது.எனவே அதைத் தொடர்ந்து விபரிப்பது அவசியமானது.இன்றைய தலைமுறைக்கு வரலாறு குறித்த புரிலென்பது அவசியமானது.இந்த இளையவர்களைக் காயடித்த காலத்தை நாம் உறுதியாகக் புட்டுவைப்போம்.தொடர்ந்து உள்ளே வாருங்கள்.




வல்வெட்டித்துறைச் சிவன் கோவில் பிரபாகரனின் பூட்டனரான திருமேனிதாஸ் என்பவரால் கட்டப்பட்டது. திருமேனியர் குடும்பம் என்றும் அழைக்கப்பட்ட இவர்களே ஏனைய வல்வெட்டித்துறைக் கோயில்களான மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில்களையும் கட்டினர். இவை இவர்களது பரம்பரைக் கோவில்களாகும். வல்வெட்டித்துறை சிவன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்தவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையாகும். இவர்களே முதன் முதலில் இந்தியாவிலிருந்து கிருபானந்தவாரியாரை அழைத்து சொற்பொழிவு செய்வித்தனர். மீனவர்கள் அல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை வல்வெட்டித்துறையில் இவர்களின் கோவில்களுக்குள் நுழைய முடியாது கோவில் கிணறுகளில் தண்ணீரையும் அள்ளவும் முடியாது. கம்பர் மலையைச் சேர்ந்த புலிகள் அமைப்பில் முக்கிய நபராக இருந்த பண்டிதரோ அல்லது இன்றைய தமிழ்செல்வனோ இந்தக் கோவில்களில் இன்றும் நுழைய முடியாது. புலிகள் ஒடுக்கப்ட்ட மக்களை தம் சொந்த தலைவரின் ஊரில் கோவில்களில் இன்று வரை நுழைய விடவில்லை. வழிபாட்டில் சுதந்திரத்தை மனித சமத்துவத்தை வழங்கவில்லை. இந்த நிலையில் ஊர்ப்பெருமையில் கூட இருந்து விடுபட முடியாத பிரபாகரனை தமிழ் தேசியத்துக்குத் தலைவர் என்று கொண்டாடும் அற்பத்தனங்கள் மேடையேறுகின்றன. பிரபாகரனின் சொந்தக் கிராமம் புஸ்பராசா போன்றவர்களால் புகழப்படும் வல்வெட்டித்துறையின் கோவில்களில் பஞ்சமர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. பள்ளர் சமூகம் உள்ளே விடப்படுவது கிடையாது. பஞ்சமர்களில் கரையார சமூகம் இடம் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்கடத்தல் மூலம் வல்வெட்டித்துறையில் மீனவ சமூகத்தில் ஒரு பிரிவு பொருளாதார ரீதியாக உயாந்தபோது, அயற்கிராமங்களில் உள்ள வேளாள சமூகத்துடன் சாதி ரீதியிலான முரண்பாடுகளைக் குறைத்தது. மேலும் நிலத்தில் உழைக்க வேண்டிய தேவையில்லாத வல்வெட்டித்துறையின் மீன்பிடிச சமூகத்தை, கடல் சார்ந்து வாழ்ந்தவர்களை வல்வெட்டித்துறைக்கு வெளியே நிலங்களையும் விவசாய நிலங்களையும் கொண்டிருந்த வேளாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கள்ளக் கடத்தல் செய்வதன் மூலம் வல்வெட்டித்துறையில் உயர்பிரிவுகள் பருத்தித்துறை உட்பட பல முக்கிய இடங்களில் பெரிய வர்த்தகர்களாகவும், சமூகச் செல்வாக்குள்ள நபர்களாகவும் உருவாகியிருந்தனர். எனவே கிட்டத்தட்ட சமத்துவமான உறவு இரு பிரவுகளுக்கிடையேயும் நிலவியது. கடலில் சுதந்திரமாய் இருந்து செயற்பட்ட வல்வெட்டித்துறை உயர்மட்ட கரையாருக்கும் வேளாளருக்கும் 'முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைப்பது' என்ற அளவுக்கு உறவு இருந்தது (முழங்கையில் பிடித்து விருந்துக்கு அழைத்தால் பிடிக்கும் பிடி வழுக்கி விடும்). 1980களின் பின்னர் இந்தப்போக்குகள்மாறி உயர்மட்டக்கரையார் வேளார்னளிடையே திருமணபந்தங்கள் ஏற்படத்தொடங்கின.

கள்ளக்கடத்தலும் வல்வெட்டித்துறையும்:

வல்வெட்டித்துறையில் வீரம், விடுதலையுணர்வுகளை எழுதியோய்ந்த புஸ்பராசா, அடுத்து அதன் கள்ளக்கடத்தல் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் விவாதங்களை முன்வைக்கிறார். இலங்கை, இந்திய அரசுகள் கடல் கடந்த வாணிபத்தை தடைசெய்து சட்டரீதியாக கட்டுப்படுத்திய போது தான் கள்ளக்கடத்தல் தோன்றியதாய் நியாதிக்கம் தரும் அவர் இலங்கை இந்திய தமிழர்களிடையே தொடர்புகளை இல்லாதொழிக்கவே இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டதாய் புதிய கட்டவிழ்ப்புக்களையும் நடத்துகின்றார். முதலாவதாக, இலங்கை இந்திய சுதந்திரத்திற்கு முன்பான சில போக்குகளை புஸ்பராசா இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த பின்பான போக்குகட்கு எதிராக நிறுத்த முயல்கிறார். இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் அது தனக்குரிய எல்லைப்பாதுகாப்பு, சுங்கவரி சார்ந்த சட்ட விதிகளை கொண்டுள்ளது என்பதுடன் இலங்கையும் இந்தியாவும் சட்டபூர்வமாக கடல் வாணிபம் செய்கின்றன. இதை எப்படி சில வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் முதலாளிகள் தகர்க்க முடியும்? கள்ளக்கடத்தலை தடுப்பது எப்படி இந்திய இலங்கை மக்களுக்கிடையேயான உறவைத் தடுப்பதாகும்? என்று புஸ்பராசா எங்கும் தனது எழுத்தில் விளங்கப்படுத்தவில்லை. வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் சக்திகளுகட்கு இந்திய கள்ளக்கடத்தல் சக்திகளுடன் தொடர்பு இருந்ததே தவிர சாதாரண இலங்கை இந்திய தமிழர்கட்கு இத் தொழிலோடு எந்த கலாச்சார சார்ந்த இனப் பெருமை கொண்ட உறவும் இருக்கவில்லை.

கள்ளத் தோணிகள்:

வல்வெட்டித்துறைக் கள்ளக்கடத்தலை பேசுபவர்களும், அதை சரி என்று வாதிடுபவர்களும் கவனமாக மறைக்கும் விடயம், கள்ளகடத்தலுக்கு முன்னோடியாக இருந்தது கள்ளதோணிகனில் ஆட்களை இந்தியாவிலிருந்து கடத்தி வந்து விற்பதாகும். இது ஒருவகை அடிமை வியாபாரமாகும். தமிழர்களை தமிழர்களே கடத்தி வந்து விற்பதாகும். தமிழக ஏழைத்தமிழர்களை விற்பனை செய்வதை புஸ்பராசா இரு நாடுகட்குமான கலாச்சார பாலமாக இந்தியா வாழ் இலங்கை தமிழர்களுக்கிடையேயான உறவாக விளங்கப்படுத்துவர் போலும். 1950 களில் தொடங்கி 1960 வரையிலான கால கட்டத்தில் இலங்கை ஒப்பிட்டு ரீதியில் இந்தியாவை விட உயர்வான பொருளாதார நிலைமைகளைக் கொண்டிருந்தது. இந்தியா பொருளாதார நெருக்கடிக்களையும், பசி, பட்டினியையும் அனுபவித்துக் கொண்டிருந்தது. இதனால் பல பத்தாயிரம் இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த ஏழை மனிதர்கள் இலங்கையினால் ஈர்க்கப்பட்டனர். அக்கால கட்டத்தில் வல்வெட்டித்துறையில் கடத்தல் படகுகள் இரண்டு மூன்று என்று ஒன்று கூடி தமிழ்நாட்டில் இருந்து படகுக்கு 20, 25 பேர் என்ற அளவில் ஆட்களை கடத்தி வந்தன. இவர்களே கள்ளத்தோணிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆட்களை கடத்தி வரும்போது கடத்தல்காரர்கள் கடற்படையினரைக் கண்டால் அல்லது கரைகளில் இராணுவத்தையோ பொலிசையோ கண்டால் கடலில் ஆட்களை கவிழ்த்து விட்டு தப்பி ஓடி விடுவார்கள். இப்படி பிழைப்புத் தேடி இலங்கை வர முயன்ற ஆயிரக்கணக்கான இந்தியாவின் பஞ்சப்பட்ட மனிதர்கள் பாக்கு நீரிணைக் கடலடியில் உயிரோடு புதையுண்டு போயினர். இப்படி பல நுhறு மனிதர்கள் கதைகள் எழுதப்படாத இலக்கியங்களாக வாழ்கின்றன. இப்படி கடலில் இறந்த கள்ளத்தோணி மனிதர்களின் உடல்கள் கடற்கரையில் அநாதைப்பிணங்களாக ஒதுங்குவது சாதாரணமாக பத்திரிகைகளில் அனேகமாக இடம் பெறுவதில்லை.






கள்ளத்தோணிகளில் கொண்டு வரப்படுபவர்களை வாங்கிச் செல்லவதற்காக யாழ்ப்பாணம், கொழும்ப வன்னிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வருவார்கள் இந்தக் கள்ளத்தோணி மனிதர்களை 100, 200, 500 என்று நிலைமைக்கு தகுந்தபடி விற்கப்படுவார்கள். இப்படி வாங்கப்படும் மனிதர்கள் கடைகள், களஞ்சியங்கள், தோட்டங்கள், வீட்டுவெலை, உணவுவிடுதிகள் என்று வேலைகளில் ஈடுபடுத்தப்படவார்கள் வாங்கியவரின் கடன்காசு தீரும் வரை பல வாங்கிய முதலாளியின் விருப்புக்குகேற்ப இந்த மனிதர்கள் வருடக்கணக்கிலும் பல சமயங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன் பின்பே இந்த மனிதர்கள் சுதந்திரமாக உழைத்துப் பிழைத்து இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களுக்கோ பிள்ளை குட்டிகளுக்கோ பணம் சேர்க்க முடியும். அதுவும் பொலிஸ், காட்டிக் கொடுப்போரென்ற கெடுபிடிகளுக்கும் அஞ்சியே இவர்கள் வாழந்து உழைத்தனர். இப்படிக் கள்ளத்தோணியில் கொண்டு வரப்படுபவர்கள் வருடக்கணக்கில் சாப்பாடு மட்டும் கொடுத்து உழைப்பித்த சம்பவங்களும் அடித்து, உதைத்து, அடிமை போல் வேலை வாங்கிய கதைகளும் வருடக் கணக்கில் உழைத்துவிட்டு காசு கேட்ட போது பொலிசில் காட்டிக் கொடுப்பது, கொலை செய்வது, அடி போட்டுக் கலைப்பது என்பன கூட சாதாரணமாக இருந்தது. இக்காலத்தில் வன்னிப் பகுதிகளில் காடு வெட்டுவதிலும் அருவி வெட்டுதல், கிணறு வெட்டுதல், மாடு வளர்ப்பு, தோட்டவேலைகளைச்செய்ய கள்ளத் தோணியில் கொண்டு வரப்பபட்ட இந்த மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். நெடுங்கேணியில் தேத்தண்ணிக்கடையில் வேலைசெய்த 'வடக்கத்தையான்' போட்ட தேத்தண்ணியில் இலையான் இருந்தது என்பதற்காக அவன் அடித்துக்கொல்லப்பட்டு காட்டுக்குள் வீசப்பட்டான். கழு அல்பேட் மற்றும் ஒரு யானைததீப்பெட்டி புகழ் ஜி.ஜி.பொன்னம்பலம் கொலையாளிக்காக நீதிமன்றத்தில் வாதாடி கொலையாளியை விடுதலை செய்த கதை பிரபல்யமானது. இக்காலத்தில் இந்த அநாதரவான மனிதர்கள் மடடுமல்ல, சாதாரணமாக வாழ்ந்த ஏனைய இந்திய வம்சாவளிமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கள்ளத்தோணிகள் என்று நையாண்டியாக அழைக்ப்பட்டனர். பிடிபடும் கள்ளத் தோணிகள் பொலிசாரால் துன்புறுத்தப்பட்டதுடன் அவர்கட்கு வாதாட சட்டத்தரணிகளும் கிட்டவில்லை. தமிழர்கட்காகவே அவதாரம் எடுத்ததாகச் சொன்ன தமிழரசுக் கட்சியினர் இந்தக் கள்ளத்தோணிகட்காக வாதாடியது கிடையாது. மாறாக கடத்தல்காரர்களை மீட்க தமிழரசுக் கட்சியில் சட்டதரணிகள் தாரளமாக இருந்தனர். கள்ளத்தோணிகளை அடைத்து வைக்க கொழும்பு கொம்பனித்தெருவில் தனிமுகாம் இருந்தது. இங்கு வருடக்கணக்கில் இந்த மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.

வல்வெடடித்துறையில் தொடங்கிய கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துவது ஏனைய கரையோரக் கிராமங்களான பருத்தித்துறை, மயிலிட்டி, மாதகல்வரை பரவியது. இந்த இடங்களிலும் வல்வெட்டித்துறை ஆட்களே தமது ஆட்களை வைத்து இந்தியாவிலிருந்து ஆட்களை கடத்தி வந்தனர். இத்தொழில் கள்ளத்தோணிகளைக் கடத்தி வருவது, விற்பனை, தரகர்கள், வியாபாரிகள் கார்ச்சாரதிகள் என்ற பெரும் வலைப்பின்னலைக் கொண்டிருந்தது. கள்ளத் தோணியில் கொண்டு வருபவர்களை இராணுவம், பொலிசாரிடம் அகப்படாமல் பாதுகாப்பான இடங்கட்கு கொண்டு செல்ல இரவிரவாக ஏ போட்டி சோமுசெட் கார்கள் ஓடும். இக்காலத்திலேயே அதிக பொலிஸ் இராணுவ முகாம்கள் கடற்படை என்பன வல்வெட்டித்துறைப் பகுதியில் அரச கண்காணிபபுக்கள் பெருகத் தொடங்கின. குடா நாட்டின் கடற்கரையோரக் கிராமங்களில் அரசபடைகள் நுழைவது தொடங்கியது. இலங்கையில் கள்ளத் தோணி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ், தமிழினப் பெருமை பேசுவோர் அன்று சொந்த தமிழர்களை கடத்தி வந்து இலங்கையில் விற்றுத்தான் பெரும் செல்வம் திரட்டினர். அதையே தொழிலாகச் செய்தனர். சில சமயங்களில் இந்தக் கள்ளத்தோணித் தமிழர்கள் தென்னிலங்கைக்கு சிங்களவர்கட்கும் விற்று பணமாக்கப்பட்டனர். இவ்வாறாக தென்னிலங்கைக்கு கள்ளத்தோணித் தமிழர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே முதன்முதலில் ஆனையிறவு இராணுவமுகாம் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இம்மனிதர்கள் புதிய நிலைமைகளில் ஆதரவற்றவர்களாக சுயமாக இயங்க முடியாதவர்களாக கட்டளைகளை மீற முடியாதவர்களாக மனித இழிவுகளை சகிக்க கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக பிறவிகளாக இருந்தனர். எந்தத் தமிழ் பெருமை பேசம் பொய்யர்களும் இந்தக் கள்ளத் தோணி தமிழர்களுகட்கு இரங்கவில்லை. மனிதப்பிறப்பாக பொருட்படுத்தப்படவில்லை தமிழ் கட்சிகள் இந்த மனிதர்களை பொருட்படுத்தவில்லை. கள்ளத் தோணிகள் வராமல் தடுப்பது பற்றி பேசிக் கொண்டே மனிதர்களை கடத்துபவர்கள், கடத்தி பணம் சேர்த்தவர்கட்காக அவர்கள் வாதிட்டனர்.

இத்தகைய மனிதக் கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் தான் வல்வெட்டித்துறை கடத்தல் துறையில் நுழைந்தது, பிரபல்யமானது, செல்வம் தேடிக் கொண்டது. கடத்தலின் ஆரம்பம் இந்தியாவிலிருந்து தமிழர்களை தமிழர்களே கடத்தும் விற்பனை செய்யும் வியாபாரம் தான். இது சராசரி 1968, 1970 களில் உலகப் பொருளாதார நெருக்கடிகள்> டொலர் நாணய வீழ்ச்சி என்பன இலங்கையின் விலைவாசி உயர்வு பொருளாதாரவீழ்ச்சி என்பவற்றை ஊக்கப்படுத்தியது. வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலைமையில் இலங்கைக்கான கள்ளத்தோணி வரவு வீழ்ச்சி காணத் தொடங்கியது. மனிதர்களை கடத்துவது பொருளாதார ரீதியாக பயன்பாட்டுடைய தொழிலாக இருக்கவில்லை. அதே சமயம் வல்வெட்டித்துறை தனது மரபான மீன்பிடித் தொழிலுக்கு திரும்ப செல்லவில்லை. மீன்பிடி பிராதன தொழில் என்ற கவர்ச்சியை முன்னிலையை அடையவில்லை. போதியளவு வருவாய் ஈட்டும் தொழிலாகவும் இருக்கவில்லை. எனவே வழக்கமான கடத்தல் கள்ளத் தோணி உழைப்பில் ஈடுபட்ட்வர்கள் வசதி படைத்தவர்கள் பொருட்கடத்தலில் ஈடுபடத் தொடங்கினர். வல்வெட்டித்துறை, திக்கம், சக்கோன், பருத்தித்துறை போன்ற இடங்களில் புதிய கடத்தல் மையங்கள் தீவிரமாய் உருவாகின. இதன் எதிரொலியாக அரசாங்கம் புதிய பொலிஸ் இராணுவ நிலையங்களை அமைத்தது. கடற்படைமுகாம்கள் திறக்கப்பட்டது. கள்ளக்கடத்தலைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கள்ளக்கடத்தல்காரர்கள் இலங்கையிலிருந்து சாதிக்காய், கராம்பு, பாக்கு, பாதரசம், மருந்துகள், லக்ஸ்சோப், நைலோன் துணிகள், ரான்சிஸ்டர் ரேடியோ கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் சேலை, சாரம் திருமணப்பட்டுப்புடவைகள், அபின், தங்கம், பருப்பு, மஞ்சள் என்பன கடத்தப்பட்டன. கடத்தப்படும் பொருட்கள் குடா நாட்டிற்குள் மட்டுமல்ல வன்னி முதல் கொழும்பு வரை கொண்டு செல்லப்பட்டது. 1970 ஆண்டுகளில் இலங்கையில் இடதுசாரிக் கூட்டரசாங்கம் ஏற்பட்டு உள்ளுர் விவசாய முயற்சிகளும் உற்பத்தியும் ஊக்கம் பெற்றது. சுயசார்ப்பு பொருளாதாரம் வளர்ந்தது. 1972 இல் இலங்கை அரசு அந்நியப்பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. இதன் மூலம் உள்ளுர் தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி யடைந்தன. விவசாய முயற்சிகள், இளைஞர் குடியேற்றத்திட்டங்கள் பெருகின. இந்தியாவிலிருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உழுந்து, பயறு, பருப்புவகைகள் என்பன வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டது. கோவா, லீக்ஸ், கரட் உட்பட வெளிநாட்டு காய்கறி வகைகளும் உற்பத்தியாகி பெருமளவில் சந்தைக்கு வரத் தொடங்கியது. செத்தல் மிளகாய் உற்பத்தி புதிய வேகம் பெற்றது. செத்தல் மிளகாய் பயிர் செய்த பல விவசாயிகள் நிறைய இலாபம் பெறும்காலம் தொடங்கியது. இலங்கையில் கூட்டுறவுத்துறை வேகமாக வளர்ந்தது. யாழப்;பாண மாவட்டத்திலும் கூட்டுறவுச்சங்கங்கள் சிறப்பாய் வளர்ச்சி பெற்றன. சங்கானை பண்டத்தரிப்பு போன்ற ப.நோ.கூ சங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு வளாந்ததுடன் வெளிநாட்டுத் துணிகளின் தரத்தை எட்டத்தக்க செயற்கை நூலிழையிலான துணிகளையும் தராளமாய் உற்பத்தி செய்தன. பண்டதரிப்பு ப.நோ.கூ சங்கம் 'பண்ட்கோப்' என்ற பெயரில் பலவித பொருட்களை உற்பத்தி செய்து விற்றது. கூட்டுறவுத்துறையில் உற்பத்திப் பொருட்கள் வெளிநாட்டு ஏற்றுமதி மட்டத்திற்கு சென்றன. பெருந்தொகையானவர்கள் இங்கு வேலை செய்தனர் வரலாற்றில் முதன் முறையாக யாழ்குடா பெருமளவு உற்பத்தியை செய்தது. விவசாயிகட்கு உற்பத்திப் பொருட்களுக்குரிய விலை கிடைத்தது. பலர் விவசாய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டனர். படித்த வாலிபருக்கான முத்தையன்கட்டு போன்ற குடியேற்றத்திட்டங்கள் பெரும் தொகையான குடாநாட்டு இளைஞர்கள் ஊக்கத்துடன் குடியேறத் தொடங்கினர். நம்பிக்கையோடு விவசாய முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கட்டத்தில் தான் வல்வெட்டித்துறையில் மற்றும் வடக்கின் கடற்கரை சார்ந்த பிரதேசங்களில் கள்ளக்கடத்தல் விரைவாகப் பெருகி வளர்ந்தது. இவை இந்தியாவிலிருந்து பொருட்கள் கடத்தி வந்ததின் மூலம் இலங்கையில் முக்கியமாக தமிழ்மக்களது உள்ளுர் உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியின் முன்பு உள்ளுர் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. முக்கியமாக இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஆடை உற்பத்தியுடன் துறையுடன் இலங்கையினதும் தமிழ் பகுதிகளதும் உற்பத்திக்கு போட்டிநிலைக்கு தள்ளப்பட்டது. கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்தியாசசாரங்களுடன் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சாரங்களால் போட்டி நிலையில் நின்று பிடிக்க முடியவில்லை. உண்மையில் கள்ளக்கடத்தலானது நேரடியாக தமிழ் மக்களின் சுய பொருளாதார வளர்ச்சியை சேதப்படுத்தியது. இடதுசாரிக் கூட்டரசாங்கம் கள்ளக்கடத்தலை ஒழிக்க முயன்றது அதை தடுக்குமுகமாக இராணுவம் மற்றும் கடற்படைகளின் தொகைகளை அதிகரித்தது. கடற்கரைகளில் நீண்ட தூரம் கண்காணிக்க் கூடிய 'சேர்ச்லைற்' கள் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறாக வல்வெட்டித்துறையின் சட்ட விரோதப் பொருளாதாரத்தை கறுப்புச்சந்தை வட்டத்தை உடைக்க அரசு முயன்றது.

எனவேதான் கள்ளத்தோணியில் ஆட்களைக் கடத்துதல்> கள்ளக்கடத்தல் போன்றவற்றிற்கு எதிரான இலங்கை பொலிஸ், இராணுவம், கடற்படை என்பவற்றிற்கு எதிர்ப்புக்கு காட்டுவதிலே தான் மோதலில் ஈடுபடுவதில் தான் அரசு எதிர்ப்பு தொடங்குகிறது. வல்வெட்டித்துறை எனும் முழுக்கிராமுமே கள்ளக் கடத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடையதாக இருந்தது. இலாபம் மீட்டும் கிராமாக இருந்தது. இவர்கள் அரசபடைகளை சிங்களவர்கள் என்றே அழைத்தனர். இதனூடு சிங்களவர்கள் வல்வெட்டித்துறை மக்களை வாழவிடாமல் தடுப்பததான கருத்தியல் உருவாக்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல வசாவிளான், மாதகல், காங்கேசன்துறை, மயிலிட்டி, பருத்தித்துறை போன்ற கடத்தலோடு தொடர்புடைய இடங்களிலும் அரசபடைகட்கு எதிர்ப்பு இருந்தது. அரசபடைகளை எதிர்ப்பது என்பது இவர்களது பொதுப்பண்பாக இருந்தது. இது தமிழர், சிங்களவர் முரண்பாடாக பல இடங்களில் விளக்கமளிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை போன்று உரும்பிராயிலும் அரச எதிர்ப்பு இருந்தது. உரும்பிராயில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வழக்கமாக இருந்தது. வடபகுதியில் உரும்பிராய் கள்ளச்சாரயத்துக்குப் புகழ் பெற்றது. மக்களின் வாழ்வு இத் தொழிலுடன் பின்னப்பட்டு இருந்தது. விவசாயத்தைவிட இது அதிக வருவாயையும் சிரமம் குறைவான தொழிலாகவும் இருந்தமையால் பலர் இத்தொழிலுக்குப் போனார்கள். நல்ல சந்தையும் இருந்தமையால் இத் தொழில் பெருகியது. உரும்பிராய் சட்டவிரோத சாராய உற்பத்தியின் மையமாய் மாறியமையால் பொலிஸ் சோதனை, அடியுதை, லஞ்சம், கைது, சிறை என்பன அங்கு சாதாரணமாக இருந்தது. பொலிஸ் தொந்தரவு என்பது அங்கு ஒரு நிரந்தரமான ஒன்றாக இருந்தது. இதே நிலைமையே வல்வெட்டித்துறைப் பகுதியில் இன்னும் மூர்க்கமான நிலைமையில் இருந்தது. சட்டவிரோத பொருளாதாரம் சட்டவிரோத வாழ்வு என்பன அரசை எதிர்ப்பதைக் கட்டாய நிபந்தனையாக்கியது. அரசபடைகளை எதிர்க்கும் பண்பாக மாற்றமடைந்தது. இதை தமிழின உணர்வாக கற்பிப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகும்.

இதையே புஸ்பராசா வல்வெட்டித்துறையை வீரத்தமிழன் விளைநிலம் என்று பாடம் புகட்டுகின்றார் கடத்தல் தொழிலானது கூட்டமாய் சேர்ந்து வாழும் பண்பை கூடி நிற்பதை கட்டாயமாக்கியது. அடிபிடியும் துணிச்சலும் சாகத்தன்மையும் கொண்ட வாழும் நிலைமைய படைத்தது. பொலிசை, இராணுவத்தை எதிர்த்து போரிட்ட, தப்பிவந்த, ஏமாற்றிய கதைகள் வீரக் கதையாகியது. வல்வெட்டித்துறையில் உள்ள செல்வந்தர்கள், முதலாளிகள் தமது வள்ளங்களை கடத்தலில் ஈடுபடுத்தினர். சொந்தமாயும் கூலிக்கும் ஆட்கள் வைத்து தொழில் செய்தனர். இவர்கள் மயிலிட்டி தக்கம், சக்கோட்டை, காரைநகார், பருத்தித்துறை, நெடுந்தீவு வரை ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் இலங்கைக் கடற்கரைகளில் மட்டுமல்ல இந்திய தமிழ் நாட்டு கடற்கரைகளிலும் சுங்கப்பகுதி பொலிஸ் போன்றவை சார்ந்த ஆபத்துக்களை எதிர்நோக்கினர். இவர்களது கடத்தல் பொருட்கள் கொள்ளையிடப்படுவதும் அங்கு நடைபெற்றது. அபின், தங்கம், வெடி மருந்து பொருட்கள் போன்றவை சார்ந்த கடத்தல் சிரமமான ஆபத்தான நடவடிக்கையாக இருந்தது. இலங்கையில் இவர்கட்கு கார் சராதிகள், ஏஜண்டுகள், புறொக்கர்கள், தகவல் தருவோர், பொருள் தூக்குவோர், ஓட்டிகள் என்று பலர் இருந்தது போல தமிழ் நாட்டிலும் கடத்தல் சார்ந்த ஒரு வலைப்பின்னல் இயங்கியது. கடத்தல் ஈடுபட்டவர்கட்கு தமிழ் நாட்டில் பெண்கள், மனைவி, குழந்தைகள் கூட இருந்தனர். இலங்கை தமிழ் நாடு என்று இரண்டு பக்கமும் மனைவி, குழந்தைகளைக் கொண்டிருந்தவர்களும் இருந்தனர். உதாரணமாக TELO தங்கத்துரையின் மனைவி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்; ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் வல்வெட்டித்துறை நபருக்கும் மகளாகப் பிறந்தவர். தங்கத்துரையின் தமக்கை வல்வெட்டித்துறையுடன் தொடர்புடைய ஒருவரையே தமிழ் நாட்டில் திருமணம் செய்திருந்தார்.

கள்ளகடத்தல்காரர்களிடையே போட்டியும் ஒருவரையொருவர் கடலில் கொள்ளையிடுவதும் சாதாரணமாக இருந்தது. வள்ளத்தின் ஓட்டியைக் கொன்று அல்லது ஓட்டிக்குப் பணம் கொடுத்து பொருட்களை அபகரிப்பது, சூறையாடுவது கள்ளக்கடத்தலுடன் ஒட்டிப் பிறந்த அம்சமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் மற்றவர்களின் கடத்தல் பொருட்களை கொள்ளையிடுவதை 'கோட்டா அடித்தல்' என்று கூறுவார்கள். கடத்தல் பொருட்களை படகுகளிலிருந்து இறக்கும் வேலைக்கு பள்ளிமாணவர்கள் கூடச் சென்று பணம் உழைப்பார்கள். இதை 'தூக்குக்குபோதல்' என்று சொல்லப்படும். கள்ளக்கடத்தல் மோசமான தொழிலாக இலங்கை மக்களது சுயபொருளாதார வாழ்வு முயற்சிக்கு எதிரானதாக கருதப்படவில்லை. வல்வெட்டித்துறையில் கள்ளக்கடத்தல் சிறப்பான தொழிலாக கருதப்பட்டது. இது ஒரு போதும் தவறான தொழிலாக எண்ணபட்டதில்லை. கடத்தல் சார்ந்த சட்டவிரோத வாழ்வை நியாப்படுத்தும் போக்குகள் உருவாகின. அதுவே வாழும் தர்மமும் ஆகியது. வன்முறைகள் பிரதான அம்சமாக இருந்தது. கத்தி, வாள், திருக்கைவாள், துவக்கு, குண்டு என்பவற்றுடன் ஒரு சட்டவிரோதப் பொருளாதாரம் வல்வெட்டித்துறை மக்கள் மயமாகியது. சட்டவிரோதமாய் குவிந்த பணம் - பெரும் செல்வம் - அயற்கிராமங்கள் மேல் செல்வாக்கு செலுத்தும் போக்காய் மாறியது.

கள்ளக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீன்பிடித்தொழிலை மிகவும் இழிவான தொழிலாகக் கருதினர். இவர்கள் மீன்பிடித்தொழிலி ஈடுபட்டிருந்தவர்களை மதிக்கவில்லை; பொருளாதார ரீதியாக இவர்கள் உயர்நிலையில் இருந்தனர்; கெளரவமாய் மதிக்கப்பட்டனர்; கடத்தல்காரர்களுக்கு பெண் கொடுக்க எடுக்க போட்டி இருந்தது; சாதாரண மீன்பிடித்தொழிலாளர்களுடன் கள்ளக்கடத்தல்காரர்கள் பழக மாட்டார்கள், கொடுக்கல் வாங்கல் செய்யமாட்டார்கள், அவர்களை சபை சந்திக்கு அழைக்க மாட்டார்கள். இவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி, அரசசேவைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட போதும் கள்ளக்கடத்தலுடனான தொடர்பும் மறுபுறம் நிலவியது. வல்வெட்டித்துறையில் இதனால் செல்வம் திரட்டியவர்கள் வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல பருத்தித்துறை உட்பட பல இடங்களில் காணிகள், வீடுகள், வியாபார தாபனங்களை கொண்டிருந்தனர். பெருந்தொகை பணம், போட்டி, அரசியல் செல்வாக்கு இவைகளினூடாக சாராயத்தவறணைக் குத்தகைகள் இவர்களால் எடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பெரும் காசுக்காரர்களே சாராயத்தவறணையைக் குத்தகைக்கு எடுக்கப் போட்டியிட்டனர். யாழ்ப்பாணத்தில் புடவைக்கடை முதல் நகைக்கடைகள் வரை இவர்கள் கொண்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தில் பரிய நகைக்கடையான வைரமாளிகை வல்வெட்டித்துறையைச் செர்ந்தவர்களுக்கு உரியதாகும். நீச்சல் வீரரான 'ஆழிக்குமரன் ஆனந்தனின்' தந்தையார் விவேகானந்தன் கள்ளக்கடத்தலோடு தொடர்புடையவரே. வல்வெட்டித்துறையின் கள்ளக்கடத்தல் முதலாளியான சுப்பரமணியம் என்பவர் 1960 களின் நடுப்பகுதியில் ' சுபசரணசப்தகித்த' என்ற சிங்கள சினிமா படத்தை தயாரித்தவர். வல்வெட்டித்துறை ' ரஞ்சனா' தியேட்டர் 'பக்கர்' என்ற பட்டப்பெயரை கொண்ட கள்ளக்கடத்தல் பணக்காரரால் தான் கட்டப்பட்டது.

வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவம், கடற்படை மட்டும் வெறுக்கப்படவில்லை அயற்கிராமத்தவர்கள், அந்நியர்கள், கிராமத்திற்குப் புதிதாக வருபவர்கள் வல்வெட்டித்துறையில் இலேசாக நுழைந்துவிட முடியாது. வல்வெட்டித்துறைக்கு புதியவர்கள் கிட்டத்தட்ட முழுக்கிராமத்தாலும் கண்காணிக்கப்பட்டனர். கள்ளக்கடத்தலின் பின்பே வல்வெட்டித்துறை பயமூட்டும் கிராமமாக மாறியது. சூழவுள்ள கிராம மக்கள் கூட வல்வெட்டித்துறைக்கு போய் வர பயந்தனர். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் அடியுதை போட்டுக் கலைக்கப்பட்டு விடுவார்கள். வல்வெட்டித்துறையில் புதியவர் ஒருவர் தென்பட்டால் ஏன் வந்தாய்? எதுக்கு வந்தாய்? ஆரிட்டைப் போய்விட்டு வாறாய்? என விசாரணைகள் நடப்பது சாதாரண விடயம் அயற்கிராமங்கள் வல்வெட்டித்துறையாருடன் பகைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகள், பந்து விளையாட்டு என்று வல்வெட்டித்துறைக்குப் போய் சாத்து வாங்கிக் கொண்டு வருவது மிகவும் சாதாரண விடயமாகும்.

தொடரும்...

தமிழரசன்
பேர்ளின்.


Donnerstag, Juli 19, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் -- நூல் விமர்சனம்பகுதி:2

2:

இலங்கைத் தமிழ் மக்களை படுகொலை செய்த இந்திய இராணுவத்தின் கப்பல், ஹெலி, ஜீப்புக்களில் பயணிக்க, ஊர் சுற்றிப் பார்க்க புஸ்பராசாவுக்கு எந்த மன நெருடலும் வரவில்லை. இந்தியபடையினரின் கப்பலில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ய நேர்ந்த போது படுக்கை, உணவு இவைகட்காக தான் பட்ட சிரமமே இவருக்கு பெரிதாக தெரிகிறது. இவைகளை ஒரு மேற்குலகம் சார்ந்த உயர்வர்க்கக் கனவான்களின் மனநிலையோடு புஸ்பராசா எழுதுகின்றார். நாகரீகமும், உயர்ந்த வாழ்க்கை முறையும், செல்வச்செழிப்பும் கொண்ட பிரான்சு தேசத்திலிருந்து கருணை கூர்ந்து இலங்கை சென்ற தனக்கு இத்தகைய இடர்கள் ஏற்பட்டதை எண்ணியெண்ணி அவர் அடைந்த வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. இலங்கை பொலிஸ், இராணுவம் இவர்களிடம் தான் பட்ட சித்திரவதைகளை பெருமளவு நேர்மையோடு எழுதியுள்ள இவர் நாலாவது மாடிகளையும், இராணுவமுகாம்களையும் மிஞ்சவல்ல தூசாகக் கருதக் கூடிய தமிழ் இயக்கங்களின் படுகொலைககள், வதை முகாம்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். பார்த்திருந்தால் சித்திரவதைக்கு பெயர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியான்பிள்ளை போன்றவர்கள் மிகவும் அற்பமாய், சாதாரண புழு பூச்சியாய்த் தென்பட்டிருப்பார்கள். தமிழ் இயக்கங்களின் குரூரமான கொலையாளிகளை விட நல்ல மனிதர்களாக கண்டறியப்பட்டிருப்பார்கள். இலங்கை அரசின் வன்முறையை விட புலிகளின் பயங்கரவாதம் மோசமானது, எந்த மனித நெறிகட்கும் சட்டவிதிகட்கும் உட்படாதது. புலி அடிக்குமுன் கிலி அடிக்கும் என்பதற்கேற்ப புஸ்பராசா பரிபூரண எச்சரிக்கையுடனேயே புலிகளை நெருங்கியுள்ளார். வன்னியுட்பட பிரபாகரன் செங்கோலாட்சி செலுத்தும் பிரதேசங்களில் புஸ்பராசாவின் நூல் தடை செய்யப்படவில்லை என்பதையும் EPRLF இனரோ கூட்டணியினரோ இவரது எழுத்தை விமர்சிக்கவில்லை என்பதையும் நோக்கும் போது புஸ்பராசா எத்தகைய எழுத்தைப் படைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அரசியலை மதிப்பவர்களின் நன்மதிப்பை புஸ்பராசாவினால் ஈட்ட முடியாது. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் வெளிவந்த போது பிரான்சில் அதன் மேலான விமர்சன முயற்சிகள் எழுந்த போது புஸ்பராசா அவைகளை கடுமையாக எதிர்த்தவர். தன் கருத்தை இடைமறித்துப் பேசுபவர்களை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடியவரல்ல. தன் எழுத்து மீது அதிருப்தியை வெளியிட்டவர்களை அவர் மன்னித்தவருமல்ல. தன் கருத்தை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது என்ற போக்குகட்டு புஸ்பராசா பழக்கப்படாதவர். விமர்சனம செய்வது அவரைப் பொறுத்த வரை அவர் மேலான பிழைகண்டு பிடிப்பு, நொட்டைச் சொல்லல். புஸ்பராசா சராசரி ஜனநாயக ரீதியிலான கருத்து மாறுபடுகளைக் கூட சகித்ததில்லை. அவரது விசாலமற்ற சிந்தனையுள் இவைகட்கு இடமில்லை. வடக்கு கிழக்கு மக்களின் புவியியல் கலாச்சார வேறுபாடுகளை பேசாவிட்டாலும் பரவாயில்லை, தனது சொந்த ஊர், வாழ்ந்த கிராமம் பற்றிய சமூகவியல் நிலை, தான் விளைந்த சூழல் என்பன பற்றிய அறிமுகங்ளைக் கூட அவர் சொல்லவில்லை. சூழல் பற்றிய கவனமில்லாத மனிதரான புஸ்பராசா தமிழ்மக்கள் ஆளுமையோடு சொல்ல முடியாது போனது அதிசயமல்ல. 'இடுப்பு முறிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்' என்பது போல வலதுசாரி சிந்தனையாளரான புஸ்பராசாவிற்கு தமிழ் தேசியத்தில் முத்தியடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

புஸ்பராசா ஐரோப்பிய இலக்கியசந்திப்புக் குழுவுடன் நீண்டகாலம் தொடர்புடையவர். அதனூடாகவே அவர் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர். அதில் அவர் அநேகமான நண்பர்களைக் கொண்டிருந்தார் எனினும் அவை பற்றிய எந்தத் தகவலும் அவரது நூலில் புகலிடம்சார்ந்த விபரிப்புகளில் இடம் பெறவில்லை. புஸ்பராசாவின் அரசியல் இலக்கிய தோழரான புலிகளால் கொல்லப்பட்ட திரு.சபாலிங்கம் போதிய முக்கியத்துவத்தை இந்நூலில் பெறவில்லை. சபாலிங்கமும் புஸ்பராசாவும் இணைந்து ஈழப்போராட்டம் பற்றிய நுhல் எழுதி வருவதாய் சொல்லப்பட்ட சமயமே சபாலிங்கம் புலிகளால் பாரிசில் வைத்துக் கொல்லப்பட்டார். பழைய போராளியான சபாலிங்கம் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை எழுத முயன்றமைக்காகவே சுடப்பட்டதாய் இலக்கிய சந்திப்பு நண்பர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர் இன்னமும் பேசிவருகின்றனர். சபாலிங்கம் புஸ்பராசா இருவரும் இணைந்து எழுதிய நூலே இப்போது புஸ்பராசாவின் பெயரில் வெளிவருவதாய் இப்போதும் பல இலக்கிய சந்திப்பு நண்பர்களிடம் கதையடிபடுகின்றது. இவைகளை நாம் எதிர்கால விமர்சகர்கட்கு தொடர்ந்து ஆய்வு செய்யும்படி விட்டுவிடலாம்.

புஸ்பராசா அவர்களின் பார்வையில் பிரபாகரன்

விரக்தியுற்று கெட்டு நொந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு பிரபாகரனை "தம்பி" என்று அழைத்து ஆற்றல்மிக்க தலைவர் என்று எமக்கு புஸ்பராசா அறிமுகமும் செய்து வைக்கின்றார். 'பிரபாகரன் என்ற மனிதர் இல்லாவிட்டால் புலிகள் இயக்கம் இப்படி இராணுவ, உளவுத்துறை நிர்வாக அறிவுகளைக் கொண்டதாக வளர்ந்திருக்க முடியாது' என அவரது எழுத்து அத்தாட்சி தருகின்றது. புஸ்பராசா தான் சகல இயக்கங்களையும் கடந்த பொது மனிதராக, அரசியல் ஆய்வாளராகத் தோற்றம் காட்டிக் கொண்டே புலிகள் பற்றிய எத்தகைய மனப்பதிவை எம்மிடம் எற்படுத்த முயற்சிக்கின்றார்? அவர் தன்னோடு வாழந்து போராடி மரணமடைந்த புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்களை எல்லாம் எப்படி மறந்து போனார். புஸ்பராசா மிகவும் மதித்த திரு.அமிர்தலிங்கத்தை, இவர் அங்கம் வகித்த EPRLF இன் தலைவர் தோழர் பத்மநாபாவை, பாரிசில் இவரது நெருங்கிய நண்பர் சபாலிங்கத்தை இப்படி பல ஆயிரம் பேரை எதிர்கருத்துடையவர்களைக் கொன்றொழித்த தேசியத் தலைவரை எப்படிப் பாராட்ட முடிகின்றது? புலிகளின் இராணுவம் உளவுப்படைகள் ஒரு பாசிச அடிப்படையில் கட்டப்பட்ட கொலை இயந்திரங்கள், சொந்த தமிழ் மக்களை அவர்கள் மத்தியிலான ஜனநாயக முறைகளைக் கூட சிதைத்தழித்தவை என்ற உண்மையை புஸ்பராசாவின் பாராட்டுக்கள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.? பாசிஸ்ட்டுக்களின் நல்ல பண்புகளை, இனிய குணாம்திசயங்களை, வீர இயல்புகளை தேடுபவர் எத்தகைய அரசியல் மதி கொண்டவராக இருப்பார்? புலிகளை பாசிச இயக்கம் என்று பிரகடனப்படுத்த வெட்கப்படுபவர்கள், தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிகட்கு பொது மன்னிப்புத் தருவபவர்களும் பாசிச கலாச்சராத்தை வளர்ப்பவர்களே! அதை ஊக்குவிப்பவர்களே!! நாளைய வரலாற்று விசாரணைகளில் புஸ்பராசாவும் குற்றறவாளியாக கூண்டிலேற வேண்டி வரும்.

புஸ்பராசா அண்ணன் அமிர்தலிஙகம் அரசுகட்டிலில் வீற்றிருந்த காலததில் அவரை அண்டி நின்றார். பின்பு EPRLF ஆட்சியில் பத்மநாபாவுக்கு நெருக்கமானவர். இப்போ மலர்ந்துள்ள புலிகளின் ஆட்சியில் பிரபாகரன் மேல் மையல் கொள்கின்றார். ஆக புஸ்பராசாவை எல்லாக் காலத்திலும் பயிர் செய்யக்கூடியவர், அதிகாரத்தின் நிழலில் கூடி நின்று ஆதாயம் பெறக் கூடியவர் என்று நாம் நம்ப போதிய தரவுகள் உள்ளன. புஸ்பராசா பிரமிக்கும் புலிகளின் இராணுவ உளவு அமைப்புக்கள் எத்தகையவை? மக்களுக்கு இவற்றோடு உள்ள பங்கும் உறவும் எத்தகையது? என நாம் விசாரிக்க வேண்டியுள்ளது. புலிகளின் பாசிச இராணுவவாதம் தற்கொலையை போற்றியது மரணத்தையும் சுயஅழிவையும் வழிபாட்டுக்குரியதாக ஆக்கினார்கள். மரணத்திற்குப் பின்னரான மாவீரர் வாழ்வு இலட்சியமயப் படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் வாழும் ஆசை கோழைத்தனம் என்று இழிவு செய்யப்பட்டது. சாவெறித்தனமாகப் போற்றப்பட்டது; உன்னதமாக்கப்பட்டது. போராட்டம் வாழ்வதற்காக என்பது போய், சாவதற்கு மண்ணோடு மண்ணாய்க் கரைந்து போவதற்கு என்பதாயிற்று. தமது காரியங்கட்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்லத் தெரியாத குழந்தைகள் ஆயதபாணிகளாக்கப்பட்டு மிருக ஒழுங்குக்குள் ஈவிரக்கமற்ற முறையில் பயிற்றுவிக்கப்பட்டனர். கேள்விகளை எழுப்பாத சொன்னதைச் செய்யும் கொலை இயந்திரங்களாக அவர்கள் ஆயினர். உண்மையான புரட்சியாளர்கள் வாழ்வை இகழாதவர்கள் ஒவ்வொரு துளிப்பொழுதையும் மானுட விழுமியங்களால் அளப்பவர்கள். புலிகட்கு வாழ்வை பற்றி என்ன தெரியும்? ஆனால் 'தேசியத்தலைவர்' இலங்கையிலேயே ஆகக் கூடிய பாதுகாப்புடன் கூடிய மனிதர். அவரது உயிர் எதிரிகளிடமிருந்து பரிபூரணமாய் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள எந்த மனித உயிரும் அது தமிழரோ, சிங்களவரோ, முஸ்லீமோ எவராயினும் அதைப் பறிக்க தேசியத் தலைவருக்கு உரிமையுண்டு. இந்த இராணுவவாதத்தை, பாசிச ஆயுத கலாச்சாரத்தை புஸ்பராசா திறமானது என்கின்றார், மெச்சுகின்றார்.

தேசியத்தலைவரது தனிப்பட்ட பண்புகள் போற்றத் தகுந்தவையா? இயக்கம் தொடங்கிய காலங்களில் தன் கூடப்படுத்தவர்களைக் கூட நம்பாமல் அவர்களின் துவக்கை வாங்கி தான் வைத்துக் கொண்டு படுக்கும் மனிதர். படுத்து விட்டு இடையில் இரவில் எழுந்து கால் இருந்த இடத்தில் தலையும் தலை இருந்த இடத்தில் காலும் வைத்து மாற்றி படுக்கும் பேர்வழி. தன் நிழலைக் கூட நம்பாதவர்கள், சிறந்த இராணுவ, தலைமை பண்புள்ளவர்களாக புஸ்பராசாவால் கண்டெடுக்கப்படுகின்றனர். மாற்று இயக்கங்களை மட்டுமல்ல, குழந்தைப் பருவத்திலே பழகிய மாத்தையா, மனோ மாஸ்டர் போன்றவர்கள் கூட தேசியத் தலைவரால் புதைகுழிகட்கு அனுப்பப்பட்டனர். மனோ மாஸ்டர்-பிரபாகரனை வல்வெட்டித்துறையில் புருசன் பெண்சாதி என்று ஊர்ச்சனம் பகிடி பண்ணுவது வழக்கம். அத்தகைய மனோ மாஸ்டர் பிற்காலத்தில் தெரு நாய் போல சுடப்பட்டார். இங்கு பிரபாகரனை அல்லது புலிகளைப் பாராட்டுவதென்பது தமிழ் மக்களின் பாரம்பரிய நாகரீகக் கலாச்சார விழுமியங்களையும் மனித ஆளுமைகளையும் அறிவுத்திறன்களையும் மானங்கெடுத்தி குழிதோண்டிப் புதைப்பதாகும். தமிழ் மக்களின் சுதந்திரத்தின் பெயரால் பெருத்துப் பரவியுள்ள பயப்பீதி, அரசியல் கோழைத்தனம், அடிமைத்தனம், பொது வாழ்வில் இருந்து ஒதுங்குதல், அநீதிகட்கு எதிராய் போராடாமல் இருத்தல் போன்ற பண்புகளை ஏற்றுக் கொள்வதாகும். தேசிய தலைவரின் சித்தமே தெய்வ சித்தம் என்பதாய் நிலைமையுள்ளது. முழுச்சமூகமும் அடிமைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. புஸ்பராசாவின் பிரபாகரன் மீதான நேசத்தை தமிழ் விடுதலையின் பேரிலானதாக குழப்பியடித்து விட நிறைய மார்க்கங்கள் உண்டு. புலிகளை கைவிடும் தருணம் வரும் போது தான் தமிழ் தேசிய விடுதலைக்காகவே புலிகளை மெச்சியதாய் நியாயம் சொல்லத்தக்க வழியையும் அவர் விட்டு வைத்துள்ளார். இங்கு நாம் இத்தகைய சகல சந்தர்ப்பவாதத்திற்கும் இடம் தரக் கூடிய சகல பாதைகளையும் நாம் அடைக்க வேண்டும். வெட்டொன்று துண்டிரண்டாக தம் அரசியல் நிலையை வெளியிடாத சகல போக்குகளையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி மரியாதை கெடுத்த வேண்டும்.

புலிகள் பரப்பியுள்ள எண்ணற்ற பொய்களைத் தகர்க்க எமக்கு வாழ் நாள் போதாத நிலை. இந்த நிலையில் புலிகளின் பொய்கட்கும் பிரச்சாரங்கட்கும் அலங்காரம் செய்பவர்கள், அழகுபடுத்துவோர்கள் தொகை பெருகியுள்ளது. பிரபாகரன் 14 வயதில் போராளியானார் என்று கூட புலி பிரச்சாரங்கள் எழுதுகின்றன. அதாவது இளைஞர் போராட்டம் பற்றிய எந்தவித அசுமாத்தமும் எழாத 1968களில், 1954 ஆண்டில் பிறந்த பிரபாகரன் யாருமற்ற சூனிய வெளியிலே போராட ஆரம்பித்து விட்டார் என்ற வியத்தகு உண்மைகளை இந்நூலில் புஸ்பராசா பேசாமல்விட்டது கொஞ்சம் வியப்பாகவே உள்ளது. இன்றைய தேசிய தலைவரின் நானே அரசன்! நானே கடவுள்!! என்ற போக்கின் புதிய வடிவங்களை மோகிக்க புஸ்பராசாவிற்கு நிறைய காரணங்கள் உண்டு. அமிர்தலிங்கத்தையும் பிரபாகரனையும் ஏற்று ஒன்று சேர எப்படி புஸ்பராசாவால் ஆதரிக்க முடிகிறது? கொலை செய்தவரையும் கொலை செய்யப்பட்டவரையும் எப்படி ஒன்றாய் போற்ற முடிகிறது? இங்கு இவரை இணைப்பது தமிழ் தேசிய உணர்வல்ல வர்க்கம் சார்ந்த பொதுப் புத்தியாகும். அது சார்ந்த கருத்துக்களாகும்.

வல்வெட்டித்துறை

"வல்வெட்டித்துறை மக்களின் விடுதலைக்கான போராட்டம் மீதான ஆர்வத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. விடுதலைக்காக தங்களையே அழித்துக் கொண்ட மக்கள் அவர்கள் போர்மயமான வாழ்க்கைதான் ஆண்டாண்டு காலமாக அரசபடையுடன் மோதியே பழக்கப்பட்டவர்கள வல்வெட்டித்துறை என்றால் மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கு குலை நடுங்கும்" இது புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை பற்றிய வாழ்த்துப்பா. இந்தளவுக்கு வெளிப்படையாய் ஊர் பெருமை பேச புலிகள் கூட வெட்கப்படுவார்கள். ஆனால் ஒரே சமயத்தில் தமிழ் தேசியப்பற்றாளர், இடது போக்காளர், பின்நவீனத்துவத்தின் காதலர், தலித்தியத்தால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரில் புதையுண்டவர் என்று பெயரெடுக்க ஆசைப்படும் புஸ்பராசா என்ற பல்வேட நாயகரோ யாழ்ப்பாணப் பிரதேசம் சார்ந்த வல்வெட்டித்துறையின் ஊர்ப்பெருமை பேச தன்னை அர்ப்பணித்துள்ளார். வல்வெட்டித்துறை வீரத்தின் விளைநிலமாக ஆகிவிடுகின்றது. புலிகளின் பாசிசத்திற்கு தத்துவம் வரையும்> கூலித்தத்தவ ஆசிரியர் பாலசிங்கம் " வரலாற்று ரீதியாகவே வல்வெட்டித்துறை மக்கள் விடுதலையுணர்வும் வீரமிகுபண்புகளும் படைத்தவர்கள். இதனால் இப்பட்டினம் சிங்கள எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு தளமாக இருந்து வந்ததுடன் வீரம் செறிந்த தேசிய விடுதலை வீரர்களையும் உருவாக்கியது. இந்தப்புரட்சிகர சூழலில் பிறந்த பிரபாகரன் சிறுபிராயத்திலிருந்தே விடுதவையுணர்வும் வீரமும் மிக்கராய் திகழ்ந்தார்" என்கிறார். ஆக வல்வெட்டித்துறையில் பிறப்பவர்கட்கு வீரம், விடுதலையுணர்வு என்பன பிறவிக் கொடை, வல்வெட்டித்துறையில் பிறக்காதவர்கட்கு இத்தகைய கொடுப்பனவு கிடையாது, அவர்கள் சாதாரணமானவர்கள் என்று எமக்கு இவர்கள் பொருள் கொள்ளும்படி அறிவுரை தருகின்றார். புஸ்பராசா முதல் பாலசிங்கம் வரை எவருக்கும் சமூகவியல், மானுடவியல் பண்புகள் பற்றி எந்த கவலையும் அறிமுகமும் இல்லை.

புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை ஊர் சார்ந்த பிரதேசப்பெருமைகள் தேசிய வாதத்தை விட தரம் தாழ்ந்தவை, படுகேவலமானவை என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. யாழ்ப்பாணப் பிரதேசவாதத்திலும் குறுகிய ஊர்ப்பெருமைகளிலும் தின்று தினவெடுத்து நிற்கும் புஸ்பராசாக்கள் மானுட மதிப்புக்கு தீர்மானகரமன எதிரிகள். வல்வெட்டித்துறைக்கு விசேட குணாம்சங்கள் உள்ளனவா? வித்தியாசமான மனித நடத்தைகள் இயங்குகின்றனவா? என்பதை நாம் அதனது புவியியல் மற்றும் சமூக> பொருளியல் இயக்கத்தில் தேடிப் பார்க்க முயல வேண்டும். வல்வெட்டித்துறை ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்ட சிறிய கிராமமாக இருந்த போதிலும் குடிசனத்தொகையில் இலங்கையில் காத்தான்குடியைப் போன்று சன அடர்த்தி கூடிய பகுதியாகும். வல்வெட்டித்துறை வல்வெட்டிக் கிராமத்தின் துறையாக இருந்து பின்பு வல்வெட்டித்துறையாக மாறியது. உண்மையில் வல்வெட்டியின் குறிச்சியே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறையிலுள்ள பெரும்பகுதி நிலம் ஆரம்பத்தில் சிவன், அம்மன் கோவில் காணிகள் உட்பட யாவும் வல்வெட்டி சிறு நிலவுடமையாளர்கட்கே சொந்தமாய் இருந்தன. நல்ல நீரும் அருமையென்பதால் விவசாயம் இங்கு இல்லை. விவசாயத்திற்கேற்ற மண்ணும் அதுசார்ந்த பொருளாதாரமும் இன்மையால் சமூகத்தில் குடிமைமுறை நிலவவில்லை எனவே கடல்சார்ந்து வாழும் முறையே மீன்பிடியே பிரதான தொழிலாக இருந்தது. கள்ளக்கடத்தல் வளர்ந்து பொருளாதார ஆதிக்கம் பெருகிய பின்பே ஏழை மீன்பிடிக் கிராமமான வல்வெட்டித்துறை செல்வச்செழிப்பு மிக்க சட்டவிரோத நடவடிக்கையின் மையமாக யாழ் குடாநாட்டுள் உருவெடுத்தது. மீன்பிடி சமூகத்தையே கொண்டிருந்த இந்தக் கிராமம் தமக்குத் தொண்டு செய்யும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சில குடும்பங்களையும் கொண்டிருந்தது. கள்ளக்கடத்தல் சமூகமாக வல்வெட்டித்துறை மாறிய பின்னர், இம்மக்களிடையே பொருளாதார ஏற்ற இறக்கமும் சட்டவிரோத பொருளாதாரத்துடன் இணைந்த வாழ்வும் வலிமை பெற்றது.

வல்வெட்டித்துறை மீன்பிடிச் சமூகத்துள் நான்கு முக்கியமான பிரிவுகளுண்டு. முதலாவது உயர்நிலைப்பிரிவான குருகுலக்கரையார். இவர்கள் சிறு படகுகள் கட்டுவதுடன் 1947 ஆண்டிற்கு முன்னர் வரை பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு, சிங்கப்பூர், பர்மா வரை பொருட்களை கொண்டு சென்றனர். பெரும்பாலும் பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்வதில்லை என்பதோடு அதை இழிவாய்க் கருதினர். இவர்கள் அநேகமாக பொருளாதார ரீதியில் உயர் நிலையில் இருந்தமையால் வர்த்தகர்களாகவும், அரச சேவைக்கும் சென்றனர். இவர்கள் கள்ளக்கடத்தலுடன் நீண்ட உறவுடையவர்களாவர். பிரபாகரன் இந்தப்பிரிவை சேர்ந்தவர். இரண்டாவது பிரிவானது ஆழ்கடலில் சென்று மீன்பிடிப்பவர்களாவர். இதில் தங்கத்துரை போன்றவர்கள் அடங்குவர். அடுத்த பிரிவு மீனவர்கள் சமூகமானது கட்டுமரங்களில் சென்று கிட்டடிக்கடலில் மீன்பிடிப்பவர்கள். குட்டிமணி இப்பரிவைச் சேர்ந்தவர் இறுதியாக உள்ள மக்கள் பிரிவு 'தப்புத்தண்ணிக்கரையார்' என அழைக்கப்பட்டவர்கள் இவர்கள் கரைக்குத்தி மீன்பிடிப்பவர்கள். மழைகாலத்தில் கடல் பெருகும் காலங்களிலும் மீன்பிடித்து வாழும் ஏழையான பின்தங்கிய மக்கள் பிரிவாகும். இவர்கள் கண்டி இறால் பிடிப்பது மற்றும் கூடுகட்டி மீன்பிடிப்பதென கடற்கரையோரங்களில் மரபு வழியான மீன்பிடியைத்தொழிலை செய்து வந்தனர். இந்த நான்கு பிரிவு மக்களிடமும் வர்க்க பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவின. உண்மையான உழைப்பாளிகளான தப்புத்தண்ணீர்க்கரையாரிடம் தான் கூத்து போன்ற கலைவடிவங்கள் நிலவின. இவர்கள் தொழிலற்ற கோடைகாலங்களிலும், கள்ளு அதிகமாகவுள்ள காலங்களிலும் இவர்கள் கூத்துக்களில் ஈடுபடுவார்கள். ஆனால் கள்ளக் கடத்தல் வல்வெட்டித்துறையில் பெருகிய போது இவை அருகத் தொடங்கின. ஏனெனில் கடல்சார்ந்த உழைப்பு மீன்பிடித்தொழில் அழிவுற தொடங்கியமையின் அடையாளமாக இது இருந்தது.

தொடரும்...

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

அன்பார்ந்தோரே!,
இன்று, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது சமூக-அரசியல் வாழ்வு மிக மோசமாக அந்நியச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது.

முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழம்" காணும் யுத்தம்புரிந்த புலிகள், தமது போராட்டச் செல்நெறியின்வழியாக இந்த அரசியல் வாழ்ழ்வைத் தமிழ் பேசும் மக்களது தலையில் சுமத்திவிட்டுத் தமிழ்பேசும் மக்களது செல்வத்தோடு கோடிக்கணக்கில் வியாபாரஞ் செய்யவும்,சிங்கள-இந்திய அரசுகளுக்குத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கவுமென அரசியல் செய்யும்போது, அவர்களது இராணுவப் படையணி அவர்களாலேயே அழிக்கப்பட்டும் விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பல பத்துப் புலி வேடாதாரிகளும்,முன்னாள் அராஜ இயக்கங்களும் மீளவும் தமிழ்பேசும் மக்களிடம் ஜனநாயகம்பேசி வேட்டைக்குத் தயாராகும்போது,அந்த இயக்களிலிருந்து இந்தியாவுக்கும் உலக ஏகாதிபத்தியங்களுக்கும் துணைபோனவர்கள் நூல்கள் வெளியிடுவதும்,அதனூடாகப் போராட்ட வாழ்வின் வரலாற்றைச் சொல்வதெனும்போர்வையில் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோய், அவர்களது ஏஜென்டுகளாக இயங்கும் இன்றைய தருணத்தில் இத்தகையவர்களது நூல்கள்மீது விசாரிப்பும்-விமர்சனமும் அவசியமாகிறது.

இந்நோக்கில், காலஞ்சென்ற புஷ்பராஜாவின்"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்"எனும் நூல் விமர்சனத்துக்குள் உட்படுகிறது.இந்த நூலை விமர்சிப்பவர் தமிழ்ச் சமூகத்துள் இருக்கும் ஒருசில முன்னோடிகளுக்குள் ஒருவரான தமிழரசன்.

நீண்ட அநுபவமும்,ஆழ்ந்த புலமையும் உடைய அவரது விமர்சனமானது 13 அத்தியாயமாக விரியும்.தொடர்ந்து இணைந்திருங்கள்-நன்றி!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.07.2012





ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

- நூல் விமர்சனம்-
  
1:

தமிழ்த்தேசிய எழுச்சியானது மிருகத்தனமான புலிப்பாசிச சர்வாதிகாரமாக அது சார்ந்த அரசியல் இராணுவ ஒழுங்காக மாறி அழிந்துபடும் திசையைத் தேடத் தொடங்கி விட்டது. முழுத்தமிழ் பரப்பும் புலி ஊடகபயங்கரவாதிகளாலும் அது சார்ந்த பிரச்சார எழுத்துக்களாலும் ஆட்சி செய்யப்படும் நிலையில் மனித விசுவாசத்தை அரசியல்ப்பண்பாட்டை விமர்சன உணர்வை வெளியிடக்கூடிய சக்திகள் மிகமிக அரிதாகவே உள்ளன. சந்தர்ப்பவாதம், கோழைத்தனம், தேசிய வாதம் சார்ந்த பிழைப்புவாத அரசியல் போக்கே எங்கும் நிரம்பி வழிகின்றது. புலிப்பாசிசத்தை தேசியவிடுதலையென என்று அழகுபடுத்த முயலும் தனிநபர்களும் குழுக்களும் ஆய்வாளர்களும் எங்கும் முளை விட்டு துளிர்காட்டுகின்றனர். நடுநிலைமை, பக்கம்சாராத நீதி அறம் என்ற குறிப்புக்களுடனும் புலியதிகாரத்திற்கு தொண்டாற்றும் சக்திகள் முன்னெப்பொழுதையும் விட திறமையாக தம்மை வெளியிடுகின்றன. இக்காலத்தேதான் ஈழப்போராட்டத்தில் 'கொட்டை போட்டு பழம் தின்றவராக' 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலினூடாக புஸ்பராசா தோன்றியுள்ளார். புஸ்பராசா தன்னை ஈழப்போராட்டத்தின் ஆதி முதல்வனாக இளைஞர்தம் ஒப்பாரும் மிக்காரும் மற்ற வழி காட்சியாக தன்னைத்தானே சுயநியமனம் செய்து கொள்வதுடன் அவரது 600 பக்கநூல் தொடங்குகிறது. தமிழரசு கூட்டணி தமிழ் இளைஞர் பேரவை, EPRLF புலிகள் போன்ற தமிழ் தேசியவாதப்போக்குகளின் திரனையாக ஒன்றுக்கொன்று முரண்பட பல்திரட்டல் வாதத்தின் குவியலாக அவர் அமைகின்றனர். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை குறைந்த பட்சம் சராசரி ஜனநாயக அடிப்படையில் கூட அவரால் அணுகவும் பதிவு செய்யவும் முடியவில்லை.

செல்வநாயகம், அமிர்தலிங்கம் பத்மநாபா, பிரபாகரன் போன்ற சில மனிதர்களே ஈழப்போராட்டத்தின் பிரதான நபர்களாக புஸ்பராசாவிற்கு தென்படுகிறனர். மக்களின் பாத்திரம், அர்ப்பணிப்பு, துயரங்கள் சார்ந்து அவர் எதையும் தொடவில்லை. தமிழ் மக்களின் சமூகநிலை, அரசியல் பெருளாதார அடிப்படையில் இருந்து விபரிப்பை தொடங்கவிலை. வழக்கமீறா யாழ்பாண மத்தியதர வர்க்க அரசியல் விளக்கமான தரப்படுத்தல் இருந்தே புஸ்பராசாவும் அரசியலை ஆரம்பிக்கிறார். தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முதலாளித்துவ அரசியல் எழுதல் முறைக்கு அவர் சிறந்த உதாரணமாகவிடுகிறார். யாழ்ப்பாண நடுத்தரவர்க்க உத்தியோகவம்சத்தினருக்கு தரப்படுத்தல் தடையாக இருந்த அதேசமயம், வன்னி, கிழக்குமாகாணம், மலையகத்திலிருந்து முதல் முதலில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு தரப்படுத்தலின் பின்பே ஏனைய தமிழ் மக்கட்கு கிடைத்தது என்பதை தமிழீழ ஒற்றை சிந்தனையாளர்கள் சிந்திப்பது கூடக் கிடையாது. 1970 தொடக்கத்தில் தமிழ் மாணவர்பேரவை எழுந்த போது உலகம் முழுவதும் மாணவர் இயக்கங்கள் எழுந்தன. இவை சோசலிசம், பெண்விடுதலை, அணுவாயுத எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு என்று தம்மை அறிவித்துக் கொண்டன. ஹிப்பீக்கள், ஹரேகிருஷ்ணா, அமைப்பியல்வாதம், பீற்றில்ஸ் என்று முதலாளிய கலாச்சாரத்துடன் சச்சரவுகளை வெளிப்படுத்தின. ஆனால் இலங்கையில் தோன்றிய தமிழ் மாணவர் பேரவைக்கு அத்தகைய அரசியல் பண்புகள் எதுவும் இருக்கவில்லை. அது வெறுமனே சிங்கள, முஸ்லீம் வெறுப்புக்களை சூடிக் கொண்டதாகவே இருந்தது. ஆனால் இக்காலத்துக்குரிய தென்னிலங்கை JVP அமைப்பானது குறிப்பிடத்தக்க சமூக அக்கறைகளை, சர்வதேச அரசியலை, ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளில் சில தேவைகளை வெளியிட்டது. ஆயுத எழுச்சி மூலம் இலங்கை அரசை நிர்மூலமாக்கி அரசு இயந்திரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற துணிவை வெளியிட்டது.

ஆனால் தமிழ் மாணவர் பேரவை யாழ் குடா நாட்டிற்கு வெளியேயுள்ள தமிழ் மாணவர்களைக் கூட உள்ளடக்காத தரப்படுத்தலால் பாதிப்புற்ற சுத்தமான யாழ்ப்பாணிகளின் அமைப்பாக இருந்தது. இவர்கள் சிங்கள, முஸ்லீம் மாணவர்களுடன் கூட்டுறவு, இணைந்து போராடுதல் என்ற நிலையையே பஞ்சமாபாதகம் என்று கருதக் கூடியளவு அதீத தமிழ் வெறியால் பீடிக்கப்பட்டு இருந்தனர். இந்த அமைப்பின் தலைவரான சத்தியசீலன் தீவிரமான இடதுசாரி எதிர்பாளராகவும் ஒரு சில நாட்டு எறிகுண்டுகளுடனும் கைத்துப்பாக்கிகளுடனும் தமிழீழக்கனவு காண்பவராகவும் இருந்தார். இத்தகைய மூலங்களை கொண்ட தமிழ் மாணவர் பேரவையின் நிழலாகவே பிற்காலத்திய தமிழ் இளைஞர் பேரவை தோற்றம் பெற்றது. புஸ்பராசா போன்ற உதிரியான சக்திகள் பிறந்து தேசியவாத வழியில் வளர்ந்தனர். இவர்கள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போதித்த அற்பமான தியாகி, துரோகி அரசியலுக்கு அப்பால் எதையும் கற்றுத் தேறவில்லை. இடதுசாரிகளை எதிர்க்கும் வலதுசாரி தமிழ் அரசியல் கலாச்சாரத்தை தொடர்ந்து பாதுகாத்தனர். அகிம்சை பேசிய செல்வநாயகத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் கையைக் கீறி இரத்தத்திலகமிடும் அரசியலற்ற இளைஞர் கும்பல்கள் தீவிரமாய் வளர்ந்தன. இவர்களே பிற்காலத்தில் தம் சொந்த மிதவாத தலைமைகளை கொலை செய்வதன் மூலம் தம் பரப்பிலிருந்து அகற்றினர். அமிர்தலிங்கத்தை 'என் தலைவன்! என் தலைவன்!!' என்று பாடிப்பாடி பரவசமெய்திய காசி ஆனந்தன் 1987 இல் வல்வெட்டித்துறையில் TELO அழிப்போடு நடந்த புலிகளின் கூட்டமொன்றில் பேசியபோது அமிர்தலிங்கமே! நீ ரோசமுள்ள மனிதன் என்றால்ஸ அமிர்தலிங்கமே! நீ இனப்பற்றுள்ள மனிதன் என்றால்ஸ அமிர்தலிங்கமே! நீ உண்மையான தமிழன் என்றால்... உனது கட்சியைக் கலைத்து விட்டு வந்து எனது தலைவன் பிரபாகரனை உனது தலைவனாக எற்றுக் கொள் என்று பேசுமளவு நிலை மாறியது. காசிஆனந்தன் திருமணத்திற்கு மட்டுமல்ல வீடு வாங்க, அச்சகம் போட என்று அமிர்தலிங்கம் நிதி தரட்டி தந்தவர். அப்போதெல்லாம் அமிர்தலிங்கம் காசிஆனந்தனால் 'தமிழீழத்தின் ஆபிரகாம்லிங்கன்' என்று உளமுருகிக் கவிதைகளால் பாமாலை சூடப்பட்டவர். காசி ஆனந்தன் முதல் புஸ்பராசா வரை திரு.அமிர்தலிங்கம் உட்பட கூட்டணித் தலைவர்களிடம் செஞ்சோற்றுக் கடன் பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் வலதுசாரிகட்கு நட்பு, தனிப்பட்ட உறவுகள் சார்ந்த கடந்த காலம் எத்தகைய மனநெகிழ்வையும் மனித மதிப்பையும் விட்டுச் செல்வதில்லை. அவர்கள் நிகழ்கால கடுமைக்கும் கொடூரத்திற்கும் விரைவாக ஆட்பட்டுவிடுவார்கள். புஸ்பராசா தமிழ் இயக்கங்கள் உச்ச வளர்ச்சி பெறுமுன்பே நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் வாழ்ந்தமையால் அவரது கருத்தோட்டங்கள், அமிர்தலிங்கம் மேலான பக்தி என்பன ஓரளவுக்கு சுத்தமான வடிவில் பாதுகாக்கப்பட்டன.

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பதாக எமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் இவை அவசியமென இடதுசாரிகளே மூர்ச்சித்து விழுமளவு புஸ்பராசா ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிறார். இங்கு புஸ்பராசா பேசவது அவர் கொஞ்சக் காலம் EPRLF இல் வாசம் செய்த காலத்தில் பெற்றுக்கொண்ட சிந்தனைத் திரவியமாகும். இந்திய ஸ்டாலினிசவாதக்கட்சிகளின் சீர்திருத்தவாத நியாயத்தைத்தான் இந்திய ஆயதப்பயிற்சிக்குப் போன காலத்தில் EPRLF தமது தத்துவமாய் சொல்லித் திரிந்தார்கள். அது புஸ்பராசாவிற்கு கூட எட்டியுள்ளது என்பது அதிசயம்தான். சகல தமிழ் இயக்கங்களும் இந்தியாவின் இராணுவ அரசியல் விருப்பங்கட்கு கருவியாய் போன போது இப்படித்தான் சொல்லிச் சொல்லி நாசமாய்ப் போனார்கள். இறுதியாக இந்திய உளவுத்துறையின் வேலைக்காரர்களாகிப் போயினர். ஆனால் இந்தியாவை நம்பியதற்கு அதன் பின்னே போனதற்கு படிப்பினை கிடைத்த பின்னரும் புஸ்பராசா பழைய கோசத்தை, பட்டுக் கெட்டுக் கைவிட்ட குரல்களை புனருத்தானம் செய்கிறார். இன்றைய உலகமயமாதல் காலத்தில் இந்தியாவின் தேசிய பொருளாதாரத்திற்குள்ளேயே அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் புகுந்து விட்டன. அவர்களது மூலதனமும் நிதி நிறுவனங்களும் இந்தியாவைக் கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன. சோவியத்யூனியன் காலத்தில் இந்திராகாந்தி ஆண்ட போது சில வருட காலம் உண்மை போல தோன்றிய இந்தியாவின் முற்போக்கு முகம் பற்றிய அரசியல் கற்பனைகள் கலைந்து வெகுநாளாகிவிட்டதை விளங்குமளவிற்கு வலிமையான அரசியல் மனிதராக புஸ்பராசா இல்லை.

இன்று இந்தியாவை மீறி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளிலும் இப்போது சுனாமியைக் காட்டி அமெரிக்கா இலங்கையிலும் நுழைகின்றது. தடுக்க யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நுழைந்த போது இந்தியா அதை ஆதரிக்க வேண்டிய பரிதாபக் கட்டத்தில் இருந்தது. சீனாவின் பிரமாண்டமான வளர்ச்சி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார பலம் இவைகளினூடு இந்தியாவும் இந் நாடுகளைச் சார்ந்து தன்னை ஆசியரீதியில் நாட்டிக் கொள்ள இன்று முயன்ற போதும் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்ற கருத்து இன்று உயிருடன் இல்லை. கடந்த காலத்தில் வாழ்க்கை நடத்தும் புஸ்பராசாவிற்கு இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு எதிராக இலங்கையரசு மட்டுமல்ல சர்வதேச சமூகம் பற்றிய உளறல்களில் ஈடுபட்டிருக்கும் புலிகள் முதல் கூட்டணிவரை செயற்படுவது புலப்படவில்லை. இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவம் மட்டுமல்ல இலங்கையின் தமிழ் சிங்கள தேசியங்கள் கூட உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதார ஓட்டத்தாலும் அது சார்ந்த நுகர்வுக்கலச்சாரத்தாலும் கரையத் தொடங்கிவிட்டன. இங்கு இந்திய துணைக்கண்டம் இனியொருபோதும் தனித்தீவாக இயங்க முடியாது.




தமிழர் இளைஞர் பேரவைக்கு தான் தலைமை தந்ததாய் புஸ்பராசா எழுவது இவர் தீவிரவாத இளைஞர்கள் கூட்டணிக்கு எதிராக முறுகியடித்த காலத்தில் திரு.அமிர்தலிங்கத்திற்கு காட்டிய விசுவாசத்திற்காக சிறிது காலம் தரப்பட்ட பரிசாகும். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசிஆனந்தன் போன்ற இளைஞர்கள் வரிசையில் சேர்க்கப்பட்ட முடியாத முத்தல்களையே கூட்டணித்தலைமை த.இ.பே தலைவர்களாக நீண்ட நாட்களாக காட்டி வந்தது. இவர்களே பேச்சுத்திறமை கொண்டவர்களாகவும் மக்களால் அறியப்பட்டவர்ளாகவும் இருந்தனர். இடதுசாரித் திசையில் பயணிக்க முயன்ற சந்ததியார் போன்றவர்களே முதன் முதலாக இந்தக் கூட்டணி வாரிசுகளை அசைத்தனர். கூட்டணி தலைமையோடும் திரு.அமிர்தலிங்கத்துடனும் புஸ்பராசா விட்ட சிறு சிறு குழப்படிகள் தனது முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் கவனத்தையும் ஈர்க்கவும் செய்தவை என்பதே அவரது காலத்து நண்பர்களது அபிப்பிராயமாகும். புஸ்பராசா கதை காவித்திரிபவராகவும், நிலையற்றவராகவும் கருதப்பட்டார். ஆனால் இப்பேது புஸ்பராசாவின் எழுத்து தன்னைக் கதாநாயகனாக்க பலரை வில்லன்களாக உருவாக்கிவிட்டது.

புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பு இல்லை, தான் அப்போது சிறையில் இருந்தேன் என்கிறார் புஸ்பராசா. இந்த வங்கிக் கொள்ளையை இவர் சார்ந்த ஈழ விடுதலை இயக்கமே நடத்தியது. இவரது குடும்பத்தவர்கள் தொடர்பு என்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான சித்திரவதை, அவமானப்படுத்தல்கள் எங்கும் அறியப்பட்ட விடயமாக இருந்தது. மயிலிட்டியில் பெற்றோல் செட், நகைக்கடைக் கொள்ளையுடன் புஸ்பராசாவுக்கு தொடர்பு இருந்தன என்ற செய்திகள் இருந்த போதும் புஸ்பராணியும் புஸ்பராசாவும் கூட்டணியினரின் மேடைப்பேச்சிற் கூடாகவும் அன்று அறியப்பட்டிருந்தனர். புஸ்பராசா, பொதுவாக ஆயதம் ஏந்திய கிளர்ச்சியாளராக அதன் தொடர்புடையவராக அறியப்பட்டதில்லை. இவர் கூட்டணி சார்பான அரசியலுக்கு உருத்துடையவராகவே பொதுவாக அப்போது கணிக்கப்பட்டார். துரையப்பா கொலை வழக்கின் சந்தேகத்தின் பெயரிலேயே புஸ்பராசா கைது செய்யப்பட்டார். அதாவது கூட்டணியினர் மூலமாக பொலிசில் சரணடைந்தார். மற்றப் பக்கத்தால் புஸ்பராசா ஒரு பொலிஸ்காரனுக்கு அடித்து யுனிபோம் கிழித்து தொப்பி பறித்த கதையை ஒரு சண்டியனின் உற்சாகத்தோடு எழுதுகின்றார். இன்று 50 வயதை தாண்டிய மனிதராகிவிட்ட புஸ்பராசா தனது கடந்த காலத்திய வாழ்வு மீது சிறு சுயவிமர்சனம் கூட இல்லாமல் தனது வீரவாழ்வு பற்றி கதையாடல்களில் ஈடுபடுவது வாசிப்பவர்களின் மதிப்பை பெற்றுத்தராது.

EPRLF உடன் பிரான்சில் புஸ்பராசாவின் தொடர்பு கொண்டு இயங்கியமைக்கான அரசியல் ரீதியில் ஆழமான காரணங்களை அவர் தரவில்லை. தனது அடையாளத்தைக் காக்கும் பொருட்டே EPRLF ஐச் சார்ந்து இயங்கினார் என்று அவரது பிரான்சு நண்பர்களே கருத்துக் கூறுகின்றனர். ஒரு காலத்தில் திரு.அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து கொண்டு பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களை சோசலிசப் போக்கு கொண்டவர்கள் என்று வெறுத்து விலத்திய புஸ்பராசா, பின்பு அதே நபர்களின் EPRLF இல் இணையும் போது அவரது அரசியல் பார்வை மாறியமைக்கான எந்த தடயமும் தென்படவில்லை. EPRLF இன் கட்டாய ஆள்பிடிப்பு, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்ச்சிக்;க வேண்டிய தருணம் வரும் போது புஸ்பராசா ஏதோ தான் மூன்றாவது ஆள் இவைகளோடு தொடர்பற்ற வெளி ஆள் என்பதாக மாறி EPRLF பற்றி சிறிது விமர்சனம் சொல்ல முயல்கிறார். இத்தகைய தனது பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கும் போக்கு எங்கும் பரந்து வெளிப் படுகின்றது. இந்திய இராணுவத்துடனான EPRLF இன் உறவு பற்றி கிட்டதட்ட எதுவும் இவர் கூறாதொழித்தார்.

தொடரும்...

தமிழரசன்
பெர்லின்




Donnerstag, Januar 12, 2012

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள்

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள் தமிழுரிமைச் செடிகளை மேய்ந்துகொண்டபோது...

71 புத்திசீவிகளது கையெழுத்து,அறிக்கை-கோரிக்கை குறித்து இந்த எதிர்ப்பறிக்கையையும்[ http://inioru.com/?p=25534 ] ,தீபந்தொலைக்காட்சி உரையாடலையும் பார்த்தபின் இதைக் குறித்துச் சொல்வதும்,மக்களுக்கான தோழமை சேர்தலும் நமக்கு அவசியமான பணிகளாகிறது.எமது மக்கள்மீது பழிசுமத்திச் சிங்கள ஆளும் வர்க்கத்தையும்,இந்தியப் பிராந்திய நலத்தையும் காக்கமுனையும் இந்தச் சதிகாரர்களது அணித்திரட்சியும்,அவர்களது கோரிக்கைக்குள்- மொழிகளுக்குள் திணித்துத் தரப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களுக்குத் தரப்படும் உயிர்கொல்லி நச்சு விசம் ஆகும்.

இதை,இன்னொரு இனத்தின்மீதான கரிசனையாக இந்த மேட்டுக்குடிகள் உரைப்பது,அந்தத் துரத்தியடிக்கப்பட்ட மக்களது வாழ்வை நாசமாக்கிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின்கயமைமிகு வரலாற்றை மறைப்பதில் மையமுறும்!

இந்தப் பிரச்சனைகுறித்து வெறுமனவே"பொய்-உண்மை"எனக் கருத்தாட முடியாது.அல்லது, நிர்மலாவின் அகங்காரமென்றும்,ஆணவமென்றும் குறித்துக்கொண்டு,மேலே செல்லமுடியாது!நிர்மலா முன்வைப்பதும்,சேனன் முன்வைப்பதும் இரண்டும் வெவ்வேறு அடிப்படையைக்கொண்டது.நிர்மலா ஆளும்வர்க்க நலனுக்கொப்ப-அவர்களது வியூகத்தைத் தனது தலைமையில் நடாத்திக் கொண்டிருக்கும்போது, இவைகளுக்குள் மிரண்டுபிடிக்கும் ஆளும் வர்க்கத்தினது நலன்களுக்கேற்ப, இலங்கை-இந்திய அரச இராஜதந்திரம் புகுந்து நிர்மலா மொழிவுகளாக மேலெழுகிறது. சேனன் மக்களது குரலைப் பதியமிடும்போது இன்னும் விபரமாகச் செய்திருக்கவேண்டியவொரு சூழலைத் தவறவிட்டுள்ளார்.

ஏலவே,புலிப் பாசிசத்தின் மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறியால் பழிவாங்கப்பட்ட மக்களினங்களை இணைத்து இத்தகையவொரு அரசியல் சூதாட்டத்தைச் செய்யக்கூடிய தகவமைப்பைச் செய்வதில் இந்தியச் சணாக்கியத்தின் வெற்றியை அன்றே பல கட்டுரைகளில் இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள்.

புலிவழிப் போராட்டச் செல் நெறியை அந்நிய அடியாட்படைக்குரியதாகவே பேசியும் இருக்கிறோம்.அதன் விளைவுகள் முள்ளிவாய்க்காலில் அறுவடையாகியதும் வரலாறுதாம்.

இதிலிருந்துதாம் இன்றைய இந்த நிர்மலாவின் ஆடுகளது முடிச்சை அவிழ்ப்துப்பார்க்க வேண்டும்.நிர்மலா மேய்ப்பது இந்திய-இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கான ஆடுகள் என்பதைக் கறாராகச் சொல்லிக்கொண்டு...

இலங்கையில் நடந்தேறிய இனமுரண்பாடுகளானது முற்றிலும் வர்க்க நலன்களது அடிப்படையிலேயான முரண்பாடுகளாகவே மேலெழுந்தன.அந்த முரண்பாடுகளை இங்ஙனம் குறித்துங்கொள்வது சுலபம்:

இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் உருவாகிய மூலதனத்தின் நலம் நோக்கிய முரண்பாடுகள்,சந்தை-வளம் போன்றவற்றைப் பங்கீடு செய்வதில் சிக்கல்களைக்கொணர்ந்தபோது,ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கின்ற ஆளும் வர்க்கப் போக்குகள்,ஒன்றையொன்று மொட்டையடிக்க முனையும்போது,அங்கே இனஞ்சார்ந்த முரண்பாடுகளாக அவை மக்களிடத்தில் உயிர்ப்பலிகளைக் கேட்டன.இந்த முரண்பாடுகளாக உயர்ந்த வர்க்க நலன் சார்ந்த இனஞ்சார் மூலதனக் குவிப்புறுதிக்கேற்ற அரசியற் கோசங்கள் மதஞ்சர்hந்த,மொழிசார்ந்தும்,பண்பாட்டுத்தளத்தில் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியற் தகவமைப்புகளை மெல்ல முன்னெடுத்துக்கொண்டன.

தமிழ்த் தேசியவாதிகளது-அரசியற் கட்சிகளது கோரிக்கைகளுக்குள் அவர்களது எஜமானர்களது முரண்பாடுகள் மெல்லத்தலை காட்டின.அவ்வண்ணமே,சிங்களப் பாசிச அரசினது கோரிக்கைக்குள் சிங்கள ஆளும் வர்கத்தின் நலன்களும்,அதுசார்ந்த முரண்பாடுகளும் அதிவேகமாகக் கலவரமாகக்கூட மேலெழுந்துகொண்டது.இப்படி ஒவ்வொரு வர்க்கமும் முட்டி மோதும்போது,இனஞ்சார் அரசியலும்,அதுசார்ந்த அரசியல் நடவடிக்கைகளும் மொழுமொத்த இன நலனுக்கானதென்ற போர்வையில் மக்களை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பாரிய யுத்தமாகவும்-கலவரமாகவும் வெடிக்கிறது.

அன்று,"முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களைக்கொல்" என்று இந்திய ரோ ஆலோசனை செய்த போது, புலிகள் கொன்றார்கள்-துரத்தியடித்தார்கள்.

மக்களும் அதைத் தமிழர் நலனால் ஆதரிக்காதிருந்தாலும் ஆயுதத்தின் முன் மௌனமாகிக்கிடந்தார்கள்.அப்போது, சொன்னோம்,இது வரலாற்றுத் தவறென.

வன்னியில் யுத்தம் நடந்தபோது,சிங்கள அரச விமானங்கள் 2008 வாக்கில் வன்னிக்குள் குண்டுபோட்டபோது பல தமிழ்த் தாய்மார்கள் தலைதெறித்து மரணித்துக்கிடந்தார்கள்-பாலகர்கள் தாயின் அணைப்பில் துவண்டு கிடக்க நாம் அனைவருமே வருந்திக்கொண்டோம்!இந்த வலியினால் பொருமிய புலி விசுவாசிகள், குறுந்தேசிய வாதச் சிக்கலுக்குள் விடிவைத் தேடிய அப்பாவி மக்கள்கூட அரச வன்கொடுமைக்கு எதிராகக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும்ச பதிலடியாக மக்கள் மத்தியிலும் பல குண்டுகள் வெடிக்க வேண்டுமெனச் சொன்னார்கள்.அப்போதும் இது தவறென்றோம்.

அதன் இன்னொரு முனையிலிருந்த அவர்களது மடத்தலைவன் அநுராதபுரத்தில் விமானப்படைத் தளத்தைப் பேரங்கொடுத்துத் தாக்கி அழித்போது கூறிக்கொண்டார் : "சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினோம்" என்று.அதையும் தவறு,இது வரலாற்று வினையை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பில் உணர்த்திக் கொண்டதுண்டு.இது ஒரு தர்க்கமானது.



ஒரு இனத்தைப்(தமிழ்பேசும் மக்களைப் பலவடிவில் கருவறுக்க) பழிவாங்கச் செய்த சதிகள் இவை.

இந்திய ரோ அன்றே மதிப்பிட்டு விதைத்ததை, இன்று மிக இலாபத்தோடு அறுவடைசெய்கிறது.நிர்மலாவின் குரலூடாக விரியும் இந்தக் கோரிக்கையானது முற்றிலும் இந்திய-இலங்கை ஆளும்வர்க்கத்தின் நலன்சார்ந்த தகவமைப்பாகும்.தமிழ் நிலப்பரப்பெங்கும் சிங்கள இனவாத இராணுவத்தின் சர்வதிகார ஆட்சியின்கீழ் தமிழ் பேசும் மக்கள்மட்டுமல்ல மற்றைய சிறுபான்மை இனங்களும் கட்டுண்டுவாழும்போதும்,பேரினவாதக்கொடுமையினூடாக இதுவரை பல இலட்சம் மக்களைக்கொன்று குவித்த சிங்கள ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இன்னும் சுதந்திரமாக வாழ அனுமதிக்காதபோது இந்தக் கோரிக்கை வருகிறது-கவனத்தில் இதை எடுக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தமது வாழ்வையே செப்பனிட முடியாதவொரு சூழலில் இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களைக் குடியிருத்துவதென்பதும்,அவர்களுக்குத் தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிரஜைகள் வசதி வாய்ப்பை நல்குவதும்,தோழமையைக்கொடுக்க வேண்டுமென்பதும்,மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்பதும் அரசியல் சதியாகும்.

இந்திய ரோவினது ஆலோசனையுள் திட்டமிட்ட சதி அரசியலைத் தமிழருக்குச் சொந்தமாக்க முனைவதும்,வரலாற்றில் அந்தப்பழியை(முஸ்லீம்களைத் துரத்தியது) யாழ்ப்பாண மக்கள்மீது போடுவதும் இந்தியச் சாணாக்கியத்துக்கு அவசியமானது.இந்த அவசியத்தின் பொருட்டே நிர்மலா வாந்தியெடுக்கிறார்.

பிராந்திய நலன்களுக்கிணைவாகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைப்போரை நசுக்க என்னென்ன வழி பார்த்தார்களோ, அதையே திட்டமிட்டு ஒரு இனத்தின் மைய முனைக்குச் சொந்தமாக்கிக் காலம் பூராகவும் பழியைச் சுமத்தித் தமிழர்கள் தேசிய விடுதலையைக் கேட்க-போராட உரித்தற்றவர்களென்றும், தமக்குள் இனவொடுக்குமுறையைச் செய்தவர்களென்றும் பட்டங்கட்டித் தொடர்ந்து சிங்க இனவாத ஒடுக்குமுறையை அதனுடன் சமப்படுத்திக்கொள்வதும்,தமிழர்களது சுயநிர்ணயத்தைக் காயடிக்கும் வியூகம்தாம்.

இதற்கு நிர்மலாவோடிணைந்த அந்த 71 ஆடுகளும் கண்டடைந்த மேய்ப்பர்கள், இந்தியச் சாணாக்கியமாகும்.


முஸ்லீம்மகளைத் துரத்திவிட்ட நிகழ்வு இன்றுவரையும் அரசியல் அமுக்கக் குழுவுக்கான தகவமைப்பைச் செய்கிறது.சிங்கள இனத்தைப் பகைப்படுத்திய சந்தர்ப்பத்தில் மகிந்தா பாசிசத்துக்கு அது இசைந்துபோக எத்தனித்தது.சிங்களது உச்சி பிளப்பு,வன்னிக்குள் பிரபாகரன் மண்டையை உயிரோடு பிளந்தது.

இன்றுவரையும் மக்களைப் பிளந்து அரசியல் நடாத்துவதற்கு- யாழ்ப்பாண மக்களுக்குச் சாபமிட ,அன்று இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கிப்புலிகளால்துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களது வாழ்வு ஏதுவாகிறது, இந்திய நலனுக்குப் பேரின வாத அரசுகளுக்கு.

இன்று தமிழ் மக்களை மன்னிப்புக்கோரச் சொல்லும் நிர்மலாவுக்குத் தெரியும், அதே போன்று சிங்கள இனமும்,அதன் அரசும், தமிழ்பேசும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பும்,நஷ்ட ஈடும் கட்டித் தமிழர்களது பாரம்பரிய பூமியைச் இராணுவச் சர்வதிகாரத்தின்கீழிருந்து விடுதலையாக்கி விடவேண்டும் என்றும்.

ஆனால்,அந்த முக்கியமான கோரிக்கையை "அதிகாரம் என்பது பல தளங்களில் இயங்குவதாகச் சொல்லி " அரச வன்கொடுமை இராணுவஜந்திரத்தையும்,அரச அதிகாரத்தையும்,மக்களது உரிமைக்கானதும்,பேரினவாதவொடுக்குமுறைக்கு முகங்கொடுப்பதுமான மக்களது போராட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்குள்பொருத்திச் சமனிட முனைவதும் பாரியக் குற்றம்.இது திட்டமிடப்பட்ட சதி.

யாழ்ப்பாணத்திலிருந்து புலியை வெரட்டியடித்த இராணுவம்தாம் இன்று பதினைந்து ஆண்டுகளுக்குமேல் யாழ் வடபுலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.

இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?

அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா?

அல்லது,இன்று செய்யும் நிர்மலா அரசியலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்வதற்காகப் "புலிகள் சொன்னாற்றாம் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியிருப்போம்" என்ற புத்தள முஸ்லீம் மக்களது குரலையும் சந்தேகிக்கவே வேண்டும்.

அந்த வகையில் இந்த 71"புத்திசீவிகளது"கோரிக்கை-கையெழுத்து"அரசியலது ஆணிவேர் , பிரித்தாளும் பிராந்திய மேலாதிக்க இந்திய அரசினது மடியில் ஊன்றுவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவாவதும் நிர்மலாவின்பின் தமிழர்களை மேயத் துடிக்கும் அந்த ஆடுகளைக் கவனமாகத் துரத்தியடித்தே தீரவேண்டும்.

இல்லையேல், இலங்கை முழுமொத்த மக்களது எதிர்காலப் பயிரையே இந்த ஆடுகள் மேய்து கொழுத்துத்தமது எஜமானர் களுக்கு இறைச்சியாகிவிடும்.

எனவே,இவர்களது சதிக்கு எதிரான இந்த "யாரிந்தப் புத்திசீவிகள்" எனும் எதிர்ப்பறிக்கையை [ http://inioru.com/?p=25534 ]நான் ஆதரிக்கிறேன்-அவசியமெனவும் கருதுகிறேன்!

ப.வி.ஸ்ரீரங்கன்,
12.01.2011
ஜேர்மனி.

Dienstag, November 22, 2011

பிரபாகரனுக்கு அஞ்சலிப்பது மட்டுமல்ல...

கொல்லபட்ட பிரபாகரனுக்கு இந்த மாவீரர் தினத்திலாவது தமிழ்ச் சனம் வீர வணக்கம் செலுத்துமா?


தமிழ் இளையோரே,
வெளியே வாருங்கள்!
வஞ்சகத்தால் வீழ்ந்த புலித்தலைமைக்கு
இந்த மாவீரர் தினத்திலாவது நேரடியாக
அஞ்சலியைச் செய்யுங்கள்!!!

இப்போது தலைமையை அழித்த
புலிக்குள் இருக்கும் நயவங்சகக் கூட்டையும்
அதன் பின் அணிவகுத்து
மக்கள் சொத்தை-நிதியைக் கொள்ளையடிக்க முனையும்
பணப் புலிப் பினாமிகளையும் கண்காணியுங்கள்;
உங்களால் இது முடியும்.


பிரபாகரன் இந்த 2011 இலும் ,உயிரோடிருப்பதாகக் கட்டுரை எழுதிப் புதிய நயவஞ்சகர்களைக் காப்பதற்கு முனையாதீர்கள்!இதுவரையான வெளித் துரோகங்களை இனம் காணும் நீங்கள், உட்துரோக அரசியலது தலைமையை இனங்காண்பதில் தவறிழைத்துள்ளீர்கள்!

இந்நிலையில்,புலித்தலைமை எங்ஙனம் காட்டிக்கொடுக்கப்பட்டதென்பதை முதலில் புரிவதற்கு,அவரது மரணத்தை மறைக்க முனையும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.இனிமேலும் மறைப்பு அரசியலில் மறைந்திருந்து துரோகத்தைத் தியாகமாக்க முனைவது, எமது மக்களது முற்றுமுழுதான அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தும் அரசியலாகவே மாறும் அபாயம் உண்டு.இதைக் கணக்கிலெடுங்கள்.

தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து, அழித்த புதிய புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று , குத்துவெட்டுக்களும்,கோவில் தேர் எரிப்பும் உச்சம் பெறுகிறது.இத்தகையவர்களா நமது தேசபக்த இளைஞர்களுக்குக் கௌரவம் அழிக்கும் விழா எடுப்பது?;அவர்களைச் சொல்லி மீளவும், சேர்த்த சொத்துக்களைத் தமது செல்வமாக்கும் அரசியலுக்கு அத்திவாரமிடும் இத்தகைய புலிப் பினாமிகளை இனங் காணுங்கள்!வருகிறது, நவம்பர் 27!


இந்த நாளுக்குத் தீபம் ஏந்தும் உங்கள் கரங்கள் ,புலிப்பினாமிகளுக்காக உண்டியலும் ஏந்தாமல் உள்ளத்தின் நியாயத்துக்கமைய பிரபாகரன்பற்றிய உண்மைக்காகவும் ,இயங்கட்டும் உங்கள் வாய்கள்!


"என் இனத்தின் அழிவில் நின்று
களிநடனமிடும் சிங்களத்து விருப்பு இருக்கும்வரை
நீ தமிழ்த் தேசியத்தின் குறியீடே பிரபா!

என் மக்களுக்கும்,
உன் சேனைகளுக்கும்,
உனக்கும் அஞ்சலிப்பது மட்டுமல்ல
எம்மை வீழ்த்திய
உனக்குள் மறைந்திருந்த நயவஞ்சகத் தலைமையையும்
இனங் காண்பதும் எனக்கும்
என் அடுத்த தலைமுறைக்கும் அவசியமானதே!" என்று,இந்த மாவீரர் தினத்திலாவது போர்க் கொடி உயரட்டும்.

உங்கள் தலைவன் பிரபாகரனுக்காகவும்,அவன் போராட்ட உணர்வுக்காவும் அவனை நெஞ்சார வழிபட்டே ஆகவேண்டும்.தமிழ் மக்களது அடிமை வாழ்வை தனக்கெட்டியவரை வீரமுடைய வாழ்வாக்கிய அந்தப் போராளித் தலைவனுக்குச் செய்ய வேண்டிய புரட்சி வணக்கத்தைத் தட்டிக் கழிப்பது கடைந்தெடுத்த கள்ளத் தனமாகும்.பிரபாகரனது மரணத்தைப் பகிரங்கமாக அறிவித்து ,அவனைத் தொழாத "மாவீரர்"தினம் மகத்தானதல்ல என்று அறை கூவலிடும் உரிமை கூட உக்களுக்கு இல்லையா செம்மறித் தமிழர்களே?

இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.புலம்பெயர் மக்கள் வாழும் மேற்குலகிலோ "மாவீரர்"தினக் கொண்டாட்டத்துக் காகப் புலிப் பினாமிகள் தமக்குள்ளே அடிப்பட்டுக் கோயிற்றேரை எரிப்பதுவரை அவர்களது பாசிசம் கோலாச்சுகிறது.

இது,எதற்காக?

மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் உரிமை எவருக்கென்பதில்தானே தமக்குள் பல் வேறு அணிகளாகப் பிரிந்து பணவேட்டைக்கான உரிமம் கோருகிறார்கள்?


செத்த தலைவனுக்கே செருப்படி கொடுத்த இந்தக் கூட்டம்"மாவீரர்"தினக் கொண்டாட்டம் செய்வதென்பதன் பொருள் என்ன?

இதுவரை,தனது சக்தி உட்பட்டவரை போராடிய பிரபாகரனுக்கு ,சேறு பூசியது சிங்களத் திமிர்மட்டுமல்ல புலப் பணப் புலிப் பினாமிகளும்தாம்.செத்தவனை அம்போவென விட்டுவிட்டு,அவனது கீழ்மட்டப் போராளிகளுக்கு "மாவீரர்"கௌரவஞ் செய்கிறார்களாம்-கேடுகெட்ட வேடதாரிகள்!

இப்படியாக,பங்கீட்டுச் சண்டை மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க் காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு வெளிவிவகாரப் புலித்தலைமை தாம்கொண்டுள்ள மக்களது நிதிக்களைத் தமதாக்கும் முயற்சியில் நம்மை ஏமாற்றச் செய்யும் கபட அரசியலுள், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கருத்துரைத்து நமது மக்களை அந்நியச் சக்திகளுக்கு முற்றுமுழுதாக அடிமைப்படுத்திவிடத் துடிக்கிறது.இது கடைந்தெடுத்த துரோகம்!இதுவரை போராடிய தலைவனுக்கே ஒரு அஞ்சலி செய்ய முனையாத கயவர்களைத் தண்டித்தே ஆகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
22.11.2011

Sonntag, August 14, 2011

பிளந்த சிரம் மறுத்த துயில்

வஞ்சகக் கள்வர்.

றிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென
செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்
தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து
சூரியதேவன் ஆம் எனச் சொல்லி
துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!

பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து
போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க
அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை
முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,
மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...



"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்
சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?
எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!
ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்
அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.

பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்
தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது
இடம் மறுத்து எங்கோ ஏதோவென.
இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற
சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!

ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி
கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்
புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?
பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல
பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென

புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே
திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்
பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்
தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்
பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.08.2011

Mittwoch, Juli 28, 2010

சிதைவு.

சிதைவு.

(நாடகம்)


காட்சி:1

(முதற் திரை விரிய தாடிகாண் பெரிசு(முத்தையா விசரன்),விசரனெனப் பெயர் சூடிய அந்தவூரில், அதிகம் கற்ற மனிதத்துக்கானவொரு உயிர்.தனது நிலையில் தன்னைப் பிரகடனப்படுத்த கவிதையாய்த் தன்னை உலகுக்கு ஒப்புவிக்கிறார்.அவரைச் சுற்றிச் சின்ன வண்டுகள்(சிறார்கள்)ஊரினது சாயலிலுள்ள முற்றத்தில் ஓடி விiயாடுகிறார்கள்(எட்டுக்கோடு-கோலி) அந்த முற்றத்துக்குச் சொந்தமான வீட்டின் குந்தில் வயசான மூன்று கிளார்களும் இரண்டு இளைஞர்களும் ஒரு பெட்டிளைப்பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அப்பெட்டிக்குள்உலர் உணவுப்பொருட்கள் இருக்கிறது.)

முத்தையா (ஊருக்குவிசரன்):

திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி


பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற

தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை

கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!

தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்

ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!

திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை


(விசரனான அறிஞன் சிறார்களுக்கு கவிதை சொல்லி முடிக்கச் சிறார்களது சிரிப்பொலி வானை அதிர முத்தiயா மெல்ல நகர்கிறார்.அவர் அரங்கைவிட்டு கீழிறங்கிப பார்வையாளர்களை விழித்து விலகிறார்.முத்தையா விசரனின் கவிதைக்கும் தமக்கும் சம்பந்தமில்லாது உலர் பொருள்களோடு அந்த வீட்டின் குந்திலிருந்தவர்கள் ஒன்றிப்போக,அந்த முற்றத்துக்குச் சில வருகிறார்கள்.அதுள்குமுதினி, செல்லம்,தங்கமணி என்ற மூன்று பெண்களும்,சுந்தரம்,ராசா,மணி ஆகிய நடுவயதுக்காரர்கள்அடங்குவர்.அவர்கள் வீட்டின் குந்தில் பெட்டியோடிருக்கும் உலருணவுப்பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க தங்கமணி பேசத்தொடங்கிறாள்.)



தங்கமணி: ஏன்டி ராசாத்தி இந்தியா எங்களுக்குச் சாப்பாடு போட்டமாதிரி நாடு பிடிச்சுத் தருமாடி?

ராசாத்தி:இந்தா பார் தங்கமணி அக்கா என்னைப் போட்டுப் பிராண்டாத.உன்ர கேள்வியை முத்தையா விசரனிட்டக்கேள்.எனக்கு இந்தியாவைத் தெரியாது.

(தங்கமணி,ராசாத்திக்கான பேச்சு வார்த்தைகளைக்குந்திலிருந்து கூர்ந்து கவனித்த மூன்று கிளார்களில் ஒருவர் எழுந்து முற்றத்துக்கு வருகிறார்.வந்தவர் தங்கமணியிடம் மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவாகப் பேசத் தொடங்குகிறார்.)


மூன்று கிளவரில் ஒருவர்: இங்சபாருங்க,இப்ப எங்களுக்கு இந்தியா சாப்பாடு போட்டிருக்கு.இன்னுஞ்சில காலத்தில அது கட்டாயம் எங்களுக்கொரு தீர்வைச் செய்யும்.இப்ப எங்கட மண்ணுக்கு இந்தியா நேரடியாகத் தலையிட்டிருக்கு.அது எங்கட ஆறுகோடிச் சனத் தொகையை உலகுக்கு எடுத்துச் சொல்லுறதெண்டுதான் அர்த்தம்.


(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது முத்தையா விசரன் ஒரு சிறு பெட்டியைக் காவிக்கொண்டு வருகிறார்.அவரது வருகைக் கண்ட வீட்டின் முன் உரையாடிய கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீளவும் சின்னஞ் சிறுசுகள் அவருக்குப் பின்னால் வால்பிடித்து வருகிறார்கள்.அந்தப் பெட்டியை அவர் முற்றத்தில் வைத்துவிட்டு,அப்பபெட்டியில் அமர்ந்தபடி தன்பாட்டிற்குப் பேசுகிறார்.அது,எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கிறது.)


முத்தையா(விசரன்): இந்தியா பிளேனால பெட்டி போட்டிருக்கு.இந்தப்பெட்டிக்குள் சாப்பாடு இருக்கட்டும்.அது ஒரு நாள் சாப்பாடு தந்த கையால எங்களுக்கு பெட்டியடிக்குமோ எண்டும் பயமா இருக்கு.

(முத்தையா பேசும்போது,அவரைத் துரத்துகிறாள் தங்கமணி.முத்தையா கொண்டுவந்த பெட்டியை முற்றத்தில் விட்டுவிட்டு ஒடித் தப்புகிறார். அவரது பெட்டியை சுந்தரம்,ராசா,மணி ஆகியோர் உடைத்துப் பார்க்கிறார்கள்.அதற்குள் புத்தகங்கள்.அவைகள் எல்லாம் சிவப்பு நிறங்களில் இருக்கின்றன.இளைஞர்கள் அவற்றை விரித்துப் பார்க்கும்போது திரை மூடுகிறது.)

(திரை)


காட்சி:2

(திரைவிரிகிறது.ஒரு மாதாகோவிலது சூழல் அரங்கத்தில்.அது மாதா கோவிலென மற்றவர்கள்-பார்வையாளர்கள் அறியும் திரை அமைப்பு-அரங்கமாக இருக்கவேண்டும்.அந்தக் கோவிலிலுள் வயசான தாயொருத்தி ஜெபஞ் செய்கிறாள்.அவளது குரல் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும்.)



வயசான தாய்:

ஏசுவே உன் பிறப்பையும்
பலமுறைகள் கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்தப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்ஆண்டவனே!


நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது


முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்


எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மௌனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்


நானோ பிள்ளையைத் தொலைத்தவள்
சுற்றஞ் சுகம் தொலைத்தவள்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தருணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறதே!-நீ எமக்குக் கண் திறவாயோ?


எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?


(அந்தத் தாய் மாதா கோவிலில் அழுது மன்றாடுகிறாள்.அவள் கண்ணீருடன் தலைவிரிகோலமாகக் கோவிலைச் சுற்றி அலைகிறாள்.அவளது அருகினில் சில இளைஞர்கள் ஏதோ காரணத்துக்காகக் கூடுகிறார்கள்.அவள் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறாள்.அந்த இளைஞருள் ஒருவன் அத் தாய்க்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.அந்த ஆறுதல் வாய் அசையலில்மட்டும் இருக்கும்.பார்வையாளர்களுக்கு வாய் அசைவுகள்மட்டுமே தெரிய வேண்டும்.இனைஞர்களது ஆறுதல் வார்த்தைகளுக்குப்பின் தாய் கோவிலை விட்டுச் செல்லுகிறாள்.அவளது நடையிலொரு தெளிவு இருக்கிறது. இப்போது மாதா கோவிலில் கூடிய அந்தச் சில இளைஞர்களுள் சுந்தரம்,ராசா,மணி ஆகியோரும் நிற்பது தெரிகிறது.அவர்கள் முத்தையா விசரரின் பெட்டிக்குள் இருந்த நூல்களை மற்றவர்களுக்கும் பரிமாறுகிறார்கள். அப்போது,சுந்தரம் பேசுகிறான்.அப் பேச்சுப் பார்வையாளருக்கு நன்றாகக் கேட்கிறது.)

சுந்தரம்: தோழர்களே,நமது கைக்கு வந்திருப்பது எமக்கான வழிகாட்டி.நாம் தனித்திருந்து ஒன்று கூடியுள்ளோம்.எமது மக்களுக்கு நாம்தான் விடிவை ஏற்படுத்த வேணும்.இந்தியாவை நம்பக் கூடாது.

(சுந்தரத்தின் பேச்சை முறித்து ராசா கேள்வி கேட்கிறான்)

ராசா: ஏன் நம்பக்கூடாது?

சுந்தரம்: அதுக்கு தனது நலன்கள்தான் முக்கியம்.

மணி: அண்ணே எதைவைச்சுச் சொல்லுறியள்?

சுந்தரம்: இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களை வைச்சுத்தான் சொல்லுறேன்.அவர்களை அடக்கும் இந்தியா எங்கட பிரச்சனையையும் அப்படியே அடக்கும்.

ராசா: அப்ப என்ன வழி?

சுந்தரம்: நாங்கதான்,எங்கடி கைகள்தான் உதவும்.எங்கட சனங்களை முதலில் ஒன்றாக்குவம்.பிரிவுகளை-பிளவுகளை ஐக்கியப்படுத்தினால்மட்டுமேதான் நான் விடுதலையடைய முடியும்.


(சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுபையன் ஓடோடிவந்து சுந்தரத்தின் காதுக்குள் ஏதோ சொல்ல அவர்கள் அனைவரும் கலைகிறார்கள்.திரை மூடுகிறது.)

(திரை)

காட்சி:3

(திரை மேலெழுகிறது.அலங்கோலமான வீடு.நாலா பக்கமும் சிதைவுகள்.அந்த வீட்டின் முன்னாள் இருந்து வயசாகிப்போன கிழமான தங்கமணி புலம்புகிறாள்.இண்டைக்கு இருபது வருஷத்துக்கு முன்னால சாப்பாடு போட்ட இந்தியா என்ர குடியைக் கெடுத்துப்போட்டுதே:என்ர வாழ்கையை நாசமாக்கிப்போட்டுதே என்று ஓங்கி அழுகிறாள்.அவளின்ஒப்பாரியைக் கேட்க யாருமில்லை.வீட்டிற்கு முன் பகுதி முள்வேலி தொடுக்கப்ப்டு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்க அங்கே இராணுவத்தின் திமிர் துப்பாக்கி காவி மனிதர்களை கட்டளையுடன் பணிய வைப்பதாகவும்,அந்த மனிதர்களுக்கு உணவுப் பொட்டலும் எறியப்படுவதுமாக இருக்க,அவர்கள் முட்டிமோதி அவ்வுணவைப் பெறுவதுமாக ஒரு காட்சி இருக்கிறது.இப்போது திரை மூடப்படுகிறது.)

(திரை)

தொடரும்
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
28.07.2010

Montag, Juni 21, 2010

ஜனநாயகத்தின் சிதைவு

இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவு


நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.

ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-"ஈழப் போராட்டம்" தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.

இப் புதிய ஆண்டில் மேலும் அவசரகால நிலையைத் தோற்றுவித்து,அதற்கான சட்டநியாயவாதத்தையும் பாராளுமன்றத்தில் இலங்கையை ஆளும் கட்சியாதிக்கம் பெற்றுள்ளது.தொடர்ந்து அவசரகால நிலையைத் தோற்றுவிக்கும் காரணங்களை மக்களது பொது ஒத்துழைப்பின்றியே இக்கட்சியாதிக்கம் செயற்படுத்தி அதைத் தமது நலன்களின் பாதுகாப்புக்கேற்றவடிவில் தகவமைத்து, ஜனநாயகம்-தேசப் பாதுகாப்பு எனப் பேசவும் முற்படுகின்றன.மிக அழகான போலி நியாயங்களை அவர்களது நிறுவனங்களும் செய்து முடிக்கும்போது, மக்களிடம் எந்தவுரிமையும் இல்லையென்றாகிறது.மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட மக்களாண்மை ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கொண்டிருப்பதிற்கில்லை.அது, நோய்வாய்ப்பட்ட ஆரோக்கியமற்ற சூழலைத் தோற்றுவித்து, எதேச்சதிகாரமிக்க குழுக்களைக் கட்சியாதிக்கஞ்சார்ந்து மக்கள்குழாத்துள் தோற்றுவிக்கிறது.இதன் பலாபலன் இலங்கைச் சமுதாயத்திடம் மேம்போக்கான உள்ளக ஒடுக்குமுறையைக் கேள்விக்கிடமின்றி அச்சத்தின்வழி ஏற்றுக்கொள்ளும் உளவியற்போக்கைத் தோற்றுவிக்கிறது.இதுவே,இலங்கையில் நிலவும் குடுப்பத் தார்ப்பாருக்கு வழி வகை செய்கிறது.சாரம்சத்தில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நிலக்கிளார் அமைப்பு முறைக்கு ஒப்பானவொரு "மாதிரி"ச் சமுதாயமாகப்பட்டுள்ளது.

அதிகாரமும், ஜனநாயகமும்:

எமக்குள் பொதுவான ஜனநாயகம் குறித்தும், மேற்குலகத்தில் நிலவும் ஓரளவு ஜனநாயகத் தன்மை குறித்தும் பரவலாகப் பேசப்படுவதுண்டு.இப்போது, மேற்குலக நிதி மூலதனத்தில் ஐரோப்பியக் கண்டம் தழுவிய கூட்டமைப்பு முறைமை உள்வாங்கப்பட்டிருப்பினும் இங்கே ஜனநாயகம் என்பது மூலதனத்துக்குப் பாதுகாப்பளிக்கும் எல்லையுள் வைத்து அணுகப்படுகிறது.இதைக் குறித்து அன்றைய கிழக்கு ஜேர்மனியின் பத்திரிகையாளரும் இன்றைய முன்னணிச் சிந்தனையாளருமான டானியேல்லா டான்(Daniela Dahn)பின்வருமாறு விசனப்படுகிறார்: "Doch die Parlamente haben Macht an die Regierung abgegeben, die Regierung hat Macht an die EU-Kommission abgegeben, diese hat Macht an die Weltbank und die Welthandelsorganisation abgegeben, alle haben also Macht an die Profitwirtschaft abgegeben. Und der Wähler soll seine Stimme abgeben und sich dabei fühlen wie Hans im Glück. Er guckt in die Luft und fragt sich, welche Wahl er eigent-lich hat, wenn niemand die verborgen herrschende Macht beschränkt, die des Kapitals? "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:28 "முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகச் சட்டவாக்கம் பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை அரசிடம் கையளிக்கின்றது.ஐரோப்பிய அரசுகளோ தத்தமது அதிகாரத்தை "ஐரோப்பிய ஒன்றியக் கமிசனிடம்"கையளிக்கின்றன.அக்கமிசனானது உலக வங்கியிடமும்,உலக வர்த்தகக் கழகத்திடமும் இவ்வதிகாரத்தைத் தாரவார்த்துவிடும்போது,இத்தகைய கழகங்கள் யாவும் அதிகாரத்தை உபரிலாபப் நிதி மூலதனப்பொருளாதாரத்திடம் கையளிக்கின்றன.அத்தோடு, ஓட்டுரிமையாளர்களாகிய மக்கள் தேர்தலில் தமது ஓட்டுக்களை தாம்சார்ந்த கட்சிக்கு அளித்துவிட்டு அதன் வாயிலாகத் தமக்கு விடிவு வந்துவிடுவாதாக உணர்கின்றனர்.இதன் வாயிலாக ஆகயத்தைப் பார்த்து"இதைவிட வேறன்ன தெரிவு எமக்கு உண்டு?"என்ற கேள்விகளோடு ஓட்டளித்துவிடுகின்றனர்,மறைந்திருக்கும் மூலதன வர்க்கதின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு எவருமே முனையாதபோது. என்கின்றார்.


டானியேல்லாவின் பார்வைகள்,உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சனையாக இருக்கிறது.இது உலகு தழுவிய வர்த்தகக் கழகங்களது காலில் வீழ்ந்துவிட்ட அரசுகளதும்-கட்சிகளதும் முன் மக்கள் எங்ஙனம் ஏமாற்றி அடிமைகளாக்கப்படுகிறெதன்பதையும் அதைச் சட்டவாகத்துள் நீதியாகவும்-பரிபாலனமாகவும் இட்டுக்கட்டும் பாராளுமன்ற ஜனநாயகம் பொதுத் தளத்தில் பரந்துபட்ட மக்களது எதிரியாக இருக்கிறது.இதன்தன்மையிலான அரச பயங்கரவாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டவாக்கமாகி நியாயப்படுத்தப்படுகிறது.மக்களது உரிமைகளை மெல்ல அளிப்பதற்கு அவர்களது குடிசார் அமைப்பாண்மை முதலில் சிதைக்கப்பட வேண்டும்.இதைக் மிக இலகுவாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் வடிவில் அழித்துவிட்ட இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மக்களது குரல்வளையில் மெல்லத் தனத்து கோரக்கரத்தைப் பதிக்கிறது ஜனாதிபதித் தேர்தலாக.


மக்களாண்மை நிலைப்படுவதற்கான தெரிவில் டானியேல்லா நான்கு தெரிவுகளை ஜனநாயகத்தின் இருப்புக்கு அவசியமாக முன்மொழிகின்றார்:

1): Demokratie bedeutet Volkssouveränität.

2): Demokratie bedeutet Machtbeschränkung.

3): Demokratie bedeutet Wahrung der Menschenrechte.

4):Demokratie bedeutet Rechtsstaatlichkeit.


1):மக்களது சுயாதீனச் செயற்பாட்டின் அர்த்தம் ஜனநாயகமாகும்.

2):ஜனநாயகத்தின் அர்த்தம் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது.

3):ஜனநாயகமானது மனிதவுரிமைகளைப் பாதுகாப்பதென்று அர்த்தமாவது.

4):நீதியின்-சட்டத்தின் ஆட்சியாக இருப்பது ஜனநாயகத்தின் அர்த்திலானது.

இலங்கையில்,ஜனநாயகம்,மனிதவுரிமையென அமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி(கேர்னல் கருணா) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகள் தாம்சார்ந்த அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள் சார்பாக மொழிபெயர்கின்றனர்.இவர்களது பிரிதிநிதிகள் இவர்களைவிடப் பன்மடங்கு ஜனநாயகக் கோரிக்கைகளை மக்கள்முன் சொல்லுகின்றனர்

எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், இதுவரை மக்கள் விரோதமான ஆட்சியை நிலைப்படுத்தியவர்கள்-இயக்கியவர்கள் இவர்கள்தானே?பின்பு, இவர்கள் எதைக் குறித்துப் பேசுகின்றனர்?ஜனநாயகமென்பதை இவர்கள் தமக்கிசைவாக்கிச் சாகடித்போது, அதற்கு மீளவுயிர்கொடுப்பதாகச் சொல்லும்போது-இது- இவர்களால் முடியுமா?

இன்றைய ஐரோப்பியக் கண்டத்துத் தேசங்களது தலைவிதியே உலக வங்கி-வர்த்தகக் கழகங்களால் தீர்மானிக்கப்படும்போது,தென்னாசியப் பிராந்தியத்தில் அரைகுறைவிருத்தியுடைய தேசங்கள்,உலக வங்கியிடம்-உலக ஆதிக்கச் சக்திகளிடம்"பிச்சைப் பாத்திரம்"ஏந்திக்கொண்டும் ஜனநாயகம்-அபிவிருத்தி பேசுகின்றன.குறிப்பாக, ஊழலில் மலிந்த இலங்கைக்கு மக்கள்சார் ஜனநாயகத்தைப் பேணும் பொருளாதாரப்பலம் இருக்க முடியுமா?இலங்கையின் சிறுபான்மை இனங்களைக் கருவறுத்துக்கொண்டேதாம் தமது முரண்பாடுகளைத் திட்டமிட்டுத் திசைதிருப்பிப் பாராளுமன்ற அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஆளும் வர்க்கம், இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு அண்மையில் இருக்குமென்பது ஏமாற்றுவித்தையாகும்.

சமூகச் சிதைவும்,மனித சீவியத்தின் சீர் குலைவும், இலங்கைச் சமுதாயத்துள் நிலைபெற்றுவிட்ட அராஜகக் கட்சி ஆதிகத்துள் மேலும் நெருக்குதலுக்குள்ளாகும்போது ஜனநாயக விழுமியத்தைப் பேணும் எந்தத் தீர்மானகரமான அரசியல்போக்கும் அத்தேசத்துள் முகிழ்ப்பதற்கான சுயசார்புப் பொருளாதாரக் கட்டுமானமும் அதனிடமில்லை!கட்சிகளும்,அதன் தலைவர்களும்,மந்திரிகளும் தேசத்தைச் சொல்லிப் பெற்றகடன்களை உண்டு ஏப்பமிடும்போது தேசத்துள் வாழும் எந்தத் தரப்பு மக்களும் இயலுமானவரை சிறந்த தேச பரிபாலன முறைமையைக்குறித்தும் சிந்திக்க முடியாது.இத்தேசமானது பாராளுமன்ற ஜனநாயகப் பண்பை கட்சிகளது சொல்லாடற் களமாகப் பாவித்துத் தமது எஜமானர்களதும், தமதும் வளங்களைச் சட்ட பூர்வமாகக் கொள்ளையிடுவதில் ஆட்சியை-அதிகாரத்தைக் கொண்டியங்கமுனைகிறார்கள்.இவர்கள் பேசும் எந்த மக்கள்சார் கூச்சல்களும் உண்மையில் மக்களது நியாயமான கோரிக்கைகளையும்,அவர்களது அவலத்தையும்,இராணவச் சர்வதிகாரத்தையும் நிவர்த்தி செய்யப்போவதில்லை!மக்களினங்கள் மதத்தாலும்,மொழியாலும் இன்னபிற அடையாளங்களாலும் பிளவுப்படுத்தப்படும்போது அந்தக் குழு-இனவாதக் கூட்டுள் குறிப்பட்ட இயக்க-கட்சியாதிக்கம் வலுவாகத் தன்னை குழுசார் மதிப்பீடுகளுக்குள் நிலைப்படுத்திக்கொள்ளும்போது, அக் குழாத்துள் நிலவும் அனைத்துச் சமூக அசைவாடல்களையும் அதுவே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது.இதனால் இனம்-மதம்சார் மக்கள் குழாமுள் தேவையுறும் அனைத்துப் பொருளாதார வாழ்வும்-செயலும் ஆதிக்கம்பெற்ற கட்சியின்-இயக்கத்தின் தலைவர்கள்-உறுப்பினர்களது கைகளுக்கு மாற்றப்படுகிறது.அவர்களே குறிப்பிட்ட தேச-அரச சூழலில் அதிகார-ஆளும் வர்க்கமாக மாறுகிறார்கள்.இவர்கள் பரந்துபட்ட ஆளும் வர்க்கக் குணாம்சத்துக்குள் வராது போனாலும், ஒரு குழுவாக-அதிகாரத்துவமுடைய,சட்டபடியான ஆதிக்க சக்திகளாக உருவாகிறார்கள்.இதுவே,இன்றைய மூன்றாமுலக அரசியல் மற்றும்,ஜனநாயகச் சூழலின் எதார்த்தமாக இருக்கிறது.இதைக் கடந்து செல்லத்தக்க அமைப்பாண்மை-குடிசார் நிறுவனங்கள் எமது மக்களுக்கும் இலங்கையின் அனைத்துத் தரப்புக்கும் அவசியமாகிறது.இதைப் பரந்துபட்ட மக்களுக்குள் இருக்கும் தொழிற் சங்கங்கள்,சனசமூக நிலையங்கள்,உள்ளுர் ஆட்சி மன்றங்கள்,பாடசாலை-கல்லூரிகளே முன்னின்று போராடி மக்கள் ஆண்மையை முன்நிறுத்தும் குடிசார் அமைப்புகளை நிறுவிக்கொண்டு, ஜனநாயகத்தின் அதிகளவிலான மேன்மையைக் குறித்து இயங்க முடியும்.

இலங்கையினது இன்றைய அரசியல் சூழலின்பொருட்டு இத்தகைய குரல்களும் அதுசார்ந்த செயற்பாடும் கட்சி-இயக்க ஆதிக்கந்தாண்டி எழுந்தாகவேண்டும்.மக்களது எதிர்ப்புப் போராட்டத்தின் இருப்பு இத்தகைய முயற்சியுள் பெரிதும் தங்கியுள்ளது.எதிர்ப்போராட்டங்களைத் தமக்கு இசைவாக்க முனையும் அதிகார வர்க்கம் பலமான வழிகளில் அதைச் சிதைக்க முனைவதை நாம் காணுகிறோம்.அவற்றில் ஒன்றுதாம் பல்வேறுபட்ட பிளவுகளை வலியுறுத்தி அதனூடாகத் தமது வசதிகேற்ற அமைப்புகளை உருவாக்குதல்.இவை,தாம்சார்ந்த மக்களைச் சொல்லியே அவர்களை அடிமையாக்கும் அரசியலோடு தொடர்ப்பு கொள்கின்றன.இதுள் டக்ளசோ அன்றிக் கருணாவோ இல்லை தலித்துக் கட்சிகளோ விதிவிலக்கல்ல.

ஜனநாயகத்தின் பெயரால் தேர்தல்:

இன்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு எமக்கு ஆச்சரியமானதில்லை.

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆதிக்கத்தை இலங்கையில் நிலைப்படுத்துவதென்பது என்றே அர்த்தமாவது.இதைக் குறுக்கி அவர்களது முட்டாள்த்தனமென மீராபாராதி போன்றவர்கள் பின்னூட்டமாகப் பிதற்றலாம்.ஆனால்,தமிழ்த் தேசியவாதிகளது வர்க்க நலன் என்பது எப்பவும் மேற்குலகஞ்சார்ந்த நலன்களோடு பின்னிப் பிணைந்ததுமட்டுமல்ல,அவர்கள் மேற்குலக-அமெரிக்க உளவுப்படைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் என்பது உண்மையானது.இதற்கு நாம் கடந்த காலத்துத் தமிழ்த் தலைமைகளையும்,இவர்களது அரசியல் நடாத்தையையும் புரிந்துகொள்வது.அவசியம்.இதற்கான சிறு உதாரணத்தைச் சொல்லிவிடுவது உசிதம்.

தமிழர்களின் தேசியத்தைச் சொல்லித் தமது மேட்டுக்குடி நலனைப் பேணியவர்களுள் முக்கியமானவர்கள்,இராமநாதன்-அருணாச்சலம் சகோதரர்கள் என்பது நாம் அறிந்ததே.இவர்களுக்கு"சேர்"பட்டத்தை நன்றிக் கடனாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கியதும் அறிவோம்.இவர்களது வழியில் வந்தவர்கள் மிகக் கறாரான மேற்குலகத்தின் நலன்களையும், ஒடுக்குமுறை வர்க்கத்தோடான நட்புப்பாராட்டியும் எழுந்தவர்கள்தாம் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,செல்வநாயகம் போன்றோர்.இவர்கள் அன்று முன்வைத்த குறுந்தேசியக் கோரிக்கையானது"தமிழர்களுக்குப் பரம வைரிகள் சிங்களவர்களே"என்பதாகும்.இவர்களே,"எந்தச் சிங்களவர்களையும் நம்பக்கூடாது" என அன்று அரசியல் பேசினார்கள்.இதன் வழி மக்களையும் நம்பச் சொன்னார்கள்.பின்பு, இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலத்தி-அல்லது நழுவிக்கொண்ட இவர்கள், 1949 ஆம் ஆண்டளவில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினது அரசில் இணைந்து மந்திரி சபைகளையும் பெற்றுக்கொண்டனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரியாக இருந்தபோதுதாம் மலையகத் தமிழ்மக்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.அன்று பத்து இலட்சம் மக்கள் நாடற்வர்களாக்கப்பட்டபோது இதே தமிழ்த் தலைமைகள்தாம் மேற்குலகச் சார்புச் சிங்கள அரசைக் காத்து வந்தனர்(இதுள் செல்வநாயகம் முரண்பட்டுக்கொண்டதும் உண்டு).இவ்வண்ணமேதாம் இத் தமிழ்த் தலைமைகளைப் புரிந்தாகவேண்டும்.பின்பு,இதுவோ தொடர்கதையாகியபோது 1965 ஆம் ஆண்டும் இதே வலதுசாரியத் தமிழ்த் தலைமைகள்தாம் ஐயக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டராசாங்கத்தை அமைத்தனர்.அதுள்,மு.திருச்செல்வம் மந்தரிரயாகவும்,தமிழ்க் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் சபாநாயகராகவும் பதவி வகித்தனர்.

இங்கு,ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, தமிழ்த் தலைமைகளது மிகக் கெடுதியான பக்கங்கள்தாம் நமது விழிகள்முன் வருகிறது.இவர்கள் செய்தது அனைத்தும் துரோகம்-காட்டிக்கொடுப்பு.இலங்கைக்கும்,இலங்கை மக்களுக்கும்-ஏன்,முழுமொத்த மக்களுக்கும்- எதிரிகள் தமிழ்த் தலைமையும்,ஐக்கிய தேசியக் கட்சியுமே.இதைப் புரிவதற்கு நாம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை விளங்க முற்பட வேண்டும்.

அதாவது, 1958 ஆம் ஆண்டு அரசியலைச் சொல்லியாகவேண்டும்.

இலங்கையினது தேசிய முதலாளியத்தின்(வளர்கின்ற நிலையுள்)அரசியல் தலைவரும்,ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முன்றாவது உலக அணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி: பண்டாரநாயக்காவோடு மேற்குலக விசுவாசியும்,அமெரிக்க உளவுப்படையின் கூலிக்காரனுமான செல்வநாயகம் ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்தார்.அதை,பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பது சொல்லக்கடவது.

இது,தமிழ்பேசும் மக்களது சுயாட்சி சம்பந்தமாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம்.இவ்வொப்பந்தம் இன்றைய சர்ச்சைகளைவிட மிக முன்னேறியது.இதை ஏற்றுச் செயற்படுத்தியிருந்தால் இன்றைய அழிவுகள் எமக்கு ஏற்பட்டிருக்காது.ஆனால், இப்வொப்பந்தத்தால் நஷ்டம் அடையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே செல்நாயகம்,மற்றும் தமது அடிவருடிகளான ஐ.க்கிய தேசியக் கட்சி மூலம் இவ்வொப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்த அரசியலுக்கு முழுவுடந்தையாக இருந்தது அமிர்தலிங்கம்-செல்வநாயகம்,மற்றும் ஜே.ஆர்.கூட்டே.இவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அமெரிக்க உளவுக்காரர்கள்.களனியில் இருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்,புத்தபிக்குகளும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்று பண்டாவுக்கு நெருக்கடி கொடுத்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றியதும் இன்றும் அழியாது வரலாறு.பண்டாவுக்குப் பொட்டுவைத்ததும் இவர்களது அமெரிக்க உளவுச் சேவையே.

அன்று,பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியையும்,ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையையும் தூண்டியபடி, தமது முகவர்களான தமிழ்த் தலைமையின் மூலமும் சிங்களவர்களுக்கும்-தமிழர்களுக்கும் எதிரான இனவெறியைத் தூண்டிவிட்ட அதே அமெரிக்கா இப்போது பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மகிந்தாவைக் கடாசுவதற்கு முனைகிறது.

இங்கே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன் சேகாவை ஆதிரிப்பது அமெரிக்க நலனின்பாற்பட்டது.அதே கடந்தகாலத்து அரசியல் மீளவும் அழிவுகளின் நடுவேயும் பலாமாக நம்மை நெருங்குகிறது.அன்று பண்டா தமிழ் மக்களுக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் இன்று மகிந்தா இல்லை.சுயாட்சி ரீதியாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம் அன்று.இன்றோ புலிகளை அழித்து முழுமொத்த மக்களையும் இலங்கையர்களெனும் வாதம் மகிந்தாவிடம்.இது,சமக கால ஆசிய மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதுகுறித்து ஏலவே ஒரு கட்டுரையில் பேசியுள்ளன்.அன்று(1958),யாழ்ப்பாணத்தில் சிங்களச் சிறீ எழுத்துக்களைத் தார்பூசி அழித்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றிய அமிர்தலிங்கத்தின் வாரீசுகள் இன்று பொன்சேகாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி தமிழ் பேசும் மக்களது தலையில் மண்ணை அள்ளிப் போடுகின்றனர்.

இன்றைய இந்தச் சீரழிவு தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை அவசியமானது.அவர்கள், தமது வர்க்க நிலையை நன்றாகவுணர்ந்தவர்கள்.அனைத்தையும் மக்களதும்,தேசியத்தினதும் பெயரால் இவர்கள் ஆற்றும்போது,அங்கே மக்களது நலன்கள் கிஞ்சித்தும் கிடையாது.கடந்தகாலத்துத் தலைமையுஞ்சரி அவர்களது வாரீசுகளது தலைமையுஞ்சரி இல்லைப் புதிய தமிழ் அமைப்புகள்-கட்சிகளும்சரி எப்பவும் பரந்துபட்ட முழு இலங்கை மக்களுக்கு எதிரிகளாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையுள் வன்னியில் செய்யப்பட்ட இனவழிப்புக்கு எதிரான கோசங்களோடு தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக அரசியல் போராட்டஞ் செய்தே ஆகவேண்டும்.இது,பரந்துபட்ட ஜனநாயகப் பண்புக்குமையவே நடாத்தப்படவும் உரிமைகள் இருக்கிறது.தம்மிடம் ஓட்டுக் கேட்பவர்களிடம் தமது வாழ்வாதாரத்தைக்கட்டியமைப்பதற்கும்,தமது அடிமை வாழ்வை அகற்றித் தாமும் சிங்களும்பேசும் மக்களுக்கிருக்கும் அனைத்து உரிமையையும் இலங்கையில் பெறுவதற்கான முன் நிபந்தனைக் கோரிக்கைகளையும் முன்மொழிய வேண்டும்.இதை ஏற்காதவர்களுக்கு ஓட்டுப் போடுவதைவிட இல்லாதாக்குவதே மேல்.ஆனால்,வர்க்க அரசியலின் போக்கில் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் ஆளும் வர்க்கமானது இத்தகைய கட்சிகளதும்,குழுக்களதும் அரசியல் கோரிக்கைகளை மெல்லக் கண்டுகொள்ளாதிருக்கின்றன.இதன் வாயிலாகவே இவர்கள் மக்களை அண்மிக்கும்போது மக்களுக்காவே குரல் கொடுப்பதாக நாட்டிலுள்ள உண்மையான பிரச்சனைகளைப் பேசி மக்களை அண்மிக்கின்றனர்.இதன் உச்சபட்சமாக இன்று மகிந்தாவின் அரசில்-தேர்தல் கூத்துக்கள் எம்.ஜீ.ஆர் பாணி அரசியலை விஞ்சிவிட்டது.அவ்வண்ணமே,பொன்சேகா தமிழ் மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்பதும்.இதற்காக எழுத்து மூலம் அறிக்கை வழங்குவதும் சாத்தியமாகிறது.

இத்தகைய அரசியல்-ஜனநாயக நடாத்தையில் மகிந்தா இங்ஙனம் உரைக்கின்றார்:

"எதாத் மகிந்தா, அதத் மகிந்தா,கெற்றத் மகிந்தா!"

இது,"நேற்று,இன்று,நாளை",எனப் படங்காட்டிய எம்.ஜீ.ஆரை. ஞாபகப்படுத்துகிறதா?"

நேற்றும் மகிந்தா,இன்றும் மகிந்தா,நாளையும் மகிந்தா"வரட்டும்.ஆனால்,இலங்கை அரசினது பயங்கரவாதத்துக்குப் பலியாகும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான அரசியலும்,அவர்களது குரலும் பெருந்தேசவுருவாக்கத்துள் பலியாக்க முனைவதுதாம் பிரச்சனை.இதை அனுமதிப்பது ஜனநாயகமா?

நாம்,மீளவும் டானியேல்லா டானிடம் செல்வோம்.


"Wer souverän sein will, muss sachkundig sein. Wis-sen ist Macht. Wer dem angeblich alternativlosen, neoliberalen mainstream etwas entgegen-halten will, braucht Argumente. Doch während der verschuldete Staat, der seine finanzielle Souveränität längst verspielt hat, die Mittel von Schulen und Universitäten kürzt, sind die Massenmedien demokratievergessen der Quote erlegen. In der nach unten offenen Schlicht-heitsskala dominieren Verflachung und Entpolitisierung. In Kriegszeiten auch Tabuisierung und Lüge. Ein hohes Niveau des öffentlichen Diskurses ist aber Grundlage der Demokratie. Sie braucht Bürger. "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:29 "எவரொருவருக்கு முற்றுமுழுதான சதந்திரத்தைக் கொண்டியங்கும் உணர்வு அவசியமோ அவர் அனைத்தையும் அறிந்தவராக-அளந்தவராக இருக்கவேண்டும்.புத்திமான் பலவான்.மாற்றில்லையெனப் பொய்மைக்கொண்டியங்கும் சூழலில் நவலிபரால்களது ஆதிக்கத்தை கொஞ்சம் எதிர்த்து-தூரவிலத்திவைக்க விரும்புகிறாரோ அவர்கட்குத் திறந்த உரையாடல் அவசியமாகிறது.கடன்பட்ட தேசம் தனது தேசத்தின் சுயாண்மையோடு விளையாடுகிறது.இது,தனக்குக் கடனளித்த தனது எஜமானர்களுக்கேற்றபடி அனைத்துச் சமூக மானியத்தையும் வெட்டுகிறது.பாடசாலை பல்கலைக்களகமென அனைத்துக்கும் மானியக் குறைப்பு.ஊடகங்கள் இதுகுறித்தான அளவுகோலைப் புதைத்துவிட்டுக்கொள்கின்றன.இத்தகைய அளவுகோலின்கீழ் தட்டையான அரசியல் நீக்கம்பெறுகிறது.யுத்தகாலத்துள் தடைகளும் பொய்மையும் மக்கள் அரங்குக்கு மேலெழுகிறது.எனினும்,அதீதமட்டத்துக்கான உரையாடல்-விவாதமானது ஜனநாயகத்தின் அடிப்படையான மூலம்."

பொதுத்தளத்திலான இன்றைய அரச பயங்கரவாதத்தையும், அதுசார்ந்த நவலிபரல்களது பொருளாதார முன்னெடுப்புகளையும் நாம் பொதுத்தளத்தில் விவாதித்து உரையாடவேண்டியுள்ளது.இதிலிருந்து விலத்துபவர்கள் நடைமுறை அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதற்கு உதவுபவராக மாறுகின்றார்.இன்றைக்கு ஜேர்மனியப் பொறுத்தவரை யுர்க்கன் ஹாபர் மாஸைக்(Jürgen Habermas) கடந்து செயற்பாட்டுத்தளத்தில் மிகவேகச் செயற்படுபவர்கள் சுதந்திர பொருளாதார(Freier Wirschaft-Humane Wirschaft) வாதிகளும்,இடதுசாரிய(Die Linke)வட்டாரமும்தாம்.இதுள், சுதந்திர-நியாயவாதப் பொருளாதாரம் சில்வியோ கேசலின்(Sivio Gesell-Die Natürliche Wirschaft Ordnung) பொருளாதாரக்கொள்கையினால் அற்றாக்கிடம்(Attac_http://www.attac.de/) தஞ்சம் புகுகிறது.இடதுசாரியவட்டமே திறந்த உரையாடல்களை ஊடகங்களிலும் பொதுத் தளத்திலும் நிகழ்த்துகின்றன.இலங்கைபோன்ற தேசத்துள் குறைந்தபட்சமாகவாவது இத்தகைய இடதுசாரிகள் பொதுத் தளத்தரில் மக்களோடு உரையாடல்களை ஆரம்பித்தாகவேண்டும்.

தமிழ்நாட்டில், இதைப் புதிய ஜனநாயகம்-மக்கள் கலை இலக்கிய கழகங்கள் மிக நேர்த்தியாகச் செய்கின்றன.நமது தேசத்துள் இது பெயர்ப்பலகைக் கட்சி மட்டத்தோடு நாலு நபர்களது சிண்டைப்பிடித்து அடிக்கும் விவாதமாக மாறியுள்ளது.நாம்,தமிழ்ச் சூழலுக்குள் நமது சிந்தனைகளை விரிவாக்க வேண்டும்.உலகத்துள் நடக்குள் உரையாடலின் பண்புகளை உள்வாங்கி, அனைத்தையும் அறிதல் அவசியமாகிறது.நாளைய சூழலில் பரந்துபட்ட மக்களது வெற்றி நேரடியான வெகுஜனத் திரளின் பங்குபற்றலிலேயே தங்கியுள்ளது.இதைத்தாம் டானியேலா டான் மிகக் கறாராகச் சொல்லிச் செயலில் இறங்கி நாற்பது ஆண்டுகள் போராட்டத்தோடு இயங்குகிறார்.

இவருக்கும் ஹபர் மாசுக்கு(Jürgen Habers) இடையிலான வித்தியாசம் நோய்வாய்ப்பட்ட முதலாளியக் குழந்தைக்கு மருந்துகொடுத்துக் காப்பாற்ற முனைபவருக்கும், அதை கொன்று மாற்று அமைப்பை உருவாக்குவதற்குமான வித்தியாசம்.இதுள் டானியேல்லா(Daniela Dahn) இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.எனினும்,எமது தடீர் புரட்சி-திடீர் கட்சி அவரிடம் எப்போதும் நீக்கம்பெற்றே இருக்கிறது.


மக்கள் குடிசார் அமைப்புகளை உருவாக்கிககொள்வது:


இந்த நிலையுள், ஹன்ஸ் ஹேர்பேர்ட் ஆர்மின்(Hans Herbert von Armin)கூறுகிறார்:It ultimately is only one antidote to the restoration of democracy as government by and for the people: the activation of the citizens themselves have become mature and the creation of the necessary institutions. This recognition is made by growing, and it is the deeper reason for the fast-growing popularity, the elements of direct democracy in the Federal Republic (and elsewhere) to find for some time. "-From the beautiful illusion of democracy ஆர்மின் கூற்றை உள்வாங்கும்போது,ஜனநாயகச் சூழலை மக்கள் சுயமாக அரசிலிருந்து விலத்தி உருவாக்க வேண்டியுள்ளது.இதற்காக மக்களே தம்மால் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகளை முறியடித்து முன்னேற வேண்டும்.இங்கே,சட்டம்,ஒழுங்கு-நீதி என்பது ஒடுக்குமுறை ஜந்திரமாக இருக்கும்போது மக்களைச் சுயமாக இயங்க அனுமதிக்காதிருப்பதற்கான தயாரிப்புக்களை கட்சி ஆதிக்கம் தமது தொங்குசதைக் குண்டர்களால் ஆக்கிவிடுகிறது.இதை நியாயப்படுத்த அவசரகாலச் சட்டங்கள் அதற்கு அவசியமாகிறது.இலங்கை மக்களுக்குச் சுய ஆளுமை இல்லாதவொரு சூழலில், அதே மக்கள் சுயமாகக் குடிசார் அமைப்புகளை உருவாக்குவதென்பது ஒருகட்டத்தில் அவசியமாகிறது!இஃது,அரசினது போலி ஜனநாயக் குரலை அம்பலப்படுத்தி, நேரடியான ஜனநாயகத்தைக் கொணர்வதில் அத் தேசத்தின் பரந்துபட்ட மக்களது சுய எழிச்சியை,போராட்டங்களை-அமைப்பாண்மையைத் தூண்டுவதற்கு அவசியமாகிறது. இங்கே,இதற்கு மாறாக,தமிழ்த் தலைமைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போடும் கூச்சல், நிலவும் பாசிசப்போக்கை முலாம் பூசி ஜனநாயகமாகக்காட்டுவதற்கானதென்ற உண்மையைப் பேசியாகவேண்டும்.

ஆனால் யுத்தத்தைக்காட்டி,அர்த்தம் அறியாது அமிழ்ந்து போகும் மக்களது நியாயமான கோரிக்கைகள்.மக்களது அவலத்தை ஏற்படுத்திய இலங்கை ஆளும்வர்க்கத்து திமிர்தனமான யுத்தம் மற்றும் இனவாத ஒதுக்குதல்-ஒடுக்குமுறைகள்.இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் மீளவும் இவற்றையே தாம் சார்ந்த மக்கள் இனத்துக்கும்,தமக்குள் இருந்த சிறுபான்மைக் குழுமங்கங்களுக்கும் ஆயுத அடக்குமுறையூடாகச் செய்து முடித்தன.

ஒன்று, சட்ட பூர்வ அரசாகவும்,

மற்றது,சட்டபூர்வமற்ற இயக்க ஆதிக்கமாகவும் இருந்துகொண்டது,

இவ் விரண்டுக்குப் பின்னாலும் மேட்டிமைக் குழுவே தமது நலனுக்கான தெரிவில் யுத்தத்தைத் தொடர்ந்தன.இவைகள்,இலங்கையின் பரவலான மக்கடொகுதிக்கு எதிரான சக்திகளாக இருந்தும் மக்களைத் தமது வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்குவதற்கான தெரிவுகளாக ஜனநாயகப் பண்புகளை முதலில் இல்லாதாக்கிக்கொண்டன.அரசு,சட்டபூர்வ அரசு என்னும் அங்கீகாரத்தைப் பாராளுமன்றத்துக்கூடாகப் பெற்றுவிட எப்போதும் அதையொரு கருவியாக வைத்திருக்க விரும்பியது.

இயக்கங்களோ தமது அதிகாரத்தை-அடக்குமுறையை அப்பாவி மக்கள்மீது ஏவுவதற்கு"தாயகம்-தமிழீழம்"எனும் கோட்பாட்டைக் கருத்தியற்றளத்தில் ஊன்றி அதையும் ஒரு ஆயுதமாக முன்னெடுத்தபோது,இலங்கையின் சிங்கள மக்களுக்கு ஒடுக்குமுறை ஜந்திரமான அரசு-பரவாலான மக்களது எதிரி என்பதையும் தாண்டி-சிங்கள மக்களது இருப்புக்கும்-அவர்களது இனஞ்சார்ந்த பாதுகாவலானகச் சிங்களத் தேசியத்தின் அடையாளமாக மாறுகிறது.இயக்க வாத முன்னெடுப்பு,இலங்கைச் சிங்களவாத அரச பயங்கரத்தினூடாக வளர்ந்தபோதும் அவ்வளர்ச்சியில் மீளவும் சிங்களப் பேரினவாதம் தழைத்தோங்கும் சிறப்பான அறுவடையைச் சிங்கள மேட்டிமைக் குடிகள் அறைவடை செய்ததுபோன்றே, தமிழ் மேட்டிமைக் குடிகளும் இயக்க வாதத்தால் செழுமையான பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிருந்தன.இவை, இலங்கைக்கு வெளியில் தமிழ் மேட்டுக்குடிகளது பரந்தபட்ட இலாப நோக்கான வர்த்தகமாகவும் இருந்து கொண்டிருக்கிறது இன்றும்.


இறுதியாக,ஒரு விளைவைத் தரத்தக எதிர்வழி இருக்கிறது. ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்காக,அரசானது மக்களுக்கானதென்றவகையில் வாக்களிக்கத் தகுந்த மக்கள் சுயமாகத் தமக்கு அவசியமான குடிசார் நிறுவனங்களை அமைப்பதற்கு முனைவது.இப் படிப்பனவு மிகுதியாகக் கடைப்பிடிக்கத்தக்கது,கூடவே,அதன் ஆழமான அர்த்தம் மிக வேகமாக மாற்றுக்கருத்துச் செயற்பாடு வளர்வது என்றும் எடுக்கலாம்.இந்த மூலமானது நேரடியான ஜனநாயகத்தை நாம் முழுமையாக அநுபவிப்பதாற்கு மக்கள் ஆண்மைபெறுவது அவசியமாகிறது.இதனுடாக, ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்கும், சரி செய்வதற்குமான அரசு, மக்களுக்கு அண்மையில் இருப்பதும் அவசியமாகிறது.இத்தகைய கருத்து நிலையுள் மக்கள் முழுமையாகத் தமது ஆளுமையைக் காணவேண்டுமாயின் அவர்களது வாழ்வாதாரங்களும் மீளக்கட்டியமைப்பட்டு மக்கள் சமூகமாக வாழும் நிலை உருவாக வேண்டும்.திறந்தவெளிச் சிறையுள் கொத்தடிமைகளாக இராணுவக் கண்காணிப்பின்கீழ் வாழும் மனிதர்களிடம் மகிந்தாவையும்,பொன்சேகாவையையும் நியாப்படுத்திவிடும் தமிழ்க் குழுக்கள் கட்சிகள் உண்மையில் ஜனநாயகத்தின் எதிரிகள்.இவர்களுக்கு அதன் அர்த்தம் அவசியமற்றது.ஏனெனில்,இவர்களே இன்றைய கட்சிகளது மிகப் பெரிய அடியாட் குழுவாக மக்களுக்குள் கோலாச்சுகின்றனர்.எனவே,மக்களது சுய ஆளுமை மழுங்கடிக்கப்படுவது இவர்களைப் பொறுத்தவரை இவர்களது இருப்புக்கு அவசியமாகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி.

Freitag, März 26, 2010

"ஷோசலிசம்".

"தேசம் விடுதலையாவதும்,
தேசியம் நிலைப்பதும்,
தமிழ் மொழி ஆளுவதும்
உங்களின் அடிபிடியினாற்றாமெனில்
நிச்சியம் அந்த விடுதலை
உங்களுக்கில்லை!"

இப்போது சிந்திக்கிறேன்
நான் கேட்ட வார்த்தைகள்,
எனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்
அனைத்துக்கும் என் நன்றி.



அன்புக்கும்
அங்கீகரிப்புக்கும்
ஆட்சேபத்துக்கும்
என்னை இவை உட்படுத்தியவை
இவைகளின் வழி சிந்திக்கிறேன்
இவை என் அன்புக்கு அவசியமானவை
கவனிப்பு நிறைந்த
நித்திரைக்காழ்த்தும்
பேச்சுக்குரிய இவைகளை இன்றும்...

இவை மகிழ்ச்சியை விரும்புபவை.

போராட்டமே இதன் அழகு
எனினும்,
இப்போது உன் படகோடு
என் தந்தையே
அதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்
என்னால் கை கூடவில்லை.


என்னிடமும்
உன்னிடமும் உலகம் நிறைந்திருக்க
ஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ?
எனதும்,
அடுத்த தலைமுறைக்கும் கூறுவதற்குப் பலவுண்டு...


அதோ,
வானத்தின் மூலையில்
ஒளிருமிந்த நிலாவைப்போல்
துள்ளி விளையாடத்தக்க
உங்கள் மனதைக் கெடுக்கும்
கூலிக் கவிகளைக் கடைந்தேற்றுங்கள்.

இன்னுமா
இவர்களை நம்புகிறீர்கள்?

ஆத்தைமாரின்
கொட்டில்களே
அவர்களுக்குச் சொந்தமில்லை!
இதற்குள்
தேசம் சொந்தமாகிடுமா?

போங்கள்,
போய் அடுப்புகளெரிக்க
வழியைப்பாருங்கள்!

ப.வி.ஸ்ரீரங்கன்

Montag, Januar 18, 2010

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...

டந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும்,பொருளாதார அறிஞரும்,உலக ஏகாதிபத்தியத்துக் எதிரான விமர்சகருமான யூர்க் கூப்ஸ்சிமித்தை(Prof.Dr.Juerg Huffschmid) இழந்தாம்.பேராசியர் கூப்சிமித் மிக முக்கியமான கோட்பாட்டாளர். ஜேர்மனியப் பாசிசத்துக்கு எதிரான போரில் எழுபதுகளில் ஜேர்மனிய மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.இதற்காக ஜேர்மனிய பெருநகரான பிறீமன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்துறையுள் இணைத்துக் கற்பித்திருக்கிறார்.இவரது இழப்புக்குப் பின்பாக நாம் இப்போது, இழந்திருப்பது பிரான்சினது இடதுசாரியமுகாமின் செயல் வீரனும், அதிமுக்கியமான கோட்பாட்டாளரும் தத்துவவாதியுமான டானியல் பென்சாய்(franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd ). இரண்டாவது தடவையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டக்களம் தனது சிந்தனையாளர்களை,வழிகாட்டிகளை மெல்ல இழந்திருக்கிறது.



( Prof:Dr.Juerg Huffschmid)

கடந்த வருடம் டிசம்பர் 5.2009 அன்று ஜேர்மனிய மார்க்சியர், பேராசிரியர் யூர்க் கூப்சிமித் நோய்வாய்க்குட்பட்டுத் தனது 69வது வயதில் மரித்தார்.இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.80 களில் மார்க்சிய ஆய்வு வட்டத்துக்கு(In den 80er Jahren war er Mitarbeiter des Instituts für Marxistische Studien und Forschungen(IMSF))இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார்.பல விதமான போராட்டப்பாத்திரத்தை உலகமயப் பகாசூர நிதிநிறுவனங்களுக்கெதிராகத் தொடர்ந்து நடாத்தியவர்.இவரது ஆய்வுள்,சிந்தனைகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் புதிய போராட்ட வியூகங்களைக் கட்டியமைத்தது.இவரது இழப்புக்குப் பின் இப்போது பிரஞ்சிய மரபு மார்க்சியர் டானியல் பென்சாய் இவ்வலகில் தனது போராட்டத்துக்கு முற்றுப் புள்ளிவைத்து, அதை உலகு தழுவியமுறையில் கையளித்துச் சென்றுள்ளார்.


12.ஜனவரி 2010.அன்று, பிரான்ஸ் இடதுசாரியவட்டத்து தத்துவவாதியம்,கோட்பாட்டாளரும் போராளியுமான டானியல் பென்சாய் இவ்வுலகில் தனது போராட்டத்தையும்,வழிகாட்டலையும்விட்டுச் சென்றிருக்கிறார்.ஐரோப்பியச் சூழலுள் 70களில், முதலாளித்துவப் பாசிச ஒடுக்குமுறைக்கெதிரான போராளிகளில் மிக முக்கியமான பேராற்றல்மிக்கவர்கள் பிரான்சிலும்,இத்தாலியிலும் இருவர்.அவர்களுள் ஒருவர் இந்தப் பிரஞ்சிய மார்க்சியரடிக்கல் டானியல் பென்சாய்.மற்றவர்,இத்தாலிய நவ மார்க்சியர் அன்ரோனியோ நெக்றி(Antonio Negri).

(Antonio Negri)

அன்ரோனியோ நெக்கிறி இன்று தனது கடந்தகால மார்க்சியப் புரிதலிருந்து-புரட்சிகர கட்சியினது போராட்ட,யுத்த தந்திரோபாயத்திலிருந்து வேறொரு பாதையில் இன்றைய பல்தேசியப் பொருளாதார நகர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.இவரது புதிய நூல்களான Commonwealth, Goodbye Mr.Socialism போன்றவை மிகப் பெரிய சர்ச்யை இடதுசாரிய வட்டத்துக்குள் செய்தபடியிருக்கிறது.போராட்டப்பாதையில் அதன் செல்நெறிகுறித்து நிறைய மாற்றங்களைக் கோருபவராக இருக்கின்றார் நெக்றி(எழுபதுகளில் இவரது ஓப்பறாய் (Operaismus)அமைப்பு நடவடிக்கையானது மிகப் பெரிய இரத்தக்களிரியை இத்தாலியில் தோற்வித்தது.இந்தப் போராட்டமுறையானது அவருக்கு முப்பதாண்டுச் சிறையாக அமைந்து தோல்வியிலும் முடிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்).

தற்போதைய டானியல் பென்சாயினது இழப்பு, உண்மையான போராளியினது இடைவிடாத பல்முனைப் போராட்டத்துக்கு உதாரணமாக அமைந்துபோகிறது.சதா போரிட்டுக்கொண்டு பிரான்சினது வீதிகளில் மக்களது போராளியாக-மக்களைத்திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தைப் பாசிச அரசை எதிர்த்துப் போராடிய டானியல் பென்சாய், ஒரு அற்புதமான சிந்தனையாளன்.இவரது நூல்கள் ஜேர்மனிய மொழியில் முழுமையாக மொழியாக்கப்படவில்லை.குறிப்பட்ட தத்துவார்த்தத் தெரிவுகளின் ஜனநாயகம் என்றால் என்ன?மற்றும் சுயதீனம் என்றவை மிக முக்கியமான தத்துவார்த்தத் தேடலை உள்ளடக்கியது.சதா மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தைச் செய்த இந்த மரபு மார்க்சியப் போராளி, கோட்பாட்டுரீதியாவும் மிக முக்கியமானவர்.இடதுசாரிய வட்டத்துள் நாளாந்தம் விவாதிக்கப்படும் தத்துவார்த்தப் போக்குள் அன்ரோனியோ நெக்றி,டானியல் பென்சாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது.


90களில் டானியல் பென்சாய்க்கும் அநன்ரோனியோ நெக்கிறிக்குமான அரசியல் நெருக்கும், நெக்கிறியின் பிரஞ்சியப் புகலிட வாழ்வில் ஆரம்பித்துக்கொண்டது. லூசியோ அல் தூசரது கொள்கைகளுக்கும் இருப்பியல்சார் கோட்பாட்டுக்களுக்கும் நாளாந்தம் டானியல் பென்சாய் பெரும் சர்ச்சைக்குரியவராகவும் அவரது போராட்டச் செல்நெறி இடதுசாரியவட்டத்துக்கு நாளாந்தம் பாரிய அடிபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

( franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaid )

என்றுபோதும்,மிகப் பெரும் முதலாளித்து எதிர்பாளரான இந்தத் தத்துவவாதி, உலகத்தின் முன் நமக்குப் பல உதாரணங்களைவிட்டுச் சென்றிருக்கிறார்.அல்ஜீரிய யூதப் பெற்றோருக்கு 1946 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூலூசில் பிறந்த டானியல் பென்சாய், பிரஞ்சியக் கம்யூனிசக் கட்சியில் இருந்து வெளியேறிவர்.பிரஞ்சிக் கம்யூனிச வாதிகளது பாராளுமன்றச் சகதியையும்,எதிர்ப்புரட்சி அரசியலையும் நிராகரித்து வெளியேறிய உண்மையான புரட்சிகாரன். இறுதிவரையும் புரட்சியைக் காட்டிக்கொடாத ஒரு பெரும் பாட்டாளிய வர்க்கத் தோழன்.எதிர்ப்புரட்சியை நிராகரித்து, புரட்சிகர இளைஞர் அணியை(Jeunesse communiste revolutionnaire-Revolutionary Communist Youth) 1966 இல் தோற்றுவித்து, உலகு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்போராட்டத்தில் பங்களித்த இந்த மார்க்சியரது இழப்பு மிக அதிகமான இழப்பாக இருக்கிறது.


இந்தவுலகத்தை மாற்றுவதிலும், முதலாளித்துவப் பயங்கரவாதப் பாசிசத்தை இல்லாதாக்குவதிலும் நேரடியாகக் களத்தில் நின்ற போராளியாக இருக்கும் அற்புதமான செயற்பாட்டாளர்கள் இருவரை, இப்போது ஐரோப்பிய இடதுசாரியவட்டமும் உலகமும் இழந்துபோனது எதிர்ப்பு அரசியலுக்கான நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.

பரந்துமட்ட மக்களது அரசியல் பொருளாதார வாழ்வுக்கான போராட்டத்தில் சலியாது போராடிககோண்டு, மாற்றுக்காகச் செயற்பாட்டில் இருந்த சிந்தனையாளர்கள்-போராளிகளில் இருவரை இழந்த இவ்வாண்டு கடினமான பணியை ஏகாதிபத்திய-பாசிச எதிப்புப் போராட்டக் களத்துக்குத் தந்திருக்கிறது.இறுதிவரை சளையாது போராடுவதும்,ஆய்வதும்-அறிவதும்,அதுசார்ந்து புதிய வியூகங்களை அமைப்பதையும் நாளாந்த வாழ்வாக்கிய இவர்களது வழியில் பயணிக்கும் ஒவ்வொரு பாட்டாளியவர்க்கச் சிந்தனையாளருக்கும் நாம் தலைசாய்கிறோமோ இல்லையோ, இவர்களது வழிகளையாவது புரிந்துகொண்டு உரையாடல்களையும்,போராட்டத்தையும் முன்னெடுத்தாகவேண்டும்.ஈடு செய்யமுடியாத சிந்தனையாளர்கள் இருவரது இழப்பும் நமக்குள் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்
ஜேர்மனி

18.01.2010