Posts mit dem Label நூல் விமர்சனம் -பகுதி: 5 werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label நூல் விமர்சனம் -பகுதி: 5 werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, August 11, 2012

சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில்[5]

அன்பு நண்பர்களே,வணக்கம்!.இது,நாவலன் எழுதிய "தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏகாதி பத்தியங்களின்சதி" எனும் நூலுக்கான தமிழரசன் எழுதிய விமர்சனத்தின் இறுதிப்பகுதி. இப்பகுதியானது நாவலனது நூலுக்கான விமர்சனத்தைக் கொண்டியங்கினாலும் அது, விரித்து வைத்து நகரும் தளமானது உலகமயப் பொருளாதார நகர்வின் விளை நிலமாகும்.

இந்தப் பகுதியில், மூன்றாம் மண்டலமெனும்[Dritte Welt_Schwellenland  ] பொருளாதாரக் குறியீட்டு அட்டவணைப்படுத்தலுக்குரிய நாடுகளது உயர்வு-தாழ்வு குறித்து நிறையப் பேசுகிறார்.

ஜேர்மனியப் பேராசிரியரும்,சிறந்த இடதுசாரிய அறிஞருமான ஓஸ்க்கார் நேக்ற் [Prof.Dr.Oskar Negt  ] குறித்த வரை முறைகளை ஆதாரமாகவும் பயன்படுத்துகிறார் தமிழரசன்.அவரது தரவுகள் பலமானவைதாம். ஓஸ்க்கார் நேக்ற் குறித்த தரவுகளையுந்தாண்டியின்று  சீன அந்நியச் செலவாணியின் கையிருப்பு 3 ரில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது.


ஓஸ்கார் நேக்ற் [Sozialphilosoph Oskar Negt  ]ஜேர்மனியில் அனைவருக்குமான நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை[Das bedingungslose Grundeinkommen ] அரசு செய்ய வேண்டுமென வாதிடுபவர்.அதை,இன்றைய ரோசா லுக்சம்பேர்க்கான சார வாகன்கினேக்ற் [Dr.Sahra Wagenknecht ] நிராகரிப்பதும் புரியத் தக்கதே.

உலக மயமாக்கலது விளைவைக் குறித்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முயன்றபோது பேராசிரியர் டாக்டர் பேர்ன்ட் சென்வ்[ Prof.Dr. Bernd Senf ] வை வாசிக்கவும்-கற்கவும் முடிந்தது.அவரது பொருளாதார விளக்கம் எப்பவும்போலத் தமிழர்கள் அறியாத சில்வியோ கேசலது[ Sivio Gesell ] நியாயவாதப் பொருளாதரத் தத்துவத்துக்கமைய நகர்வது.அத்தகைய மேதமையான விளக்கத்தின் தரவுகளோடு தமிழரசனது விளக்கங்கள் ஒட்டியுறவாடுவதில் எனக்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம்.

தமிழரசன் இன்றுவரைப் பேராசிரியர் பேர்ன் சென்வ்வை வாசித்திருக்க முடியாது.அவரது எந்த ஆய்வையும் தொட்டிருக்கக்கூடிய காரணங்கள்அவருக்கு நெருங்கி இருக்க முடியாது.ஏனெனில் ,அந்தப் பேராசிரியர் மார்க்சியத்தின் பரம விரோதி.என்றபோதும், தமிழரசனது விளக்கங்களும்,தரவுகளும் பேராசியர் சென்வின் கருத்துக்களோடு பொருந்திப்போகிறது. உலக மயம் குறித்து நீண்ட ஆய்வுகளைச் செய்த பேராசிரியர், அதன் தாக்கமானது மேற்குலக வீழ்ச்சியோடு தொடர்புடையதாக நிறுவுகிறார்.இதையேதாம் தமிழரசனும் சொல்லிச் செல்கிறார்.

நான்ஆடம் சிமித் மற்றும் ஜோன் மைநார்ட் கேய்னெஸ்,சில்வியோ கெசல் எனும் நவலிபரல் பொருளியாளரை மிக ஆழமாகக் கற்றுத் தேறியபோது இவர்களது வாரிசான பிரிடிறிக் காய்ஜெக்கையும்[ Friedrich A. Hayek] அவரது சீடர்களான மெவுன் பிலேரின் சொசைய்டிக் கூட்டின்  Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler. போன்றோரையும்,அவர்களது தாராளவாதப் போக்கையும் உள்வாங்கிக்கொண்டேன்.இன்றையவுலகத்தின் மிகக் கெடுதியான பக்ககங்களை இவர்களைத் தவிர்த்துப் பார்க்க முடியாது.

கெய்னிஸ் குறித்தத் தத்துவப் போக்கில்:

1: நுகவர்வும் சேமிப்புறவுக் கோட்பாடு,
2: நிதியீடுக்கோட்பாடு;
3: பணச் சுழற்சிக் கோட்பாடு

இவைகள் மிக முக்கியமானது இன்றைய நவ லிபரல் பொருளாதாரப் போக்கில்.

நாவலனது நூலுக்கான விமர்சனத்துக்காக இந்தப் பரப்புகளில் தமிழரசன் நிறையவே கால்பதித்துச் செல்கிறார்.ஒரு மார்க்சிய அறிஞன் பலதரப்பட்ட தளங்களைத் தனக்குள் உள்வாங்கிக் கருத்தாடுபவனென்பதைத் தமிழரசன் நிரூபிக்கின்றார்.

நாம்,அந்த வெளிகளுக்குள் பிராயாணித்து விட விருப்பம் கொண்டாலேதவிர இன்றைய பொருளாதார நகர்வுகளைக்குறித்து விளங்கிக்கொள்ள முடியாது.இதைத் தவிர்தோமானால் மில்டன் பிறீட்மானது[Milton Friedman ] "யுத்தம் செய்து அழித்தல் மீளக் கட்டுதல்,இடங்களைக் கைப்பற்றுதல்,வாழ்விடங்களைவிட்டு மக்களை அழித்துத் துரத்துதலெனுங்" கோட்பாட்டுக்குள் சிக்கி விடுவோம்.

எனவே,இந்த வெளிகளுக்கூடாக நகர்த்தப்படும் இந்த இறுதிப் பகுதியானது இன்றைய உலகமயப் பொருளாதாரப் போக்குகளில் அமையப்போகும் அதிகார-ஆதிக்க மாற்றங்களைப் புரிவதும் அந்த புரிதலின் வழி புதிய வியூகங்களைத் தேடிக்கொள்வதும் ஒடுக்குப்படும் மக்களது விடிவுக்கு அவசியமானது நண்பர்களே.

வாசியுங்கள்.கட்டுரை மிக நீளமானதுதாம்.எனினும், நேரமெடுத்துத் தொடருங்கள்.

அடுத்த விமர்சனத்தை புஸ்பராணியின் அகாலத்துக்கான நூலின் விமர்சனமாக முன் வைப்போம்.

இரண்டொரு கிழமையில் மீளச் சந்தோம்!

நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.08.2012


சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!

- நூல் விமர்சனம் : 5

( இறுதிப் பகுதி )

3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும்.

ஆபிரிக்கா, நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக் காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ  இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் ,நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள். நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ,ஆறுகளோ அங்கு இல்லை.வாழக் கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்களில் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது.

நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.

 
செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது.

அவர்கள் இக்கட்டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப் பட்டமையூடாகவே  நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.
 
 
‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதிதியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார்.
 
 
உலக மயமாதல் [Globalization ]என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவிர்க்கமுடியாத கட்டமாகும்.

ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் ,உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழி நுட்பங்கள், நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும், சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை.

ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன.

 உதாரணமாக :  சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுனகளை முந்தி ,முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது, நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை.

பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால், சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது, வருடா வருடம் 60 மில்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.
 


 
schanghai,Peking,Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது.

சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் ,சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள்.

பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,VW என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன.

 ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100.000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்லியன் யூறோ நட்டம். ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.
 
 
வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்து உபகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் [103 Milliarden Euro = 103 billion euro .] யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள், பாலம்கள், ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது.

 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் ,9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது.

 10 வருடம் முன்பு ,இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை.

சீனாவில் ஒரு மணி நேர ஊழியம் 0.70  சென்ட்களாகும் [0.70 Euro].  இது ஜெர்மனியியல் மணிக்கு  27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
 
 
2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் [Billion auf Englisch Trillion] ; [2010/ 2011 : Währungsreserven in Millionen US-Dollar : 3.201.680  ] டொலர்களாக அதிகரித்துள்ளது [Exportstarke asiatische Länder verzeichneten seit etwa einem Jahrzehnt ein rasantes Anwachsen der Währungsreserven. Besonders deutlich wird dies am Beispiel der Volksrepublik China. Dieses Land hat nach mehreren Jahren einer äußerst erfolgreichen Handelsbilanz im Jahr 2006 sogar Japan in der Summe der Währungsreserven überholt und besitzt seitdem die höchsten Währungsreserven der Welt. Per 31. März 2008 beliefen sich diese auf 1,682 Billionen US-Dollar.[20] Im April 2011 betrugen die Devisenreserven Chinas erstmals über drei Billionen US-Dollar.[21] ]. இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் ,சமூக ஆய்வியல் அறிஞருமான Oskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நாவலன் , 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார்.

 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால், இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது.

ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் ,மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன.


அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata , suzlon Energy, சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் ,இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
 
 
எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது.

முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் , இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது.

உலக மனிதர்கட்கு இன்று, 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக் கடன், குளிப்பு, சுடுநீர்ப் பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே, உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது.

ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ Schwefel [http://de.wikipedia.org/wiki/Schwefel  ]  தேவை.ஆனால் ,இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டுக்கும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகளில் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது.

மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.

மேற்குலக எரிபொருள் நிறுவனம்களான BP, Exxom, MobilChevron, Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின் PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் ,எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் ,இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது.

 உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது, தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது.

வடகடலில் [Nord See]பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணு உலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது, 64.புதிதாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ,ஆசியாவில் 110 அணு உலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.
 
 
3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின்  Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழில் நுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,Malanja,Bauxi,Kobalt,Coltan என்பன உண்டு,Coltan கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை[Der Fluch der Reichtümer: Krieg um Rohstoffe des Kongo :Der Reichtum des Kongo ist sein Fluch. Diamanten, Kupfer, Kobalt, Gold, seltene Erden, Edelhölzer - riesige Mengen leicht abbaubarer, gut absetzbarer Roh- stoffe haben schon vor hundert Jahren die Begehrlichkeiten der damaligen belgischen Kolonialherren geweckt. Fast 40 Jahre lang konnte der Diktator Mobutu Sese Seko die Verteilung der Schätze unter seinen Anhängern und internationalen Konzernen kontrollieren. Seit seinem Sturz 1997 hat sich eine Vielzahl von Interessenten auf den Kongo gestürzt. Der Bürgerkrieg ist ein Verteilungskrieg, bei dem es längst nicht mehr um Ideologie, um politische Ziele geht.   http://www.ag-friedensforschung.de/regionen/Kongo/rohstoffe.html   ] தொடங்கி வைத்தன. ஆயுதக் குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள் எதிரணியான MDC" க்கு நிதி தந்து ஆதரிக்கின்றன.  சிம்பாவேயில் உள்ள Platin, இரத்தினக்கற்கள் உட்பட வளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.
 
 
உலகின் 90வீத Platin ஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள் இடப்பட்டது .அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது.

சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள், விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழிற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்பிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது.

நைஜீரியா 6.5% ,கானா 5.8 %,சூடான் 8 % ,கென்யா 6.5 % ,தான்சானியா 6.9 %, சிம்பாப்வே 6.5% , தென் ஆபிரிக்கா 4.8 %  என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.
 
 
‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.

2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது.

தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர் நிர்வாகிகட்காக ஆடம்பர மாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25 % எண்ணை வளம் உட்பட ஆபிரிக்க எண்ணை வளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40%சீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.
 
 
சீனாவுடன் ,இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன.

தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக் கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது.

சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.

மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து "Shanghai Cooperation Organisation" என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன.

2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளிக் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.

சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது.

1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பின்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின.

ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டும் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.
 
 
‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.
 
 
இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா?

ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா?

இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே?

கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?
 
 
வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது.

 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சி.என்.என். க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும்.

லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.
 
 
அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா?

கனடாவையும் ,பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா?

 ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார்.
 
 



அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி ,இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் ,அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita",கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளை ஆட்சி செய்த காலம் இன்றில்லை .

காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது.

வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.
 
 
வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.

சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது.

இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன.

இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர்.

"Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
 
பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா?

இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா?

விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா?


‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார்.

1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது.

வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.
 
எனவே, உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர் முதலீட்டில் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.
 
 
ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும்.

1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு ,உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு, இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழிற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும்.

தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளில் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட  நாடு ,இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.

பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் ,இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது.

அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.

தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.
 
 
உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை.

அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும்.

அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.

சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது .மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில் ஜரோப்பா நுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.
 
 
‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.

இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும்.

கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது.

பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின.


அடுத்து ,உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது.

தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன?

அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜி.எம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன?

சுவிட்சர்லாந்தின் யு.எஸ்.பி (USB_  http://www.ubs.com/ch/de.html  ) வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது?

பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.
 
 
உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ,ஏகாதிபத்தியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது.

அமெரிக்காவையோ, ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை.

நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன?

 மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐ.எம்.எவ் எச்சரிக்கின்றது.

1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும், இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.
 
 
இது முதலாளியத்தின் மரணகண்டமாகும்.

 அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது.

உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை.

ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு .

இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் -100 வருடம் முன்பு ,சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர்.

கடைசியாக, உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.
 
தமிழரசன்,பெர்லின்.







Sonntag, Juli 22, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்-5

இன்றைய தலைமுறைக்குப் புலிகளது கருத்தியலும்,அவர்கள் வழியான போராட்டமுமே தெரிந்ததுபோல புஸ்பாரசா-புஸ்பராணி குடும்பத்தவர்கள் அவிழ்க்கும் "போராட்டவாழ்வு" மட்டுமே தெரிந்தவர்களாக நாளைய தலைமுறை மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஏனெனில்,இத்தகையவர்களது பின்னே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் தமது அரசியல்-பொருளாதார நலன்களைக் கொண்டியங்குகின்றன. இலங்கை-இந்திய ஒடுக்கப்படும் இனங்களை அவர்களுக்குள்ளிருக்கும் பதவி-புகழ் கொண்ட சின்னத்தனமிக்கவர்களைக்கொண்டே இந்த ஆளும் வர்க்கம் கருத்தியல்ரீதியாகப் பிழையான பாதைகளைக் காட்டித் தொடர்ந்தழித்துவருகிறது.உலகம் பூராகவும் இது தொடர்கதையாவதை நீங்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அறிந்கொண்டே வருகிறீர்கள்.

தமிழீழப் போராட்டமென்பது அதன் உச்சமான-பிழையான பாதைகளிலொன்றென்பது தற்போது நிரூபணமானபோது நமது மக்களில் மூன்று இலட்சம்பேர்கள் அழித்தொழிக்கப்பட்டும், அவர்களது வாழ்வாதாரம் சிதறடிக்கப்பட்டதுமல்லாது இலங்கையின் முழுமொத்தச் சமுதாயத்தையுமே அதிகார வர்க்கத்தால் ஒடுக்கும் நிலைக்குள்ளானதை  இந்தத் தலைமுறை அறிந்துகொண்டது. அதைக்கூடத் தவறான முறைகளில் விளக்கி ,மீளப் பிரபாகரனுக்குப் பதில் அவரது மகள் துவாராக வழிகாட்டியாக மாறிக்கொள்வரென்றும், அவரது வரவுக்காக இளைஞர்கள் காத்திருப்பதாகவும் வீன் பல்கலைக்கழகத் தமிழ் மாணவனொருவன் கருத்துக்கட்டுகிறானென்றால் அவன் பின்னே இருக்கும் சக்தி, இந்த ஆளும் வர்க்த்தின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டிருக்கிறதென்றே பொருள்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கையுள் ஒடுக்குமுறைகுட்படும் சிறுபான்மைச் சமுதாயங்கள் தமது விலங்கை ஒடிப்பதென்பது பெரும்பகுதி சிங்கள மக்களது வர்க்க விடுதலையோடு சம்பந்தப்பட்டதா இல்லையாவென்பதுகூட ஒருகட்டத்தில் கேலிக்குரியதாகப் பேசப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டமானது தனது பிராந்தியச் சந்தைவாய்ப்பை இப்போது நம்பிக்கொண்டதல்ல.அது ஆபிரிக்காவரை விரித்துக்கொண்ட அதிகாரமானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோவொரு முறைமகளோடு அந்தந்தத் தேசியவினங்களது அரசியல்-பொருளாதார வாழ்வோடு இணக்கம்-பகையெனப் பண்புகளை அரசியலூடாக நகர்த்தும்போது ஆங்காங்கே, அந்த மக்களது எதிர்காலத்தைத் தீருமானிப்பவர்களாக மாறுகிறார்கள்.இலங்கை வாழ் மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் தொடர்தியங்கும் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கமானது இன்றுரைக்கும் பொய்மையான போராட்ட வரலாற்றுக்கெதிரான பக்கத்தை நாம் கண்டடைய வேண்டும்.




"ஈழப்போராட்டத்தில்"சாட்சியம் கூறும் நபர்களும்,அகாலம் உரைக்கும் அம்மணிகளும் அணிதிரளும் சந்தர்ப்பமானது ஆளும் வர்க்கத்தின் அதீதமான உந்துதலது விளைவென்பதைத் தொடர்ந்து கவனிப்பவர்கள்-வரலாற்றைப் புரிய முற்படுபவர்கள் கண்டடைவர்.

இதைத் தவிர்த்துவிட்டு,சாட்சியம் சொல்பவர்களது தனிநபர்களைச் சுற்றிய கருத்துக்கட்டல்களை-அவர்களது பாமரத்தனமான போராட்ட அநுபவங்களைக் குறித்து எந்தவிதமான கேள்விக்கும் இடங்கொடாது செரித்துக்கொள்வது தற்கொலைக்கொப்பானது.

ஒரு தலைமுறையையே அழித்தொதுங்கிய"தமிழீழப் போராட்டம்"என்பதைத் தீர்மானித்தியக்கிவர்கள் ஒருவினத்தையே அடிமைகொண்டழிப்பதில் தொடர்ந்து இணைந்து செயற்பாட்டோடிருக்கும் இன்றைய சூழலிற்றாம் இலங்கைத் தேசமெங்கும் அடையாள அழிப்பும்,சிங்கள மயப்பட்ட பண்பாட்டுச் சுட்டல்களும்-சேர்ப்புகளும்,மறுபடைப்பாக்கமும் நிகழ்கிறது.

இதற்குடந்தையான அரசியலை முன்தள்ளும் இத்தகைய "சாட்சியம்"கூறும் நபர்கள்,அதற்குத் தலையங்கம்-பொழிப்புரை செய்யும்வலதுசாரி-"இடதுசாரி"ப் புரவலர்களும் நாளாந்தம் புத்தக வெயியீடு-அறிமுகவுரை என்று போடும் முடிச்சுகள் நமது வரலாற்றைப் பிழையாகக் கற்பித்தொடுக்கும் தந்திரத்தோடு ஆளும் வர்க்கங்களுக்கு நம்மைக் காட்டிக்கொடுத்து ஒடுக்குவதே!

இதைப் புரிவதென்பது கடினமான பணி.

அந்தப்பணியுட்தாம் இந்த விமர்சனமானது தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முனைகிறது.தொடர்ந்து உள்வாங்குவோம் நண்பர்களே-இதைத்தவிர வேறெதுவும் இப்போதைக்கு இல்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.07.12



ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்-5
 

5:


மக்களால் இவர்கள் காட்டித்தரப்படும் நிலை இருந்ததென்றால் அவர்கள் எவ்வளவு அறியப்படாதவர்களான அரசியலைக் கொண்டிருந்திருக்க வேண்டும்?:


"எதிர்வரும் இரண்டு பத்துவருடங்கட்கு ஈழப்போராட்டம் பற்றிய நூல்கள் மதிப்பீடுகள் பெருமளவு வெளிவரும் காலமாக இருக்கும். இங்கு புஸ்பராசாவின் எழுத்துக்கள் சகல திசைகளிலும் திரும்ப திரும்ப விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் வருவதை தடுக்க முடியாது. இது சார்ந்த வரலாற்றுணர்வு அவரிடம் செயற்படவில்லை, போதிய கவனத்துடன் இவை எழுதப்படவில்லை, இதற்கு புஸ்பராசாவின் வலதுசாரித் தமிழ் அரசியல் மதிப்பீடுகளும் கட்டாயமாகத் தடையாக இருந்தன. அவர்காலத்தில் அவருடன் சிறையிலிருந்த, அரசியல் நண்பர்கள், முக்கிய அரசியல்கைதிகள், ஜே.வி.பி யினர், தனிப்பட்ட நட்பு பேணியோர் என்று அவர் விபரிக்க ஏராளமான தேவையிருந்தது. சிறைவாழ்வில் தமது இலட்சியம் தொடர்பான எத்தகைய உறுதியை புஸ்பராசா கொண்டு இருந்தார் என்பது கூட வாசிப்பவர்களுக்கு தட்டுப்பட்டிராது, ஆனால் தான்மாத்திரம் அனுபவித்த சித்திரவதைகளை, பொலிஸ் இராணுவ துன்புறுத்தல்களை ஓரளவு எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார்."-தமிழரசன்



பொலிஸ் தேடுதல், உதவியற்றநிலை, உணவு, பணம் இவைகளைப் பெறுவதற்கான போராட்டம் இந்த நிலைகளிலேயே கோப்பாய் வங்கியைக் கொள்ளையிடவும் அதன் பின்பு இந்தியா செல்லவும் சிவகுமாரன் திட்டமிட்டான். தலைமறைவு இளைஞர்களுக்கு பணம் இருக்கவில்லை. கூட்டணி, தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடம் இவர்கள் ஒழிந்து வாழவும் உதவி பெறவும் திரும்பத் திரும்பச் சென்றனர். பொதுவாகவே கூட்டணி தொடர்பானவர்கள் எளிதாகவே பொலிசாரின் பார்வையில் இருந்தனர். இளைஞர்களுக்கு மக்களுடனான தொடர்புகள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவர்களை பாதுகாக்கவும் முடியவில்லை. மக்களோடு மக்களாய் கரைந்து தம்மைப் பாதுகாக்கும் வாய்ப்புகளிருக்கின்றதா என்பதனைச் சிந்தித்துப்பார்க்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை. கூட்டணியினரின் அற்ப உதவிகள் அவாகளை பாதுகாக்க முடியவில்லை. சிவகுமாரனின் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி அவர்கள் தப்பி பிழைக்கும் கடைசி முயற்சியாக இருந்தது. சிவகுமாரனுடன் உரும்பிராய் மகேந்திரன், ஜீவராசா, பிரான்சிஸ் ஆகியோர் கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்கட்கு சரியாக கார் ஓட்டத் தெரியாமையினால் வாடகைக்காரைப் பிடித்துக் கொண்டு சென்றனர். சிவகுமாரன் கார் சாரதி தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக அவனோடு வங்கிக்கு வெளியே கத்தியுடன் காவல் நிற்க மற்றவர்கள் வங்கியுள் நுழைந்தனர். இவர்களின் துப்பாக்கியைக் கண்ட வங்கிக்காசாளரான பெண் மயங்கி விழுந்துவிட்டார். எனவே இவர்களால் பணம் எடுக்க முடியவில்லை இவர்கள் பயமுறுத்தும் நோக்கில் வைத்த துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டு சனங்கள் கூடிவிட்டார்கள். எனவே இவர்களைக் காப்பாற்ற சிவகுமாரன் வங்கியுனுள் ஓட கார்சாரதி திறப்பை எறிந்துவிட்டுத் தப்பி ஓடி விட்டார். கொள்ளைக்காரர்கள் என்று நினைத்து சத்தம் போட்ட வங்கி ஊழியர்கட்கு தாம் விடுதலைக்காகப் போராடுபவர்கள் என்று விளக்கமளிப்பதற்கு சிவகுமாரன் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டான்.


சனங்கள் கூடத் தொடங்கி விட்டனர். சிவகுமாரனும் கூட்டாளிகளும் காரை தள்ளி ஸ்டாட் பண்ண முயன்றனர், ஆனால் முடியவில்லை. எனவே திசைக்கொருவராய் தப்பியோடும்படி சொல்லி விட்டு சிவகுமாரன் தானும் தப்பி ஓடினான். ஆனால் மக்கள் இவர்களை கள்ளர் என்று நினைத்து சத்தமிட்டபடி தொடர்ந்து துரத்திச் சென்றனர். சிவகுமாரன் புகையிலை வெட்டப்பட்ட தோட்டத்தினுடாக ஓடும் போது காலில் காயம்பட்ட நிலையில் ஒழிக்க முயன்ற போது சனங்களால் காட்டித் தரப்பட்டான.; பொலிசில் பிடிபடும் நிலையில் சயனைட்டை விழுங்கினான். ஜீவராசா, உரும்பிராய் மகேந்திரன் இருவரும் பொதுமக்களால் கலைத்துப் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். மக்களால் இவர்கள் காட்டித்தரப்படும் நிலை இருந்ததென்றால் அவர்கள் எவ்வளவு அறியப்படாதவர்களான அரசியலைக் கொண்டிருந்திருக்க வேண்டும் இவர்களது கருத்தியல் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யபட்டு இருக்குமெனில் இவர்கள் மக்களால் பாதுகாக்கப்பட்டு இருப்பர். இதனைப் போராட்டத்தின் தொடக்கம் என்று எவரும் நியாயம் பேச முடியாது.


 அரசியலுக்கு முந்தி ஆயுதமெடுத்தமையின் விளைவாக இது இருந்தது. இத்தனை அனுபவத்திற்குப் பின்னரும் புஸ்பராசா சிவகுமரானும் அவனது கூட்டாளிகளும் தோல்வியடைந்தமைக்கு காரணம் பிரான்சிஸ் போன்ற அவனது நண்பர்களே என்று பழி போட முயல்கிறார். மக்களின் பங்களிப்பின்றி எதுவும் சாத்தியமில்லை என்பதே இச்சம்பவத்தின் போதனையாகும்.


சயனைட்டை விழுங்கி ,யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவகுமாரன் முதலில் சுய நினைவுடனேயே இருந்துள்ளார். தான் தப்பமாட்டேன் என்று கருதி அங்கு கொடுத்துள்ள மருத்துவ சிகிச்கைகளையும் மறுத்துள்ளான். பின்பு ஒரு வைத்தியர் அவனுக்கு "நீ மருந்து குடித்தால் தப்புவாய்" என்ற நம்பிக்கையூட்டியே பின்பு சிகிச்சையை ஏற்றுக் கொண்டான். தொடர்ந்து தனது தாயுடன் உரையாடிக் கொண்டே இருந்துள்ளான். தன் கைவிரல்கள் கறுத்து வருவதை அவதானித்து தனது தாயிற்கு சொல்லியுள்ளான். அதன் பின்பே நினைவு மாறாட்டமாய் புலம்பத் தொடங்கியதுடன், தன் நண்பர்களின் பெயர்களையும் சொல்லி அழைத்துள்ளான், சம்பந்தமில்லாமல் எல்லாம் பேசத் தொடங்கியுள்ளான் இச் செய்திகளை சிவகுமாரின் தாயாரே பலருக்குச் சொல்லியுள்ளார். பொலிஸ் காவலில் ஆஸ்பத்திரியில் சிவகுமாரன் வைக்கப்பட்டிருந்தமையால் அவனைப் பார்க்கச் சென்றவர்களின் தொகை மிகவும் சொற்பம். ஆனால் தீரங்கொண்ட புஸ்பராசாவோ துணிந்து யாழ் வைத்தியசாலைக் சென்றதாயும், கூடவே சிவகுமாரன் தப்பி செல்ல உதவும் பொருட்டு துப்பாக்கியை எடுத்துச் சென்றதாயும் எழுதியுள்ளார்.


புஸ்பராசா சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. புஸ்பராசா உண்மையில் வைத்தியசாலை சென்றிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் சிவகுமாரனைக் கண்டார்? நினைவுதப்பாத போதா? அல்லது சுய நினைவு போய் கண்டபடி புலம்பத் தொடங்கியபோதா? "துரோகி வெளியே வந்து சுடுவேன்" என்று சொன்னது தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களையா? கூடச் சென்ற கூட்டாளிகளையா? கூடச் சென்ற தனது நண்பர்களையே என்று புஸ்பராசா நம்ப விரும்புவதுடன் அதை பிரான்சிஸ் போன்றவாகளுக்கு எதிராகவும் திருப்பி விட முயல்கிறார். ஆனால் எமது விசாரிப்புக்கள் புஸ்பராசாவின் எழுத்து முழு உண்மை என்பதற்கு எந்த ஆதரவான தகவல்களையும் தரவில்லை.


அன்று சிவகுமாரனின் நெருங்கிய நண்பர்களாக உரும்பிராய் மகேந்திரன, ஆனந்தகுமார், பிரான்சிஸ், உரும்பிராய் சோட் பாலா ஆகியோரே இருந்தனர், புஸ்பராசா அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமற்ற உண்மையாகும்.


சிவகுமார் உட்பட ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கட்கு இடதுசாரிகள் ஆயுத ரீதியில் உதவினார்கள் என்று புஸ்பராசா எழுதுவது எந்த நிரூபணமுமற்றது. கூட்டணி போலவே தீவிரவாத தமிழ் ஆயுதமேந்திகளும் இடதுசாரிகளை தம் எதிரிகளாகவும், தமிழினத்துரோகிகளாகவுமே கண்டனர். காங்கேசன்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம், உரும்பிராய் போன்ற இடதுசாரிகள் செல்வாக்குப் பிரதேசங்களில் தனிநாடு கேட்கபவர்களுக்கு கடும் எதிர்ப்பு இடதுசாரிகளிடம் இருந்து வெளிப்பட்டது. சிவகுமாரனின் மக்களுடன் ஒட்டாத தனிநபர் சார்ந்த ஆயதத் துணிச்சலை ஆரம்ப முதலே இடதுசாரிகள் எதிர்த்தனர்.


[ஆளும் வர்க்கங்களது அடிமைக்கூட்டிது]

சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோருடன் அவர்களது அரசியல் பற்றி அவர்கள் மிகவும் கடுமையான விமர்சனங்களை அவர்கள் வைத்தனர். இங்கு இடதுசாரிகள், சிவகுமாரன் உட்பட தமிழ் இளைஞர்கட்கு ஆயுதம் கொடுத்து உதவினர் என்ற புஸ்பராசாவின் எடுகோள் எந்த அடிப்படையும் அற்றது இடதுசாரிகளின் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் மேல்சாதி அடக்குமுறைக்கு எதிராக சிறுசிறு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அது எல்லைக்குட்பட்ட இலக்குகளுக்கு மட்டுமே கொண்டிருந்தது. சிவகுமாரனின் ஆயத நடவடிக்கைகளை தன் சொந்த முயற்சியினாலும் மற்றவர்களின் உதவியினாலுமே நடத்தினான். சத்தியசீலன் போன்றவர்கள் தமது ஆயுத முயற்சிகளுக்காக தாம் ஒருபோதும் இடதுசாரிகளின் உதவிகளைப் பெற்றதில்லை என்று மறுக்கின்றனர். யாழ்ப்பாணப்பகுதியிலும் சாதாரண கிராமங்களிலும் வெடிதயாரிப்பவர்கள், ஊர்சண்டியர்கள் போன்றவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பது நடைமுறையில் இருந்தது. இவர்கள் சண்டைகளில் கைக்குண்டுகளைப் பாவித்தனர். அந்தக் காலத்தில் யாழ்பாணத்திலோ வல்வெட்டித்துறை, உரும்பிராயிலோ 500 ரூபாவிற்கு ஒரு கைத்துப்பாக்கி வாங்குவது கடினமான செயலாக இருக்கவில்லை. உள்ளுர் வெடி மருந்துகளோடு இந்தியாவிலிருந்தும் இவை கடத்தி வரப்பட்டன. இத்தகைய வாய்ப்புக்கள் இருக்கும்போது இடதுசாரிகள் உதவினர் என்பது பொருத்தமற்றதாகும்.


சிவகுமாரனின் சிலை உரும்பிராயில் திறக்கப்பட்ட போது உரும்பிராயின் முக்கிய இடங்களில் இடதுசாரிகளால் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தது என்பதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும. சிவகுமாரன் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தார் என்று கூறப்படுகிறது. அவனின் சாதி எதிர்ப்பு என்பது உயர் வேளாள சாதியினர் கோவில்களில் நடத்திய ஒரு சில சமபந்திப்போசனங்களாகும். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில்களில் வீடுகளில் சென்று சாப்பிட்டதில்லை. இதையொட்டி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இடதுசாரி போராளிகளில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் "நாங்கள் உங்களிடம் வருவதல்ல, நீங்கள் எங்களிடம் வந்து சாப்பிட்டு எங்கள் கோவில்களில் சமபந்தி போசனம் செய்வதே சாதியொழிப்பாகும்" சிவகுமாரனின் சாதி எதிர்ப்புபோராட்டம் கூட்டணியின் வகைப்பட்டதே. அதனை மாதிரியாய் கொண்டதே. இதைவிட நூறு மடங்கு உத்வேகத்துடனும், நேர்மையுடனும் இடதுசாரிகள் சாதியொழிப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உரும்பிராய் பகுதியிலேயே 1967 களிலே இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தியபோது, இடதுசாரி அணியைச் சேர்ந்த செல்லக்கிளி என்னும் பெண் மேல்சாதி வெறியர்கட்கு குண்டு எறிந்ததாய் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு தொகை இடதுசாரிகளின் போராட்டம் ஆணவப்படுத்தப்படாமல் உள்ளது.


ASP சந்திரசேகரா மீது சிவகுமாரனின் கொலை முயற்சியையும் புஸ்பராசா குறித்துள்ளார். இக்கொலை முயற்சியில் சிவகுமாரனுடன் ஆனந்தகுமார், நடேசானந்தம் அளவெட்டி முல்லை, பிரான்சிஸ் போன்றவர்கள் பங்கெடுத்துள்ளனர். ஆனந்தகுமார் குண்டு எறிந்த போது அது வெடிக்கவில்லை. சிவகுமாரன் ஆறு தடவைகள் ASP சந்திசேகராவை சுட்டபோதும் குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனந்தகுமாரின் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு ஒரு வாளியில் வைக்கப்பட்ட போது அடியில் நீர் சிறிது இருந்ததால் ஈரமாகிக் குண்டு வெடிக்கவில்லை. சிவகுமார் சுட்ட பழைய 3.8 றிவோல்வர் குண்டுகள் திரும்ப இவர்களால் நிரப்பட்டவை. இது இரண்டு மூன்று நாட்களாகிவிட்டமையால் இளகிவிட்டது. அதுவும் வெடிக்கவில்லை. எறிந்த குண்டு வெடிக்கவில்லை, துப்பாக்கி குண்டுகளும் வெடியைத் தீர்க்கவில்லை என்பதைக் கண்ட கூடவந்தவர்கள் ஓடத் தொடங்கினர். ASP சந்திரசேகராவிடம் ரிவோல்வர் இருந்ததால் அவர் இவர்களை திருப்பி சுடக்கூடும் என்று அவர்கள் பயந்தனர். ஆனால் சிவகுமாரன் ASP சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து இழுத்து கத்தியால் குத்த எண்ணினான், ஆனால் கத்தியை வைத்திருந்த பிரான்சிஸ் கத்தியுடன் ஓடியமையால் கோபமடைந்த சிவகுமாரன் பிரான்சிசை தாக்க முயன்றான் என்று தெரிகிறது. இதனை ஆனந்தகுமாரும் உறுதிப் படுத்துகின்றார்.


தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜனார்த்தனத்திற்கு சிவகுமாரன் பாதுகாப்புக் கொடுத்ததாய் புஸ்பராசா எழுதியுள்ளார். ஜனார்த்தனத்திற்கு கூட்டணி உயர்மட்ட பெரிய மனிதர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். சிவகுமாரன் அவருடன் கூடத் திரிந்தார். தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பாக கூட்டணி இளைஞர்கள் சில ஏற்பாடுகள் செய்திருந்தனர். தடிகள், சைக்கிள் செயின் உட்பட பல தயாரிக்கபட்டன என்பது உண்மை. இதனைக் கனடா தாயகம் இதழும் எழுதியதுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எதற்கும் துணிந்த துரையப்பாவின் ஆட்கள் மாநாட்டை குழப்புமளவிற்கு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே அப்படி எதுவும் குழப்பப்பட்டாமல் அதனைச் சமாளிக்க கூட்டணி இளைஞர்கள் சில ஒழுங்குகள் செய்தனர் என்பது உண்மையாகும். இவைகளை எழுதிய கனடா தாயகம் இதழை, சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்கள் என்று குற்றம் சொல்லும் புஸ்பராசா, அதில் கட்டுரை எழுதிய ஜீவாவை ஒத்தவர்கள் மின்சாரக் கம்பங்களில் தண்டிக்கப்பட்டதை காட்டி வெளிப்படையாகவே ஜீவாவை எச்சரிக்கின்றார். புஸ்பராசா கருத்துச் சுதந்திரத்திற்கு தரும் மரியாதை புலிகளை மிஞ்சக் கூடியதாகும், முழுப்புகலிடத்திற்கும் வழிகாட்டக் கூடியதாகும்!!!


தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதைப்பற்றிக் கவலைப்படாத சிவகுமாரன், வித்துவான் வேலனுக்கு தவறுதலாக அழைப்பு அனுப்பப்படாததால் அவர் "நான் தமிழால் வாழ்ந்தவன், தமிழனாய் வாழ்ந்தவன்" எனக்கு அழைப்பு இல்லை என்று சத்தம் போட்டபோது அவர் காலில் வீழ்ந்து தமிழாராய்ச்சி மாநாட்டை சத்தம் போட்டுக் குழப்பிவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டான். சிவகுமாரன் சயனைட் கலாச்சாரத்தின் தந்தை, அதைத் தொடக்கி வைத்தவன். இது பிற்காலத்தில் புலிகளால் பிரபாகரனின் கண்டுபிடிப்பாய் மக்கள் மயப்படுத்தப்பட்டது. ஒரு தற்கொலைச்சமூகம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியது. இவைபற்றி புஸ்பராசா எதுவித அபிப்பிராயமும் வெளியிடவில்லை.


சிவகுமாரன் தொடக்கிவைத்த தற்கொலை அரசியல், தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்த சமூக விளைவுகளைப்ற்றி  புஸ்பராசா  பேசவில்லை. இதையிட்டு அவர் அனுஷ்டிக்கும் மௌனம், புலிகளின் தற்கொலை அரசியலை ஏற்கத் தெரிவிக்கும் சம்மதமே.


சகல போராட்டங்களிலும் துணிவு, வீரம், மரணம், தியாகம் என்பன மதிக்கப்படும் பண்புகளாக இருந்த போதிலும் உண்மையான புரட்சியாளர்கள் மரணத்தைப் போற்றுவதில்லை, தற்கொலையைக் கொண்டாடுவதில்லை. புரட்சியாளர்கள் எதிரிகளின் கருத்தியல்களை மட்டுமல்ல, அவர்களின் உடல், உள ரீதியிலான சித்திரவதைகளையும் எதிர்கொள்ளத்தக்கதாயே பயிற்றுவிக்கப்படுகின்றனர். எதிரியின் உடல் வதைக்குப் பயந்து தற்கொலை செய்வது கொள்வது வீரத்தையல்ல, கோழைத்தனத்தையே காட்டுகிறது. உளவியல் ரீதியில் பலமற்ற, போக்கிடமற்ற மனிதர்களே தற்கொலையைத் தீர்வாக நாடுகின்றனர் என்பது நாம் நடைமுறையில் காணும் உண்மையாகும். யுத்தகாலம் என்பது சித்திரவதை, உடற்காயம், மரணம், சிறை, பட்டினி, உளவியல் துன்பங்கள் என்பவற்றையே தினசரி வாழ்வின் நிகழ்வாக கொண்டிருக்கும். இவைகளை எதிரிட தொடர்ந்து உயிர் வாழ்ந்து இலட்சியத்தையடைய போராளிகள் பயிற்றப்பட்டிருக்க வேண்டுமே தவிர, சயனைட் குப்பிகளை விழுங்கி தற்கொலை செய்துகொள்வது ஒரு போராட்டத்தின் அரசியல் இராணுவ தேர்வாக இருக்க முடியாது. கடும் உடற்துன்பங்களை சகித்து மனவுறுதியோடு புரட்சிக்காக வாழ்வதே தொடர்ந்துதும் போரிடுவதே புரட்சிகயாளர்களை உண்மையான அர்ப்பணிப்பாகும்.


சோசலிச உலகின் மிகச் சிறந்த இராணுவ தளகர்த்தரும், ஐந்து மில்லியன் செம்படை வீரர்களை வழி நடத்தியவருமான ரொட்ஸ்கி முதல், மாவோ, சேகுவரா ஈறாக எவரும் எதிரிகளின் உடல்வதைக்கு பயந்து புரட்சியாளர்கட்கு தற்கொலையைச் சிபார்சு செய்ததில்லை. சமூகவிடுதலை என்பது கடின உழைப்பு, போதாமை நிறைந்த வாழ்வு, நிரந்தர துன்பம, மரணத்தின் மத்தியிலான வாழ்வு என்பவைகளால் சூழப்படட்ட போதும், அது வாழ்வதற்கான போராட்டமே. உழைப்பாளர்கட்கும் ஏழைகட்கும் கடினமான வாழ்வை எதிர்நோக்கும், சித்திரவதைகளை தாங்கும் மனவுறுதி அதிகமாகும் ஆனால் சிவகுமாரன் போன்ற நடுத்தர வர்க்க சொகுசுகளில் இருந்து போராட்டங்கட்கு வந்தவர்கட்கு சித்திரவதைகளை தாங்கும் மன உறுதியில்லை. சித்திரவதைகளை விட மரணமடைவதே, இந்த உலக வாழ்வை முடித்துக் கொள்வதே மேலானது என்று கருதுகின்றனர்.


கடுமையான வாழ்விற்கும், சிறைக்கும, சித்திரவதை துன்பங்கட்கும் ஆட்படுவதற்கும் படுவதை விட இவர்கள் மரணத்தை தாமே தேர்ந்து கொள்கின்றனர். போராட்ட காலத்தில் சமூகம் தனது சராசரி மனிதப் பண்புகளைக் கூட இழந்து முழு மிருகமாகிவிடும. ஆயுதப்படைகள் கிளர்ச்சி செய்வோரை உச்சககட்ட உடல்வதைகட்கு உட்படுத்துவார்கள். இங்கு போராடுபவர்கள் எல்லோரும் பிடிபட்டால் தற்கொலை என்பதே தீர்வு என்றதால் வாழ்வதற்கு எவரும் மிஞ்சமாட்டார்கள. சரீர ரீதியிலான துன்பத்திற்கு அஞ்சி பெறுமதி மிக்க மனித வாழ்வை அழித்துக் கொள்பவர்கள் புரட்சியாளர்களின் வரிசைக்குரியவர்களல்ல. கடுமையான வாழ்விற்கு தயாரற்ற மேல் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் சுயஅழிப்பு மூலம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர் ஆனால் முழுச்சமூகமுமே இத்தகைய கொடுமையான வாழ்வு முன்பு விடப்பட்டடிருப்பதை இவர்கள் மறந்து தம்மை மட்டுமே காண்கிறார்கள்.


புலிகள் சிவகுமாரனின் முன்னுதாரணத்தை தீவிரமாய் பற்றிக் கொண்டனர். "சயனைட்டுத்தான் எமது இயக்கத்தின் உயிராகும். எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக்கு காரணம் சயனைட்தான. நாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை எம்மை ஒப்படைத்திருக்கிறோம் என்பதன் அடையாளச் சின்னம் அது" என்று புலிகள் எழுதினார்கள். " இந்த சயனைட் குப்பி எங்கள் கழுத்தில் இருக்கும் வரை எந்த சக்திக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்" என்று குறிப்பிடும் கிட்டு எதிரிகளின் சித்திரவதைக்கு அஞ்சியே சயனைட்டை தேர்ந்தெடுப்பதைக் காணவில்லை, தன்னிடம் சிக்கிய மாற்று இயக்க போராளிகளை விதம் விதமாய் சித்திரவதை செய்து மகிழ்ந்து, வதைத்தே கொன்ற கிட்டு போன்றவர்கள் தமது சொந்த உடல் மீதான சித்தரவதையில் இருந்து தப்பிக்க சயனைட்டைக் காவித்திரிந்தனர். மாத்தையா, விக்டர் போன்றவர்கள் தம்மிடம் அகப்பட்ட சிங்கள, முஸ்லீம் ஏழைகளுக்கு, ஆடு, மாடு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தியவர்களுக்கு சயனைட் தீத்தி மகிழ்ந்த ககைகள் தனியாகவுள்ளன. சிவகுமாரனின் தற்செயலான தவறான முன்னுதாரணம் இப்படி பல திக்கில் விளைவுகளை ஏற்படுத்தியது.

சிறைவாழ்வு:

கொடுமையும், அவலமும் நிறைந்த சிறைவாழ்வு பற்றி புஸ்பராசா கூறும் தகவல்கள் ஒரு அரசியல்கைதி என்ற அளவில் போதுமான மட்டத்திற்கு அவ்வாழ்வை கிரகித்துக் கொண்டவையாயில்லை. அங்கு பெற்ற அநுபவங்கள் மிக மிக மேலோட்டமாகவும் உணர்வற்றும் தன்னைப் பற்றிய தகவல்களால் நிரம்பியதாகவும் அது குறுகிச் சிறுத்து விட்டது. புஸ்பராசாவின் எழுத்தோடு ஒப்பிடுகையில் சிறைக்கே சென்றிராத சோபா சக்தி எழுதிய "ம்" கதை ஓரளவு இன்னமும் சிற்பபாக சிறை வாழ்வையும், வெலிக்கடைப் படுகொலைகளையும், புலி இயக்க வன்முறைகளையும் பதிவு செய்துள்ளது. தான் வாழ்ந்த வாழ்வை அனுபவித்ததை, கண்ணால் கண்டதை எழுத்தில் படைக்கும் அளவிற்கு ஆற்றல் புஸ்பராசாவிடம் தேவையான அளவிற்கு செயற்படவில்லை என்று நாம் சொல்ல முடியும். அந்தவகையில் புஸ்பராசா ஒரு மோசமான விவரணையாளராக மாறிவிடுகின்றார்.


எதிர்வரும் இரண்டு பத்துவருடங்கட்கு ஈழப்போராட்டம் பற்றிய நூல்கள் மதிப்பீடுகள் பெருமளவு வெளிவரும் காலமாக இருக்கும். இங்கு புஸ்பராசாவின் எழுத்துக்கள் சகல திசைகளிலும் திரும்ப திரும்ப விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் வருவதை தடுக்க முடியாது. இது சார்ந்த வரலாற்றுணர்வு அவரிடம் செயற்படவில்லை, போதிய கவனத்துடன் இவை எழுதப்படவில்லை, இதற்கு புஸ்பராசாவின் வலதுசாரித் தமிழ் அரசியல் மதிப்பீடுகளும் கட்டாயமாகத் தடையாக இருந்தன. அவர்காலத்தில் அவருடன் சிறையிலிருந்த, அரசியல் நண்பர்கள், முக்கிய அரசியல்கைதிகள், ஜே.வி.பி யினர், தனிப்பட்ட நட்பு பேணியோர் என்று அவர் விபரிக்க ஏராளமான தேவையிருந்தது. சிறைவாழ்வில் தமது இலட்சியம் தொடர்பான எத்தகைய உறுதியை புஸ்பராசா கொண்டு இருந்தார் என்பது கூட வாசிப்பவர்களுக்கு தட்டுப்பட்டிராது, ஆனால் தான்மாத்திரம் அனுபவித்த சித்திரவதைகளை, பொலிஸ் இராணுவ துன்புறுத்தல்களை ஓரளவு எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார்.


ஏனைய தமிழ் இளைஞர்கள்கள் மேல் நடாத்தப்பட்ட பொலிஸ் வன்முறைகள் பற்றி அவர் ஆரம்ப நிலைத் தகவல்களைக் கூடத்தரவில்லை. தன்னோடு தொடர்புடையவர்கள் பற்றி மட்டுமே சில செய்திகள் பேசப்படுகின்றது. அக்காலத்தில் பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதைகள் எங்கும் பீதியூட்டுபவையாக இருந்தன. பஸ்தியாம்பிள்ளை புஸ்பராசாவை மட்டுமல்ல கிட்டதட்ட சகல தமிழ் இளைஞர்களையும் அடித்து நொருக்கியவர். செட்டியை மலம் போகுமளவிற்கு தாக்கியவர். தூசணத்தை அடுக்கு மொழியில் பேசும் பஸ்தியாம்பிள்ளை அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இருவரையும் இளைஞர்களோடு சம்பந்தப்படுத்தி பாலியல் பழிப்புச் சொற்களுடன் விசாரணை செய்வார். மிகமோசமான சித்தரவதைக்குப் பின்னர் இளைஞர்கட்கு சிகரெட், சாப்பாடு, பிரியாணி, கள்ளுக் கூட வாங்கிக் கொடுப்பதுண்டு. ஒருமுறை அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் பஸ்தியாம்பிள்ளையைச் சந்தித்போது "நீர்தான் பஸ்தியாம்பிள்ளையா? உம்மைத்தான் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். தமிழ் இளைஞர்களின் தாய்மார் விடும் கண்ணீர் உம்மைச் சும்மா விடாது விரைவில் உம்முடைய காக்கிச்சட்டையைக் கழற்றுவேன்" என்றார். அமிரத்லிங்கம் தன்னை பயமுறுத்தியதாக பஸ்தியாம்பிள்ளை தனது அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார். பஸ்தியாம்பிள்ளை பற்றிப் பாராளுமன்றத்திலும் கூட்டணி எம்.பி மார்கள் பேசினார்கள்.


சிறையிலிருந்த தமிழ் இளைஞர்கள் மோசமான அரசியலுணர்வு கொண்டவர்களாகவும் வெறும் தமிழ் வெறியால் உந்தபட்டவர்களாகவும் இருந்தனர். அரசியல் கிளாச்சியாளர்களுக்கு உரிய பக்குவத்தை உண்மையில் அவர்கள் அடைந்திருக்கவில்லை. எதிர்காலமின்மை, விரக்தி, முரண்பாடுகள் இவைகளால் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பிணக்குகளை கொண்டிருந்தனர். அரசியில் ரீதியான வாதாட்டங்கள், வாசிப்பு என்பன ஒரு சிலரைத்தவிர வேறு எவரிடமும் இருக்கவில்லை. ஆனந்தகுமார் - குட்டிமணி, வண்ணை ஆனந்தனின் அடிதடிகளை புஸ்பராசா அவர்கள் எழுதியுள்ளார். காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் சேனாதிராசா உட்பட பலர் தத்தமக்கென்று குழுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.


இடதுசாரிப்போக்குடைய சந்ததியார், வரதராஜாப்பெருமாள் போன்றவர்கள் புறமொதுக்கப்பட்டனர் [புஸ்பராசாவைப்போலவே,வரதராஜப்பெருமாள் மற்றும் புலிகள் உட்பட அனைத்து ஆயுதக்குழுக்களும் பின்னாளில் இந்தியக் கைக்கூலியாகியது வரலாறு].ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட சத்தியசீலன் போன்ற நபர்களுடன் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் சிறையில் கூட தொடர்புகளை எச்சரிக்கையோடு வைத்துக் கொண்டனர். சத்தியசீலன், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தனும் ஒன்றாய் சிறைவைத்த போது மூன்று நாட்களாக சத்தியசீலனுடன் காசிஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்போது சிறையிலிருந்த ஜே.வி.பி யினரே உடனே வந்து சத்தியசீலனுடன் பேசினர். சத்தியசீலன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தாம் மேடைப்பேச்சுக்காகவே கைதாகியுள்ளதாயும் சிறையிலிருந்த ஜே.வி.பி யினருக்கு காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் சொல்லியிருந்தனர். காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனும் ஆயுதப்போராட்டம் பற்றிப் பேசி இளைஞர்களை தூண்டி விடுபவர்களாகவும் இருந்தவர்களாவர். விசாரணைகளின் போது ஆங்கிலம் தெரிந்திருந்த காரணத்தால் இவர்கள் அடிகளிலிருந்து தப்பிக் கொண்டனர். ஆங்கிலம் பேசிப் படித்தவர்களாக பொலிஸ் விசாரணைகளில் தம்மைக் காட்டிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டனர். சிறைகளில் அதிகாரிகளுடன் பேசுவது, தமிழ் இளைஞர்களின் சிறைத் தேவைகளுக்காக ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் எழுதுவது என்று சிறையிலும் தமது மேல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டனர். சாதாரணமாக ஏனைய தமிழ் இளைஞர்கட்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், மோசமாக அடிக்கப்பட்டதோடு பலவித அவமானங்கட்கும் உள்ளாயினர்.


சிறையில் சாதி பார்க்கப்பட்டதாய் சில இளைஞர்கள் குறை சொன்னதை புஸ்பராசா எழுதியுள்ளபோதிலும் அதை ஒரு பொருட்டாய் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. சாதி வெளிப்படையாக பெரும்பாலும் காட்டப்படாவிட்டாலும் சாதுர்யமாக சாதி பார்க்கப்பட்டது. அரசியல் உணர்வுகள் ஒழுங்கு படுத்தபடாத இவர்களிடம் சாதி மற்றும் பிரதேசவாத உணர்வுகள், ஊர்ப் பெருமைகளும் குடிகொண்டே இருந்தன. வரதராஜப்பெருமாள் இந்திய வம்சாவழித்தொடர்புடைய ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது மறைமுகமான புறக்கணிப்பு இருந்தது. சாதி குறைந்தவர்கள் கணக்கெடாமல் விடப்பட்டனர். சில சமயங்களில் சேர்ந்து சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது. பொருளாதார பலம் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் தாய், தந்தையர் குடும்பத்தினரும் சிறையில் வந்து இளைஞர்களைப் பார்வையிடவோ, பணம், உணவு வகைகள் அனுப்பவும் முடியாதிருந்தனர். இத்தகைய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிறையில் இளக்காரமாய் எதிர்நோக்கப்பட்டனர்.


போட்டியும், பொறாமையும், கசப்பும் சிறையில் சாதாரணமாக இருந்தது. சிகரெட், பீடி, பாண் துண்டுகளுக்காகக்கூட சச்சரவுகள் நடந்தன. உணவுவகைளை பதுக்கி வைத்து சாப்பிடுவது நிலவியது. அரசியல் பண்பாடு வளர்ந்திராத நிலையில் தனிமனித விருப்புக்களும் சுயநலமும் முதன்மையிடத்தை வகித்தன. முதலாளிய தனிமனிதவாதமே பிரதான பண்பாக இருந்தது. எனினும்; ஜே.வி.பி இளைஞர்களின் தொடர்பு தமிழ் இளைஞர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தியது. இடதுசாரிப்போக்கின் அறிமுகமும் ஆயுத ரீதியில் அரசாங்கத்தை அசைக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் தென்படத் தொடங்கியது. சிறை ஊழியர்கள் சங்க தொழிற்சங்கமான LSSP இன் தலைவராக இருந்த K.V.D சில்வா போன்ற இடதுசாரிகள் தமிழ் அரசியல் கைதிகட்கும் ஜேவிபி அரசியல்வாதிகட்கும் இடையே அரசியல் பேசப்படுவதை ஊக்கவித்தனர். இரு பிரிவினரையும் பேச ஏற்பாடு செய்தனர். ஜேவிபி சிங்கள் மத்தியதர வர்க்கம், வேலையற்ற இளைஞர்கள், மாணவர்களின் அமைப்பாக இருந்த போதும் தமிழ் அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் அரசியல் ரீதியில் பலமாக இருந்தது. காசிஆனந்தன், மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், சத்தியசீலன் போன்றவர்கள் வெறும் தமிழ் தீவிரவாதத்தால் கண்ணவிந்துபோன அரசியல் வெறுமையாளர்களாகவேயிருந்தனர். ஜே.வி.பியிற்கு முதலாளியம், இந்தியவிரிவாதிக்கம் என்ற சீர்திருத்தவாத மாவோயிசப்பரப்பிலாவது அரசியல் தெரிவு ஒன்று இருந்தது.


சிறையில் காசிஆனந்தன், சத்தியசீலன், வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் ஜே.வி.பி உடன் கூட இருந்த போதும் கடைசி மட்டும் தமிழ் தேசிய வாத சின்னத்தனங்களை தாண்டிச் சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். சத்தியசீலன் போன்ற நபர்கள் அமிர்தலிங்கம் போன்றவர்களை விட மோசமான தீவிரவாத தமிழ் தேசிய வாதத்ததுள் கிடந்து உழன்றனர். வண்ணை ஆனந்தன் மேடைகளில் ஜே.வி.பி பற்றி பேசியதுண்டு. S.T பண்டாரநாயக்க தனக்கு மாக்கியவல்லியின் பிரித்தாளும் தந்திரம் பற்றிய நூலை அறிமுகப்படுத்தியதாய் பெருமையடித்துக் கொண்டதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை. சிவகுமாரன் பற்றியும் அவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றியும் சிறையில் இருந்த போது அறிந்து கொண்ட ஜே.வி.பி யின் தலைவரான ரோகண விஜயவீர நாம் "எழுபத்தையாயிரம் பேரைச் சேர்த்து அரசைப் புரட்ட முடியாமல் போய்விட்டது, நீங்கள நாலுபேர் சேர்ந்து அரசைப் புரட்ட முயற்சிக்கின்றீர்களா?" என்று தமிழ் இளைஞர்களைக் கேட்டதாய் சொல்லப்படுகின்றது.


சிறையில் இருந்தவர்கள் கருத்தியல் ரீதியில் ஒன்றிணைக்கும் பலமோ தலைமைப் பண்போ தமிழ் அரசியல் கைதிகளிடம் இருக்கவில்லை. இளைஞர்களின் தலைவர்களாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்ட காசிஆனந்தன் இன்று புலிப்பாசித்திற்கு துதிபாடும் நபராகவுள்ளார். மாவை சேனாதிராசா பாராளுமன்ற கதிரைக்காக தீவிரமாய் போரிடும் தமிழ் சந்தர்ப்பவாத அரசியலில் உலாவுகின்றார். ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்து அண்மையில் மரணமடைந்த வண்ணை ஆனந்தன், ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய எந்த அகதிகட்கும் உதவ மறுத்தார். தான் மட்டுமே உண்மையில் பாதிக்கப்பட்டவன் என்றும் மற்றவர்கட்காக சாட்சியம் சொல்லவோ, இலங்கையில் அறிந்ததாய் சொல்லவோ மாட்டேன் என்று மறுத்தார். மேடை தோறும் வண்ணை ஆனந்தனை "விடுதலை வீரன்" என்று அறிமுகம் செய்த மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தையும், அமிர்தலிங்கத்தையும் ஜேர்மனியில் அரசியலுக்கப்பால் வசைபாடித் திரிந்தார். தமிழ் தேசியத்துள் முளைவிட்டவர்களின் அரசியல் இவ்வாறாகத்தான் முடிவுற்றது. மக்கள் பரப்பிலிருந்து தொலைந்தே போனார்கள்.

சந்ததியார்:

சவுக்குத்தோப்பு புதைகுழிப் புகழ் பூண்ட உமாமகேஸ்வரன் மட்டும் சந்ததியாரை வெறுக்கவில்லை. தமிழ்தேசியவாதிகளில் கூட்டணி முதல் சகல இயக்கங்களும் சந்ததியாரைத் தலையெடுக்கவிடாமல் செய்ய முடிந்த சகலதையும் செய்தன. அமிர்தலிங்கம், மாவை சேனாதிராசா வரிசை முதல் புஸ்பராசா ஈறாக சந்ததியார் மேல் வெறுப்பை உமிழ்ந்தமை தனிப்பட்ட கோபதாங்களாலல்ல. மாறாகத் தமது தீவிரமான தமிழ் வலதுசாரி அரசியல் கருத்தோட்டத்திலாகும். தமிழ் தேசிய விடுதலைக்கு வந்த இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட நெருக்கடியூடாக பட்டுப்பழுத்து இடதுசாரித் திசைக்கு வந்தவர்கள் சகலரும் தமிழ் வலதுசாரிகளினால் கடுமையாய் எதிர்க்கப்பட்டனர், கொன்றொழிக்கப்பட்டனர். இந்த இடது சாரிப் போக்காளர்கள் பலவிதமான தத்துவார்த்த நிலைகளைக் கொண்டிருந்தபோதும், தீவிர இடதுசாரிப்போக்கு மற்றும் சீர்திருத்தவாதக் கன்னைகளை பிரதிநிதிப்படுத்தியபோதும் அவை வளர்ச்சிக்கு அருகே தான் இருந்தன.


 சந்ததியார், விசுவானந்ததேவன், சுந்தரம் போன்றவர்கள் தீவிரமான மாவோ வாதப்போக்குடையவர்களாக இருந்தபோதும், தமிழ் தேசியத்துள் இடதுசாரி உணர்வைப் பிரதிபலித்தனர். போராட்டத்தை அகலப்படுத்தவும், சிங்கள மக்கள் பற்றிய வர்க்க சிந்தனையையும் உள்வாங்கிக் கொண்டவர்களாக முன்னேற முயன்றனர். இப்போக்குகள் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் முதல் பிரபாகரன் ஈறாக உள்ள தீவிரவாத தமிழ் தேசியவாதிகட்கு இட்டு இடைஞ்சலாக இருந்தன. சந்ததியார் கொலை ஏதோ உமா மகேஸ்வரனின் கட்டளைப்படி சங்கிலியால் (கந்தசாமி) செய்யப்பட்ட தனிப்பட்ட சம்பவமல்ல. இக்கொலையில் இந்திய உளவுத்துறை, அமிர்தலிங்கம் உட்பட பல இடதுசாரி எதிர்ப்புச் சக்திகள் பின்புலமாய் செயற்பட்டனர். சந்ததியார் கொல்லப்பட்ட பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் உமாமகேஸ்வரன், சந்ததியார் மாவோயிசப்போக்குடையவராக இருந்தமையால் இந்திய அரசின் நிர்ப்பந்தத்தாலே கொல்ல வேண்டி வந்தயாய் நியாயம் சொல்ல முற்பட்டதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள முடியும்.


PLOT இலிருந்த வெளிப்பட்ட மக்கள் போராட்டம் என்ற கருத்து சந்ததியாருடையது தான். EROS, EPRLF போன்ற இயக்கங்கள் உத்தேச ஈழத்தில் மலையக மக்களையும் இணைப்பதன் மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இனரீதியாக முடிவைத்தர முயன்றனர். ஆனால் மலையக மக்கள் தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர் வர்க்கத்துள் அணிவகுப்புச் செய்யப்பட்ட மக்களாக இருந்தனர். தமிழ், தமிழினம் சார்ந்த உணர்வுகள் அவர்களிடம் செயற்படவில்லை என்பதுடன் சொத்து எதுவுமற்ற உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தனர். இங்கு சந்ததியார் மலையக மக்களின் விடிவு சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு சோசலிசப்புரட்சியுடன் தொடர்புடையது என்று சரியாகவே கருதினார். EROS போன்ற இயக்கங்களின் கருத்தியல் தோல்வியடைந்ததை இன்று நடப்புக்கள் காட்டி விட்டன. தமிழ் விடுதலை இயக்கங்கள் திடீரென பெரும் தொகை ஆட்களை உள்விழுங்கி இந்திய இராணுவப் பயிற்சிகளில் ஊதிப்பெருத்த போது இடதுசாரிகளின் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. தீவிர இராணுவவாதப்போக்குள் முன்பு, தேசியவாதம் முன்பு இவர்கள் எதிர் நிற்க முடியாது போயிற்று.


தேசிய விடுதலைப்போரில் வர்க்கக்குணம் இடதுசாரிகளை ஆயுத ரீதியில் வேட்டையாடுவதில், கொன்றொழிப்பதில் தன்னை வெளிப்படுத்தியது. இடதுசாரிகள் இயக்கங்களில் இருந்து வந்த பலர் தம்மையறியாமலே தீவிர தமிழ் தேசிய வலதுசாரிகளின் குரலில் அரசியல் பேசத் தொடங்கினர். இந்தச் சூழலில் அரசியலுக்காக போரிட்ட சொற்பமான மனிதர்களில் சந்ததியாரும் ஒருவராவர். இந்தியஅரசு, கூட்டணி, இலங்கையரசு தமிழ்தேசியம் சம்பந்தமாக அவர் சரியான மதிப்பீடுகளை கொண்டிருந்தார் எனினும் ஏகாதிபத்தியம் அது சார்ந்த சர்வதேச மூலதன இயக்கம் இவைகளோடு இந்தியா, இலங்கை போன்ற நாடுகட்குள்ள உறவு பற்றி சிந்தித்து இருந்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.


சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார். சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOT இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை. வடக்கில் பாலா தம்புவின் தொழிற்சங்கமான CMU பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கத்ததில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடாத்தியபோது அந்தப் போராட்த்தில் சந்ததியார் ஈடுபாடு காட்டிய சம்பவத்தை அன்று CMU வில் அங்கம் வகித்த பரராசசிங்கம் குறிப்பிடுகின்றார். 1981இல் சண்முகலிங்கம் என்ற இடதுசாரி நண்பருடன் கொழும்பில் சண்முகதாசனை சந்தித்து சந்ததியார் உரையாட முயற்சித்ததாயும் "JR ஒர் இனக்கலவரத்தை தொடங்க முயற்சிக்கிறார் நீங்கள் சகல இடதுசாரிகளையும் அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும், உங்களின் கீழ் நாம் பணிபுரியத்தயார்" என்று சந்ததியார் சொன்ன போது சண்முகதாசன் " நாற்பது வருட கால மார்க்சிய அறிவும் தலைமையும் கொண்ட எனக்கு புத்தி சொல்ல நீ யார்? வெளியால போ" என்றார்.


சண்முகதாசன் நேர்மையான மனிதராக இருந்த போதும் தீவிரமான ஸ்டாலி
னிசவாதி, குருட்டுத்தனமான மாவோவாதி, விமர்சனங்கட்கு பழக்கமற்ற ஒருதலையான பார்வை கொண்டவர். மாவோ, ஸ்டாலின் போன்றவர்களை தவறு விடாதவர்கள், அவர்கள் மேல் விமர்சனம் என்பது அவரது ஸ்டாலினியச் சிந்தனை ஒழுங்கு கண்டறியாத ஒன்றாகும்.


PLOT இயக்கத்துள் சந்ததியாருக்கு பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்த சமயம் உமாமகேஸ்வரனுக்கும் அமிர்தலிங்கத்திற்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டு இருந்தது. சந்ததியாரை இயக்கத்திற்குள் இருந்து வெளியேற்றினால்தான் மற்றைய இயக்கங்களோடு நாங்கள் சேர முடியும் என்று அமிர்தலிங்கம் உமா மகேஸ்வரனுக்கு புத்தி சொன்னார். NLFT இன் விசுவானந்ததேவனுடன் சந்ததியாருக்கு தொடர்பிருந்தது. விசுவானந்ததேவனும் சண்முகதாசன் அணியிலிருந்து வந்தவராவர். இவர்கள் இருவரும் இணைந்து வங்காள தேசத்தை சேர்ந்த அபுதாகிர் (Abu Taher) என்ற சோசலிஸ்ட் நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையை "வங்கம் தந்த பாடம்" என்ற நூல் வடிவில் வெளியிட்டனர். இந்திய உளவு நிறுவனமான "கியூ" பிரிவு சந்திரகாசனின் கூட்டாளிகளான DGP மோகனதாஸ் DIG இராஜசேகரநாயர் ஆகியவர்களின் தமிழ்போராளிகளுடான தொடர்பு பற்றியும் இதில் அவர்கள் எழுதியிருந்தனர். பிற்காலத்தில் மோகனதாஸ் போன்றவர்களின் CIA தொடர்பு வெளிவந்தது. இலங்கையரசுடன் உள்ள இரகசியத் தொடர்பும் பத்திரிகைச் செய்தியானது. இந்திய இராணுவப்பயிற்சி தமிழ்தேசிய இயக்கங்களை எப்படி நாசமறுத்தன என்ற படிப்பினைக்கு இன்று நாம் விட்ப்பட்டுள்ளோம். சகல தமிழ் இயக்கங்களும் அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றவர்களும் இந்தியாவின் பின்னால் அன்று அலைந்தனர் பயிற்சிக்கும் ஆயுதத்திற்குமாய் ஒருவரோடு ஒருவர் அடிபபட்டனர். இரத்தினசபாபதி, சந்ததியார் விசுவானந்ததேவன் போன்ற ஒரு சிலரே இந்தியஆயுதம், இராணுவப்பயிற்சியை எதிர்த்தவர்கள். அது சார்ந்த அரசியல் எதிர்வு கூறல் அவர்களிடம் இருந்தது.


சந்ததியார் கொல்லப்பட்டு சில மாதங்களுக்குள் விசுவானந்ததேவனும் புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் பண்ணைக்கடல் ஊடாக நெடுந்தீவு சென்று அங்கிருந்து இந்தியா செல்ல முயன்ற போது பண்ணை நெடுந்தீவு கடலில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார். இந்திய உளவுத்துறை வட்டாரங்களில் சந்ததியாரும் விசுவானந்ததேவனும் தீவிர கொம்யூனிஸ்டுக்களாக கணிக்கப்பட்டு இருந்தனர்.


இடதுபோக்குடையவர்களை அழிப்பதில் கூட்டணி, புலி, PLOT இந்திய அரசு சகல சக்திகளும் ஒன்றாகவே சிந்தித்தன. ஒரே மாதிரியாகவே செயற்பட்டன.


PLOT இல் இருந்து விலகிய சந்ததியார் தீப்பொறி குழுவை நிறுவியதுடன் விசுவானந்ததேவனுடன் இணைந்து செயற்பட்டதுடன் ஒரு இடது அணியை உருவாக்க முனைந்தார். விரைவாக இவர்கள் இருவரும் அழிக்கப்பட்டமையின் காரணம் இதுதான். அமிர்தலிங்கத்தின் பங்கு சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் கொலையில் குறிப்பிடத்தக்கதாகும். புலிகள் சுந்தரத்தை கொலை செய்த காலத்தில் அமிர்தலிங்கம் தமது வெளிநாட்டுக்கட்சி நபர்கட்கும், ஆதரவாளர்கட்கும் பிரபாகரனை ஆதரிக்கும்படி கடிதம் எழுதியதுடன் தனது வெளிநாட்டுப் பயணத்திலும் புலிகளை ஆதரிக்கும்படி வேண்டினார். N M பெரேரா, கொல்வினிடம் தான் பாடம் படித்த கதை அமிர்தலிங்கம் மேடைகளில் கூறிய போதும் அது அவரது இடதுசாரி எதிர்ப்புக்கு தடையாக இருந்ததில்லை. பொன்.கந்தையா, கார்திகேயன் போன்றவர்கட்கு எதிராக அமிர்தலிங்கம் கக்கிய தமிழ் வலதுசாரி துவேசம் கொஞ்சநஞ்சமல்ல. 1980களின் தொடக்கததில் பெர்லின் நகரில் நடந்த கலந்துரையாடலில் வைகுந்தவாசன் தான் அமிர்தலிங்கத்தை "நீங்கள் கூட்டணி இவ்வளவு பெரிய கட்சி, கட்சிக்கு சொந்தமாக ஒரு பத்திரிகை இல்லை நாம் பல்ககைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 'பீப்பிள் வொயிஸ்' என்ற பத்திரிகை நடத்தினோம்" என்று கேட்ட போது அமிர்தலிங்கம் உடனே " ஓம் ஓம் அது எனக்கு தெரியும், ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை" என்று நக்கல்விட்டதாய் சொன்னார்.


அமிர்தலிங்கம் இடதுசாரி எதிர்ப்பால் மட்டும் நிரம்பியவரல்ல. சந்ததியார், சுந்தரம் போன்றவர்களின் இரத்தக்கறை படிந்தவர்தான். அமிர்தலிங்கத்தின் மூர்க்கத்தனமும், தமிழ் வலதுசாரிப் பிற்போக்கு பிடிவாதமும், இலட்சியப்பற்றாய் விட்டுக்கொடாதவராய் அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுவதுண்டு. ஒரு முறை பாராளுமன்ற விவாத்தில் சிறில் மத்தியூ அமிர்தலிங்கத்தை பார்த்து பின்வருமாறு சொன்னார் " புலிமேல் சவாரி செய்பவர்கள் ஒரு நாள் புலியின் வயிற்றுக்குள்ளேதான் போவார்கள் " அமிர்தலிங்கம் புலியின் வயிற்றுக்குள்ளே போன போது அவரை " தானைத்தலைவர்" , "தளபதி" என்று புகழ்ந்தவர்கள் எவரும் அவருக்காக உயிர்தியாகம் செய்யவோ, புலிகளைப் பழிதீர்க்கவோ முயலவில்லை. புஸ்பராசா உட்பட, அவரது அனுதாபிகள் வெறும் இரங்கல் உரையுடன் அமைதியடைந்தனர். அமிர்தலிங்கத்தைக் கொன்ற பிரபாகரனை மென்மையாக சத்தமின்றிக் கண்டிப்பதோடு நின்றுவிடுகிறார்கள்.. ஆனால் அமிர்தலிங்கத்தின் கூட்டுச்சதியால் கொல்லப்பட்ட சந்ததியார் போன்றவர்களை மட்டும் இன்றுவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம் அடிக்கடி சொல்லும் " வளர்த்த கடா மார்பில் பாய்கிறது" என்ற மொழிபடி அவர் ஊட்டி வளர்த்த தமிழ் குறுந்தேசியவாதப் பிரதிநிதிகளான புலிகளே அவரைக் கொன்றார்கள்.


அமிர்தலிங்கத்தை விட சந்ததியார் நேர்மையான மனிதர், வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இயக்க வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் கடுமையான உழைப்பாளி. மாணவப்பருவத்தில் தந்தையாருடன் பென்ரருடன் நின்று தோட்டத்தில் வேலை செய்வார். பிற்காலத்தில் அவர் எளிமை, சிக்கனம், கணக்கு வைத்தல், இலட்சிப்பற்று இவைகட்கு அறியப்பட்டவராக இருந்தார். ஒரு முறை சந்ததியாரை தேடிவந்த பஸ்தியாம்பிள்ளை அவரது வீட்டுக்கொடியில் காயந்து கொண்டிருந்த அவரது சஸ்பென்ரரை தடியால் குத்தி எடுத்துச் சென்றார். பின்பு அவரை கைது செய்து விசாரித்த போது (துரையாப்பா கொலைவழக்கு) " ஒரு ஒழுங்கான பென்டருக்கு வழியில்லை ஆனால் துவக்கு வாங்க நீ சங்கிலி தூக்கி கொடுக்கிறாயோ" என்று கேட்டு அடித்தான். சந்ததியாரின் அரசியல் நண்பரொருவர் மற்றொரு சம்பவத்தை சொன்னார். ஓருமுறை சந்ததியாரின் ஊரான சுழிபுரத்தில் அங்குள்ள பெரிய சண்டியன் ஒருவர் சனத்தோடு கொழுவுப்பட்டுக் கொண்டு நின்றதைக் கண்ட சந்ததியார் அந்தச் சண்டியனிடம் சொன்னாராம் " நீ சண்டியன் என்று பெயரெடுத்தனி  ஒரு பேயன்ர கையாலை அடிவாங்கிச் செத்தவன் என்று பெயரெடுக்கப் போறாய் -பேசாமற் போ ".


சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார்.


இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார். சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் " இப்ப எனக்கு பசியில்லை" என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர். ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது " பசியில்லை என்று" சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போதும் சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார். சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார். எமக்குத் தெரியாத அரசியல் சந்ததியாருக்கு தெரியும் என்று அவரோடு சிறையிருந்த ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார்.

தொடரும்...

தமிழரசன்
பெர்லின்