கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. By Dr.பருத்தி வேந்தன்
|| பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிறது. ||
கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார்.
திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதும், லண்டனிலிருந்த புங்குடுதீவுக் கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். வழியாக கருணாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். கிருஸ்ணன் இலங்கை அரசின் உளவாளியாகச் செயற்பட்டு வருவது, ஈ.என்.டி.எல்.எப். அமைப்புக்குத் தெரிந்திருக்கவில்லை. பழைய புளொட் நபர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கிருஸ்ணன் ஈ.என்.டி.எல்.எப். அமைப்புடன் ஒட்டிக்கொண்டார்.
சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கிருஸ்ணன், கருணாவை மீண்டும் கொழும்புக்கு அழைத்துச் சென்று சிங்கள உளவுத்துறையிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் கிருஸ்ணன் இலங்கை அரசின் அதி முக்கிய காட்டிக் கொடுப்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
இலண்டனிலிருந்து அவர் கொழும்புக்குச் சென்றால் ஐந்து நட்சத்திர விடுதியில், சிவில் உடை சிங்களப் பாதுகாவலருடன் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உளவுத்துறையினரே கவனித்து வருகின்றனர். கடந்த 15-10-2007 அன்று கூட அவர் கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்து ஏதோ சதித் திட்டம் தீட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளொட் இயக்கத்தின் அழிவுக்கும் இந்த கிருஸ்ணன்தான் முக்கிய பங்காற்றினார் என்பது அந்த இயக்கத்தினரின் கருத்துக்காளாக உள்ளன. கருணாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்துச் சென்று இவரே கருணாவின் அரசியல் ஆலோசகரானார். இடையிடையே திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்ததாக லண்டன்வாசிகள் தெரிவித்தனர். திரு. ஆனந்தசங்கரி அவர்கள் சமீபகாலமாக லண்டன் வரும்போதெல்லாம் கார் ஓட்டிச் செல்லும் வேலையையும் கிருஸ்ணன் செய்துவந்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இலங்கை இராணுவ உளவுத்துறை திரு. ஆனந்தசங்கரி அவர்களை அவர்களது வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு கருணா மறைந்திருந்த இடத்துக்குச் சென்றது. அங்கு கருணா பல்லிளித்து நிற்க ஆனந்தசங்கரி அவர்கள் தட்டுதடுமாறி வாகனததை விட்டு இறங்கி, “தம்பி நான் கனகாலமா உம்மை பார்க்கோனும் என்று கனபேரிட்ட கேட்டுத் திரிந்தனான். எப்படி இருக்கறியள்” என்று ஆரம்பித்து புலிகளைச் சும்மாவிடக்கூடாது என்று தனது பங்குக்கும் வீரத்தைக் காண்பித்த ஆனந்தசங்கரி அவர்கள், நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் பிரபாகரன் கிளிநொச்சியை விட்டு ஓடவெல்லோ வேணும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.
பின்னர் உளவுத்துறையினரைப் பார்த்து என்னை எதற்காக கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் என்று சங்கரியார் கேட்க, கிழக்கில் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலைசெய்தால்தான் எங்களுக்கு நல்லது. அதற்காகத்தான் இங்கே கூட்டிவந்து கருணாவைச் சந்திக்க ஏற்பாடுசெய்தோம்.
கருணாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி. தன்னை ஓர் அரசியல் தலைவர் என்ற அளவுக்கு இலங்கை அரசு உயர்த்தி உள்ளது. ஆனந்தசங்கரி அவர்கள் என்னைத் தேடிவந்து பார்க்கும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேன் என்று அதுவரை நுணிக்கதிரையில் இருந்த கருணா இந்த நினைப்புக்குப் பிறகு அடி ஆசனம் வரை நிமர்ந்து சௌகரியமாக அமர்ந்து புதிய கணக்கினை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார்.
திரு.ஆனந்தசங்கரி அவர்களோ, கூனிக் குறுகி புலிகள் தலைவருக்கு கிளிநொச்சியில் கொடுத்த மரியாதைக்கு மேலாக கருணாவுக்கு மரியாதைக் கொடுத்து “தம்பி உமக்கு என்ன உதவியென்;றாலும் நான் செய்வதற்குத் தயாராயிருக்கிறன், வெளிநாடுகளில் எனக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்குது. நான் கடிதங்கள் அனுப்பாத அரசாங்கமும் கிடையாது, ஆக்களும் கிடையாது. மகிந்தகூட என்னட்ட கேட்டுத்தான் எல்லாத்தையும் செய்கிறார்” என்று அடுக்கிக்கொண்டு போக, உளவுத்துறையினர் ‘போதும் இவ்வளவும் போதும், மட்டக்களப்பில் நடக்கவேண்டியதைப் பேசுங்கள்” என்றனர்.
சங்கரி அவர்களுக்கு என்னபேசுவதென்றே தெரியாது, உளவுத்துறையினரைப் பார்த்து நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதம், தம்பி (கருணாவைப் பார்த்து) நீர் என்ன சொன்னாலும் நான் செய்யிறன். பேச்சுவார்த்தையே வேண்டாம், புலிகளை ஒழித்தால் சரி, அதுதானே உமது கொள்கையும், எங்கள் எல்லோரது (உளவுத்துறையினரைப் பார்த்து) கொள்கையும் அதுதானே. என்று கூறி சரி நான் போட்டுவரட்டே என்று கருணாவுக்கு கையை நீட்டி விடைபெற்று வந்த வாகனத்திலேயே யாரும் சொல்லாமலேயே ஏறிக்கொண்டார் சங்கரியார். (குறிப்பு;:- திரு.ஆனந்தசங்கரி அவர்கள் இதனை மறுத்தால் நான் ஆதாரத்துடன் வெளியிடத் தயாராக இருக்கிறேன்)
கருணா ஐரோப்பாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இந்த நாடகங்கள் நடந்தன. கருணாவின் பிரதம ஆலோசகர் புங்குடுதீவு கிருஸ்ணப்பிள்ளைதான் கருணாவுக்கு ஐரோப்பிய ஐடியாவைக் கொடுத்தவர். ஐரோப்பாவுக்குள் சென்றால் யாராலும் எதுவும் செய்யமுடியாது, தனக்கு அந்த அளவுக்கு அங்கே செல்வாக்கு உண்டு என்று கருணாவை நம்பவைத்தார் கிருஸ்ணன். கருணாவையும் அவரது மனைவியையும் ஐரோப்பா மோகம் உருக்குலைத்து வந்தது. குறிப்பாக லண்டன்தான் அவர்களது உள்ளத்தின் கனவுக்கோட்டையாக இருந்துவந்தது.
கிருஸ்ணனின் எண்ணப்படி லண்டன் வந்து சேர்ந்தால் கருணா தனது பிடியில்தான் இருக்கவேண்டும். வேறு யாரும் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க கருணாவை லண்டனுக்குத் தள்ளிச் சென்றால் மட்டுமே சாத்தியம், அதன் பின்னர் கருணாவின் கட்சி கிருஸ்ணனின் காலடியில் என்பது புங்குடுதீவுக் கிருஸ்ணனின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதன்படி கருணா லண்டனுக்கு சிங்கள நபரின் கடவுச் சீட்டில் தள்ளிச் செல்ல அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. கிருஸ்ணன் யாருக்கும் தெரியாமல் மத்திய லண்டனில் தனியான வீடு ஒன்றினை விலைக்கு வாங்கி கருணாவையும் குடும்பத்தையும் குடியமர்த்தினார். இந்தவிடயங்களில் கிருஸ்ணனுக்கு சொந்தமாகப் புத்திவேலை செய்யாது. இவற்றுக்கு உதவியது உண்டியல் புகள் ஜெயதேவன் என்பது திரைமறைவில் கிடைத்த தகவலாகும்.
இந்த ஜெயதேவனை கருணாவுக்கு அறிமுகப்படுத்தியது புங்குடுதீவு கிருஸ்ணன்தான். ஜெயதேவன் ஓர் கணக்குப் பிள்ளை. லண்டனில் கோவில் உண்டியல் பணத்தில் தனது வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டவர். கருணாவின் வரவு செலவுகளைப் பார்த்து அதனை முதலீடு செய்ய வேண்டும் என்று கிருஸ்ணப்பிள்ளை கூற அதுவரை கருணாவைத் தூற்றிவந்த ஜெயதேவன் கிருஸ்ணனையும் அழைத்துக்கொண்டு இந்தியாவில் தனக்கிருக்கும் முதலீடுகளைக் காண்பிக்க ஆரம்பித்தார். இதற்கென ஓர் சுற்றுப்பயணமும் நடைபெற்றது.
ஜெயதேவனின் மனைவியின் சகோதரன் தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருக்கிறார். அவர் ஜெயதேவனின் சில கோடி ரூபாய்களை முதலீடு செய்து கவனித்துவருகிறார். கருணாவின் பணத்தையும் அதுபோன்று முதலீடு செய்யலாம் என்று அறிவுரை கூறி கிருஸ்ணப்பிள்ளையும் கருணாவுக்கு ஆலோசனை கூறவைத்து கருணாவைக் களத்தில் இறக்கினர் இந்த இருவரும்.
அதன்படி பெனியன் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றினை தைவானிலிருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலை ஒன்றினை திருப்பூரில் ஆரம்பித்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
இதுமுதல் ஜெயதேவன் கருணாவின் நிரந்தரக் கணக்குப்பிள்ளையானார். கிருஸ்ணனுக்கு அரசியல் ஆலோசனையையும் இடையிடையே வழங்கி வருகிறார் இந்த முதலீடு மூலம் கருணாவுக்கு கிருஸ்ணன் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. இதுவுமல்லாமல், வடிவேலு ஆனந்தன் (அல்லது ஆனந்தசிவா) என்பவர் கொழும்பு செட்டியா தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் இவரை 2006 ஆம் ஆண்டு மாசிமாதம் ஆறாம் திகதி கிருஸ்ணனின் ஏற்பாட்டில் கடத்தப்பட்டார். அவரிடமிருந்த ரூபா 5கோடி பெறப்பட்ட பின்னர் 10-02-2006 அன்று விடுவிக்கப்பட்டார். இந்தக் கடத்தலுக்கும் பணப்பறிப்புக்கும் புங்குடுதீவு கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று கருணா அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
இவர் அல்லாமல், கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் சீனி வியாபாரம் செய்துவந்த சிறிஸ்கந்தராஜா என்பவரை அவரது கார் ஓட்டுனருடன் சேர்ந்து 20-07-2006 அன்று கடத்தப்பட்டார். இவரிடமிருந்தும் 5கோடி ரூபா பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவர்கள் இருவரையும் தீவுச் சேனையில் வைத்து கொலை செய்து அங்கேயே புதைத்தும் விட்டனர். இந்தக் கடத்தலும் கிருஸ்ணன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நடந்தது. இருவரையும் விடுதலை செய்யவேண்டாம், கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டது இதே கிருஸ்ணப்பிள்ளைதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரு சம்பவங்களுக்கும் கிருஸ்ணன்தான் சூத்திரதாரி என்று பிள்ளையான் சொன்னதும் கருணாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே கிருஸ்ணன் சொல்படி நடந்தால் உலகின் உச்சிக்கே செல்லலாம் என்று தீர்மானித்துவிட்டார். அதன்படிதான் கருணா மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும் என்ற கிருஸ்ணனின் வலையில் வீழ்ந்தார்.
வடக்கிலிருந்துகிழக்கைப் பரிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தவேண்டும் என்பது மகிந்தாவின் விருப்பம். மகிந்த உளவுத்துறையுடன் ஆலோசிக்க, உளவுத்துறை கிருஸ்ணனுடன் ஆலோசித்தது. கிழக்கைத் துண்டாடும் வரை கருணாவைப் பயன்படுத்துவதென்றும் அதன் பின்னர் கிருஸ்ணனே அந்த இயக்கத்தின் தலைவர் என்ற நிலையை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு!
பிள்ளையான் கருணாவின் எதிரியானார். அது எப்படி என்றால், பிள்ளையான் எப்போதும் இராணுவத்துடனும், அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும் பழகிக்கொண்டார். கருணாவோ தன்னை அரசியல் தலைவர் போல் காண்பிக்க முற்பட்டார். இந்தச் செயல் இராணுவத்துக்குப் பிடிக்கவில்லை. கருணா தனது இயக்கத்துக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை சொல்லப்புறப்பட்டார். குறிப்பாக கருணா தொலை பேசியில் ஒவ்வொருவரைப் பற்றியும் தவறாகச் சொல்வதை இராணுவ உளவுத்துறை பதிவுசெய்து பிள்ளையானுக்குப் போட்டுக் காண்பித்தது.
கருணாவைப் பற்றிப் பிள்ளையானிடமும் பிள்ளையானைப் பற்றி கருணாவிடமும் தவறான தகவல்களைச் சொல்லி இருவரையும் பகை வளர்த்து, அதன்பின்னர்தான் தொலைபேசி ஒட்டுக் கேட்புகளைப் பதிவு செய்து இதுபற்றி அவருக்கும் அவர்பற்றி இவருக்கும் போட்டுக் காண்பித்து நிரந்தரப் பகையை வளர்த்தனர் சிங்கள இராணுவப் புலனாய்வுத் துறையினர்.
கருணாவும் பிள்ளையானும் பெரும் அறிவாளிகள் கிடையாது. இருவருக்குமே உள்ள தகுதிகள் கொலை செய்வது கொள்ளையடிப்பது இவை இரண்டையும் தவிர பொதுவான கொள்கை என்னவென்றால் யாழ்ப்பாணியை ஒழித்துக்கட்டுவதுதான் இந்த இருவருக்குமான தகுதிகள் என்பதனை உளவுத்துறை நன்கு தெரிந்து இரு கோமாளிகளையும் பயன்படுத்தியது என்றால் அதுமிகையல்ல! தமிழினத்தின் தோற்றம், அதன் வரலாறு. அதன் பாதிப்புகள், தமிழினம் இழந்தவை என்ன? ஏன் போராடினோம், எதற்காகத் தனிநாடு? என்ற எந்தவிதமான குறைந்த அளவு அறிவுகூட இந்த இருவருக்கும் கிடையாது.
கிருஸ்ணன், ஜெயதேவன், குமாரதுரை போன்றவர்களது அறிவுரையால் தமிழினம் பாதி நிலத்தை இழந்தது என்றால் அதற்கு, அந்தச் செயலுக்கு காம்புகளாகப் பயன்பட்டது இந்த இரண்டு துரோகிகளும்தான். ஒரு துரோகி தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு லண்டனில் தஞ்சம் கேட்டு நிற்க, அடுத்த துரோகியான பிள்ளையானை இலங்கை அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த நபரைக் கூட கடந்த 20-10-2007 அன்று ஆனந்தசங்கரி அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்றால் யாரும் நம்புவார்களா?
முதலில் கருணா மறைந்திருந்த இடத்துக்கு சங்கரி அவர்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஆனால் இப்போதோ பிள்ளையானை சங்கரி அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வைத்துள்ளது இராணுவம்.
தமிழ் இனத்தை எப்படி வீழ்த்தலாம் என்ற ஆலோசனை வழங்கும் தமிழினத் துரோகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழம்தான் இந்த ஆனந்தசங்கரி அவர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயர் இந்த சங்கரியாருக்கு எப்படிப் பொருந்தும். விடுதலையே கிடைக்காது என்ற பின்னர் இவர் எப்படி அந்த முன்னணிக்கு உரிமை கொண்டாட முடியும்? கிழக்கைத் துண்டாடிப் பிரித்தமைக்கு கருணாவும் பிள்ளையானும் மட்டும் காரணமல்ல, தமிழர் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட சங்கரியாரும் முக்கிய காரணமாகும்.
துமிழரை இழிவுப்படுத்த இந்தச் கோமாளிகளைப் பயன்படுத்திய அரசு பிரிதொரு மார்க்கத்தில் தனது சூழ்நிலையைச் செயல்படுத்தியும் வருகிறது. பிள்ளையான் தலைமையில் கிழக்கில் நிரந்தர தமிழர் எதிர்ப்பு ஆயுதக் குழுவொன்றினை ஏற்படுத்தி அரசின் தேவைக்குப் பயன்படுத்துவது என்பது அந்த ஏற்பாடாகும்.
அதன்படி, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர்களுக்கு பிள்ளiயான் பயிற்சி அளித்து வருகிறார். திருகோணமலை மாவட்டத்தில் இந்தப் பயிற்சி நடந்துவருகிறது. மகிந்த ராஜபக்சேயின் உத்தரவில் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் ஓட்டுமாவடியில் சின்னத்தம்பி என்ற கருணாவின் நபர் சென்ற ஓட்டோ வாகனத்துக்கு கண்ணிவெடி வைத்தது இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான். பிள்ளையான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர்கள்தான் ஓட்டுமாவடியில் கண்ணிவெடி வைத்தவர்கள். இப்போது பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பயிற்சி முடிந்ததும் மட்டக்களப்பில் புலிகளை வேட்டையாட அமர்த்தப்படவுள்ளனர். இது சிங்கள அரசின் பெரிய தந்திரமாகப் பேசப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, வடக்குப் பகுதியில் புலிகள் இயக்கத்தை விழ்த்த, அல்லது உடைக்க, அல்லது ஓரம்கட்ட புதிய யுக்தி ஒன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் முயற்சித்து வருகிறது அரசு. அது என்னவெனில், வடக்குப் பகுதியில் சாதிச் சண்டைகளை ஏற்படுத்துவது. இதன் மூலம் வடக்கு கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளில் பகையை உண்டுபண்ணுவது. வடக்குப் பகுதக்குள் நுழைந்து இதனை இப்போது செய்ய முடியாது. இதனைத் தூண்டி விடக்கூடிய சரியான களம் பிரான்ஸ் நாடு ஆகும்.
இலங்கை அரசு தமிழருக்கான உரிமைப் போராட்டத்தை நசுக்க தமிழரையே பயன்படுத்த வேண்டும் என்ற அருமையான ஓர் கண்டுபிடிப்பினை இன்று நேற்றல்ல அரை நூற்றாண்டாகவே கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் துரோகிகளை உருவாக்கி அமைச்சர் பதவியையும் வேறு சலுகைகளையும் கொடுத்து பலரை இப்படி உருவாக்கிய அரசு, ஆயுதப்; போராட்டம் வலுப்பெற்ற வேளையிலும் இதே தந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது.
1986ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் ரெலோ இயக்கத்தினை தாக்கி அழித்த போது அரசு புலிகளை ஊக்குவித்தது. பின்னர் புலிகளது கொலை வெறியிலிருந்து தப்பித்த ரெலோ போராளிகளைப் பாதுகாப்பது போன்று அவர்களை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தியதுடன், பின்னாளில் புலிகள் தாக்கி அழிக்க முற்பட்ட இயக்கங்களையும் தன்வசப்படுத்தி அதில் வெற்றிகண்டது.
புலிகளின் பேராசையானது எங்கள் விடுதலையை பின்னுக்குத் தள்ளியது என்ற கூற்றை யாரும் மறுக்க முடியாது. கசப்பான உண்மைகள் சுடத்தான் செய்யும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த ஒன்று. புலிகளுக்கு மட்டும் இது தெரியமல் போனதா? தெரிந்தே குலைத்தனர். இவற்றைத்தான் சிங்கள அரசு இதுவரை பயன்படுத்தி வெற்றிக்கண்டுள்ளது என்ற உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் மறைக்கலாம். உண்மை தாமதாமாகத் தெரியவரும்.
ஏனைய இயக்கங்களை புலிகள் துரோகிகள் என்று கூறி படுகொலை செய்தனர். துரோகி என்றால் மிகவும் மோசமான ஓர் தமிழ்ச் சொல். துரோகிகளுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர். இதனால் புலிகள் இயக்கம் ஏனையோரைத் துரோகிகள் என்று பெயர் சூட்டுவதன் மூலம் தங்களுக்கு வேண்டத் தகாதவர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தினர்.
இலங்கை அரசாங்கத்திடம் முதல் முதலில் கையேந்தியவர்கள். ஊதவி பெற்றவர்கள் யார் என்று பார்த்தால் பிரேமதாசாவிடம் நாடிச் சென்ற புலிகள்தான் முதல் இடத்தை வகிக்கின்றனர். எனவே. துரோகத்தைச் செய்தவர்கள் முதலில் புலிகள்தான். ஆனால் பட்டங்கள் ஏனைய இயக்கங்கள் மீது சுமத்தப்பட்டன. அண்மையில் கூட காணமல்போன புலிகளின் அரசியலாளர் யோகி என்பவர் ஓர் கட்டுரையில் சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியிலிருந்த துரோக இயக்கமான ஈ.என்.டி.எல்.எப். முகாம் ஒன்றினை குண்டுவைத்து தகர்த்து தமிழ்ச் செல்வன் அழித்தான் அப்படியான வீரன்தான் தமிழ்ச் செல்வன் என்று புகழ்ந்துள்ளார்.
இதில் என்ன உண்மையென்றால், தனங்கிளப்புப் பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தின் முகாம் இருந்ததேயில்லை. இதில் மறைந்துள்ள உண்மை புலிகளைத் தவிர ஏனையோருக்குத் தெரியவாய்ப்பில்லை.
புலிகள் இயக்கத்தில் ஒருவர் உயர்ந்த பதவிக்கு வர வேண்மென்றால் அந்த நபர் மிகவும் அதிகமான கொலைகள் செய்திருக்க வேண்டும். வேண்டப்படாதவர்களை அதிக அளவில் கொலை செய்தால் அவர் உயர்ந்தபதவியை அடையலாம். இதற்கு அவர்கள் எழுத்து பூhவமாக அவற்றைச் சொல்லவேண்டும். இன்ன திகதிகளில் இன்னாரைக் கொன்றேன் இவ்வளவு பேரை இந்த இடத்தில் வைத்துக்கொன்றேன் என்றெல்லாம் எழுதி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினால் கொலைகளுக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். 1991 வரை புலிகள் இயக்கத்தில் இதுதான் நடைமுறை.
தமிழ்ச் செல்வனும் தனங்கிளப்பில் முகாம் அடித்தேன். அழித்தேன் என்று எழுதி அனுப்பி பதவி உயர்வு பெற்றிருக்கலாம். இதுதான் உண்மையாகவும் இருக்கமுடியும். இப்படியாக தமிழர்களைக் கொன்று சாதனைப் படைத்தவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து ஊக்குவித்தவர்கள்தான் விடுதலைப் புலிகள். பிரேமதாசாவிடம் கையேந்தி துரோகம் செய்திருக்காவிட்டால், சிலவேளை ஏனைய இயக்கங்களும் துரோகம் செய்ய இலங்கை அரசிடம் சென்றிருக்க மாட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்போது தமிழ் இனத்துக்கு வந்திருக்கும் ஆபத்தானது புலிகள் இயக்கத்தினால் வந்ததுதான். ஏனைய அனைத்துத் தமிழ் இளைஞர்களையும் அழித்துவிட்டு இவர்கள் சுருங்கிக் கொண்டதால் மொத்த இனமுமே சிங்கள அரசிடம் சிக்குக் கொள்ளும்ட நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
சிங்கள அரசு கொலை செய்கிறது என்று கூறி அனுதாபம் தேடுகின்றனர். இதற்கு இந்தியாவில் கொள்கையும் மக்களிடம் ஆதரவும் இல்லாத சில நபர்களும் சேர்ந்து குரல் கொடுத்து அனுதாபம் தேடிக் கேட்கின்றனர். இதே நபர்கள், திரு.பத்மநாபா, திரு.அமிர்தலிங்கம், திரு.சிறிசபாரெத்தினம் போன்றோர் புலிகளால் கொல்லப்படும் போது விளக்கக் கூட்டம் போட்டு புலிகளை ஊக்குவித்தவர்கள், இப்போது புலிகள் கொல்லப்படும் போது அனுதாபம் தேடி தெருவில் அலைகின்றனர்.
இந்த நபர்களில் ஒருவர் கூட “ தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என்று கேட்டதும் இல்லை, கூறியதுமில்லை. புலிகள் தமிழ் இயக்கங்களை அழிக்கும் போது இந்த நபர்கள் புலிகளுக்கு கொம்பு சீவும் வேலையைத்தான் செய்தனர்.
தமிழீழம் யாருக்காக? பிரபாகரனுக்கும், அவரது ஆதரவாளருக்குமா என்று ஏன் கேட்கவில்லை? தமிழீழம் மொத்தத் தமிழருக்குமாகத்தானே கோரப்பட்டது! ஏனைய தலைவர்களையும் இயக்க உறுப்பினர்களையும் கொல்வது தவறு என்று ஏன் இந்தத் தலைவர்கள் தடுக்கவில்லை! ஈழத்தில் கொல்லப்படுகிறான் என்று குரல் கொடுக்கும் இந்தியத் தலைவர்கள் அன்று தமிழ் இனத்தைப் புலிகள் படுகுழிக்குள் அனுப்பும் போது அதனை வீரச்செயல் என்று புகழ்ந்தல்லவா பேசிவந்தனர். ஒருக்கால் இவர்கள் புலிகளுக்கு கொம்பு சீவாமல் விட்டிருந்தால் பிரபாகரன் ஏனைய இயக்கங்களை அரவனைத்துச் சென்றிருப்பார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இப்போது ஆபத்து அருகில் வந்த பின்னர்தான் புலிகளுக்கு அனுதாபம் தேவை என்று மன்றாடுகின்றனர்.
கிழக்கைப் பிரித்தது போன்று வடக்கை உடைப்பதற்காக அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஆரம்பம்தான் தலித் முன்னேற்றம் என்ற முழக்கம். பாரிசில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை அரசின் கைக்கூலிகளாவர். பிரான்சில் இருக்கும் இலங்கைத் தூதரகம்தான் இவர்களை இயக்கிவருகிறது.
1972 களில் இதே போன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி சில அமைப்புகளை யாழ்ப்பாணத்தினுள் ஊக்குவித்தது. ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இவை எல்லாம் மறைந்துவிட்டன. அதனை மீண்டும் உயிர் கொடுத்து இன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழர்களைப் பிரிப்பதற்கு அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
“தலித்’ என்ற சொல் வட இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ் நாட்டில் இந்தச் சொல்லை பலரும் பல லாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் சாதியைக் குறைத்துக் கூறினால் அங்கு சலுகைகள் வழங்கப்படுவதால் அது வளர்ச்சி பெற்று வருகிறது.
ஈழத்தமிழர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று எழுபதகளில் எடுத்த முயற்சியானது பொரும்பலனை ஏற்படுத்தியது. விடுதலையில் பங்குபெற்ற எந்த இயக்கமும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் இயக்கங்களை இது விடயத்தில் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இப்போது அரசின் தூண்டுதலால் புதிய தலித்துகள் என்று உருவாக்கப்பட்டு தமிழரைச் சிதைக்கும் முயற்சியை ஈழத்மிழர்கள் அனுமதிக்கக் கூடாது. வடக்கில் இந்த முயற்சியை அரசாங்கம் செய்து வரும் வேளையில் பிள்ளையான் தலைமையில் கிழக்கின் தீவிர இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் நோக்கம் கிழக்கில் தமிழரையும் இஸ்லாமியரையும் மோதலில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசு லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறது.
பிள்ளையானையும் “வகாபிசம்” என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரையும் உள்ளடக்கி ஓர் ஒப்பந்தத்தை இராணுவ உளவுத்துறை ஏற்படுத்தியது. அதன்படி பிள்ளையானும் அவர்களும் இணைந்து செயற்படுவது என்றும் அவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் பிள்ளையான் மேற்கொண்டு வருவதென்று தீர்மானித்து கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படிதான் திருமலை மாட்டத்தில் வைத்து பிள்ளையான் இஸ்லாம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.
கருணா கிழக்கை விடுவிக்கப் புறப்பட்டவர் என்று பலராலும் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. அப்படிப் புறப்பட்டவர், இங்கிலாந்தில் வாழ்வு தேடுகிறார். எனவே, அவரது அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். ஆனால் இவர் மூலம் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றுப் பார்த்தால் ஒரு மாகாணமே பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தும் சில சுயநலவிரும்பிகள் அவர் கிழக்கை மீட்டுவிட்டார் என்றும் பிரசாரம் செய்கின்றனர். கிழக்கை மீட்டால் அவர் அங்கேதானே இருக்கவேண்டும் கடமையை முடித்துவிட்டுத்தான் இங்கிலாந்துக்குப் புறப்பட்டாரா?
எந்தெந்த வழிகளிலெல்லாம் இலங்கை அரசு தமிழர்களை நாசம் செய்ய முடியுமோ அந்தவழிகளை எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை வைத்தே செய்து வருகிறது. சிலர் வெளிப்படையாகவும், பலர் திரைமறைவிலும் தமிழினத்தை அழிக்க அரசுடன் பணியாற்றிவருகின்றனர். இவர்களது நோக்கம் பணமும், பதவியுமே தவிர வேறில்லை.
http://theepori.com/essaysfull.php?essaysid=27
விமர்சனங்களுக்கு எவரும் - எவையும் அப்பாற்பட்டதல்ல. - தீப்பொறி ! November 11,2007
விமர்சனங்களுக்கு எவரும் - எதுவும் அப்பாற்பட்டதல்ல. தீப்பொறி மீது வைக்கப்படும் விமர்சனங்களை நாம் எப்பொழுதும் கவனத்தில்கொள்கின்றோம். நாம் வெளியிடும் செய்திகளில் உண்மையில்லை பொய் என்று யாரும் கருதினால் நாம் கூறும் செய்திகளை தரவுகளை நீங்களே ஒருதரம் பக்கச்சார்பின்றி பரிசீலித்துப் பார்ப்பீர்களானால் அதன் உண்மைத் தன்மைகள் புரியும்.
நாம் பதிவிடுகின்ற அனைத்துச் செய்திகளும் எமது சமூகத்தின் நிகழ்கால எதிர்கால நலன் கருதியே. எமது மக்களின் முதுகில் சவாரி செய்ய எவர் முயன்றாலும் தயவுதாட்சயம் இன்றி நாம் அவர்களை அம்பலத்திற்கு கொண்டுவருவோம். இதில் தொடர்ந்து நாம் உறுதியாக உள்ளோம்.
இன்றைய இணையத்தளங்களின் பின்புல அரசியல் பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். இன்று தமிழ் இணையத்தளங்களை நடாத்துகின்ற பெரும்பான்மையினர் ஏதோ ஒருவகையில் கடந்தகால தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, அல்லது இயக்கங்களை ஆதரிக்கின்ற நிலையில் இருந்தவர்களென்பது தவிர்க்கமுடியாதது ஒன்றுதான். இன்றும் ஒருசில இணையத்தளங்கள் இவ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிக்கின்றவைகளாக இருப்பதும் உண்மை.
ஆனால் இவ் இணையத்தளங்களில் அநேகமானவை வன்முறைக்கு எதிராகவும் ஐனநாயகத்தை கோருவனவாகவும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலையை கோருவனவாகவும் இருக்கின்றன. தீப்பொறியும் சாதி, மத, பாகுபாடின்றி ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், குறிப்பாக ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் குரலாகவும், உண்மையின் குரலாகவும், நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தோடும் செயல்படும்.
தீப்பொறியின் பின்புலம் ஏதோ ஒரு அமைப்பு சார்ந்தது என்று குற்றம் சாட்டுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. தீப்பொறியாகிய நாம் பதிவிடுகின்ற செய்திகள் தகவல்களின் மீது விமர்சனங்கள் இருப்பின் நாம் அவர்கள் கூறும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் கண்டனங்களையும் மனதார வரவேற்க தயாராக உள்ளோம். உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை.
சமீபகாலங்களாக குறிப்பாக கிழக்குமாகாணத்தில் நடக்கும் மனிதக்கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள். அந்த மக்கள் காலம் காலமாக இலங்கை அரசினாலும் ஏனைய விடுதலை இயக்கங்களினாலும் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வாழும் சுழ்நிலையே காணப்பட்டது. இன்றும் எவ்வித மாற்றமும்மின்றி அது தொடர்கின்றது. கிழக்கின் விடுதலைக்காக தாங்கள் போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களும் நபர்களும் தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்களே தவிர அந்த மக்களின் வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று நம்பிக்கையைக்கூட ஏற்படுத்தவில்லை.
கிழக்கு மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் சுரண்டி பலப்படுத்திக்கொண்டிருந்த புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தபோது கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடிவு நெருங்கிவிட்டதென்றெ நம்மில் பலர் கருதினோம். அந்தவகையில் நாம் எல்லோரும் ஆதரவு வழங்கினோம் ஆனால்கண்டபலன் என்ன? அரச ஒடுக்கு முறைகளுக்கும் புலிகளின் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளான அந்த மக்கள் தொடர்ந்து கருணாவினதும் பிள்ளையானினதும் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் மிச்சம்.
கருணாவின் தவறான போக்கிற்கும் அவரின் மிதமிஞ்சிய சொத்துக்கள் பணம் தொடர்பான ஆசைகளுக்கும் நாம் கருணாவை மாத்திரம் குற்றம் சாட்டுவதில் பிரயோசனம் இல்லை என்பதை காலப்போக்கில் அறிந்து கொண்டோம். அவர் பின்னால் அவரை சுற்றியிருந்த இலங்கை அரசு மற்றும் கருணாவுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வேலை செய்த சில குறிப்பிட்ட நபர்களுமே காரணமென்பது புரிந்தது.
இதனை நாம் ஆராய்ந்தபோது லண்டனில் வசிக்கும் திரு.கிருஸ்ணன், பாரிசில் வசிக்கும் திரு.ஞானம், டென்மார்க்கில் வசிக்கும் திரு.குமாரதுரை போன்ற நபர்கள்தான் இதில் முக்கியமானவர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இவர்களின் இன்றைய நடவடிக்கைகள், பின்புலங்கள் பற்றி அறிய முனைந்தபோது அவர்களோடு இருந்த நம்பிக்கையாளர்கள் மூலமே பல்வேறு தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை நாம் ஆராய்ந்தோம். இந்த ஆராய்வில் எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் இருந்ததில்லை. எனவே நாம் ஞானம், கிருஸ்ணன், குமாரதுரை போனறவர்களின் நடவடிக்கைளை அம்பலப்படுத்தினோம். தனிநபர் நட்பு உறவு இவற்றிற்கு அப்பால் இவை எமது சமூகக் கடமையென கருதினோம்.
கடந்த காலங்களில் மக்களின் வாழ்வின் மீது அக்கறை கொண்டு கட்டப்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் இவ்வாறான குறிப்பிட்ட கிரிமினல் நபர்களின் உள்ளீடுகளினால் அவ் அமைப்புக்களின் நோக்கங்களும் அதற்கான மக்களின் சமூக அங்கீகாரங்களும் சிதைந்து அவ் அமைப்புக்கள் சின்னாபின்னமாகி சீரழிந்ததே எமது அமைப்புக்களின் வரலாறுகளாக இருந்துவந்துள்ளது.
இவ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் தங்களின் பொருளாதார மற்றும் சில தேவைகளுக்காக இவ்வாறான சமூகக் கிரிமினல்களை தங்கியிருக்கவேண்டிய தேவை தவிர்க்க முடியாதாகிவிடுகின்றது. ஆனால் இவர்களின் உள்ளீடல் பொருளாதார வளத்தை பின்புலமாக கொண்டிருப்பதால் இவ் அமைப்புக்கள் இந்த கிரிமினல் நபர்களின் ஆளுமைக்கு உட்பட்டு தங்களின் நோக்கங்களிலிருந்தும் கடமைகளிலிருந்தும் திசை மாறிவிடுகின்றன.
இவ் அமைப்புகள் சரியான வழிகாட்டலோடும் மக்களோடும் தங்கி தங்களின் வளர்ச்சிக்கான பொருளாதார வளங்களின் மூலங்களை கண்டடையாவிட்டால் இவ் அமைப்புக்கள் இவ்வாறான கிரிமினல்களையும் பொருளாதார தேடலுக்காக தவறான வழிமுறைகளையுமே கைக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
கடந்த காலங்களில் இவ்வாறான அமைப்புக்களில் இருந்த இவ்வாறான கிரிமினல்களின் அயோக்கிய தனங்களை சமூக விரோத நடவடிக்கைகளை அறிந்தும் தெரிந்தும் கொண்டு அந்த கிரிமினல் நபர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை நோக்கி வரும் விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டு அத் தவறுகளில் இருந்து தங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியாமல் அந்த கிரிமினல் நபர்களுக்காக இவ் அமைப்புக்கள் நற்சான்றிதழ் அறிக்கைகளையோ, துண்டுப் பிரசுரங்களையோ வெளியிட்டு அமைப்பின் சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளை இந்த கிரிமினல்களுக்காக அடகுவைக்கும் பரிதாபகரமான வரலாற்றையே நாம் கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றோம். இதன் தொடர்ச்சியையே பிரான்சில் இருக்கும் ஒரு சமூக அமைப்பிடமிருந்து ஞானம் தொடர்பாக வரும் நற்சான்றிதழ் அறிக்கையாகும்.
அவ் சமூக அமைப்பினர், ஒரு தனிநபரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் இம் முயற்சியானது, இவ் அமைப்பினர் தங்களுக்கு தாங்களே செய்யும் தற்கொலை முயற்சியாகவும் இது மாறிவிடும்.
எனவே ஞானம் போன்ற சமூக கிரிமினல்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவத்தை மறந்து, கடந்த கால அரசியல் சமூக அமைப்புக்கள் செய்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து மீள்வுபெற்று, இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்திட முயல்வோம். அனைத்து தவறுகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக குரல்கொடுப்போம் நன்றி. தீப்பொறி.
November 09,2007
விடுதலை பாதையினை வீராப்புடன் புலிகளின் வழிதனை ஏற்று போராடி அங்கும் ஏமாற்றம் கண்டு - வாழ்வதற்காக உயிர் தப்பி அகதி தஞ்சம் கோரி 2006ம் ஆண்டு தொடக்க பகுதியில் திலீபன் அல்லது ஜீவன் என்று அழைக்கப்படும் நடேசன் வேலுச்சாமி பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்.
இங்குள்ள கிழக்கு மைந்தர்களாக தங்களை காட்டிக் கொண்டு தமது சொந்த நலன்களிற்காக, யாரையும், எதனையும், எப்படியும் கையாட தெரிஞ்ச ஞானம் ( தன்னை ஒரு சராசரி அப்பாவிமனிதனாக , புகலிடவாழ்வில் மனித நேயத்தின் அவதாரமாக காட்டிக் கொள்ளவும், அறிவுஜீவிகள் போர்வையை அணிந்த முகமூடி) அல்லது ஸ்டாலின் ( தன்னை ஒரு மாக்சிய வாதியாக காட்டி கிழக்கியம், தலித்தியம் என்ற இன்னொரு முகமுடிகளுடன் எழுத்துலகில் அராஜகம் பண்ணும் புனைபெயர்) அல்லது சுந்தரமுர்த்தி (சென்ற சில காலங்களில் தன்னை வெறும் புலி எதிர்ப்பாளனாக, மானிடவாதியாக முத்திரையிட்டு புகலிட அரசியலில் சில ஊடகங்களினால் தன்னை தானே வளர்த்தவர் ) (கருணா தரப்பில் உட்கட்சி போராட்டம் நடத்தியதாக தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொண்டவர் (பார்க்க - தேசம் இணைய தளத்திற்கு இவர் கொடுத்த அறிக்கை.)
சின்னமாஸ்ரர் (இவருக்கு கருணா அணிகொடுத்த பெயர்;) இப்படி பல பெயர் கொண்ட ஞானத்தின் வலைதனில் மாட்டிக்கொண்டு 02.11.07ல் மட்டக்களப்பில் தன்னை ஞானத்திற்காக அல்லது கருணாவிற்காக வித்துடலாக்கிய திலீபனின் பரிதாபமான மரணத்தின் பின்னணி தான் என்ன? இனியும் ஊடகங்களோ கிழக்கு மக்களோ அறியாவிடின் கிழக்கில் இன்னும் அப்பாவி இளைஞர்கள் இந்த சுயநல கும்பலுக்கு தொடர்ந்து இரையாகநேரிடும்.
கிழக்கு மக்களின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அந்தந்த மக்களால் அந்தந்த தளத்தில் -ஜனநாயக வழிகளில் வென்றெடுக்கபட வேண்டியதும் அதற்காக மனிதநேய ஊடகங்களும் புலம்பெயர் மக்களும் ஜனநாயக வழிகளில் - நடுநிலை பார்வையோடு ஆதரவு வழங்குவதும், விமர்சிப்பதும் கடைப்பாடே.
ஆனால் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், ஏற்கனவே கிழக்கின் துயரால் இரண்டு அரை லட்சம் மக்களை நிரந்தர அகதிகள் ஆக்கி வீதியோரங்களில் விட்டுவிட்டு கிழக்கின் விடிவெள்ளி என தம்மை காட்டிக் கொண்டு, நிரந்தரமாகவே இலங்கை பேரினவாத அரசினால் தொடரும் தமிழின அழிப்பிற்கு ஆதரவாக அங்கு செயற்படுவதும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஒருசில ஊடகங்களும்- அதன் கதாநாயர்களும் கொலை , கொள்ளை , கடத்தல் , கப்பம் என்ற மனித உரிமை மீறல் செயல்களுக்கு துணைபோவதும,; அதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வெளிநாடுகளில் சொத்துக்களை சேகரித்து தமதாக்கி கொள்வதுமாக தமது செயற்பாட்டை தொடர்கின்றனர்.
இந்த தொடர்கதைகளில் பலியான, சிந்துஜன் உட்பட ஐவர் கொலையில் இருந்து நியாயம் கேட்க பொலிஸ் நிலையம் சென்ற சிந்துஜனின் தந்தையை கூட பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக கழுத்து வெட்டி கொல்லப்பட்டது மறக்க முடியுமா? இன்று திலீபன் எனப்படும் ஜீவன், பிள்ளையான்- கருணா கோஸ்ரி மோதலில் சுடப்பட்ட நிலையில் சயினட் அருந்தி தற்கொலை செய்தது , புவனன் கடத்தப்பட்டது போன்ற வன்செயல்கள் தொடரும் இன்நிலையில். பாசிசபுலிகளில் இருந்து, ஏதோ கிழக்கு புறக்கணிப்பிற்காகத்தான் தாம் புலிகளை விட்டு பிரிந்து, கிழக்கு விடுதலைக்கு தலை கொடுக்கின்றோம் என பறைசாற்றிய கருணா தலைமையிலான மக்கள்விடுதலைப்புலிகள் இன்று கருணா - பிள்ளையான் குழுக்களாக தம்முள்ளே தமது தலைகளைகொய்து தங்களின் சுயமுகங்களை இனம் காட்டி வருகிறது.
இவர்கள் ஒன்றரை வருடங்களாக பேரினவாத இலங்கை அரசிடமும், அதன் புலன் ஆய்வு அமைப்பினரிடமும் விலை போனதை தீப்பொறி ( www.theepori.com) உடனுக்குடன் அம்பலப்படுத்தியிருந்தும் அதனை கருணா அமைப்பினரோ அல்லது அவர்களின் பிழைகளை நியாயப்படுத்தி பிழைப்பு நடத்தும் ஊடகங்களோ - அல்லது கருணா அணியின் பினாமி சொத்துக்களை வெளிநாடுகளில் காவு காக்கும் சில குறிப்பிடதக்க நபர்களோ உண்மைகளை நடுநிலையாக பார்க்கவும் இல்லை, அல்லது உட்கட்சி (உட்கடசி போராட்டம் என்று எல்லாம் கதை அளப்பவர்கள்) போராட்டம் செய்யவும் இல்லை. தொடர்ந்து, எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என வழக்கம் போல் தமது தொழிலை மேற்கொண்டனர்.
எனினும் என்றோ ஒரு நாள் தீப்பொறி தனது தீப்பிளம்புகளால், உண்மைகள் மக்களை பற்றிக் கொள்ளும் என தனது தீச்சுவாலைகளை தொடர்ந்தது. இதன் ஒரு கட்டம் தான், வரலாற்றின் நிகழ்வாக கருணா தப்பி ஓடியதும், இன்று அங்கலைந்து , இங்கலைந்து தனது மனைவி மக்களுடன் நிரந்தரமாக தங்க லண்டனில் அகப்பட்ட இடத்தில் அகதி தஞ்சம் கேட்டதுமான நிகழ்வே. மொத்தத்தில் கிழக்கின் விடிவெள்ளி என்றும், கிழக்கின் கவர்ணர் என இலங்கை அரசால் இதுவரை மிட்டாய் கதை சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்டவருமான கருணா இன்று பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட்டம் எடுத்துள்ளார்.
ஆனால் கிழக்கின் போராளிகள் என்று இவர்களால் உருவேற்றப்பட்டு உயிர்களை தம்முள்ளே பலி கொண்டிருக்கும் தீரச்செயல்கள் தான் என்ன? இவர்களா மக்களின் வழிகாட்டிகள்? பாசிசபுலிகளிடம் இருந்து கிழக்கை மீட்டதாக சொல்லும் இவர்கள் அடுத்த கட்டமாக மக்களின் முன் தங்களை சராசரி மனிதராக தானும் நிலை நிறுத்தினார்களா? கிழக்கில் 160 என்.ஜீ.ஒ க்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யும் போது (அதில் வேறு சில விமர்சனம் இருந்தாலும்) குறைந்தது இவர்களால் அதன் முலமாகவோ, அன்றி மக்கள் குழுக்களை அமைத்தோ ஏன் மக்களை அணுக முடியாது போனது? ஏனெனில் கொலை வெறி கொண்ட தலைமைகளில் ஆயுத கவர்ச்சியால் இவர்கள் பழக்கப்பட்ட விதம் அப்படி. அதிலும் இந்த தலைமைகளை உசார்படுத்தி வெளிநாட்டில் உள்ள இந்த குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த அப்பாவிகளை போர்க்கருவிகள் ஆக்கி தமது கிழக்கியவாத இருப்புக்களை புடம் போட்டுக்கொண்டது தான் பெரும் கொடுமை. இந்த வேள்வியில் இன்று ஞானம் என்பவரால் வித்துடல் ஆக்கப்பட்டவர் தான் இந்த திலீபன்.
2006 முற்பகுதியில் நாட்டில் பட்டது போதுமென விட்டுவிட்டு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி இருந்து, வேலையும் தனது சொந்த வாழ்க்கையுமாக இருந்த திலீபன் என்ற ஜீவனை சிறிது சிறிதாக கிழக்கு பிரிவினைவாத வெறியூட்டி , கருணாவிற்கு மிக நெருக்கமானவராக வளர்த்துவிட்ட பெருமை ஞானத்திற்கு தான் சேரும். தன்னருகே திலீபனை வைத்திருப்பதை விட, புலி எதிர்ப்பாளரான, மாற்று கருத்தினருடன் உறவாட வழி சமைத்து, அவர்கள் மத்தியில் இருந்தே, அந்த அப்பாவி இளைஞன் ஊடாக புலி எதிர்ப்பாளரிடம் இருந்தே உளவு வேலை செய்து, அதனை தனது கருணா என்ற தலைவருக்கு சுடசுடசெய்தி அனுப்பியவர் தான் இந்த ஞானம். அதுமட்டுமல்ல, இங்கிருந்தே பிள்ளையான்- கருணா மோதல்களை வழக்கம் போல் ஞானத்தின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கைங்காரியத்தை இதில் காட்டி வெற்றியும் பெற்றார். இதன் விளைவு கிழக்கிலே குழுவாதங்கள் முண்டது.
இதனிடையில் கடந்த நவம்பர் 2006ல் ஜேர்மனியில் உள்ள சுட்காட் என்ற நகரில், இலங்கையர் ஜனநாயக முன்னனியினரால் நடாத்தப்பட்ட இரு நாள் கருத்தரங்கில் திரு ஆனந்தசங்கரி உட்ப்பட ஐரோப்பிய - கனடா போன்ற நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் பேசும் மக்களின் பல விடயங்கள் ஆழமாக பேசப்பட்டது. இதில் புலி ஆதரவாளர் உட்பட அனைத்து இயக்கங்களும், மனிதநேய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விசேடமாக பிரான்சில் இருந்து 40 பேர் மட்டில் கலந்து கொண்டனர். இங்கும் வழக்கம் போல் ஞானம் தனது கிழக்கு பிரிவினைவாத வித்தகத் தன்மையை காட்டினார், இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் உருவேற்றப்பட்டிருந்த இந்த திலீபனும் அவதானித்து அங்குள்ள கருணா குழுவிற்கு செய்திகள் பரிமாறப்பட்டன. இதன் பின் விளைவாக அந்த இரு நாட்களின் பின் கிழக்கில் இருந்து தொலைபேசி முலம் கருணா குழுக்களால், கிழக்கு பிரிவினைவாதத்தை எதிர்த்த நபர்களுக்கு மிரட்டல் வந்தது. அப்போது யார் அந்த உளவாளிகள் என அடையாளம் காணப்பட முடியாவிட்டாலும் பின்னாலிலும், இன்னாலிலும் இது அம்பலமானது.
இவ்வாறாக ஞானத்தின் நயவஞ்சக நாடகத்தில் தன்னை இழந்த திலீபன் 2007 முற்பகுதியில் தான் இருந்த வீட்டிலும் சொல்லாமல் ,உடுத்த உடுப்போ, பாவித்த பொருட்களோ கூட எடுக்காமல் ஞானத்தின் அவசர ஒழுங்கு படுத்தலில் கடைசி உணவையும் ஞானத்தின் கையால் ஞானத்தின் வீட்டில் உண்ண வைத்து சென்று வா மகனே என விடை கொடுத்து கருணாவிற்கு உதவியாளானாக, ஆலோசகனாக இங்குள்ள பல செய்திகளோடு அனுப்பி வைத்தார். அதுவும் அந்த அருகிய நாட்களிலேயே திலீபனுக்கு பிரான்ஸ் நாட்டிற்கான அகதி அந்தஸ்த்து கிடைத்திருந்தும் அதனை கூட கையில் எடுக்க விடாமல், ஏதோ ஒரு வழியில் அவரின் அகதி அந்தஸ்ததையும் நிராகரிக்க வைத்து ஒட்டாண்டியாக கருணாவின் கொலைக் களத்திற்க்கு அனுப்பிய பெருமை ஞானத்தின் தனிப் பெரும் முயற்சி தான்.
பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில் கடன் பெற்று 2 லட்சத்து 70 ஆயிரம் யுரோ; 3 லட்சத்து 80 ஆயிரம் யுரோ என இரு வீடுகளை வாங்கியதாக கதைவிட்டு) உல்லாசமாக வாழும் போது, பிரான்ஸ் வந்த ஒரு ஏழை , கிழக்கு மாகாணத்து அப்பாவி இளைஞன், தனது எதிர்கால ஆயிரம் கனவுகளையும் மீண்டும் பிரான்சில் தொலைத்து விட்டு- ஞானத்தின் வழிகாட்டலில் கருணாவின் மெய்ப்பாதுகாவலனாக ஞானத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். மேலாதிக்க வாத அத்தனை குணாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஞானம், பசுத்தோல் போர்த்த புலியாக இவ்வாறான இளைஞர்களை அடித்து உண்ணுகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட திலீபன் அங்கும் கொலை பாதக கருணாவினால் பிள்ளையான் - கருணா மோதலுக்குள் தனது அணியை பலப்படுத்த திலீபனை நன்றாக பயன்படுத்தினார். இதனால் நீண்ட நாட்களாக பிள்ளையான், திலீபனை முடிக்க காத்திருந்த கதை உள்ளே பலருக்கும்தெரியும். இன்நிலையில் திலீபனை அங்கு நட்டாற்றில் விட்டுவிட்டு கருணா தனது மனைவி பிள்ளைகளிடம் வந்துசேர்வதற்காக கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார் . இந்நிலையில் கருணா நாட்டை விட்டு வெளியேறியதும் கருணா அணிக்குசார்பான, ரி.எம்.வி.பி செயலாளர் திருமதி பத்மினி, பிள்ளையான் முலம் மிரட்டப்பட்டு , பதவி இறக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் தனக்கு வேண்டப்பட்டவரை நியமிக்க இருக்க , இலங்கை உளவுப்படையால் ( கருணாவின் சிபாரிசின் பேரில்) வலுக்கட்டாயமாக கடந்த சில தினங்களிற்கு முன் கட்சியின் செயலாளர் பதவி திலீபனுக்கு முடி சூட்டப்பட்டது. இங்குதான் திலீபனுக்கு ஆப்பும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கோடிக்கணக்கான சொத்துக்களை சுருட்டிய கருணா சுருட்டியது போதுமென இனி மனைவி பிள்ளைகளுடன் உல்லாசமாக வாழ பிரான்ஸ் வந்து லண்டன் பயணமாகி பிடிபட்ட கதை யாவரும் அறிந்ததே. லண்டனில் 02.11.07 ல் கருணா பிடிபட்டு அரசியல் தஞ்சம் கேட்ட அதே நாளில், பிரான்சில் அகதி அந்தஸ்த்தையும் தனது வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு சென்ற திலிபன், பிள்ளையான் அணியின் சுற்றி வளைப்பின் போது சயினட் அருந்தி தன்னை அழித்துக் கொண்டார்.
கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. இந்நிலையில் தான் உயிருடன் பிடிபட்டால் தனது நிலை தனக்கு தெரிந்ததே. இந்நிலையில் தன்னை உருவேற்றி வழியனுப்பிய ஞானத்திற்கும், தான் நம்பி வந்து நட்டாற்றில் விட்டு சென்ற கருணாவிற்கும் வித்துடலாக தன்னை தன் மண்ணில் அழித்துக் கொண்டார். அவன் தாய் , அவன் மனைவி கதறி அழும் குரல் பிரான்ஸ் வாழ் ஞானத்தின் குடும்பத்திற்கோ, லண்டன் வாழ் கருணா குடும்பத்திற்கோ கேட்குமா? ஆனால், அபலைகள் விடும் கண்ணீர் அதாள பாதாளம்மட்டும் கேட்கும்
பின் குறிப்பு :
(இதுவரை கருணாவின் மாயையால் ஏமாற்றப்பட்டு, இன்று விழிப்படைந்துள்ள கிழக்கிலங்கையை சேர்ந்த இரு இளைஞர்களால் தீப்பொறிக்கு அனுப்பப்பட்ட தொகுக்கப்பட்ட கட்டுரை இது. குறிப்பிட்ட நபர்கள் மீது எறியப்படும் கனைகளாக பார்க்கப்படாமல், இதுவரை நடந்த உண்மை நிலைகளை இனியும் அறியப்படாமல் போனால் வராலாற்றில் கிழக்கின் அழிப்புக்களில் இன்னும் பாரிய விபரீதம் ஏற்பட இடமுண்டு. எனவே இதனை ஆரோக்கியமான விமர்சனமாக இனியாவது ஆராய்ந்து உணருங்கள்.
மேலும் இக்கட்டுரை சம்மந்தமாக குறிப்பிட தக்க ஆதரங்கள், படங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன. தொடர்ந்தும் தமது பிழைகளை உணர்ந்து கொள்ளாவிடிலோ மூடிமறைக்க நேர்ந்தாலோ அனைத்து ஆதரங்களும் வெளியிடப்படும். )
Samstag, April 02, 2016
Freitag, Januar 01, 2016
இசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் "எல்லைவாழ்வு" .
எல்லை வாழ்வு:இன ஐக்கியம் (Rabinyan’s novel Borderlife )
இசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் நாவலான "எல்லைவாழ்வு" நாவற் (Rabinyan’s novel Borderlife) தொகுதியும் ; இன ஐக்கியமும் -மொழியும்: சிறு குறிப்பு!
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன்." Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe [மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!]
பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்குப் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் இவ்வறைகூவல்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு? ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தன?மனிதநடாத்தையின் பாதகங்கண்டு மாற்றுத் தேடிய பொழுதுகள் ஏராளம்!
இலக்கியம் ; தத்துவம் ;கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும் காலவர்த்தமானம் தொடரும் இந் நூற்றாண்டு மக்கள்சார்ந்து இலக்கியப் பிரதிகளைத் தொடர்ந்து அழிப்பதில் ஆதிக்க வர்க்கம் மூர்க்கமாகவே இருக்கிறது.சியோனிச இசுரேல் பாலித்தீனிய மக்களோடு ஒட்டியுறவாடும் கருத்தியலைத் தொடர்ந்து அழிப்பதில் இலக்கியத்தைத் தடை செய்வதன் காரணமென்ன?[ A novel about a love affair between a Jewish woman and a Palestinian man has been barred from Israel’s high school curriculum, reportedly over concerns that it could encourage intermarriage between Jews and non-Jews.The rejection of Dorit Rabinyan’s novel Borderlife, which was published in 2014, created an uproar in Israel, with critics accusing the government of censorship. http://www.theguardian.com/world/20… ] சண்டையும் சச்சரவுமிக்க முரண்பாடுகள்தாம் ஆளும் வர்க்கங்களது கயமையைப் புரியாதிருப்பதற்கான திசைதிருப்பும் மூல வேர்.இங்கே நமது முரண்பாடுகளை எடுத்துக்கொண்டால் ,தமிழர்களுக்கும் -சிங்களவர்களுக்கும் தொடர்ந்து இனப் பகமை மூட்டப்பட்டுக் கொதி நிலையிலிருக்கும்போதுதாம் இலங்கைப் பாராளுமன்றம் இயக்கம் பெறும்.இத்தகைய இனவாத அரசியலைப் புரிவதற்குச் சமீபத்து நல்ல உதாரணம் இந்த இராபின்யனது நாவலான எல்லைவாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தடையாகும்!

இன ஐக்கியம் ;ஒருமைப்பாடு ;இணைந்து -கலப்படைதல் யாவும் இனவாத -பிளவுவாத ஆளும் வர்க்ககங்களது அடித் தளத்தையே அசைக்கும் உந்து சக்திகள்.இதை தமிழ்க் குறுந்தேசிய வாதிகளிடம் முசிலீம் மக்களைத் துரத்தியடித்தலிருந்தும் ; சிங்கள மக்களோடு இணைவது -கலப்பது ;உறவாடுவதெல்லாம் மகாப் பெரும் குற்றம்.துரோகிகள் என்று கொல்லப்பட்டவர்கள் ஏராளம்!முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்!அவர்களது மொழி இப்போது எப்படி இருக்கிறது?
இந்த இலக்கியப் பிரதிகள் எந்த மொழிவுகளோடு வருகிறது?
ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும் இனக் குரோதம் ;பகமை சார்ந்த "துரோகி"ப் பட்டங்களுக்காக இனங்களை - அக் குழுமங்களுக்குள் இருக்கும் தனிமனிதர்களை - நபர்களைக் குறிவைக்கும் திசை இனவுயர்வை -மேன்மையைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.
மனித மொழிகள்அவனது -அவளது -அவனவளது( மூன்றாவது பால்) எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் இனவாதத்துக்கும் -குருரத்துக்கும் ; இனமேன்மைக்கும் ;பகமைக்கும் -எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.
இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது "தேசிய விடுதலை"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.
"விடுதலைப் புலிகள்"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் களையெடுப்பு ; போடுதல் என்ற மனிதவிரோத மொழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.
கிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது( இரண்டாவது மகாயுத்தத்தில் மொத்த மனித அழிவு 60 மில்லியன்கள்) உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு "ஈழஞ்" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா?
விடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை!மீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா?
மக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதே!இது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது "புரட்சி"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது!இங்கு இனவாதம் ;இனக் குரோதம் மிக அவசியமானது இவர்களுக்கு!
இங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை! பாலித்தீனிய -இசுரேலிய இனத்துள் இராபின்சனது நாவலான எல்லை வாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தொகுதி இதை செவ்வனவே செய்ய முனைகிறதாம்.யூத யுத்தவெறிக்கு -இனவாதத்துக்கு எதிரானவொரு கூரிய இலக்கியமாக இந்த "எல்லை வாழ்வு" நாவல் வரலாற்றில் இயங்க முடியுமெனக்கண்ட இனவாதிகள் அதைத் தடை செய்கின்றனர்.
கலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.
இனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.
இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லை!மக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
Sonntag, März 24, 2013
தற்கொலையே தர்மம்!
"நான்"
அழிவேன்-எப்போது-எங்கே?
என் திருவே!
என்னைக் குலைத்தெறி!
துகளாக்கு-மண்டையைச் சிதறடி.
பக்கங்களாக நான் குவிக்கும்
உணர்வுக்குள் மனிதம் கொலையாகி
புதை குழிக்கு மண் அகழும் "நான்" தொல்லை!
என் திருவே,
குழந்தையாய் இருப்பதுதாம் நீ.
நான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்
என்னைப் பாட வை
ஒரு மழலையின் புன் சிரிப்பாய்.
உன்னைக் குறித்து
என்னை அழைக்க வை
"நாங்கள்தாம் நீ" என்று ஓங்கி உரைக்க விடு!

மௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து
"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து
ஆபத்தின் வீரியமாய் விரிவதில்
என்ன புதுமையை கண்டாய்?" என்று கூவ விடு!
என் ஆரோக்கியத்தின் நிழலில்
கலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்
தொடர்ந்து உயிர்த்திருப்பதில்
உன்னை எங்கே விழுங்கி
எங்கே சேர்த்து?
நிரந்தரமானவன் நான்!
தோல்விக்குப் பெயர்
தீருவென்றழைத்தே தேடுதலை
குறைத்துக் கொண்டேன்.
காலைக்குப் பின் மதியம்
என்னை அச்சப்படுத்தி மீளவும்
அதிகாலையாய்த் தேற்றிய போது
நானே நிரந்தரமானேன்-எனக்குத்தாம் திருவென்ற
உன் நிலைப்பும்-நீதியுமென
உருமறுத்துக்கொண்டு அலைவேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
24.03.2013
அழிவேன்-எப்போது-எங்கே?
என் திருவே!
என்னைக் குலைத்தெறி!
துகளாக்கு-மண்டையைச் சிதறடி.
பக்கங்களாக நான் குவிக்கும்
உணர்வுக்குள் மனிதம் கொலையாகி
புதை குழிக்கு மண் அகழும் "நான்" தொல்லை!
என் திருவே,
குழந்தையாய் இருப்பதுதாம் நீ.
நான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்
என்னைப் பாட வை
ஒரு மழலையின் புன் சிரிப்பாய்.
உன்னைக் குறித்து
என்னை அழைக்க வை
"நாங்கள்தாம் நீ" என்று ஓங்கி உரைக்க விடு!

மௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து
"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து
ஆபத்தின் வீரியமாய் விரிவதில்
என்ன புதுமையை கண்டாய்?" என்று கூவ விடு!
என் ஆரோக்கியத்தின் நிழலில்
கலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்
தொடர்ந்து உயிர்த்திருப்பதில்
உன்னை எங்கே விழுங்கி
எங்கே சேர்த்து?
நிரந்தரமானவன் நான்!
தோல்விக்குப் பெயர்
தீருவென்றழைத்தே தேடுதலை
குறைத்துக் கொண்டேன்.
காலைக்குப் பின் மதியம்
என்னை அச்சப்படுத்தி மீளவும்
அதிகாலையாய்த் தேற்றிய போது
நானே நிரந்தரமானேன்-எனக்குத்தாம் திருவென்ற
உன் நிலைப்பும்-நீதியுமென
உருமறுத்துக்கொண்டு அலைவேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
24.03.2013
Donnerstag, März 07, 2013
அம்புக்குறியாய் நீ
இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடை பிணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்-கேடயங்களும்
கணையாழிக் கேடிகளுமாய் க் காலம் விலக
காலத்தைப் பறிகொடுத்த நரிகளுக்கு
விடிவதும்,இருட்படுவதும்
அடுத்தவர் முற்றத்தில் மட்டுமே
தங்கள் தெருக்களுக்குள் புழுத்து நெளியும்
சாக்கடையுள் விழி வீழாப் பக்குவம்!
இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் குருதி நிறைத்த காகிதத்துள்

கட்சிகளது கொண்டையைப் பிடிப்பவர்களோ
அதன் கொள்கைச் சாக்குள் கேடயத்தோடு
திணிக்கப்படும் தம்பிகளது முகத்தையும்
கூட்டிப் பெருக்க வக்கற்றுக் குப்புறக் கிடந்துவிட்ட
கூனற் பொழுதும் விடிந்ததோ?-இப்போது??
பூனைப் பாச்சலுள் எட்டபட்ட
இந்தப் பிரபஞ்சம் எழுதித் தந்த சீதனமோ
கேடயம்,பரிசு,பொன்னாடை,குருதி
மக்களைச் சொல்லிச் சொருகப்படும் கத்தி
யார் முதுகைப் பதம் பார்க்கும்?
அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்
சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி.
ப.வி.ஸ்ரீரங்கன்
07.03.2013
============================================
நீங்களெல்லாம் பிழைக்கத் தெரிந்த பஞ்சோந்திகள்!
============================================
எச்.பீர் முஹம்மது:
//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்றைய இலங்கை விவகாரம் குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நண்பர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிட்ட ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா தான் எங்கள் கலாசார நாடு. இந்தியா தான் எங்கள் இரண்டாம் தாய் நாடு. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். உலக வரலாற்றில் தேசிய இனப்போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் அண்டைய பெரும்/ வல்லரசு நாடுகள் தலையிட்டு தீர்வு காணும் நடைமுறை இருந்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் அறுபதுகளில் எகிப்து பெரும் பங்கை வகித்ததை இதனோடு நாம் ஒப்பிட முடியும். ஆனால் துரதிஷ்டம் இந்தியாவே இலங்கையோடு சேர்ந்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறது... இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கான அழுத்தம் இங்கிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இரு பெரும் கழகங்களும் தங்கள் ஈகோவை சமன் செய்து கொள்வதிலும், வரலாற்று தவறுகளையும், துரோகங்களையும் மறைப்பதில் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் இதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதிலும் பலத்தப்போட்டி நிலவுகிறது... இப்படியே செல்லும்பட்சத்தில் ஈழ விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்படாது என்றே தெரிகிறது.//
சில நடை பிணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்-கேடயங்களும்
கணையாழிக் கேடிகளுமாய் க் காலம் விலக
காலத்தைப் பறிகொடுத்த நரிகளுக்கு
விடிவதும்,இருட்படுவதும்
அடுத்தவர் முற்றத்தில் மட்டுமே
தங்கள் தெருக்களுக்குள் புழுத்து நெளியும்
சாக்கடையுள் விழி வீழாப் பக்குவம்!
இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் குருதி நிறைத்த காகிதத்துள்

கட்சிகளது கொண்டையைப் பிடிப்பவர்களோ
அதன் கொள்கைச் சாக்குள் கேடயத்தோடு
திணிக்கப்படும் தம்பிகளது முகத்தையும்
கூட்டிப் பெருக்க வக்கற்றுக் குப்புறக் கிடந்துவிட்ட
கூனற் பொழுதும் விடிந்ததோ?-இப்போது??
பூனைப் பாச்சலுள் எட்டபட்ட
இந்தப் பிரபஞ்சம் எழுதித் தந்த சீதனமோ
கேடயம்,பரிசு,பொன்னாடை,குருதி
மக்களைச் சொல்லிச் சொருகப்படும் கத்தி
யார் முதுகைப் பதம் பார்க்கும்?
அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்
சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி.
ப.வி.ஸ்ரீரங்கன்
07.03.2013
============================================
நீங்களெல்லாம் பிழைக்கத் தெரிந்த பஞ்சோந்திகள்!
============================================
எச்.பீர் முஹம்மது:
//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்றைய இலங்கை விவகாரம் குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நண்பர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிட்ட ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா தான் எங்கள் கலாசார நாடு. இந்தியா தான் எங்கள் இரண்டாம் தாய் நாடு. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். உலக வரலாற்றில் தேசிய இனப்போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் அண்டைய பெரும்/ வல்லரசு நாடுகள் தலையிட்டு தீர்வு காணும் நடைமுறை இருந்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் அறுபதுகளில் எகிப்து பெரும் பங்கை வகித்ததை இதனோடு நாம் ஒப்பிட முடியும். ஆனால் துரதிஷ்டம் இந்தியாவே இலங்கையோடு சேர்ந்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறது... இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கான அழுத்தம் இங்கிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இரு பெரும் கழகங்களும் தங்கள் ஈகோவை சமன் செய்து கொள்வதிலும், வரலாற்று தவறுகளையும், துரோகங்களையும் மறைப்பதில் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் இதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதிலும் பலத்தப்போட்டி நிலவுகிறது... இப்படியே செல்லும்பட்சத்தில் ஈழ விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்படாது என்றே தெரிகிறது.//
Samstag, Februar 02, 2013
தமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...!
தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணயத்தை மறுப்பதென்பது இலங்கையில் "இனவொடுக்குமுறை, இனவழிப்பு நிகழவில்லை" என்பதன் மறுபக்கமாகும்!
இன்று, முன்னிலை சோசலிசக்கட்சியோ அன்றித் தமிழர்களது நிலத்து-புலத்து இயக்கவாதச் சக்திகளோ எந்தப் பொழுதிலும் இலங்கை மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.உதாரணமாகச் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.
இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் "சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.
இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் "சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.
இதன் மத்தியில், புலம் பெயர் தமிழர்களின் "புரட்சிகர"முகாங்கள்அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபொரு லொபிக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை தமிழ் இயக்கவாதக் குழுக்காளால் செய்யப்பட்ட-மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய மாறாக, விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.
இப்போது,புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமையைச் சிந்தாந்தவுரையாடாலாகக் குறுக்கித் தாழ்க்கும் இவர்கள் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையை திரைமறைவில் மறைத்து அதன் பிரதான பாத்திரத்தை இல்லையென்கின்றனர்.
வெறுஞ் சிந்தாந்தவுரையாடலாகத் தமிழ்பேசும் மக்களது உரிமையையும் ,சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது எதிர்ப்பு அரசியலையும் குறுக்கிவிடும் "சித்தாந்தச் சதியானது மிகவும் வரலாற்றுத் திரிபுக்குள் மக்களைக் கட்டிப்போடுகிறது"[ Das Zimmerwalder Manifest .By Leo Trotzki ].
இதன் அடுத்த நகர்வுக்குள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையொன்றே இலங்கையில் இல்லையென்றும்,அது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் இனவாதத்தின் திரிப்பே என்று தத்துவமுரைக்கும் நிலைக்கு முன்னிலைச் சோசலிச அமைப்புக்குக் கூஜாத் தூக்கும் இரயாகரன் குழுவிலிருந்து ஏனையவர்களும் வகுப்பெடுப்பார்கள்.
தமிழ் மக்கள் ஏதோ சுயநிர்ணயவுரிமையை வலிந்து கேட்பதாகவும்,அது தமிழ்க் குறுந்தேசிய வாதிகளது கயமையெனவும் இட்டுக்கட்டும் நிலைக்கு இரயாகரன் குழு இப்பேதே தயாராகிவிட்டது.
தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே.இந்தவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் [Die Entwicklung des Selbstbestimmungsrechts der Völker unter besonderer Berücksichtigung seines innerstaatlich-demokratischen Aspekts und seiner Bedeutung für den Minderheitenschutz.By Denise Brühl-Mose ]அது சார்ந்த வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணை போபோகின்றவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் முன்னிலைச் சோசலிசக் கட்சியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.
இதுசார்ந்து, சட்டரீதியாகத் தமிழ்பேசும் மக்களை இனவொடுக்குமுறைக்குள்ளும்-அழிப்புக்குள்ளும் வைத்தொடுக்கும் அரசும் அதன் பொருளாதாரப் பொறிமுறையும்தாம் நமது மக்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கான தோற்றுவாயாகும் [Nur wenn der Staat die nach Autonomie oder gar einen eigenen Staat strebende Minderheit durch seine Herrschaftsausübung diskriminiert, kann er seinen Anspruch auf territoriale Integrität nach dem gegenwärtigen Völkerrecht verwirken..So z. B. Ipsen u. a., Völkerrecht, S. 368 ].இதை மறுத்தொதுக்கும் முன்னிலைச் சோசலிசக்கட்சியாகட்டும் அல்லது அவர்களது தாய்க் கட்சியான ஜே.வி.பீ. ஆகட்டும் இவர்கள் அனைவருமே சிங்களப் பேரினவாத ஓட்டுக் கட்சிகளது தெரிவின் வழியே நமது மக்கள் மீதான இனவொடுக்குமுறையை அரசியல் ரீதியாகச் சரியென்றும், சட்டரீதியாக அறமென்றும்-பௌத்த ஆசாரத்தின்படி பெரும்பகுதி மக்களது உயர்ந்த நீதியென்றும் சொல்லாமற் சொல்கின்றனர்-சுயநிர்ணயவுரிமையைத் தமிழருக்கு மறுக்கும்போது அதன் பின் ஒளிந்திருப்பது இலங்கையில் இனவாத முரண்பாடொன்றில்லை என்பதே!
தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமிர்த்தனமான" இனவொடுக்குமறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த வெகுஜன அரசியலும்[ Alle Völker haben das Recht auf Selbstbestimmung. Kraft dieses Rechts
entscheiden sie frei über ihren politischen Status und gestalten in
Freiheit ihre wirtschaftliche, soziale und kulturelle Entwicklung.“-By Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. I, Dietz, Berlin 1970, S. 687 ] தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.அதை மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து அவர்களது அடியாளகவே இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சி வகை இடதுசாரியம் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.
இதைத் தாண்டிச் சமவுரிமைக்கான இயக்கம் இடதுசாரிய வேடங்கட்டிச் சிறுபான்மை மக்களினங்களை அண்மிக்கும்போது இதைப் பாட்டாளிகளது ஐக்கியத்துக்குக் குறுக்கே நிறுத்திச் சிங்களப் பாட்டாளிகளைப் பிளப்பதிலேயேதாம் சுயநிர்ணயவுரிமைக்கான நகர்வு வழிவிடுமென அபாய அறிவுப்புச் செய்து, பேரினவாதத்தைத் தொடர்ந்து ஒரு அரசியல் போக்காக இருத்தி வைக்கின்றனர்.
கூடவே,இத்தகைய அமைப்புகள் தமிழ்பேசும் மக்களுக்கான சுய நிர்ணயவுரிமையை மறுப்பதன் வாயிலாக-மகிந்தாவின் மொழியில் சொன்னால்- "இனவொடுக்குமுறை- இனமுரண்பாடொன்றே இலங்கையில் கிடையாது.மாறாகப் புலிப் பயங்கரவாதமே உண்டு" என்பதை இவர்களுஞ் சொல்லாமாற்சொன்ன அன்றைய நிலையில்,இன்றும் சுயநிர்ணயவுரிமைக்கு அதே ஆப்பு அடிக்கும்போது தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையையும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான அரசியல் முன்னெடுப்பையுந்தாம் புலிக்கு நிகராக நிறுத்தி மாண்டுபோன புலியின் பாத்திரத்தை நிரப்புகிறார்கள்.
இத்தகைய நடாத்தையின் வழி,இனவாத இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவழ்த்துவிடவும்,அதையே நிலைப்படுத்தி அரசியல் சட்டவாக்கமாக்கித் தமிழ்பேசும் மக்களை இராணுவ ஆட்சிக்குள் கட்டிவைக்கும் நிலைக்கு மறைப்புக் கட்டவே தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பதன் அரசியற்றொடரில் இலங்கை அரசின் இனவொதுக்கலை நியாயப்படுத்தி விடுகிறார்கள்.
பிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது "பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல " என்றாக்குகிறார்கள்.
இலங்கையில் "இனவொடுக்குமுறை இல்லை" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.
தத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.
பிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது "பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல " என்றாக்குகிறார்கள்.
இலங்கையில் "இனவொடுக்குமுறை இல்லை" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.
தத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
02.02.2013
Dienstag, Januar 01, 2013
ஒரு பதிப்பகத்தின் வெற்றி
காலச் சுவடும்,கண்ணனும்:
ஒரு பதிப்பகத்தின் வெற்றி,பத்திரிகையின் வெற்றி குறித்து நம்மெல்லோரிடம் "நுணுக்கம்-வியூகம்-தந்திரம்" இருக்கிறது.
அதுள், மிகச் சிறந்த-கைதேர்ந்த வர்த்தக நுணுக்கத்தைக் கண்ணன் கைக்கொள்வதை சமீக காலமாக நாம் பார்த்து வருவது கண்கூடு(the activity, set of institutions, and processes for creating, communicating, delivering, and exchanging offerings that have value for customers, clients, partners, and society at large) !.
சமூகத்தின் அதீதமான அரசியல் கோரிக்கைகள்-வெகுஜனவெழுச்சிகள்-போராட்டங்கள்,மக்களது வாழ்வாதாரப் பிரச்சனையுள் தம்மையிணைத்துப் போராடும் தலைமைகளை-போராட்ட முன்னோடிகளை ஆதரித்துக் கைதூக்கி விடுவது[ market segmentation ] ஒருவகையில் வெகுஜனவூடாகத்தின் பொறுப்பு.
இதுள், காலச்சுவடு முன்னணியில் நிற்கும்போது அதன் வர்த்தகமும் [It must be large enough to earn profit. ]இரட்டிப்பாகிறது.இப்போது உதயகுமார்,அன்று அருந்ததி ரோய் என்று மக்களோடதிகமாக நின்று பிரச்சனைகளைப் பேசுபவர்களுக்குள் ஒரு பாலமாக[It is useful in deciding on the marketing mix ] நிற்கும் கர்ணணின் வர்த்தக நுணக்கமானது(Master of Business Administration )மிகச் சாதுரியமானதும்,சிறந்த தந்திரமுமானது.இஃது, சிறு பத்திரிகையுலகத்தினர் அனைவரும் புரிந்து இப்படி"வர்த்தகத் தந்திரத்தை-நுணுக்கத்தை" யொட்டிச் சிந்திக்வேண்டும்.
வர்த்தக நுணுக்கமென்பது ஒரு சந்தர்ப்பத்தில் அதன் இருப்புக்கு மிக அவசியமானதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அந்த வகையில் காலச் சுவடு கண்ணனைப் பாராட்டித்தாம் ஆகவேண்டும்.
இன்றைய மனித வாழ்வின் [ Psychographic segmentation ]அடிப்படைப் பிரச்சனையான அணுவுலையெதிர்ப்புப் போராட்டமானது பரந்த பட்ட மக்களிடம்பரவலாகவுணர்வுரீதியவுணரப்பட்ட எழுச்சி.உயிராதாரப் பிரச்சினை.எனினும்,அதற்குள்ளும் விளம்பரத் தந்தரம் செய்ய முடியும்.இதை எத்தனை பேர்கள் உணர்ந்துள்ளனர்.வர்த்தகத்துக்கு விளம்பரமென்பது மிக அவசியமானது.இது குறித்துப் பெரிய-பெரிய வியூக நூல்களே வந்திரக்கிறது.இஃது தொரு துறைசார் கல்வியாகவும் [ Geo-cluster approach combines demographic data with geographic data to create a more accurate profile of specific ]படிப்பிக்கப்படுகிறதென்றால் பாருங்களேன்.
கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உயிரோட்டமிக்கக் காலச் சுவட்டின் வர்த்தக நுணுக்கத்தைக் கற்கை நெறியாக வைத்தாக வேண்டும்.மாணவர்கள் நாளைய தலைமுறையின் வர்த்தகத் தலைவர்களாகவும்-முகாமைத்துவ மேதைகளாகவும் உருவாகுவதற்குக் கண்ணனின் யுக்தியைக் கல்வியாக்க வேண்டும்.
வெகுஜனப் போராட்டங்கள்,எழுச்சிகளைக் கையகப்படுத்தி-ஆதரித்து போராட்ட முன்னோடிகளைத் தூக்கிவிட்டு,அவர்களோடு தோளோடு தோள் நிற்கும் காலச்சுவடு, தானும் வாழ்கிறது-சமூகத்துக்கும் தன்னாலான வர்த்தக நுணுக்கத்தையும்[Behavioral segmentation ] கற்பிக்கிறது.
2012 ஆம் வருடத்தின் அதிசிறந்த வர்த்தக நுணுக்கத்தை[Commercial advertisers often seek to generate increased consumption of their products or services through "branding," which involves associating a product name or image with certain qualities in the minds of consumers. Non-commercial advertisers who spend money to advertise items other than a consumer product or service include political parties, interest groups, religious organizations and governmental agencies. Nonprofit organizations may rely on free modes of persuasion, such as a public service announcement ] கைக்கொண்ட மனிதரைத் தமிழக அரசு தேர்த்தெடுத்தால் நான் காலச்சுவடுக் கண்ணனையே பரிந்துரைப்பேன்.
கண்ணன் நமக்குள் மிக நேர்த்தியான வர்த்தகத் தந்திரம்-நுணுக்கம்-வியாபார வியூகம்"அமைப்பதில் சிறந்த விற்பனர் [significant work experience ]என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2013
Freitag, November 09, 2012
ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!
பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!
புலி மாபியாக்கள் தமக்குள் கொலைப்படுகின்றனனர்;பணம்-மக்களிடம் ஆயுதமுனையில் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களைத் தமதாக்கும் முயற்சியில் பெரிய வெட்டுக் கொத்தாவிருந்த இந்தச் சூழல் இப்போதைய நிலவரப்படி துப்பாக்கிச் சூட்டில் கணக்குத் தீர்த்து ஐந்தொகை எழுதுகிறது!;அனைத்தும் மக்கள் பெயரால்.
இவர்கள் இதுவரைப் பிறரை-மக்கள் நலன்விரும்பிகளை-மக்களைப் போட்டுத் தள்ளினர்.ஏனென்று கேட்டவரையெல்லாம்"துரோகிகள்"எனச் சொல்லிப் போட்டனர்.இவர்கள் வைத்த பொட்டுக்கள் ஆயிரமாயிரம்!அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்?மக்களையே வேட்டையாடியவர்கள் மக்களது சொத்துக்காகவே இப்போது அடிபட்டுச் சாகின்றனர்.
இத்தகைய பருதி போன்ற கேடிகளைக் குறித்துக் கவலைப்படுதலென்பது வன்னியில் புலிகளாலும் ,அரசாலும் கொல்லப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும்!
பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்"ஆய்வுகள்",சும்மா "அரசு"வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு!
பெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து "அரசியல்" செய்யும்போது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா?
இதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது?
ஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு?
எத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்?
அதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் "மக்கள்-விடுதலை" எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது!
வினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.
அடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.
இந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?
முன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்?
கோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை!
வரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்!
ப.வி.ஸ்ரீரங்கன்
09.11.2012
Freitag, August 24, 2012
அகாலம்-நூல் விமர்சனம்
"ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்"எழுதிய புய்ப்பராயாவின் தங்கச்சியார் புய்ப்பராணி. இப்போது,இந்தப் புய்ப்பராணியும் தனது "போராட்ட"அநுபவங்களை"அகாலம்" எனும் நூலாகக் கொணர்ந்திருக்கிறார்.
அவரது,ஏமாளித்தனமான அரசியலையும்,பாமரத்தனமான கருத்துக்களையும் ஒரு இனஞ்சார் விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகள் மிக இலகுவாகப் பயன்படுத்தியபோது அஃது,மனித விடுதலைக்காகப் போராடும் உள வலிமைக்கெதிராக முன்நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்திற்றாம் இவர்கள் தமது தேசியவாத அழிவு அரசியலை முழுமொத்த ஆயுத இயக்கங்களுக்கும் தாரவார்த்துக் கொடுத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாகவும்,தேச பக்த சக்திகளாகவும் காட்டியபடி,தமது போராட்த்தின் மூலமான அறுவடைக்குத் தியாகத்தைக் கோரி நிற்கின்றனர்.
அத்தகைய உள விருப்புக்கமைய எவருடனும் கூட்டுச் சேர்ந்து பாமரத்தனமாகக் கருத்துக்கட்டும் இவர்கள், நமது காலத்தில் பல இலட்சம் மக்களது உயிருக்கு உலை வைத்தவர்களென நாம் குற்றஞ் சுமத்துகிறோம்!
பாசிசத்தின் கூறுகளுக்கிசைவாக அரசியல் புரிந்த தமிழ்த் தேசிய வாதப் பேய்கள் எந்தவொரு அரசியலறமுமற்ற "ஈழப்போராட்ட" வரலாற்றுக்குப் பிதா மக்களாக இருக்கின்றனர்.
இவர்களது போராட்ட அநுபவங்கள், தமிழ் பேசும் மக்களது விடிவுக்கான அறிவுரையாக விழுந்து, விழுந்து புலம்பும் ஒரு நரிக் கூட்டத்தின் முன்பு அதை உடைத்துத் தமிழ் மக்களது அழிவுக்கான காரண காரியத்தைப் பேசும் சமூக யதார்த்தத்தை"அகாலம்"நூலுக்கான விமர்சனமாகத் தருகிறோம்.
இது,முதலாவது பகுதி. ஐந்து பகுதிகளாக விரியும் தமிழரசனது இவ் விமர்சனமானது தொடர்ந்து வழமைபோலவே உடைப்பில் பதியப்படும்.
இவ் விமர்சனத்தை உள்வாங்குபவர்கள் தொடர்ந்து அண்மித்துக்கொண்டேயிருங்கள்.
நன்றி.
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.08.2012
அகாலம்-நூல் விமர்சனம்
-தமிழரசன்,பேர்ளின்.
பிரான்சில் வாழும் எழுபதுகளின் போராட்ச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடையவரான புஷ்பராணியின்"அகாலம்-ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்" என்ற 207 பக்கங்கள்கொண்ட நூலது முன்னுரையைக் கிளிநொச்சியைச் சேர்ந்த கருணாகரன் எழுத, அந்நூல் வெளிவந்திருக்கிறது.
இந் நூலில் புஷ்பராணி தனது 40 வருடகால நினைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார்.
அக்காலத்தினது அரசியலை அவதானிக்க வாய்புப் பெற்றவர்கட்கும்,அரசியல் ஆழங்களில் சஞ்சரிக்க வாய்த்தவர்கட்கும் இந் நூலில் ஒருசில தகவல்களைத் தவிர வேறெதுவுமில்லை!
புஷபராணியினது பேசு பொருள்கள்"தமிழ்த் தேசியவாதிகளது குரல்வளையிலிருந்து நாம் அடிக்கடி கேட்ட பிரச்சார வகைப்பட்ட"கருத்தியல்தாம்.தோற்றுப் போய்விட்ட "ஈழப் போராட்டம்"தமிழ்ப் பகுதிகளில்அங்குலத்திற்கங்குலம் இராணுவம்,கிறிஸ் பூதம், அகதி முகாங்கங்கள்,புத்த சிலைகள்,விகாரைகள்,சிங்களக் குடியேற்றம்,உழுதழிக்கப்பட்ட புலிகளது கல்லறைகள்அகியவை, குறித்த தமிழினவாத ஊடகங்கள் கட்டியமைத்த கருத்துக்களேதாம் புஷ்பராணியிடமும் நிலவிக்கொள்கிறது.இவை குறித்து,ஒரு தமிழ்த் தேசியவாதியின் பெரும் சோகத்துடன் புஷ்பராணி எழுதிச் செல்கிறார்.
அவரது தமிழீழ இலட்சியத்துக்கேற்பட்ட கதி, தான் செய்துகொண்டதென்ற "தியாகங்கள்-அற்பணிப்புள்",விழலுக்கிறைத்த நீராகிவிட்ட துயரம்,தனிப்பட்ட வாழ்விலேற்பட்ட இழப்புகளுடன் அவரது எழுத்துக்கள் விரக்தியையும்,அவநம்பிக்கையையும் கூடவே எதிர்காலமின்மையையும் சுமந்து வருகிறது!.
அவரது எழுத்து முறையீடுகள்,அவருக்குரிய கடந்த காலத்தை உயர்வாகவும்-சிறப்பாகவும் காண்டுகொண்ட திசையில் பிற்காலத்தைய இயக்கவாதக் காலங்களையேதாம் மீறல்கள் நிறைந்ததாகவும் காண்கிறது. புஷ்பராணிபோன்றோரது தொடக்கங்களேதாம் முள்ளிவாய்க்கால் அவலங்களாக முடிவுற்றன.இவர்களன்றெழுப்பிய அதிதீவிரவாத தமிழீழக் கோரிக்கையானது சுற்றியுள்ள இலங்கையின் உள்நாட்டுச் சூழல் மற்றும் சர்வதேசிய நிலவரங்களுடன் இணைந்தபோது அஃது,பாசிச மனிதவிரோதப் போக்குகளாக வந்தடைந்தது.தனிநாட்டுக் கோரிக்கை சார்ந்த நுணுக்கமான அரசியல்,தத்துவார்த்த மதிப்புகட்கு புஷ்பராணி அருகதையற்றவர். மாறாக,உணர்வுமயமான அதீத தேசியவாத மதிப்புகளால் இவரிதை மாற்றீடு செய்கின்றவராக இருக்கின்றார்.தமிழர்களின் பிரச்சனையென்பது சிங்கள,முஸ்லீம்,மக்களதும் பிரச்சனையுமாகும்-ஏன், முழுமொத்த இலங்கை மக்களின் தேசந் தழுவிய பிரச்சனையுமாகும்.தமிழ்த் தேசியவாத்தத்தின் உச்சியிலிருந்த அமிர்தலிங்கம் முதல் பிரச்சாரர்களான புஷ்பராணி போன்றவர்கள் வரை தமிழ் மக்களை ஏக, இலங்கை அரசியல் பரப்புக்கு வரவிடாமற் பார்த்துக்கொண்டார்கள்.சிங்கள விரோதத்தை அரசியலாக்கி வளர்த்தெடுத்தார்கள்,தமிழ் மக்களை எட்டுத் திசையும் நோக்கவல்ல அரசியலிலிருந்து தடுத்து வைத்தார்கள்.இத்தகைய,ஒரு வழிப்பாதையேவின்று முள்ளி வாய்க்காலில் நிறைவு பெற்றதென்ற வகையில், புஷ்பராணியும் கூட்டுக் குற்றவாளியே-இப்போக்குகட்குப் பதிலுரைக்கவேண்டியவரே.ஆனால்,அத்தகையவெழுத்துத் தடயமெதுவும் இவர்தம் நூலில் காணக்கிட்டவில்லை.
முள்ளிவாய்க்கால் முடிவுகள் கண்டு,ஏனைய தமிழ்த் தேசியவாதிகளைப்போன்று புஷ்பராணியும் குமுறுகிறார்.அவர்,சகல பழிகளையும் இலங்கை அரசுமேல் சுமத்திவிட்டு,காரண காரியங்களை ஆய்ந்தறியும் கடனிலிருந்து தப்பியோடுகிறார்.இந்த அழிவுகளுக்கு முழுமையாகப் புலிப் பாசிசமே பொறுப்பு.
மாவிலாறில் பல்லாயிரம் சிங்கள ஏழை விவசாயிகளின் விவசாயத்துக்கான நீரைப் புலிகள் மறித்து, அம் மக்களை ஆத்திரமூட்டினார்கள்,அவர்களது வாழ்வாதாரத்தின் மீது கை வைத்தனர். திரிகோணமலை, மூதூர், கிண்ணியாவுட்பட பலவிடங்களில் முஸ்லீம் மக்களை-அவர்களது வாழ்விடங்களிலிருந்து- புலிகள் துரத்தியடித்தனர். இத்தோடு,இதே புலிகள், முஸ்லீம் மக்களது வாழ்விடங்கள்,ஊருக்குள்ளிருந்தபடியும் இராணுவத்தை நோக்கிச் செல்லடித்து, அதேயிடத்துக்குத் திருப்பி இராணுவத்தைச் செல்லடிக்க வைத்து முஸ்லீங்களை கொல்ல வழி வகுத்தார்கள்.அத்தோடு,முஸ்லீம் இளைஞர்களைத் தேர்தெடுத்த புலிகள் கூட்டாகக் கொன்றார்கள்.
அன்று,புலிகள்தாம் மாவிலாறில் யுத்தத்தைத் தொடக்கி வைத்தார்கள்.கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை,சிங்கள மக்களை அகதிகளாக்கிய புலிகள், அவர்களது சொத்துக்களையும் கொள்ளையிட்டனர்.வியாபார நிலையங்கள்,விவசாய நிலங்கள்,ஆடுகள்,மாடுகள்,வாகனங்களென அனைத்தையும் பறிமுதல் செய்தார்கள்.பல காலமாகக் காடுகளில் வாழ்ந்து, வேட்டையாடல், தேனெடுப்பு,மருந்து,மூலிகைகள் எடுத்துக்கொண்டு சீவித்த குறவர்கள், வேடர்கள்கூடப் புலிகளால் கொலையுண்டனர்.மனிதர்களை மட்டுமல்ல வில்பத்துப் போன்ற வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதிகளிலும் புகுந்து ஆபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட மிருகங்களைப் பொழுதுபோக்காகச் சுட்டுக் கொன்றனர்,வேட்டையாடித் தின்றுங்கொண்டனர்.இவ் வலயத்தில் கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து வைத்தமையால் மிருகங்கள் அதில் சிக்கியபொழுதுகளில் காயமுற்றும்,இறந்தும் போயின.தெகிவளை மிருகக்காட்சிச் சலையிற் புகுந்து குண்டு வைத்து மிருகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொன்றார்கள் புலிகள்.தமது அழிவுயுத்த்தைச் சிங்கள மக்களின் பிரதேசங்களான கொழும்பு,கண்டி,காலி உட்பட பலவிடங்கட்கு விரிவுப்படுத்தினார்கள்.
ஆனால்,புஷ்பராணியினது விழிகளுக்குத் தமிழ் மக்களது துன்பம் மட்டுமேதாம் தெரிகிறது.முஸ்லீம்,சிங்கள மக்களது உயிரிழப்புக்காக அவரால் இரங்க முடியவில்லை.மாறாக,மீண்டும் மீண்டும் தமிழர்களது போர்க்காலத் துன்பங்களிற் புகுந்துகொள்கிறார்.தனது தமிழினவாத நிலையை ஈழ விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்துவதில் மறைத்துக்கொள்கிறார். சிங்களக் குடியேற்றமென்ற அவரது வரைதல், வடக்குக் கிழக்கை சிங்கள-முஸ்லீம் மக்களற்ற தூயத் தமிழ்ப் பிரதேசமாக்காணும் கற்பனைக்கு அவரையிட்டுச் செல்கிறது.
வடக்குக் கிழக்குத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசமென்பது கொலனித்துவக் காலத்திய பிரிடிஸ் அரசின் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலின் தேர்வாகும்.இதனைத் தமிழரசுக்கட்சியினர் தமதாக்கிக் கொண்டனர். இதனால்,"தமிழினத் தூய்மைக் கோட்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது. "புலிகளைப் பின்னிலிருந்து இயக்கியவர்கள் புகலிட நாடுகளிலுள்ள தமிழர்களே,அவர்கள் நம்பிய மேற்குலக நாடுகளேதாம் முள்ளி வாய்கால் அவலங்களுக்குப் பொறுப்பு. புகலிடத் தமிழ்வூடகங்களில்"கொழும்பில் குண்டுகள் வைக்கவேண்டும்,சிங்களவர்களைக் கொல்லவேண்டும்(இதைத் தமிழ்ப் பிளக்கரில் வசந்தன் என்ற அன்பன் பகிரங்கமாகக் கோரியவன்,அவனைக் கதிர் சயந்தன் போன்றவர்களும் அதரித்தவர்கள்) சிங்களவர்கட்குப் பாடம் புகட்டவேண்டும்"என்று பச்சை இனவாதம் பேசிய தமிழ்ப் பாசிசப் போக்களார்கள் குறித்தெவரும் பேசுவதில்லை! எல்லோரும்,சிங்கள பௌத்தப் பேரினவாதம்,சிங்கள மேலாதிக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பஷ்பராணி,புலித் தலைமையை விமர்சிப்பவராகத் தோன்றியபோதும், புலிகளைப் போராளிகளென அழைத்தும் கொள்கிறார். இறந்த புலிகளின் கல்லறைகளைப் பெருமைப்படுத்துகிறார்.புலிகள், உச்சந் தலைமுதல் உள்ளங் கால்வரை பாசிச அரசியலொழுக்கத்தால் நிரம்பப் பெற்றவர்கள்.இவர்களிடையே"தீய,நல்ல"சங்கதிகளைத் தேடுவது இயலாத செலாகும்.
மேற்கத்தைய சக்திகளின் இராணுவ அடியாட்க் கூலிப்படையான புலிகள் , ஒருபோதும் ஜனநாயக மற்றும் மனிதப் பண்புகளைக் கொண்டிருக்க முடியாது.புலிகள்,இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல முழு இந்தியத் துணைக் கண்டத்தின் நலன்கட்கும் எதிரான பயங்கரவாத இயக்கமென்பது உலகறிந்தவுண்மை!.புலிகள் மேற்கத்தைய நலன்கட்காகத் தமிழ்பேசும் சிறார்களைக் காயடித்து இரத்தஞ் சிந்த வைத்தனர்.இந்தப் புலிகள் தமிழ் மக்களது நலன்கட்காகப் போராடினார்களென நம்புவது ஒரு அரசியல் மயக்கமாகும்-பிரச்சார வகைப்பட்ட மாயையாகும்.முள்ளி வாய்க்கால் களத்தினது கடைசிக் கட்டத்தில் தம்மைக் காத்துக்கொள்ளப் புலிகள் எங்ஙனம் மக்களைப் பலியாக்கினரென்பதே நல்ல உதாரணமாகும், இந்த பாசிசப் போக்குக்கு.இறந்தவர்களையெல்லாம் தியாகிகளாகவோ,போராளிகளாகவோ கருதமுடியாது.ஒரு,மனிதவிரோதப் பாசிச அமைப்பினது நபர்களது மரணங்கள் அவர்களது சர்வதிகாரத்துக்கான தண்டனையாகும். புலிப் பாசிஸ்ட்டுக்கள் தமிழர்கள் என்பதற்காக,அவர்கட்குப் புஷ்பராணி "போராளிகள்"என்றழைத்துப் பெருமை தருகிறார்.ஜெர்மனிய,இத்தாலியப் பாசிஸ்டுக்களைப் புஷ்பராணி மனித விடுதலையாளர்களாக, வீர மரணத்துக்குரிய போராளிகளாக ஒப்புவாரா?
புலிகளது இராணுவ வாதத்துள் மலைத்துப்போனவர்களும்,அவர்களது தரைப்படை,கடற்படை,விமானப்படை,தற்கொலைப் படைச் சாகசங்களில் தொக்கி நின்ற தமிழ் நடுதரவர்க்கமானது ,கண்மூடித் திறப்பதற்குள் புலிகள் நிர்மூலமாகிப் போனதை நம்ப முடியாதவர்களாகிப் புலி பற்றிய பலிவிதமான கட்டுக்கதைகளை பேணிப் பாதுகாத்தபடித் "தேசியத் தலைவர் ஒரு பொழுதில் தனது தலைமறைவு வாழ்விலிருந்து வெளிவந்து மீண்டும்,தமிழர்களுக்குத் தலைமை தருவாரென" நம்பும் பரிதாபத்துக்குரியவாராகினர். இத்தகையோரே,உண்மையில் புலிகளைப் புழுகிப் பாப்பா மரத்தில் ஏற்றி முள்ளி வாய்க்கால்வரைக் கொணர்ந்துவிட்டவர்கள்;புலிகள் வெல்லப்படவே முடியாத பெரும் சக்தியாகவும் கட்டியமைத்தவர்களும் இவர்களே!. இத்தகையவர்களேயின்று,புகலிவூடகங்கள்முதல் நாடு கடந்த தமிழீழம் வரை இயக்கிக்கொண்டு வருகின்றனர்.இவ்வகைப் போக்குகளோடு சம்பந்தமற்ற விரக்தியாளராகப் புஷ்பராணி தென்பட்டபோதும் அவரும்,இவர்களது அரசியலுக்கு அண்மித்தே வாழ்கிறார்.புலிப் பாசிசவொழுங்கென்பது தமிழரசு அரசியலிலிருந்து தோற்றம் பெற்றவொன்று.இஃது,ஏதோ தனியே பிரபாகரனின் படையலல்ல.யாழ் நடுத்தரவர்க்க சமூக மூலங்கள்தாம் இதைப்படைக்க அடிப்படையாகின.இந்தப் பண்புகள் மேற்கத்தைய நாடுகளின் அரசியல்,இராஜதந்திர ஏவற் பேயாகிவிட்டது.
"ஆயுதங்கள் மேல் கொண்ட அதீத மோகமே,சுத்த இராணுவ வாதமே ஈழப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம்"என்று புஷ்பராணியின் எழுத்துக்கள் விளக்கிச் செல்கின்றன.இங்கு,எந்த வர்க்கமானது ஈழப் போராட்டத்தைக் கையிலெடுத்துச் சென்றதென்ற யதார்த்தத்தைவுணர முடியாத புஷ்பராணி,யாழ் நடுத்தர வர்க்கத்தின் வெளிப்பாடுகளை மட்டுமேதாம் காண்கிறார்.தத்துவப் புறக்கணிப்பு,இராணுவக் குணாம்சம்,சிங்கவின வெறுப்பு என்பதற்குத் திட்டவட்டமான தமிழ்த் தேசிய வாதப் பண்புகள் இருந்துகொண்டன.
"தான் எங்குமில்லை,எக் கட்சியிலுமில்லை,இயக்கங்கிளிலும் நம்பிக்கை கிடையாது" என்று புஷ்பராணி சொன்னபோதும் இலங்கையில் தமிழரசுக் கட்சி முதல் புகலிட நாடுகளிலுள்ள பல்வேறு தரத்திலான தமிழ்த் தேசியவாதிகளின் பொதுப் பண்பில் இவரும் இணைகிறார்.தமிழீழக் கனவுகள் சிதைந்தமைக்கு புஷ்பராணி கருதுவதுபோல ஆயுதம் எடுத்த இயக்கங்கள் மட்டுமேதாம் காரணமில்லை.ஆயுத இயக்கங்கட்கு மூலமான தமிழரசு,தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ் இளைஞர் பேரவை போன்றவைகளின் அழிவு அரசியல்தாம் காரணம்.இவர்களே பேரழிவைத் தொடக்கி வைத்தனர்.புஷ்பராணி போன்றவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியலுந்தாம் இந்த ஈழவிடுதலைக் கனவுச் சிதைவுக்குக் காரணமாகியது.
" எவர் கைகளில் ஆயுதம் இருந்தாலும் அஃது,அழிவையே தரும்"என்றின்று ஞானம் போதிக்கும் புஷ்பராணியின் மேடைப் பேச்சுகளும்,சிவகுமாரனைப் புகழ்ந்தேற்றும் பேச்சுக்களும்தாம் அரசியலற்ற ஆயுதங்களை ஆதிக்கம் பெற வைத்தன.இங்கு,ஆயுதங்கள் அல்ல,அதைக் கையாளும் சக்திகளின் அரசியல்தாம் நிர்ணயிக்கும் சக்தியாகும்!.துரையப்பாவும்,அருளம்பலமும்,தியாகராசாவும்,குமாரகுலசிங்கமும் சுடப்பட்ட காலத்தில் அதைப் புஷ்பராணி போன்றவர்கள் மேடைகள் தோறும் ஆதரித்தனர்.தமிழ்த் துரோகிகட்கு "உரிய தண்டனையாக" விளக்கவும் முற்பட்டனர்.இப்போக்குகளின் தொடர் வளர்ச்சியே புலிகளது பாசிசமாகும்.
"தமிழீழத்தை"ப் புஷ்பராணி,"பைபிளில் கூறப்படும் வாக்களிக்கப்பட்ட பூமியாக"க் காண்கிறார்.
இஸ்ரேலியச் சியோனிஸ்டுக்கள்கூட இஸ்ரேலை வாக்களிப்பட்ட பூமியாகவே கண்டனர்.மேற்குலக நாடுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் இஸ்ரேலாக"தமிழ் ஈழத்தை"மாற்ற முயன்றனர் என்பது, உண்மையே.யாழ்.கிங்ஸ் கவுசில் தன்மீது நடாத்தப்பட்ட சித்திர வதைகளை எழுதும் புஷ்பராணி,புலிகளின் சிறைகள்,சித்திரவதைக் கூடங்களில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களை நினைக்கக்கூட இல்லை. சித்திரவதைகளால் புத்தி பேதலித்து,உள நோயாளிகளாக மாறிய மனித ஜீவன்கள்,சித்திரவதை செய்து கொன்றெரிக்கப்பட்டவர்கள்,நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட இருட்டான பாதாளக் கிடங்குகளில் புலிகளால் போடப்பட்ட பாம்புகளோடு சீவிக்க நேர்ந்தவர்கள்,பாலியலுறுப்புக்களைக் குறடுகளால் நசித்துச் சித்திரவதை செய்த புலிப் பெண்களென எமது நினைவுக்கு வரக் காத்திருக்கும் விடயங்கள் ஏராளம்.
தொடரும்...
தமிழரசன்,
பேர்ளின்
Samstag, August 11, 2012
சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில்[5]
அன்பு நண்பர்களே,வணக்கம்!.இது,நாவலன் எழுதிய "தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏகாதி பத்தியங்களின்சதி" எனும் நூலுக்கான தமிழரசன் எழுதிய விமர்சனத்தின் இறுதிப்பகுதி. இப்பகுதியானது நாவலனது நூலுக்கான விமர்சனத்தைக் கொண்டியங்கினாலும் அது, விரித்து வைத்து நகரும் தளமானது உலகமயப் பொருளாதார நகர்வின் விளை நிலமாகும்.
இந்தப் பகுதியில், மூன்றாம் மண்டலமெனும்[Dritte Welt_Schwellenland ] பொருளாதாரக் குறியீட்டு அட்டவணைப்படுத்தலுக்குரிய நாடுகளது உயர்வு-தாழ்வு குறித்து நிறையப் பேசுகிறார்.
ஜேர்மனியப் பேராசிரியரும்,சிறந்த இடதுசாரிய அறிஞருமான ஓஸ்க்கார் நேக்ற் [Prof.Dr.Oskar Negt ] குறித்த வரை முறைகளை ஆதாரமாகவும் பயன்படுத்துகிறார் தமிழரசன்.அவரது தரவுகள் பலமானவைதாம். ஓஸ்க்கார் நேக்ற் குறித்த தரவுகளையுந்தாண்டியின்று சீன அந்நியச் செலவாணியின் கையிருப்பு 3 ரில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது.
ஓஸ்கார் நேக்ற் [Sozialphilosoph Oskar Negt ]ஜேர்மனியில் அனைவருக்குமான நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை[Das bedingungslose Grundeinkommen ] அரசு செய்ய வேண்டுமென வாதிடுபவர்.அதை,இன்றைய ரோசா லுக்சம்பேர்க்கான சார வாகன்கினேக்ற் [Dr.Sahra Wagenknecht ] நிராகரிப்பதும் புரியத் தக்கதே.
உலக மயமாக்கலது விளைவைக் குறித்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முயன்றபோது பேராசிரியர் டாக்டர் பேர்ன்ட் சென்வ்[ Prof.Dr. Bernd Senf ] வை வாசிக்கவும்-கற்கவும் முடிந்தது.அவரது பொருளாதார விளக்கம் எப்பவும்போலத் தமிழர்கள் அறியாத சில்வியோ கேசலது[ Sivio Gesell ] நியாயவாதப் பொருளாதரத் தத்துவத்துக்கமைய நகர்வது.அத்தகைய மேதமையான விளக்கத்தின் தரவுகளோடு தமிழரசனது விளக்கங்கள் ஒட்டியுறவாடுவதில் எனக்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம்.
தமிழரசன் இன்றுவரைப் பேராசிரியர் பேர்ன் சென்வ்வை வாசித்திருக்க முடியாது.அவரது எந்த ஆய்வையும் தொட்டிருக்கக்கூடிய காரணங்கள்அவருக்கு நெருங்கி இருக்க முடியாது.ஏனெனில் ,அந்தப் பேராசிரியர் மார்க்சியத்தின் பரம விரோதி.என்றபோதும், தமிழரசனது விளக்கங்களும்,தரவுகளும் பேராசியர் சென்வின் கருத்துக்களோடு பொருந்திப்போகிறது. உலக மயம் குறித்து நீண்ட ஆய்வுகளைச் செய்த பேராசிரியர், அதன் தாக்கமானது மேற்குலக வீழ்ச்சியோடு தொடர்புடையதாக நிறுவுகிறார்.இதையேதாம் தமிழரசனும் சொல்லிச் செல்கிறார்.
நான்ஆடம் சிமித் மற்றும் ஜோன் மைநார்ட் கேய்னெஸ்,சில்வியோ கெசல் எனும் நவலிபரல் பொருளியாளரை மிக ஆழமாகக் கற்றுத் தேறியபோது இவர்களது வாரிசான பிரிடிறிக் காய்ஜெக்கையும்[ Friedrich A. Hayek] அவரது சீடர்களான மெவுன் பிலேரின் சொசைய்டிக் கூட்டின் Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler. போன்றோரையும்,அவர்களது தாராளவாதப் போக்கையும் உள்வாங்கிக்கொண்டேன்.இன்றையவுலகத்தின் மிகக் கெடுதியான பக்ககங்களை இவர்களைத் தவிர்த்துப் பார்க்க முடியாது.
கெய்னிஸ் குறித்தத் தத்துவப் போக்கில்:
1: நுகவர்வும் சேமிப்புறவுக் கோட்பாடு,
2: நிதியீடுக்கோட்பாடு;
3: பணச் சுழற்சிக் கோட்பாடு
இவைகள் மிக முக்கியமானது இன்றைய நவ லிபரல் பொருளாதாரப் போக்கில்.
நாவலனது நூலுக்கான விமர்சனத்துக்காக இந்தப் பரப்புகளில் தமிழரசன் நிறையவே கால்பதித்துச் செல்கிறார்.ஒரு மார்க்சிய அறிஞன் பலதரப்பட்ட தளங்களைத் தனக்குள் உள்வாங்கிக் கருத்தாடுபவனென்பதைத் தமிழரசன் நிரூபிக்கின்றார்.
நாம்,அந்த வெளிகளுக்குள் பிராயாணித்து விட விருப்பம் கொண்டாலேதவிர இன்றைய பொருளாதார நகர்வுகளைக்குறித்து விளங்கிக்கொள்ள முடியாது.இதைத் தவிர்தோமானால் மில்டன் பிறீட்மானது[Milton Friedman ] "யுத்தம் செய்து அழித்தல் மீளக் கட்டுதல்,இடங்களைக் கைப்பற்றுதல்,வாழ்விடங்களைவிட்டு மக்களை அழித்துத் துரத்துதலெனுங்" கோட்பாட்டுக்குள் சிக்கி விடுவோம்.
எனவே,இந்த வெளிகளுக்கூடாக நகர்த்தப்படும் இந்த இறுதிப் பகுதியானது இன்றைய உலகமயப் பொருளாதாரப் போக்குகளில் அமையப்போகும் அதிகார-ஆதிக்க மாற்றங்களைப் புரிவதும் அந்த புரிதலின் வழி புதிய வியூகங்களைத் தேடிக்கொள்வதும் ஒடுக்குப்படும் மக்களது விடிவுக்கு அவசியமானது நண்பர்களே.
வாசியுங்கள்.கட்டுரை மிக நீளமானதுதாம்.எனினும், நேரமெடுத்துத் தொடருங்கள்.
அடுத்த விமர்சனத்தை புஸ்பராணியின் அகாலத்துக்கான நூலின் விமர்சனமாக முன் வைப்போம்.
இரண்டொரு கிழமையில் மீளச் சந்தோம்!
நன்றி.
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.08.2012
சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!
- நூல் விமர்சனம் : 5
( இறுதிப் பகுதி )
3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும்.
ஆபிரிக்கா, நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக் காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் ,நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள். நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ,ஆறுகளோ அங்கு இல்லை.வாழக் கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்களில் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது.
நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.
செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது.
அவர்கள் இக்கட்டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப் பட்டமையூடாகவே நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.
‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதிதியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார்.
உலக மயமாதல் [Globalization ]என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவிர்க்கமுடியாத கட்டமாகும்.
ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் ,உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழி நுட்பங்கள், நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும், சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை.
ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன.
உதாரணமாக : சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுனகளை முந்தி ,முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது, நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை.
பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால், சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது, வருடா வருடம் 60 மில்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.
schanghai,Peking,Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது.
சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் ,சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள்.
பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,VW என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன.
ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100.000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்லியன் யூறோ நட்டம். ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.
வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்து உபகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் [103 Milliarden Euro = 103 billion euro .] யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள், பாலம்கள், ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது.
2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் ,9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது.
10 வருடம் முன்பு ,இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை.
சீனாவில் ஒரு மணி நேர ஊழியம் 0.70 சென்ட்களாகும் [0.70 Euro]. இது ஜெர்மனியியல் மணிக்கு 27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் [Billion auf Englisch Trillion] ; [2010/ 2011 : Währungsreserven in Millionen US-Dollar : 3.201.680 ] டொலர்களாக அதிகரித்துள்ளது [Exportstarke asiatische Länder verzeichneten seit etwa einem Jahrzehnt ein rasantes Anwachsen der Währungsreserven. Besonders deutlich wird dies am Beispiel der Volksrepublik China. Dieses Land hat nach mehreren Jahren einer äußerst erfolgreichen Handelsbilanz im Jahr 2006 sogar Japan in der Summe der Währungsreserven überholt und besitzt seitdem die höchsten Währungsreserven der Welt. Per 31. März 2008 beliefen sich diese auf 1,682 Billionen US-Dollar.[20] Im April 2011 betrugen die Devisenreserven Chinas erstmals über drei Billionen US-Dollar.[21] ]. இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் ,சமூக ஆய்வியல் அறிஞருமான Oskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
நாவலன் , 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார்.
1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால், இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது.
ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் ,மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன.
அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata , suzlon Energy, சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் ,இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது.
முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் , இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது.
உலக மனிதர்கட்கு இன்று, 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக் கடன், குளிப்பு, சுடுநீர்ப் பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே, உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது.
ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ Schwefel [http://de.wikipedia.org/wiki/Schwefel ] தேவை.ஆனால் ,இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டுக்கும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகளில் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது.
மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.
மேற்குலக எரிபொருள் நிறுவனம்களான BP, Exxom, MobilChevron, Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின் PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் ,எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் ,இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது.
உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது, தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது.
வடகடலில் [Nord See]பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணு உலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது, 64.புதிதாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ,ஆசியாவில் 110 அணு உலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.
3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின் Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழில் நுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,Malanja,Bauxi,Kobalt,Coltan என்பன உண்டு,Coltan கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை[Der Fluch der Reichtümer: Krieg um Rohstoffe des Kongo :Der Reichtum des Kongo ist sein Fluch. Diamanten, Kupfer, Kobalt, Gold, seltene Erden, Edelhölzer - riesige Mengen leicht abbaubarer, gut absetzbarer Roh- stoffe haben schon vor hundert Jahren die Begehrlichkeiten der damaligen belgischen Kolonialherren geweckt. Fast 40 Jahre lang konnte der Diktator Mobutu Sese Seko die Verteilung der Schätze unter seinen Anhängern und internationalen Konzernen kontrollieren. Seit seinem Sturz 1997 hat sich eine Vielzahl von Interessenten auf den Kongo gestürzt. Der Bürgerkrieg ist ein Verteilungskrieg, bei dem es längst nicht mehr um Ideologie, um politische Ziele geht. http://www.ag-friedensforschung.de/regionen/Kongo/rohstoffe.html ] தொடங்கி வைத்தன. ஆயுதக் குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள் எதிரணியான MDC" க்கு நிதி தந்து ஆதரிக்கின்றன. சிம்பாவேயில் உள்ள Platin, இரத்தினக்கற்கள் உட்பட வளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.
உலகின் 90வீத Platin ஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள் இடப்பட்டது .அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது.
சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள், விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழிற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்பிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது.
நைஜீரியா 6.5% ,கானா 5.8 %,சூடான் 8 % ,கென்யா 6.5 % ,தான்சானியா 6.9 %, சிம்பாப்வே 6.5% , தென் ஆபிரிக்கா 4.8 % என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.
‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.
2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது.
தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர் நிர்வாகிகட்காக ஆடம்பர மாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25 % எண்ணை வளம் உட்பட ஆபிரிக்க எண்ணை வளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40%சீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.
சீனாவுடன் ,இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன.
தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக் கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது.
சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.
மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து "Shanghai Cooperation Organisation" என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன.
2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளிக் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.
சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது.
1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பின்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின.
ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டும் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.
‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.
இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா?
ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா?
இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே?
கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?
வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது.
20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சி.என்.என். க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும்.
லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.
அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா?
கனடாவையும் ,பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா?
ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார்.
அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி ,இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் ,அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita",கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளை ஆட்சி செய்த காலம் இன்றில்லை .
காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது.
வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.
வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.
சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது.
இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன.
இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர்.
"Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா?
இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா?
விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா?
‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார்.
1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது.
வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.
எனவே, உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர் முதலீட்டில் தொடங்கியுள்ளது.
முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.
ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும்.
1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு ,உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு, இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழிற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும்.
தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளில் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நாடு ,இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.
பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் ,இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது.
அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.
தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.
உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும்.
அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.
சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது .மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில் ஜரோப்பா நுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.
‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.
இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும்.
கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது.
பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின.
அடுத்து ,உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது.
தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன?
அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜி.எம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன?
சுவிட்சர்லாந்தின் யு.எஸ்.பி (USB_ http://www.ubs.com/ch/de.html ) வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது?
பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.
உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ,ஏகாதிபத்தியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது.
அமெரிக்காவையோ, ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை.
நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன?
மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐ.எம்.எவ் எச்சரிக்கின்றது.
1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும், இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.
இது முதலாளியத்தின் மரணகண்டமாகும்.
அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது.
உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை.
ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.
2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு .
இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் -100 வருடம் முன்பு ,சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர்.
கடைசியாக, உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.
தமிழரசன்,பெர்லின்.
Abonnieren
Posts (Atom)










