Sonntag, März 24, 2013

தற்கொலையே தர்மம்!

"நான்"
அழிவேன்-எப்போது-எங்கே?

ன் திருவே!
என்னைக் குலைத்தெறி!
துகளாக்கு-மண்டையைச் சிதறடி.
பக்கங்களாக நான் குவிக்கும்
உணர்வுக்குள் மனிதம் கொலையாகி
புதை குழிக்கு மண் அகழும் "நான்" தொல்லை!

என் திருவே,
குழந்தையாய் இருப்பதுதாம் நீ.
நான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்
என்னைப் பாட வை
ஒரு மழலையின் புன் சிரிப்பாய்.

உன்னைக் குறித்து
என்னை அழைக்க வை
"நாங்கள்தாம் நீ" என்று ஓங்கி உரைக்க விடு!





மௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து
"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து
ஆபத்தின் வீரியமாய் விரிவதில்
என்ன புதுமையை கண்டாய்?" என்று கூவ விடு!

என் ஆரோக்கியத்தின் நிழலில்
கலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்
தொடர்ந்து உயிர்த்திருப்பதில்
உன்னை எங்கே விழுங்கி
எங்கே சேர்த்து?
நிரந்தரமானவன் நான்!

தோல்விக்குப் பெயர்
தீருவென்றழைத்தே தேடுதலை
குறைத்துக் கொண்டேன்.
காலைக்குப் பின் மதியம்
என்னை அச்சப்படுத்தி மீளவும்
அதிகாலையாய்த் தேற்றிய போது
நானே நிரந்தரமானேன்-எனக்குத்தாம் திருவென்ற
உன் நிலைப்பும்-நீதியுமென
உருமறுத்துக்கொண்டு அலைவேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்

24.03.2013

Donnerstag, März 07, 2013

அம்புக்குறியாய் நீ

ருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடை பிணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்-கேடயங்களும்
கணையாழிக் கேடிகளுமாய் க் காலம் விலக

காலத்தைப் பறிகொடுத்த நரிகளுக்கு
விடிவதும்,இருட்படுவதும்
அடுத்தவர் முற்றத்தில் மட்டுமே
தங்கள் தெருக்களுக்குள் புழுத்து நெளியும்
சாக்கடையுள் விழி வீழாப் பக்குவம்!


இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் குருதி நிறைத்த காகிதத்துள்





கட்சிகளது கொண்டையைப் பிடிப்பவர்களோ
அதன் கொள்கைச் சாக்குள் கேடயத்தோடு
திணிக்கப்படும் தம்பிகளது முகத்தையும்
கூட்டிப் பெருக்க வக்கற்றுக் குப்புறக் கிடந்துவிட்ட
கூனற் பொழுதும் விடிந்ததோ?-இப்போது??

பூனைப் பாச்சலுள் எட்டபட்ட
இந்தப் பிரபஞ்சம் எழுதித் தந்த சீதனமோ
கேடயம்,பரிசு,பொன்னாடை,குருதி
மக்களைச் சொல்லிச் சொருகப்படும் கத்தி
யார் முதுகைப் பதம் பார்க்கும்?


அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்


சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி.


ப.வி.ஸ்ரீரங்கன்
07.03.2013


============================================
நீங்களெல்லாம் பிழைக்கத் தெரிந்த பஞ்சோந்திகள்!
============================================

எச்.பீர் முஹம்மது:

//புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்றைய இலங்கை விவகாரம் குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நண்பர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குறிப்பிட்ட ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது இந்தியா தான் எங்கள் கலாசார நாடு. இந்தியா தான் எங்கள் இரண்டாம் தாய் நாடு. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். உலக வரலாற்றில் தேசிய இனப்போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் அண்டைய பெரும்/ வல்லரசு நாடுகள் தலையிட்டு தீர்வு காணும் நடைமுறை இருந்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் அறுபதுகளில் எகிப்து பெரும் பங்கை வகித்ததை இதனோடு நாம் ஒப்பிட முடியும். ஆனால் துரதிஷ்டம் இந்தியாவே இலங்கையோடு சேர்ந்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறது... இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கான அழுத்தம் இங்கிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இரு பெரும் கழகங்களும் தங்கள் ஈகோவை சமன் செய்து கொள்வதிலும், வரலாற்று தவறுகளையும், துரோகங்களையும் மறைப்பதில் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் இதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதிலும் பலத்தப்போட்டி நிலவுகிறது... இப்படியே செல்லும்பட்சத்தில் ஈழ விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்படாது என்றே தெரிகிறது.//

Samstag, Februar 02, 2013

தமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...!

தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணயத்தை மறுப்பதென்பது இலங்கையில் "இனவொடுக்குமுறை, இனவழிப்பு நிகழவில்லை" என்பதன் மறுபக்கமாகும்!


ன்று, முன்னிலை சோசலிசக்கட்சியோ அன்றித் தமிழர்களது நிலத்து-புலத்து இயக்கவாதச் சக்திகளோ எந்தப் பொழுதிலும் இலங்கை மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.உதாரணமாகச் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.


இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki  ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் "சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd.   ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.


இதன் மத்தியில், புலம் பெயர் தமிழர்களின் "புரட்சிகர"முகாங்கள்அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபொரு லொபிக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை தமிழ் இயக்கவாதக் குழுக்காளால் செய்யப்பட்ட-மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய மாறாக, விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.


இப்போது,புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமையைச் சிந்தாந்தவுரையாடாலாகக் குறுக்கித் தாழ்க்கும் இவர்கள் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையை திரைமறைவில் மறைத்து அதன் பிரதான பாத்திரத்தை இல்லையென்கின்றனர்.


வெறுஞ் சிந்தாந்தவுரையாடலாகத் தமிழ்பேசும் மக்களது உரிமையையும் ,சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது எதிர்ப்பு அரசியலையும் குறுக்கிவிடும் "சித்தாந்தச் சதியானது மிகவும் வரலாற்றுத் திரிபுக்குள்  மக்களைக் கட்டிப்போடுகிறது"[ Das Zimmerwalder Manifest .By Leo Trotzki  ].





இதன் அடுத்த நகர்வுக்குள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையொன்றே இலங்கையில் இல்லையென்றும்,அது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் இனவாதத்தின் திரிப்பே என்று தத்துவமுரைக்கும் நிலைக்கு முன்னிலைச் சோசலிச அமைப்புக்குக் கூஜாத் தூக்கும் இரயாகரன் குழுவிலிருந்து ஏனையவர்களும் வகுப்பெடுப்பார்கள்.


தமிழ் மக்கள் ஏதோ சுயநிர்ணயவுரிமையை வலிந்து கேட்பதாகவும்,அது தமிழ்க் குறுந்தேசிய வாதிகளது கயமையெனவும் இட்டுக்கட்டும் நிலைக்கு இரயாகரன் குழு இப்பேதே தயாராகிவிட்டது.


தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே.இந்தவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் [Die Entwicklung des Selbstbestimmungsrechts der Völker unter besonderer Berücksichtigung seines innerstaatlich-demokratischen Aspekts und seiner Bedeutung für den Minderheitenschutz.By Denise Brühl-Mose  ]அது சார்ந்த வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணை போபோகின்றவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் முன்னிலைச் சோசலிசக் கட்சியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.


இதுசார்ந்து, சட்டரீதியாகத் தமிழ்பேசும் மக்களை இனவொடுக்குமுறைக்குள்ளும்-அழிப்புக்குள்ளும் வைத்தொடுக்கும் அரசும் அதன் பொருளாதாரப் பொறிமுறையும்தாம் நமது மக்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கான தோற்றுவாயாகும் [Nur wenn der Staat die nach Autonomie oder gar einen eigenen Staat strebende Minderheit durch seine Herrschaftsausübung diskriminiert, kann er seinen Anspruch auf territoriale Integrität nach dem gegenwärtigen Völkerrecht verwirken..So z. B. Ipsen u. a., Völkerrecht, S. 368  ].இதை மறுத்தொதுக்கும் முன்னிலைச் சோசலிசக்கட்சியாகட்டும் அல்லது அவர்களது தாய்க் கட்சியான ஜே.வி.பீ. ஆகட்டும் இவர்கள் அனைவருமே சிங்களப் பேரினவாத ஓட்டுக் கட்சிகளது தெரிவின் வழியே நமது மக்கள் மீதான இனவொடுக்குமுறையை அரசியல் ரீதியாகச் சரியென்றும், சட்டரீதியாக அறமென்றும்-பௌத்த ஆசாரத்தின்படி பெரும்பகுதி மக்களது உயர்ந்த நீதியென்றும் சொல்லாமற் சொல்கின்றனர்-சுயநிர்ணயவுரிமையைத் தமிழருக்கு மறுக்கும்போது அதன் பின் ஒளிந்திருப்பது இலங்கையில் இனவாத முரண்பாடொன்றில்லை என்பதே!


தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமிர்த்தனமான" இனவொடுக்குமறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த வெகுஜன அரசியலும்[ Alle Völker haben das Recht auf Selbstbestimmung. Kraft dieses Rechts entscheiden sie frei über ihren politischen Status und gestalten in Freiheit ihre wirtschaftliche, soziale und kulturelle Entwicklung.“-By Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. I, Dietz, Berlin 1970, S. 687   ] தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.அதை மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து அவர்களது அடியாளகவே இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சி வகை இடதுசாரியம் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.


இதைத் தாண்டிச் சமவுரிமைக்கான இயக்கம் இடதுசாரிய வேடங்கட்டிச் சிறுபான்மை மக்களினங்களை அண்மிக்கும்போது இதைப் பாட்டாளிகளது ஐக்கியத்துக்குக் குறுக்கே நிறுத்திச் சிங்களப் பாட்டாளிகளைப் பிளப்பதிலேயேதாம் சுயநிர்ணயவுரிமைக்கான நகர்வு வழிவிடுமென அபாய அறிவுப்புச் செய்து, பேரினவாதத்தைத் தொடர்ந்து ஒரு அரசியல் போக்காக இருத்தி வைக்கின்றனர்.


கூடவே,இத்தகைய அமைப்புகள் தமிழ்பேசும் மக்களுக்கான சுய நிர்ணயவுரிமையை மறுப்பதன் வாயிலாக-மகிந்தாவின் மொழியில் சொன்னால்- "இனவொடுக்குமுறை- இனமுரண்பாடொன்றே இலங்கையில் கிடையாது.மாறாகப் புலிப் பயங்கரவாதமே உண்டு" என்பதை இவர்களுஞ் சொல்லாமாற்சொன்ன அன்றைய நிலையில்,இன்றும் சுயநிர்ணயவுரிமைக்கு அதே ஆப்பு அடிக்கும்போது தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையையும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான அரசியல் முன்னெடுப்பையுந்தாம் புலிக்கு நிகராக நிறுத்தி மாண்டுபோன புலியின் பாத்திரத்தை நிரப்புகிறார்கள்.


இத்தகைய நடாத்தையின் வழி,இனவாத இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவழ்த்துவிடவும்,அதையே நிலைப்படுத்தி அரசியல் சட்டவாக்கமாக்கித் தமிழ்பேசும் மக்களை இராணுவ ஆட்சிக்குள் கட்டிவைக்கும் நிலைக்கு மறைப்புக் கட்டவே தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பதன் அரசியற்றொடரில் இலங்கை அரசின் இனவொதுக்கலை நியாயப்படுத்தி விடுகிறார்கள்.


பிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது "பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல " என்றாக்குகிறார்கள்.


இலங்கையில் "இனவொடுக்குமுறை இல்லை" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.


 தத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
02.02.2013

Dienstag, Januar 01, 2013

ஒரு பதிப்பகத்தின் வெற்றி

காலச் சுவடும்,கண்ணனும்: 


ரு பதிப்பகத்தின் வெற்றி,பத்திரிகையின் வெற்றி குறித்து நம்மெல்லோரிடம் "நுணுக்கம்-வியூகம்-தந்திரம்"  இருக்கிறது.

அதுள், மிகச் சிறந்த-கைதேர்ந்த வர்த்தக நுணுக்கத்தைக் கண்ணன் கைக்கொள்வதை சமீக காலமாக நாம் பார்த்து வருவது கண்கூடு(the activity, set of institutions, and processes for creating, communicating, delivering, and exchanging offerings that have value for customers, clients, partners, and society at large) !.

சமூகத்தின் அதீதமான அரசியல் கோரிக்கைகள்-வெகுஜனவெழுச்சிகள்-போராட்டங்கள்,மக்களது வாழ்வாதாரப் பிரச்சனையுள் தம்மையிணைத்துப் போராடும் தலைமைகளை-போராட்ட முன்னோடிகளை ஆதரித்துக் கைதூக்கி விடுவது[ market segmentation ] ஒருவகையில் வெகுஜனவூடாகத்தின் பொறுப்பு.



இதுள், காலச்சுவடு முன்னணியில் நிற்கும்போது அதன் வர்த்தகமும் [It must be large enough to earn profit.  ]இரட்டிப்பாகிறது.இப்போது உதயகுமார்,அன்று அருந்ததி ரோய் என்று மக்களோடதிகமாக நின்று பிரச்சனைகளைப் பேசுபவர்களுக்குள் ஒரு பாலமாக[It is useful in deciding on the marketing mix ] நிற்கும் கர்ணணின் வர்த்தக நுணக்கமானது(Master of Business Administration )மிகச் சாதுரியமானதும்,சிறந்த தந்திரமுமானது.இஃது, சிறு பத்திரிகையுலகத்தினர் அனைவரும் புரிந்து இப்படி"வர்த்தகத் தந்திரத்தை-நுணுக்கத்தை" யொட்டிச் சிந்திக்வேண்டும்.

வர்த்தக நுணுக்கமென்பது ஒரு சந்தர்ப்பத்தில் அதன் இருப்புக்கு மிக அவசியமானதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அந்த வகையில் காலச் சுவடு கண்ணனைப் பாராட்டித்தாம் ஆகவேண்டும்.

இன்றைய மனித வாழ்வின் [  Psychographic segmentation ]அடிப்படைப் பிரச்சனையான அணுவுலையெதிர்ப்புப் போராட்டமானது பரந்த பட்ட மக்களிடம்பரவலாகவுணர்வுரீதியவுணரப்பட்ட எழுச்சி.உயிராதாரப் பிரச்சினை.எனினும்,அதற்குள்ளும் விளம்பரத் தந்தரம் செய்ய முடியும்.இதை எத்தனை பேர்கள் உணர்ந்துள்ளனர்.வர்த்தகத்துக்கு விளம்பரமென்பது மிக அவசியமானது.இது குறித்துப் பெரிய-பெரிய வியூக நூல்களே வந்திரக்கிறது.இஃது தொரு துறைசார் கல்வியாகவும் [ Geo-cluster approach combines demographic data with geographic data to create a more accurate profile of specific ]படிப்பிக்கப்படுகிறதென்றால் பாருங்களேன்.




கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உயிரோட்டமிக்கக் காலச் சுவட்டின் வர்த்தக நுணுக்கத்தைக் கற்கை நெறியாக வைத்தாக வேண்டும்.மாணவர்கள் நாளைய தலைமுறையின் வர்த்தகத் தலைவர்களாகவும்-முகாமைத்துவ மேதைகளாகவும் உருவாகுவதற்குக் கண்ணனின் யுக்தியைக் கல்வியாக்க வேண்டும்.

வெகுஜனப் போராட்டங்கள்,எழுச்சிகளைக் கையகப்படுத்தி-ஆதரித்து போராட்ட முன்னோடிகளைத் தூக்கிவிட்டு,அவர்களோடு தோளோடு தோள் நிற்கும் காலச்சுவடு, தானும் வாழ்கிறது-சமூகத்துக்கும் தன்னாலான வர்த்தக நுணுக்கத்தையும்[Behavioral segmentation  ] கற்பிக்கிறது.

2012 ஆம் வருடத்தின் அதிசிறந்த வர்த்தக நுணுக்கத்தை[Commercial advertisers often seek to generate increased consumption of their products or services through "branding," which involves associating a product name or image with certain qualities in the minds of consumers. Non-commercial advertisers who spend money to advertise items other than a consumer product or service include political parties, interest groups, religious organizations and governmental agencies. Nonprofit organizations may rely on free modes of persuasion, such as a public service announcement  ] கைக்கொண்ட மனிதரைத் தமிழக அரசு தேர்த்தெடுத்தால் நான் காலச்சுவடுக் கண்ணனையே பரிந்துரைப்பேன்.



கண்ணன் நமக்குள் மிக நேர்த்தியான வர்த்தகத் தந்திரம்-நுணுக்கம்-வியாபார வியூகம்"அமைப்பதில் சிறந்த விற்பனர் [significant work experience  ]என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2013